Tamil Bible Baptist Publication

BIBLE BANK

“எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”

— கொலோசெயர் 3:24

Entry No. 001 — Welcome

அன்புடன் வரவேற்கின்றோம்

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் உள்ளங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஊழியத்தின் பின்னணி.

Bible Bank ஊழியம்
BIBLE BANK

பரந்துபட்ட பாரினிலே ஏழு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்தும், அகதிகளாக்கப்பட்டும், நாடுவிட்டு நாடு சென்றும், இதயங்கள் நொருக்கப்பட்டு விரக்தியிலும் துயரத்திலும் அடுத்த அடி எங்கே வைப்பது எனத் திகைத்து நிற்கும் தமிழ் நேயங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டலாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிமனிதனாகிய எனக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சபைக்கோ மாத்திரம் பயனுள்ளதாக இராமல், உலகளாவிய ரீதியில் அனைத்து தனிமனிதர்களுக்கும் தேவ பணியை தேவன் விரும்பும் விதத்தில் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

ஒரு வாலிபனாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, உடலில் ஓடுகின்ற ஒவ்வொரு துளி இரத்தமும் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துகின்றதாகவே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆயினும் வாழ்க்கையின் மகத்தான கேள்விகளான "நாம் எங்கிருந்து வந்தோம்?" "எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?" "கடவுள் ஒருவர் இருக்கிறாரா?" "அப்படி இருப்பாரானால் அவர் என்ன வடிவில் இருக்கிறார்?" "வேதாகமம் உண்மையில் அவரின் வார்த்தைதானா?" "நாம் மரித்த பின்னர் எமக்கு என்ன நடக்கப்போகிறது?" போன்ற கேள்விகளுக்கு பதில் காணமுடியாமலும், வாலிப காலத்தில் தீர்மானம் எடுக்க முடியாமலும் தவித்த சந்தர்ப்பங்கள் இருந்தன.

முதல் தடவையாக 1987ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் பணியானது எனது கேள்விகளுக்கும், எனது குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள், உறவினர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியதுடன் அது இன்னமும் விருத்தியடைந்து சென்று கொண்டே இருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் இருந்தே எனக்குப் பயனளித்த அனைத்து புத்தகங்களையும் இலக்கியங்களையும் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற கர்ப்ப வேதனையுடனேயே ஒவ்வொரு புத்தகங்களையும் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறேன். எனது கேள்விகளுக்கு பதில் பெற்றுக் கொள்ளவும் வாழ்க்கையை மாற்றவும் தேவன் பயன்படுத்திய புத்தகங்கள் உங்களுக்களுக்கும் உதவி செய்வதிற்காக இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

என்னை ஆண்டவருக்குள் வழிநடத்திய எனது தந்தையாருக்கு நன்றிகூற எனக்கு இந்த பிரதான பக்கத்திலேயே இடம் தாருங்கள். நான் எவ்வாறு இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்த்த விதத்திற்கு என்னைக் கொண்டுவருவதிற்கு தேவன் பயன்படுத்தும் எனது குடும்பத்தினர் - உறவினர் மற்றும் சபையினருக்கும் நன்றியோடு இருக்கிறேன்.

எப்பக்கத்திலும் என்னை நெருக்கி, உடைத்து, வனைந்து கட்டிய தேவனுக்கே எல்லாப் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

இங்ஙனம், கிறிஸ்துவின் பணியில் — அடிமை ஒருவன்


Entry No. 002 — Register

கட்டுரைகளின் பதிவேடு

ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆவிக்குரிய வைப்பு — படித்து, தியானித்து, உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்.

01

வெளியீடுகள்

தலைமுறைகளாக பயன்பட்ட, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களும் தியானங்களும்.

02

பிரசங்கங்கள்

கேட்டு தியானிக்கக்கூடிய ஒலி செய்திகள் — கோரிக்கையின் பேரில் அனுப்பப்படும்.

03

தனிப்பட்ட வழிகாட்டல்

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக எழுத்து மூலம் பதிலளிக்கப்படும்.


Entry No. 003 — Heritage

சபை சரித்திரம்

எமது ஸ்தாபகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்து 20ம் நூற்றாண்டு வரையிலான பப்டிஸ்ற் சபைகளின் சரித்திர அட்டவணை.

“இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

டாக்டர். ஜே. எம். கரோல் அவர்களின் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, பப்டிஸ்ற் சபைகளின் தொடர்ச்சியான சரித்திரத்தை எடுத்துரைக்கும் விளக்கம். படத்தைத் தொட்டு பெரிதாக்கிக் காணலாம்.

முழு சரித்திரத்தையும் காண

Entry No. 004 — Daily Devotion

தினசரி தியானம்

பதிவு செய்யுங்கள் — இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒரு தியானம் உங்கள் மின்னஞ்சலுக்கு நேராக வரும்.

எப்போது வேண்டுமானாலும் பதிவு நிறுத்தலாம் — ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இணைப்பு இருக்கும்.


Entry No. 005 — Deposit Slip

தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் கேள்விகள், தேவைகள் அல்லது தினசரி தியானங்கள் பெற விரும்பினால் கீழே எழுதுங்கள்.

Direct

தொலைபேசி மூலம்

அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்:

+94 71 484 0486

Uses the corrected send_email.php shared alongside this file.

🎧 பிரசங்கங்களும் பாடல்களும் இப்போது கேட்கலாம்!