வாழ்க்கை முழுவதும் என்னத்தைப் பற்றியது; மனிதன் என்னவாக இருக்கின்றான்? கடவுள் ஒருவர் இருக்கின்றாரா? இருந்தால் அவரின் திட்டத்தின் காரியத்தில் நான் எப்படி இணையலாம்? இந்தக் கேள்விகள் எந்த புத்திசாலியின் தேடுகிற ஆத்துமாவின் மனதைத் தாக்குகிறது. ரோபர்ட் லைட்லோ அவர்கள் சில பதில்களை வழங்குகிறார்.
உண்மையை ஆர்வமுடன் தேடுகின்ற, நம்பிக்கையற்ற, அமைதியற்ற, சந்தோஷமற்ற தனிநபர்களுக்கு அந்த காரணம் ஏன் எழுதப்பட்டுள்ளது. வைத்தியர்கள், வானசாஸ்திரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போன்றோர் வாழ்க்கையின் பரம இரகசியத்திற்குள்ளான அவர்களின் ஆராய்ச்சியில் அவர்களின் முடிவுகளுக்கு சாட்சியளித்துள்ளனர். வேதாகமத்தின் உண்மை மனிதன் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளான். இப்பிரபஞ்சத்துக்கான கடவுளின் திட்டம் - மற்றும் இதிலுள்ள குறைந்தபட்ச முக்கியமான தனிநபர்கள் அற்புதமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
அறிமுகம்
ஒரு உத்தியோகத்தின் உரிமையாளர் இச்செய்தியினை தனது பணிபுரியும் அங்கத்துவர்களுக்கு எழுதினார். இது பிரபலமானதாக இருக்கிறது. இது 16 மில்லியன் பிரதிகளை 35 வித்தியாசமான மொழிகளில் அச்சிடப்பட்டிருப்பது கடவுளின் பெரிய ஆசீர்வாதமாக இருந்து வந்துள்ளது.
ஒரு இரட்சிக்கப்படாத நண்பனுக்கு ஒரு பிரதியினைக் கொடுக்கும்படிக்கு எங்குமுள்ள கிறிஸ்தவர்களை நாம் ஊக்குவிக்கிறோம். உத்தியோக சம்பந்தமான மனிதர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகமனிதர்கள், பாடசாலை ஆசிரியர்கள், போன்றோருக்கு பிரதிகளைக் கொடுக்கலாமென ஆலோசனையாக நாம் கூறுகிறோம். நாம் அன்பு கூறுபவர்களுக்கும்; இரட்சிக்கப்படாத நண்பர்களுக்கும் இது சிறந்ததென நாம் அறிகிறோம். இது இரட்சிப்பின் திட்டத்தினை விளங்கப்படுத்துவதில் மிகவும் ஜாக்கிரதையாகவும் இரட்சிக்கப்படுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகவும் கூறுகிறது.
- டாக்டர் கேட்டிஸ் ஹட்சன்.
அந்த காரணம் ஏன்
(இச் செய்தியானது ஒரு உத்தியோகத்தின் உரிமையாளரினால் அவரின் பணிபுரியும் அங்கத்தவர்களுக்கு எழுதப்பட்டது.)
ஒரு வாலிபன் தனது நியமிக்கப்பட்ட மனைவிக்கு 60,000 ரூபாய்கள் பெறுமதிவாய்ந்த வைரம் ஒன்றினை, நகை வியாபாரி தேவையற்றதாக எறிந்துவிட்ட ஒரு சிறிய பெட்டியில் வைத்து அனுப்பியதாக எண்ணிக் கொள்ளுங்கள். அவன் சிறிது நாட்களின் பின்பு அவளைச் சந்திக்கின்றபோது, "அன்பே, நீங்கள் ஒரு அழகான பெட்டியை எனக்கு அனுப்பியிருந்தீர்கள். விசேஷித்த பராமரிப்புச் செய்யும் நோக்கோடு, அதற்குக் கெடுதி வராமல் அதனைச் சுற்றி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளேன்" என்று கூறுவாளேயானால், அவன் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தவனாக இருப்பான்.
மிகவும் பரிகாசிக்கத்தக்கதாக இருக்கும் இல்லையா? உண்மை சுயத்தையும், ஆத்துமாவையும் கொண்டுள்ள பாத்திரமாய் மட்டும் உள்ள தங்கள் உடலிலேயே தங்கள் எல்லா நேரத்தையும் சிந்தனையையும் செலவிடுவது மனிதர்களுக்கு முட்டாள் தனமாகவே இருக்கும். எமது உடல் சிதைந்து அழிந்து மண்ணாகிவிடும் என வேதாகமம் கூறுகிறது. ஆத்துமாவானது அளவற்ற பெறுமதி வாய்ந்தது. அதனை ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்:
வருத்தம் தோய்ந்தோரின் தொகையை எனக்குச் சொல்லாதே
வாழ்க்கையே ஒரு வெறுங்கனவு,
ஆத்துமாவுக்கான மரணம் இலகுவான தூக்கம்
இல்லாதவைகள் எப்படி காணப்படும்
வாழ்க்கை உண்மையானது, வாழ்க்கை ஆர்வமானது,
புதை குழிதான் இதன் இலக்கல்ல,
மண்ணாக இருக்கிறாய், நீ மண்ணுக்கே திரும்புவாய்,
ஆத்துமாவைப் பற்றிய பேச்சு இது அல்ல.
உண்மையில் இது ஆத்துமாவைக் குறித்தது அல்ல, "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" என மாற்கு 8:36ல் நமது கர்த்தர் தாமே கேட்கிறார்.
ஆகவே, கிறிஸ்துவின் கணக்கின்படி, மனிதனின் ஆத்துமாவானது முழு உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவு பெறுமதி வாய்ந்தது. உம்முடைய அதி பெறுமதி வாய்ந்த சொத்தான, உமது ஆத்துமாவுடன் தொடர்புடைய சில அடிப்படைக் காரியங்களைக் குறித்து நான் உம்முடன் ஆராய்ந்து பேச விரும்புகிறேன். உதாரணத்திற்கு -
கடவுள் ஒருவர் இருக்கிறாரா?
வேதாகமம் உண்மையானதா?
மனிதன் கணக்குக் காட்ட வேண்டியவனா?
தெய்வீக மன்னிப்பு இருக்கிறதா?
தங்கள் நித்திய ஆத்துமாவைக் குறித்துக் கடுமையாகச் சிந்திப்பவர்களிடையே குழப்பமடைந்துள்ள சில பிரச்சனைகள் இருக்கிறது.
கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி அறியலாம்?
கடவுள் இருக்கிறார் என்று எனக்கு ஒரு இயற்கையான திட நம்பிக்கை உண்டு. எப்படி எனது புரிந்து கொள்ளும் சக்தியானது கடந்த காலத்தில், கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க காரணங்களை வழங்கின என்பதோ, அல்லது கடவுள் இல்லை என்பதை நான் எவ்வளவிற்கு விசுவாசிக்க வேண்டும் என இருந்தேன் என்பதோ காரியமல்ல, அது "இன்னமும் சிறிய சத்தமாக" வாழ்க்கையின் மிகத் தெளிவான சந்தர்ப்பங்களின் அமைதியில் உம்மிடம் வருவது போலவே மீண்டும் மீண்டும் என்னிடம் வந்தது. ஆம், குறைந்தபட்சம் எனக்காகவாவது ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தேன், மற்றவர்களை நான் பார்க்கும் போது எத்தனை பேர் கடவுளைத் தேடுகிறார்கள், "மதங்களில்" தேடுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன். அமைதியில் அதே சத்தம் எனக்குள் பேசியது.
சில மனிதர்கள் கடவுளை விசுவாசிக்கிறதில்லை என்பது உண்மை. ஆனால் எனக்கு விசுவாசிக்கிறதின் பிரச்சனைகளிலும் பார்க்க கடவுளை விசுவாசிக்காததின் பிரச்சனைகள் பெரியது. துணையில்லாமல் சடப் பொருள்கள் உயிரை உண்டாக்குகின்றன என விசுவாசிப்பதற்கு, வாழும் பொருட்கள் சிந்தனையை உண்டாக்குகின்றன. சிந்தனை மனச்சாட்சியைக் கொண்டு வருகிறது, மற்றும் தாறுமாறான நிலையின் சந்தர்ப்பம் நாம் இயற்கையில் காண்கின்றபடி உலகின் ஒழுங்கை உருவாக்குவது விசுவாசத்திற்கு அழைக்கப்படுவதாகக் காணப்படாமல் எளிதில் நம்பும் தன்மைக்காகக் காணப்படுகிறது.
கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பதை ஏன் விசுவாசிக்கின்றேன் என்பதற்கான எட்டுக் காரணங்களை ஒருமுறை நியுயோர்க் விஞ்ஞானக் கழகத்தின் தலைவர் வழங்கியிருந்தார். அவற்றில் முதலாவதாக: அடையாளம் காணக்கூடிய பத்து நாணயங்களை எடுத்து, அவற்றை ஒன்று தொடக்கம் பத்து வரை அடையாளமிடவும். அவற்றை உமது சட்டைப் பையினுள் போட்டுக் கொள்ளவும். இப்பொழுது ஒன்றை வெளியில் எடுக்கவும். இலக்கம் ஒன்றை நீர் பெறுவதற்கான சந்தர்ப்பம் பத்தில் ஒன்றாக இருக்கும். இப்போது அதனை மீண்டும் போட்டுக் கொள்ளவும். இலக்கம் இரண்டானது இலக்கம் ஒன்றினை தொடர்ந்து வருவதற்கான சந்தர்ப்பங்கள் பத்தில் ஒன்றல்ல, ஆனால் நூறில் ஒன்றாக இருக்கும்.
ஒவ்வொரு புதிய நாணயமும் வெளியே எடுக்கப்படுகையில், ஏற்படக்கூடிய நிலை பத்தினால் பெருக்கமடைகின்றது. ஆகவே எல்லா பத்து நாணயங்களும் வரிசைக் கிரமமாக பின் தொடர்ந்து வருவதற்கான சந்தர்ப்பம் பத்து பில்லியனில் (10, 000, 000, 000) ஒன்றாக இருக்கும். இது எனக்கு மிகவும் விசுவாசிக்க முடியாததாக இருந்ததினால் உடனடியாக ஒரு கடதாசியையும் பென்சிலையும் எடுத்து, மிக விரைவிலேயே அவரின் கூற்று சரியென்பதை கண்டறிந்தேன். இதை நீங்களாகவே முயற்சித்துப் பாருங்கள்.
இதனாலேயேதான் அமெரிக்கப் புள்ளிவிபர நிபுணர், ஜோர்ஜ் கலுப் என்பவர் கூறுகையில்: "என்னால் தேவனை புள்ளி விபரப்படி நிருபிக்க முடியும். மானிட சரீரத்தை மாத்திரம் எடுங்கள் - தனிப்பட்டவர்களுக்கு சாதாரணமாக நடைபெறக் கூடிய எல்லா செயற்பாடுகளின் சந்தர்ப்பமும் புள்ளி விபரப்படி நம்ப முடியாததாகும்" என்கிறார்.
ஒரு "நம்பமுடியாத புள்ளி விபரத்தின்" மீது தமது நித்தியமான எதிர்காலம் அடிப்படையாகக் கொள்வதை எந்தவொரு சிந்திக்கும் நபரும் விரும்பமாட்டார். இதனாலேயேதான் பெரும்பாலும் வேதாகமம் சங்கீதம் 14:1ல்: "தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்" எனக் கூறுகிறது. ஆயினும் நாம் இந்தப் பிரச்சினையை இன்னொரு நோக்கிலிருந்து சிந்திப்போம்.
நாம் ஒன்றாக கப்பற்துறை மேடையில் நிற்கையில் ஒரு பெரிய சமுத்திரக் கப்பல் நீளவாட்டத்தில் வருகிறது, அத்துடன் நான் உமக்குக் கூறுகிறேன் "அந்தக் கப்பல் ஒருவரின் திட்டங்களை கவனமாக அமைத்ததின் பெறுபேற்றினால் உருவானதென அநேகமான மக்கள் நினைக்கின்றனர், ஆனால் எனக்கு நன்றாகத் தெரிந்தபடி, உண்மையாகவே இந்த வேலையில் எந்தவொரு நுண்ணறிவும் முற்றிலுமாக இல்லை; இந்த இரும்பு, சில மாயமான நடவடிக்கையால், படிப்படியாக நிலத்திலிருந்து வந்து, அது தானாகவே தட்டுகளாகின; தட்டுகளின் ஓரங்களில் துவாரங்கள் மெதுவாக உருவாகின; மூட்டுகள் தோன்றி, ஒவ்வொரு பக்கத்திலும் தாமாகவே தட்டையாகின; அநேக நாட்களின் பின்னர், இதே பரிணாம நடவடிக்கையால் வேண்டிய இடத்தில் இயந்திரம் வந்தது. பின்பு ஒரு நாள் கடற்கரையில் இருந்த சில மனிதர்கள் இது ஒரு பாதுகாப்பான ஒதுக்கிடத்தில் மெதுவாக மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர்"
நான் ஒரு புத்தி சுயாதீனம் அற்றவராக இருந்து எனது அர்த்தமற்ற பேச்சை தப்பவைப்பதற்கு மேலும் திணிக்கப் பார்க்கிறேன் என நீங்கள் அநேகமாக நினைப்பீர்கள். ஏன், ஒரு ஆக்கம் இருக்கையில் அதனை ஆக்கிய ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்; சமுத்திரக் கப்பலைப் போன்றே மானிட ஞானத்தின் மற்றைய உற்பத்திகளையும் பார்க்கையில், இது மானிட நுண்ணறிவினால் திட்டமிடப்பட்டு மானிட திறமையால் கட்டப்பட்டது என்பதை நீங்கள் நிச்சயப்படுத்தலாம்.
இருப்பினும் இந்த முழு உலகமும் சந்தர்ப்பவசத்தினால் உண்டாகியிருக்கிறது, உண்மையிலே உயர்வான நுண்ணறிவு இதில் செயற்படவில்லை என அதிகமாகப் படித்த உத்தியோக பூர்வமான மனிதர்கள் எமக்குக் கூறுகின்றனர். இயற்கையைத் தவிர வேறு கடவுளை நமக்குத் தெரியாது என அவர்கள் எமக்குக் கூறுகின்றனர்.
இன்னொரு கரத்தில், தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர் என அநேகமாக சிந்திக்கும் மனிதர்கள் விசுவாசிக்கின்றனர்; அதாவது, அவர் தன்னை இயற்கையில் வெளிப்படுத்துகையில் (அதன் சட்டங்களும் கொள்கைகளும் அவரின் வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது), அவர் தாமே இந்த உலகத்திலும் பார்க்க மகத்தானவர். ஆனால் ஒரு ஆக்கியோன் இல்லாமல் ஆக்கத்தின் புதிரையும், ஒரு சிருஷ்டிகர் இல்லாமல் சிருஷ்டிப்பையும், காரணம் இல்லாமல் தாக்கத்தையுமே நாஸ்திகர்களால் எமக்கு வழங்க முடியும்.
ஒவ்வொரு சிந்திக்கும் நபரும் காரணங்களின் ஒரு தொடரையும்; இயற்கையில் தாக்கங்களையும் விசுவாசிக்கின்றனர், ஒவ்வொரு தாக்கமும் மற்றைய சில தாக்கத்தின் காரணத்தினால் வருகிறது. இதை உண்மையாக ஏற்றுக்கொள்ள எந்தத் தொடர்களுக்கும் கட்டாயம் ஒரு தொடக்கம் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் ஒத்துக்கொள்ள நியாயமாகக் கட்டாயப்படுத்துகிறது. ஒரு முதலாவது காரணம் இல்லாது இருந்திருந்தால் ஒரு முதலாவது தாக்கமும் இருந்திருக்காது. எனக்கு இந்த முதலாவது காரணம் தெய்வீகம் (தேவன்).
அநேக சட்டங்கள் மின்சாரத்தில் ஆளுகை செய்கிறது என்பதை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள போதிலும், மகத்தான விஞ்ஞானிகளினால் இதனை உண்மையாக விபரிக்க முடியவில்லை. அப்படியானால் அது இருக்கிறது என ஏன் நாம் விசுவாசிக்க வேண்டும்? ஏனெனில் அது இருக்கிறது என்பதன் வெளிப்படையை நாம் எமது வீடுகளிலும்; தொழிற்சாலைகளிலும்; வீதிகளிலும் காண்கிறோம். தேவன் எங்கேயிருந்து வந்தார் என எனக்குத் தெரியாத போதிலும், அவர் இருக்கிறார் என நான் கட்டாயம் விசுவாசிக்க வேண்டும், ஏனெனில் என்னைச் சுற்றிலும் எங்கும் அவரின் வெளிப்படையை நான் காண்கிறேன்.
பெளதீகவியலில் நோபல் பரிசினை வென்ற, டாக்டர். ஆர்தர் காம்பரன் அவர்கள் கூறுகையில்:
"என்னைப் பொறுத்தவரையில் உலகத்தை இருக்கும்படி கொண்டு வந்ததும் மனிதனைச் சிருஷ்டித்ததும் ஒரு மிக உயர்ந்த அறிவு என்பதை தெளிவாக அறிந்து கொள்வதுடன் விசுவாசம் ஆரம்பிக்கிறது. இந்த விசுவாசத்தை உடையவனாய் இருப்பது எனக்குக் கடினமானதல்ல, ஒரு திட்டம் எங்கே உண்டோ அங்கே ஒரு ஒழுங்கில் - உயர்ந்த அறிவு இருக்கும், எப்போதும் உரைக்கப்பட்ட மிகவும் மாட்சிமையான கூற்றான 'ஆதியிலே தேவன்’ என்பதன் உண்மைக்கு வெளிப்படையான அகிலம் சாட்சிபகருகிறது"
டாக்டர். வேர்ன்கேர் வோன் பிரெளன் இராணுவ மிசைல் டிவிஷனின் தலைவர், ஜூலை, 1957 மிசைல்ஸ் அன்ட் ரொக்கற்ஸ் எனும் வெளியீட்டில் குறிப்பிடுகையில்: "விஞ்ஞான அறிவும் சமய விசுவாசமும் ஒவ்வாததென்று அடிக்கடி கூறப்பட்டது. எமது காலத்தின் பெரிதான விசனங்களில் ஒன்றாக இந்த இரண்டும் சமத்துவமான முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான தவறாக மிகவும் பெரிய அளவில் விசுவாசிக்கப்படுகிறது என நான் கருதுகிறேன்" என்றார்.
காலஞ்சென்ற பேராசிரியர் எட்வின் கொன்கிலின், ஒரு குறிப்பிடத்தக்க உயிரியல்வாதி, மிகவும் பொருத்தமாகக் கூறியது: "ஒரு விபத்தில் இருந்து உயிரினங்கள் ஆரம்பிப்பதற்கான சாத்தியத்தை, ஒரு அச்சகத்தினுள் ஏற்பட்ட திடீர் வெடியின் பெறுபேற்றால் பூரணமான சொல் அகராதி தோன்றுவதற்கான சாத்தியத்துடன் ஒப்பிடலாம்" என்றார்.
மனிதர்கள் அவரை விசுவாசிப்பதற்குத் தெரிந்து கொள்கிறார்களோ இல்லையோ தேவனின் தோற்றம் நிச்சயமாக இருக்கிறது. பெரும்பாலானோர் தேவனில் அதிகமாக விசுவாசம் வைக்காததற்கான காரணம் என்னவென்றால், மனிதன் தேவனை தனது நுண்ணறிவினால் விசுவாசிப்பது சாத்தியம் அற்றதாக இருப்பதாகும். ஆனால் அவ்வாறான ஒரு தேவனுக்கு தான் கணக்குக் கொடுக்க வேண்டும் எனும் உண்மைக்கு முகங் கொடுக்கும்படி யோசிக்கும் நபரை, தேவனை விசுவாசிப்பது என்பது கட்டாயப்படுத்துகிறது. அநேகமான மக்கள் இதனைச் செய்வதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றனர். மனிதன் தனது சிருஷ்டிகருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் எனும் உண்மையில் இருந்து ஒரு இலகுவான "தப்புவிப்பாக" இருப்பதனால், அநேகமானோர் நாஸ்திகத்தில் அல்லது கடவுளை அறிவது அரிது எனும் கொள்கையில் அடைக்கலம் புகுந்து விடுகின்றனர். பொதுவாக "நான் விசுவாசிக்க முடியாதுள்ளது" என்பதற்கும் "நான் விசுவாசிக்க விரும்பவில்லை" என்பதற்கும் அதிகமான வித்தியாசம் இல்லை.
தேவனின் நோக்கத்தையும், தேவனின் நபரையும் அறிந்து கொள்ளக் கூடிய இரண்டு வழிகளை மாத்திரம் நான் அறிந்துள்ளேன். முதலாவதாக, காரணத்தின் நடவடிக்கையாக இருக்கிறது. நல்ல துப்பறிபவனால் முடிவது போல, உதாரணத்திற்கு, நான் செய்தவற்றை அல்லது கையாண்டவற்றைப் பரீட்சித்து எனது திறமைகள், பழக்கங்கள், குணங்கள் போன்றவற்றைப் பற்றிய அநேக விடயங்களை உமக்குச் சொல்லுவதைப் போன்று, இந்த அண்டசராசரத்தையும், தேவனின் கரத்தின் வேலைகளையும் பரீட்சித்து ஆராய்வதினால் தேவனைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் நான் செய்தவற்றை மாத்திரம் பரீட்சிக்கும் துப்பறிபவரினால் ஒருபோதும் என்னை அறிவேன் என ஒருபோதும் கூறமுடியாது. அவர் என்னைப் பற்றிய சில காரியங்களை அறிந்திருக்கலாம்; ஆனால் உன்னை அறிந்திருக்கிறேன் என அவர் கூறுவதற்கு முன்பு, வெளிப்பாட்டின் ஒரு நடவடிக்கை இருந்திருக்க வேண்டும்: நான் அவருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். நான் என்ன நினைக்கிறேன், நான் எவ்வாறாக உணருகிறேன், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை அவருக்குக் கூறவேண்டும். இந்த சுயவெளிப்பாடானது உரையாடல் மூலமாக, எழுத்து வடிவில், அல்லது வேறு வழிகளில் அமையலாம். அதன் பின்னர் மாத்திரமே அவருக்கு என்னை அறிந்து கொள்வது சாத்தியமாகிறது. இவ்வாறே, தேவனும் அவரின் சிந்தனையும், விருப்பமும், நோக்கமும் எப்போதாகிலும் அறியப்பட்டிருக்க வேண்டுமானால், அவர் தம்மைத் தாமே மனிதனுக்கு ஆரம்பத்திலும் அத்துடன் குறைந்தது ஒரு பகுதியான வெளிப்பாட்டையாகிலும் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த உலகம் கொண்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களிலும் ஒரேயொரு புத்தகம் மாத்திரமே தேவனின் நேரடியான வெளிப்பாடு என உரிமை பாராட்டுகிறது. அவரைப் பற்றியும் எம்மில் அவரின் நோக்கத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமமாக இருக்கிறது. இவ்வாறான ஒரு முக்கியத்துவமான புத்தகமாக வேதாகமம் இருப்பதனால் இது நிச்சயமாக சிந்தனைக்குரிய ஆராய்ச்சி செய்யப் பாத்திரமானதாக இருக்கிறது. ஆகவே, பிரான்சிஸ் பேக்கனின் ஆலோசனையுடன் இதனை ஏற்றுக் கொள்ளாமலும் நிராகரிக்காமலும், ஆனால் சிந்திப்பதற்கும் நிறுத்துப் பார்ப்பதற்கும், வழமைக்கு மாறாக இருக்கும் இந்தப் புத்தகத்தை நாம் அணுகிப் பார்ப்போம்.
எம்முடன் நாமும் வேதாகமத்துடனும் நியாயமாக இருந்து கொள்ளுவதற்கு, நாம் அதனை முழுவதுமாக வாசிக்க வேண்டும். ஒரு நியாயமான நீதிபதி வழக்கின் அரைப்பகுதியைக் கேட்டுவிட்டு தனது தீர்ப்பினைக் கூறமாட்டார், அவ்வாறே நாமும் தீர்ப்புக் கூறக் கூடாது; மேலும், நீதிபதியைப் போன்று, நாமும் சாட்சிகளின் அத்தாட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஒவ்வொரு சொல்லையும், மேலோட்டமான அர்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் ஆழமான அர்த்தத்தைப் பார்ப்பதற்காக நிறுத்து, சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதன் உரிமை பாராட்டுதலின் முக்கியத்துவம் அதன் அறுபத்தாறு புத்தகங்களையும் கற்பதற்கு அவசியமான நேரத்தைச் செலவு செய்வதை நிச்சயமாக நியாயப்படுத்துகிறது. இது அறுபத்தாறு புத்தகங்களை உள்ளடக்கியது, இதனை நாற்பதுற்குக் குறையாத வித்தியாசமான ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள், சிலர் நல்ல கல்வி அறிவுள்ளவர்கள், சிலர் குறைந்த கல்வி அறிவுள்ளவர்கள், சிலர் ராஜாக்கள், சிலர் சாதாரணமானவர்கள், கிட்டத்தட்ட 1600க்கும் மேற்பட்ட காலப்பகுதியில், பலதரப்பட்ட பகுதிகளிலும் இருந்து எழுதியுள்ளார்கள். இருப்பினும் அதன் அர்த்தமும் தொகுப்பும் ஒருவரே அதன் ஆசிரியராக இருக்கிறார் என்பதை ஒன்றுக்கு ஒன்று முரண்படாத கூற்றுகள் எதிர்பார்க்க வைப்பதாக இருக்கிறது. இதன் ஒற்றுமையானது, ஒன்று மற்றொன்றுடன் இறுக்கமாகவும், பூரணமானதாகவும் இருக்கிறது.
2பேதுரு 1:21ம் வசனத்தின் சத்தியம் மெதுவாக எனக்கு நிச்சயமானது. இதனைவிட வேறெந்தக் காரணம் உடைய விளக்கமும் இல்லை. "தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." இந்த உண்மையானது தீர்க்கதரிசனத்தைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாக பழைய ஏற்பாட்டில் நான் வாசிக்கின்ற போது, அவை ஒவ்வொன்றும் பின்னர் நிறைவேறியுள்ளன, நூற்றுக் கணக்கான வருடங்களின் பின்னரும் நிறைவேறியுள்ளன.
உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றி ஏசாயா 53ம் அதிகாரம் குறிப்பான பூரண விளக்கத்துடன் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு 700 வருடங்களுக்கு முன்னர் கூறியுள்ளது. ஆம், அந்தப் புத்தகத்தை சந்தேகிப்பதின் முறையிலுள்ள கஸ்டம், அதனை விசுவாசிப்பதின் முறையில் உள்ளதிலும் அதிகமானதாகக் காணப்படுகிறது.
எனக்கு நானே உண்மையுள்ளவனாக இருந்து விசுவாசம் இல்லாததில் உள்ள பிரச்சனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இன்னமும் கடந்து சென்று கூறுவது: நான் வேதாகமத்தை ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாக விசுவாசிக்கிறேன். வேறெந்த வழிகளிலும் அல்லாமல் நான் இதற்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவன்.
எனினும் இவ்வாறாக அனுமதிப்பது என்னை ஒரு கடுமையான பிரச்சனைக்கு முகங்கொடுக்க வைக்கிறது, நான் அடைந்திராத நீதியின் ஒரு தராதரத்தை வேதாகமம் வைத்துள்ளது. இந்தத் தராதரத்திற்கு குறைவான எதுவுமே பாவம் என நான் கூறினேன். உம்முடைய ஒவ்வொரு இரகசியமான சிந்தனையையும் தேவன் அறிபவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, அந்தத் தராதரத்தின் அருகில் உம்மை வைத்து அளவிட்டுப் பாரும்: "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை" (மத்தேயு 22:37,38).
இவ்வாறான ஒரு தராதரத்திற்கு முகங் கொடுக்கையில், எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுப்பதற்காக, உமது வாழ்க்கை முழுவதிலும் இவ்வாறு வாழ்ந்துள்ளீர் என உரிமை கூற முடியுமா? ஒருவராலும் இவ்வாறான பூரண நிலையை நேர்மையாக உரிமை கூற முடியாது. ஒவ்வொரு நேர்மையான இருதயமும் ரோமர் 3:10 மற்றும் 23ஐ எதிரொலிக்கும்: "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, ஒருவனும் இல்லை, …..எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள்." தேவனின் தராதரத்தை அடைவதற்கு எல்லாரும் தவறியுள்ளார்கள்.
ஒரு வாலிபன் என்னிடம் வந்து, "நாம் அடைய முடியாத அளவிற்கு அதி உயர்வான பரிசுத்தத்தின் தராதரத்தை வைத்து விட்டு, நாம் அதை அடையாததிற்காக எம்மை நியாயந்தீர்ப்பது, தேவனுக்கு ஏற்றது என நீங்கள் நினைக்கிறீர்களா?" எனக் கேட்டான்.
நான் அதற்குப் பதிலாக, "மெய்ப் பாதுகாவலர்களுக்கு அலுவலகர்கள் நியாயமற்ற தராதரங்களை வைப்பதுபோல தேவன் பரிசுத்தத்தின் தராதரத்தை நியாயமற்றதாக வைக்கவில்லை. ஒரு மனிதன் எல்லாவித தகமைகளையும் உடையவனாக இருந்தும்; அவர் ஒரு அங்குலமாகிலும் குறைவானவராயின், அவர் தகுதியற்றவராகிறார்."
"தேவன் உண்மையில் ஒரு தராதரத்தை அமைத்து வைக்கவில்லை; அவரே தராதரமாக இருக்கிறார். அவர் முற்றிலும் பரிசுத்தமானவராக இருக்கிறார், அவரின் சொந்தக் குணத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு அவர் மனிதனுடனுள்ள சகல தொடர்புகளிலும் முற்றிலும் பரிசுத்தமாக இருப்பதில் தொடர்ந்திருக்க வேண்டும். அந்தத் தராதரத்தில் தொடர்ந்திருப்பது அவரையும் எம்மையும் அதிகமான மரியாதைக் குறைவின் கஸ்டத்துக்கு உள்ளாக்கி விடுகிறது."
எனது மனச்சாட்சியும்; எனது பொது அறிவும் முற்றிலும் பரிசுத்தமான தேவனின் தராதரத்தில் இருந்து நான் விழுந்து போனதால், நான் அவரின் பார்வையில் பாவியாக இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது.
நான் பாவம் செய்துள்ளேன் என்பதை ஒத்துக்கொள்வதின் மேல் எசேக்கியேல் 18:4ல் உள்ள "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்" எனும் கட்டளை வருகிறது.
இது இவ்வாறு எனது கவனத்தைக் கவருகிறது: பிரித்தானியாவின் சட்டம் எல்லா சாரதிகளும் வீதியின் இடது பக்கத்தால் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறும் பொழுதில், நியுயோர்க்கிலுள்ள சட்டமானது வாகன சாரதிகள் வீதியின் வலது பக்கத்தால் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறது. இப்போது நான், அமெரிக்காவில் இருந்து லண்டனுக்குச் சென்று வீதியின் வலது பக்கத்தில் வாகனத்தைச் செலுத்துகிறேன். என்னை நீதிபதியின் முன்பாக அதற்காகக் கொண்டு வரும்பொழுது, "இது நியாயமற்றது. அமெரிக்காவில் வீதியின் வலது பக்கத்தில் வாகனம் செலுத்துவதற்கு நாம் அனுமதிக்கப்படுகிறோம்" என நான் கூறுகிறேன்.
அதற்கு நீதிபதி: "நீர் அமெரிக்காவின் சட்டத்தினால் நியாயந் தீர்க்கப்படவில்லை, அந்த நாட்டின் சட்டம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை; நீர் இப்போது இருக்கிற இந்த நாட்டின் சட்டத்தையே நீர் கவனத்திற் கொள்ள வேண்டும்." என்று கூறுவார்.
அதன்படி, தேவனின் தராதரத்தைக் கவனத்திற் கொள்கையில், நித்தியத்தில் தேவனின் தராதரத்தினால் மாத்திரமே நான் நியாயந்தீர்க்கப்படுவதாக இருந்தமையால், நான் இழந்து போயிருந்தேன். நான் நம்பிக்கை அற்ற விதத்தில் இழந்து போயிருந்தேன். நான் நினைத்தவையோ அல்லது எனது நண்பர்கள் கூறியவையோ பயனற்றவை என்பதைக் காண ஆரம்பித்தேன்.
நியாயத்தீர்ப்பு என்பது எனது நண்பர்கள் கூறியவற்றினால் அல்லாது தேவன் கூறியவற்றினால் வருகிறது. மேலும் நாம் எல்லாரும் பாவம் செய்ததினால் வருகிற தேவனின் நியாயத்தீர்ப்பாக இருப்பதனால், நாம் இன்னொரு நபரிடம் உதவியை எதிர்பார்க்க முடியாது; அவர்களும் என்னைப் போலவே அதே ஆக்கினையின் கீழாக இருக்கிறார்கள்.
என்னுடைய பாவத்தைப் பற்றிக் கூறும் இதே வேதாகமம், தேவனின் குமாரனாக இருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கூறுகிறது.
தேவனின் குமாரனாக இருக்கும், இயேசு கிறிஸ்து எனும் நபரைப் பற்றிக் கூறுவது வேதாகமத்தின் தெளிவான போதனையாக இருக்கிறது. மனிதர்கள் இழந்து போயுள்ளார்கள், பாவத்திற்கு தங்கள் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துள்ளார்கள் என்பதை அவர் கண்டார். அவரின் வாழ்க்கை பாவத்திற்கும் அதன் தண்டனைக்கும் உட்பட்டதல்ல. அது பாவமும் கறையும் இல்லாதது. நாம் விடுதலை அடையும்படிக்கு மனிதனின் பாவமான வாழ்க்கைக்குப் பதிலாக தனது தூய்மையான ஜீவனைக் கொடுக்க அவர் விரும்பினார்.
அவர் தாமே அதனை யோவான் 3:16ல் "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என எமக்குக் கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்து தேவனின் குமாரனானால், நாம் உண்மையாக இரட்சிப்பை நிச்சயித்திருக்கலாம்; ஆனால் கஸ்டம் எமக்கு முகங் கொடுக்கிறது: உண்மையில் இயேசு கிறிஸ்து தேவனின் குமாரனாக இருக்கிறாரா? அவர் பின்வரும் மூன்றில் ஒன்றாக மாத்திரம் இருக்க முடியும் - தேவனின் குமாரன் அல்லது ஒரு ஏமாற்றுக்காரன் அல்லது தோற்றத்திற்கு ஒரு நேர்மையான மனிதனாக இருக்க வேண்டும்.
ஆனால் அவரின் நாட்களில் மிகவும் திறமையான மனிதர்களை அவர் சந்தித்ததை நாம் காண்கிறோம், அவர்கள் அவரின் வார்த்தைகளினால் அவரைக் குற்றம் பிடிக்க வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவரிடம் அனுப்பப்பட்டவர்கள்; அவர்கள் மேற்கொண்டு எந்தவொரு கேள்வியையும் அவரிடம் கேட்காதபடிக்கு அவர்கள் அமைதியாகினார்கள் (மத்தேயு 22:46). அத்துடன் அவரின் கூற்றுக்களின் ஞானத்தை அறிவு நுட்பமான நிலையில் இருந்து பார்க்கையில், அவர் தோற்றத்திற்கு செய்பவராக இருக்கவில்லை என்பதை நாமாகவே தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் அவரின் ஞானம் மிகவும் அதிகமாக இருந்து, மக்களை ஏமாற்றுவதற்காக அதனைப் பாவித்தாரா? ஒரு வாலிபன் வஞ்சகர்களுடனும், மோசக்காரர்களுடனும் கூட்டுறவாகினான். ஏனெனில் அந்தக் கூட்டுறவு உயர்ந்த அந்தஸ்தும்; நேர்மையும்; தூய்மையும் உடையதாக இருந்தமையால் என நீங்கள் எப்போதாகிலும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! இவ்வாறான ஒரு நிலையை கேள்விப்பட்டதில்லை என்பதை ஒத்துக் கொள்ளுவீர்கள்; ஆனால் ஒரு வாலிபன் தனது வாழ்வினுள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினால் இழிவான விருப்பு மட்டத்தில் இருந்து உயர்வான சிறந்த மனிதனாக மாற்றப்பட்டதை நான் அறிவேன். ஒருவரின் வாழ்வினுள் ஒரு ஏமாற்றுக்காரனை ஏற்றுக் கொள்வதினால் அவரின் வாழ்வு நல்லதற்காக மாறும் என்பதை சாதாரணமாக என்னால் விசுவாசிக்க முடியாது.
"நான் இந்த உலகத்தில் எனது தலையை செங்குத்தாகவும், எனது தோள்களை நேராகவும் வைத்துக் கொண்டு பாதையில் நடக்கக் கூடியதாக இருப்பதனால் நான் இயேசுவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு தூய்மையான பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூடியவனாகவும்; ஒரு நேர்மையான மனிதனின் கரத்தைப் பற்றக் கூடியவனாகவும் என்னை மாற்றியமையால் நான் இயேசுவுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்" என ஒரு மனிதன் கூறியதை நான் கேட்டேன்.
இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதன் எனும் சர்வ உலக சமுதாயத்தின் கருத்தை நான் சாட்சிக்கு அழைக்கிறேன். அப்படியானால், அந்த நேர்மையான மனிதன், தேவனுடைய குமாரன் என்று தான் உரிமைபாராட்டியதற்கு நேர்மையாக இருந்து, என்னுடையதும் உம்முடையதுமாகிய பாவமான வாழ்க்கைக்குப் பதிலாக தன்னுடைய பாவமற்ற ஜீவனை பலியாகக் கொடுக்க வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.
பலதரப்பட்ட உத்தியோகங்களில் இருந்த தலைவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறியுள்ளார்கள்:
கெள. மார்க் ஓ. ஹற்பீல்ட், ஒரேகன் ஆளுநர், சாட்சியாக கூறியது:
"நான் சுயத்திற்காக 31 வருடங்கள் வாழ்ந்த பின்னர் எனது மிகுதி வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் சுயத்தை மத்தியாகக் கொண்டு வாழ்ந்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். அத்துடன் எனது வாழ்க்கையை அவருக்குச் சொந்தமாக்கும்படியும் கேட்டேன். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது அதிகரிக்கும் சவாலின், சந்தோஷத்தின், கண்டு பிடிப்பின் ஒரு அனுபவமாக இருந்து வந்தது. ஒப்புவிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது உண்மையில் திருப்தியானது ஏனெனில் அது உண்மையான நோக்கத்தையும் திசையையும் எனக்கு வழங்கியது. இது எனது சுயத்திற்கு சேவை செய்யாமல், இயேசு கிறிஸ்துவை சேவிப்பதினால் உண்டானது"
ரொபர்ட் இ. றிச்சார்ட்ஸ், முன்னாள் ஒலிம்பிக் சுவட்டு நட்சத்திரம், கூறியது:
"இயேசு கிறிஸ்து பாவத்தில் இருந்து விடுதலை கொடுக்கிறார் என்பதையும் ஒருவர் கிறிஸ்தவராக இருந்து கொண்டு நல்ல, ஆக்கபூர்வமான காரியங்களிலும் ஈடுபடலாம் என்பதை முழு உலகிலும் உள்ள வாலிபர்களுக்கு சாட்சிபகரும் ஒரே காரணத்திற்காகவே நான் விளையாட்டுகளில் இருக்கிறேன். இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்தபோது மிகவும் அதிகமான ஆவிக்குரிய வல்லமையை வழங்கினார் என்பதை வாலிபர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்."
லேற். ஜென். வில்லியம் கே. ஹரிஷன் (ரெற்.), கொறியாவில் போர் நிறுத்தற் குழு கட்டளையிடும் அதிகாரியாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் சிரேஷ்ட பிரதிநியாகவும், பின்னர் கரிபியன் கட்டளையின் பிரதான கட்டளையிடும் அதிகாரியாகவும் இருந்தவர் எழுதுகையில்:
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மிகவும் அற்புதமானது, அத்துடன் கிறிஸ்துவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்கு நேராக என்னை வழிநடத்தியமைக்காக நான் அதிகப்படியான நன்றியுடன் இருக்கிறேன். கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வின் உண்மையின் நம்பிக்கை அத்தாட்சியாக தனிப்பட்ட நாளாந்த அனுபவத்தை கிறிஸ்துவை விசுவாசிக்கும் எமக்கு தேவன் வழங்குகிறார்."
வேதவாக்கியங்கள் உண்மையானவை, இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன், அவர் விருப்பத்துடனே வந்தார், தேவன் என்னில் மிகவும் அன்பு வைத்ததினால் நான் விடுதலை அடையும்படிக்கு எனது பாவங்களின் தண்டனைக்காக அவர் பூரணமாக பாடு அனுபவித்தார் என்பதை நம்பி, அறிவாற்றல் உள்ளவனாக நான் எனது சுய-கெளரவத்தை விட்டு, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இருப்பினும் நீர் இதனை விரும்பாதவராக இருக்கையில் இதனை ஏற்றுக் கொள்ளும்படி நான் உம்மிடம் கேட்கவில்லை: வேதாகமம் உண்மையானது என்பது நியாயமானதாகத் தோன்றுகிற போதிலும், நியாயமானதாகத் தோன்றுகிற மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் இருக்கிறதா? ஏன் காரணம் உள்ளவர்களாக இருந்து அவற்றையும் நியாயமான பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது?
என்னுடைய திட நம்பிக்கையை ஒரு நண்பனுக்குக் கூறும்போது, அவர் பதிலாக, "நீர் பார்ப்பதைப் போல காரியங்களை நான் பார்க்காவிட்டாலும், உம்மைப் போலவே நானும் சரியாக இருக்கிறேன். மனிதன் தான் விசுவாசிப்பதில் உண்மையாக இருந்தால், அவன் என்னத்தை விசுவாசித்தாலும் பரவாயில்லை என்பதாக எனக்குத் தெரிகிறது" என்றார்.
இந்தக் கூற்றை நாம் பரிசோதித்துப் பார்ப்போம். ஒரு அழகான ஞாயிறு காலையில் எனது அயலவர் ஒருவர் "எமது வாகனத்தை எடுத்துக் கொண்டு பிரயாணமாகப் போவோம்" என தனது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் கூறினார். வடக்கே நோக்கிப் பிரயாணப்படுகையில், சமதரையான ஒரு புகையிரதக் கடவையைக் கடக்க வேண்டி வந்தது. ஒரு ஞாயிறு காலையில் புகையிரதம் வரமாட்டாது என்று உண்மையாகவே விசுவாசித்துக் கொண்டு, கடவையைக் கடக்க முற்பட்டார். அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார், ஒரு மகனின் கை உடைக்கப்பட்டது, அவரின் சிறிய மகள் மாதக் கணக்கில் மருந்து கட்டப்பட்டிருந்தாள். அவரின் தெளிவாக இருந்த உண்மையான விசுவாசம் அவரை இரட்சித்ததா? இல்லை, அது அவரைக் காப்பாற்றவில்லை.
ஒரு மருத்துவ தாதி, இரவு கடமையில் இருக்கையில், தனது கரத்தில் சரியான மருந்தை எடுத்துக் கொண்டேன் என உண்மையிலே விசுவாசித்திருந்தாள்; திடமான முயற்சியால் காப்பற்றப்படுவதற்குப் பதிலாக இருபது நிமிடங்களுக்குள் நோயாளி கொல்லப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன்.
நாம் உண்மையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது நிச்சயம், அதற்காக பொய்யை (தவறானதை) அல்லாமல், உண்மையை (சத்தியத்தை) உடையவர்களாக விசுவாசிக்க வேண்டும். உண்மையில், தவறானதை உண்மையாக விசுவாசிப்போமானால், அதுவே எம்மை ஏமாற்றுவதற்கும் இறுதியில் நாசமாக்குவதற்கும் ஏதுவானதாக இருக்கும்.
வேதாகமத்தில் சந்தேகிப்பதற்கு இடம் இல்லை. யோவான் 14:6ல் கிறிஸ்து கூறியது, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." அப்போஸ்தலர் 4:12 கூறுவது: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."
வேறேதாவது வழியால் நீர் பரலோகம் செல்வீரானால், வேறு வழி இல்லை என்று இயேசு கிறிஸ்து பொய்யாகக் கூறினார் என்பதற்கு நீர் நித்திய காலம் முழுவதும் ஒரு சாட்சியாக இருப்பீர். இருப்பினும், அவரே தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதற்கு முழு ஆதாரத்தையும் கொடுத்திருக்கையில், தேவனால் ஏற்படுத்தப்பட்ட வழி என உரிமையாகக் கூறும், கிறிஸ்துவுக் கூடாக வருவதேயல்லாமல் வேறு வழியால் வருவதற்கு முயற்சிப்பது அறிவீனமான செயலாக இருக்காதா?
வேறேதாவது வழி எமக்குத் தேவைப்படுவதற்கான உண்மையான காரணம் என்னவென்றால், சிலுவையின் பாதையானது தாழ்மையானதாகவும்; நாம் பெருமை உடையவர்களாக இருப்பதுமே ஆகும். ஆனால் சிலுவையின் பாதையானது கிறிஸ்துவுக்கும் தாழ்மையான பாதையாக இருந்தது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் பின்வரும் வசனங்களில் வாசிக்கிறோம்.
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." பிலிப்பியர் 2:5-8
கடந்த காலத்தில் வாழ்ந்தது போலல்லாது, எதிர்காலத்தில் நல்லதைச் செய்து, நேர்மையான சீர்திருத்தம் உடையவராக இருப்பதே ஒரு நபருக்கு அவசியமானது. இது ஒருவரை பரலோகத்திற்கு தகுதியுடையவராக்கும் என சிலர் யோசனையாகக் கூறுகிறார்கள். இது சாத்தியமாக இருக்குமா?
ஒரு வர்த்தக நிர்வாகி தனது கணக்காளரிடம் சென்று அந்தக் கம்பனி ஐம்பது இலட்சம் ரூபாய்கள் அதன் உற்பத்தியாளர்களுக்கும்; வர்த்தகர்களுக்கும் கடன்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் "இந்த மக்கள் எல்லாருக்கும் கடிதம் ஒன்றை எழுதி, நாம் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை, எமது கணக்குப் புத்தகத்தில் புதிய பக்கத்திற்குத் திருப்பிவிட்டோம்; ஆகவே எதிர்கால வியாபாரத்தில் நூறு ரூபாய்களுக்கு பத்து ரூபாய்கள் தருவதாக வாக்களிக்கிறோம். அத்துடன் இப்பொழுதில் இருந்து வியாபாரத்தின் உயர்ந்த தராதரத்தின் முழுமையான நேர்மையைக் காத்துக் கொள்ளுவோம்" என அவர் கூறுகிறார். இந்த நிர்வாகி பைத்தியக்காரனாகிவிட்டார் என கணக்காளர் யோசிப்பதுடன் அவரின் இந்த ஆலோசனையை கடன்காரர்களுக்கு அனுப்புவதையும் நிராகரிப்பார்.
இவ்வாறான ஒரு ஆலோசனையினாலே பரலோகம் செல்வதற்கு ஆயிரக்கணக்கான உணர்வுள்ள மக்கள் முயற்சித்துக் கொண்டு, தமது எதிர்காலத்திற்காக தேவனுக்கு தமது கடமைகளை காணிக்கைகளாக்கி, எந்த விதத்திலும் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள். "நடந்ததையோ தேவன் விசாரிப்பார்." என பிரசங்கி 3:15ல் நாம் வாசிக்கிறோம். எப்படியாகிலும் முற்றிலும் பூரணமான வாழ்க்கை வாழ முடியும் என நாம் நினைத்தாலும் - நாம் செய்ய வேண்டியதிலும் திறமானது இல்லை, எனவே அது எமக்கு சாத்தியமற்றது நாம் பாவிகளாகவே இருக்கிறோம்.
ஒவ்வொரு சதமும் நீதியான முறையில் செலுத்தித் தீர்க்கப்பட்டது என்பது உரித்தாகும் மட்டும் தேவனின் நீதியானது கடந்த காலக் கணக்கு செலுத்தப்பட்டுத் தீர்ந்ததாகக் கருதுவதில்லை.
கொலைக் குற்றவாளி தனது பாவத்தை மறைத்து தனது குற்றச் செயலின் பின்னர் பத்து வருடங்கள் ஒரு நல்ல பிரஜையாக வாழ்ந்திருக்கலாம்; ஆனால் அவர் கண்டுபிடிக்கப்படும்போது, மனிதனின் சட்டம் அவனுக்கு மரண தண்டனையைக் கொடுக்கிறது. அவன் கடந்த பத்து வருடங்களாக யாரையும் கொலை செய்யாத போதிலும் - அது அவனை ஒரு கொலைகாரன் எனத் தீர்ப்பளிக்கிறது.
எமது சிந்தையால், வார்த்தையால் அல்லது செய்கையால் செய்ததாயிருக்கும், கடந்த காலப் பாவங்களை, நாம் நினைக்கும் முற்றிலும் பூரணமான வாழ்க்கையினால் மறைப்பது, இன்னமும் எம்மைப் பாவிகளாகவே, நிகழ்காலத்தைப் போலவே கடந்தகாலமும்; எதிர்காலமும் வெளியரங்கமாக உள்ளவரின் பார்வையில் இருக்கிறது. தேவனின் பரிசுத்தத்தின் தராதரத்தின்படி, நாம் எல்லோரும் பாவம் செய்துள்ளோம், நாம் அந்த பாவத்தை வெளியிலே கொண்டு வந்து நீதியாக முடிவு செய்ய வேண்டும்.
புத்தகங்களை தெளிவாகத் துப்பரவாக்கக் கூடிய ஒருவர் எம் ஒவ்வொருவருக்கும் தேவை. இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே இந்தப் பாவ தண்டனைக்கு செலுத்த முடியும் என்பதை வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. "அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம்" (ரோமர் 5:10). ஆம், நாம் விடுதலையாகிச் செல்லுவதற்கு எம்முடைய இடத்தில் எமக்காக இயேசு கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார். எமது கடந்த காலப் பாவங்கள் செலுத்தப்பட்டுவிட்டது; நாம் தேவனுக்கு விரோதமாகவே பாவங்களைச் செய்துள்ளோம், அதற்காகச் சிலுவையில் செலுத்தப்பட்ட கிறிஸ்துவின் பரிபூரணமான கிரியை அந்த தேவன் ஏற்றுக் கொண்டதை, அவரை மரணத்தில் இருந்து எழுப்பியது காண்பிக்கிறது. கிறிஸ்து ஒரேதரம் சிலுவையில் கொலையுண்டார். இப்போது அவர் எமது ஜீவனுள்ள இரட்சகராக இருக்கிறார். அவர் பாவத்தின் தண்டனையில் இருந்து எம்மை இரட்சிப்பதற்காக மரித்தார், இப்போது பாவத்தின் வல்லமையில் இருந்து எமக்கு விடுதலை அளிப்பதற்காக ஜீவிக்கிறார்.
ஆனால் ஏன் கிறிஸ்து மரிக்க வேண்டும்? இதனால் அல்லாமல் அவர் எம்மை இரட்சித்து இருக்கக் கூடாதா? மனிதன் தேவனின் சட்டத்தை மீறியுள்ளான், அதற்கான தண்டனை மரணமாகும். எமது பாவத்திற்காக முற்றிலுமாகச் செலுத்தாமல் நீதியாக கிறிஸ்துவால் எப்படி எம்மை விடுவிக்க முடியும்? முற்றிலுமாகச் செலுத்தப்படுவதற்குக் குறைவாக எதையும் அவர் செலுத்தினால், நாம் முகங்கொடுக்க வேண்டிய நியாயத்தீர்ப்பு இன்னமும் இருக்கும் என்பதை நீங்கள் காண வில்லையா? நாம் தவறிய சட்டம் எம்மை நியாயந்தீர்க்க மாட்டாது என்பதற்கு அவர் மரித்தது அத்தாட்சியாக இருக்கிறது.
"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" என ரோமர் 8:1ல் வேதாகமம் கூறுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முடிவு பெறாத நீதிமன்ற வழக்கு மறுநாளும் தொடர்ந்தது; வழமையான நடைமுறையின்படியே வெளியாரின் செல்வாக்கு நீதிமன்ற விசாரணைக் குழுவினரின் மீது வராதபடிக்கு அவர்கள் இரவு முழுவதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மறுநாள் காலையில் நீதிமன்றத்தில் நீதிபதி, விசாரணைக் குழு மனிதரை நோக்கி: "கனவான்களே, இந்த வழக்கு கலைக்கப்படுகிறது; கைதி ஒரு உயர் கூட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார்" என்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர் மரித்துவிட்டார்; சட்டம் செத்த மனிதனை நியாயந்தீர்க்க முடியாதபடியால் இந்த வழக்கைத் தொடர்ந்து செல்வதில் பயனில்லை.
ஒரு மனிதன் ஒரு நபரைக் கொலை செய்தால், அவர் கொல்லப்பட வேண்டும்; எனினும் அவர் ஆறு பேரைக் கொன்றிருந்தால், அவர் அப்போதும் கொல்லப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் சட்டத்தின் இறுதியான தண்டனை ஆகும். மனிதனுடைய பாவம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவனின் உயிரை எடுப்பதிலும் பார்க்க கடுமையான தண்டனை சட்டத்தில் இல்லை.
ஆகையால், காலம் கடந்து நான் மறந்துபோயிருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் பாவம் இருப்பது காரியமல்ல. நான் அவைகளுக்குப் பயப்படுவதில்லை; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, என்னுடைய பிரதிநிதியாக, என்னுடைய கணக்கில் சட்டத்தின் இறுதியான தண்டனையை பாடுபட்டு அனுபவித்தார் என்பதால் எனக்கு இந்த நிச்சயம் உண்டு. இது சிறிதாயினும் பெரிதாயினும் எனக்கு விரோதமாக இருந்த எல்லாவற்றில் இருந்தும் என்னை விடுதலையாக்கியுள்ளது.
இயேசு கிறிஸ்துவினுடைய பலியாகும் மகத்தான தன்மையின் அடிப்படையில், கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்திருந்தால், நாம் எல்லாரும் இரட்சிக்கப்படலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் தேவன் அவ்வாறு கூறவில்லை. எல்லாருக்கும் இரட்சிப்பு இருக்கிறது, ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்படவில்லை என அவர் கூறுகிறார்.
அதற்கான ஒரு விளக்கம் இங்கே இருக்கிறது. அது ஒரு மிகவும் கடுமையான குளிர்காலம். ஒருவராலும் வேலை செய்ய முடியவில்லை. நகரத்தில் எல்லாரும் வறுமையிலும் தேவையிலும் இருக்கிறார்கள். நகர சபையின் அதிகாரிகளால் எல்லாருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. நான் பட்டினியாகக் கிடக்கிறேன் என்று கூறும் ஒரு ஏழை மனிதனை நீங்கள் பாதையில் சந்திக்கிறீர்கள். இலவசமாக போதிய அளவு உணவு எல்லாருக்கும் வழங்கப்படுகிறது என பட்டணம் பூராகவும் போடப்பட்டுள்ள விளம்பரத்தைப் பார்த்தீர்களா? என நீங்கள் அவரிடம் கேட்பது வழமையானதே.
"ஆம்," என்ற அவர், "பொதுவான ரீதியில் அது உண்மை என நான் நம்புகிறேன், ஆனால் நான் இன்னமும் பசியாக இருக்கிறேன்" என பதிலளித்தார்.
எல்லாருக்கும் வழங்கப்படுவதை அவர் தனிப்பட்ட முறையில் புசித்துக் குடித்தாலேயொழிய அவர் தொடர்ந்தும் பசியில்தான் இருப்பார் என்பதை நீர் அவருக்குக் கூறுவீர் அல்லவா?
அவ்வாறே, கிறிஸ்துவின் மரணம் எல்லாருக்கும் இரட்சிப்பை வழங்கியபோதிலும், தம்முடைய இடத்தில் தமக்காக அவர் மரித்தார் என்பதை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்பட்டுள்ளார்கள்.
நான் கிறிஸ்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது அவரின் மரணம் எனக்குப் பிரயோஜனம் அற்றது புத்துணர்வு அளிக்கும் நீரோடையின் தண்ணீரை அருந்துவதற்கு நிராகரித்து தாகத்தினால் அதன் அருகிலே மரித்துப்போன ஒரு மனிதனைப் போல இது இருக்கும்.
தம்முடைய விசுவாசத்தை கிறிஸ்துவின் மீது வைப்பவர்களுக்கு தேவன் இரட்சிப்பை வழங்குவதற்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரே ஜீவன் அநேக மக்களின் ஜீவனுக்குப் பதிலாக எவ்வாறு கருதப்பட முடியும்? எனும் கேள்வியைக் கேட்கும் சிலரும் இன்னமும் இருக்கிறார்கள்.
இது ஒரு நியாயமான கேள்வியாகக் காணப்படுகிறது எண்கணிதத்தில் உள்ள ஒரு பிழை தாளில் உறுதிப்படுத்தப்படும். கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் - மாம்சத்தில் தெய்வீகம் - ஆகவே அவர் கொடுத்த ஜீவன் முடிவில்லாத ஜீவன், அது எவ்வளவு எண்ணிக்கையான முடிவுள்ள ஜீவன்களுக்கும் போதுமானது.
ஒரு கடதாசியை எடுத்து அதில் நீர் நினைக்கக் கூடிய எல்லாப் பெரிய இலக்கங்களையும் எழுதவும் - மில்லியன் அல்லது அதிலும் அதிகமானது அவற்றைக் கூட்டவும். இப்பொழுது உம்மிடம் ஒரு பெரிய இலக்கம் உள்ளது; அதனை 10 - 100 - அல்லது நீர் விரும்பினால் ஒரு மில்லியனால் பெருக்கவும், கடதாசி முடியலாம், எல்லாவற்றின் பின்னரும் உமக்கு எல்லைக்கு உட்பட்ட இலக்கமே இருக்கும் - அது எவ்வளவு விசாலமாகச் சென்றாலும், அதற்கு ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் இருக்கும். முடிவுள்ள காரியங்களை ஒன்றாக இணைத்து ஒருபோதும் மனிதனால் முடிவில்லாதவற்றை உண்டாக்க முடியாது. பாவிகளுக்குப் பதிலாக பலியாகக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் முடிவில்லாத ஜீவன் ஒவ்வொருவருக்காகவும் மரித்ததைப் போன்று அவரை ஏற்றுக் கொள்ளும் எல்லாருக்கும் தேவைக்கும் மேலானதாக இருக்கிறது.
ஆனால், அவர் மரித்து 1900 ஆண்டுகளுக்குப் பிறகும் செய்யப்பட்டிராத என்னுடைய பாவங்களுக்காக கிறிஸ்து எவ்வாறு பாடுபட்டிருக்க முடியும்? சிந்திக்கும் ஒரு நபருக்கு முதலில் இது ஒரு பிரச்சனையாக இருக்கும்; நீர் எவ்வளவிற்கு அதிகமான சிந்தனையாளராக இருக்கிறீரோ, அவ்வளவிற்கு அதிகமாக முழுமனதுடன் தீர்வைக் கண்டு கொள்ளுவீர். தேவன் சர்வத்தையும் அறிபவர் (அதாவது எல்லாம் அறிபவர், அவர் சகலத்தையும் தெரிந்துள்ளவர்), அத்துடன் சதாகாலத்திலும் உள்ளவர். யாத்திராகமம் 3:14ல் அவர் தன்னை "இருக்கிறவராக இருக்கிறேன்" "I AM" (நிகழ்காலம்), யோவான் 8:54ல் கிறிஸ்து "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" (நிகழ்காலம்) என்றார்.
இன்னொரு விதத்தில் கூறுவதானால், எல்லாவற்றையும் அறிந்து சதாகாலத்திற்கும் இருக்கும் ஒருவருக்கு எதிர்காலமாயினும் அல்லது இறந்த காலமாயினும் எல்லாம் அப்படியே இருப்பதாகவே தெரியும், அதாவது நித்திய நிகழ்கால நிகழ்ச்சியாக இருக்கும். 2000 வருடங்களுக்குப் பிறகு நடக்க இருப்பவை 2000 வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது போல தெளிவாகவும், இந்த இரண்டுமே அவசியமான அளவிற்கு இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளாகவே தேவனுக்கு இருக்கும்.
அப்படியானால் ஏன் மனிதனை தனது சித்தத்திற்கு கீழ்ப்படியாமற்போக முடியாதவனாகப் படைத்து பாவம் செய்ய முடியாதவனாக்கவில்லை? இவ்வாறான ஒரு கேள்வியானது, ஏன் தேவன் ஒரு கோணலான நேர் கோட்டைக் கீறவில்லை? அல்லது ஏன் ஒரு வட்டமான சதுரத்தைக் கீறவில்லை? அல்லது ஏன் எல்லா இடமும் கறுப்பானதும் எல்லா இடமும் வெள்ளையானதுமான பொருள் ஒன்றைச் செய்யவில்லை என்பதைப் போன்றதாகும்.
மனிதனானவன் நுண்ணறிவான தெரிவுச் சுதந்திரத்தின் வல்லமையோடுள்ள ஒரு சிருஷ்டிப்பாகும், அதனால் உண்மையில் இந்தக் கேள்வியானது: நுண்ணறிவான தெரிவுச் சுதந்திரத்தின் வல்லமையோடுள்ள ஒரு சிருஷ்டிப்பாகவும் நுண்ணறிவான தெரிவுச் சுதந்திரத்தின் வல்லமையோடு இல்லாத ஒரு சிருஷ்டிப்பாகவும் ஏன் மனிதனை சிருஷ்டிக்கவில்லை? என்பதாக அமைகிறது.
எனக்கு கிப்னாரிஸம் செய்யும் வல்லமை இருக்குமானால், எனது இரண்டு சிறுவர்களையும் அறிவுதுயில் நிலைக்குள்ளாக்கக் கூடியவனாக இருப்பேன், இது அவர்களின் நுண்ணறிவின் தெரிவுச் சுதந்திரத்தைப் பறித்துவிடும். அதன் பின்னர் நான் அவர்களை, "நான் மறுபடியும் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்" "எழும்புங்கள், சாப்பிடுங்கள்" "சாப்பிடுவதை நிறுத்துங்கள்" "என்னை முத்தமிடுங்கள்" "படுக்கைக்குப் போங்கள்"; அவர்களின் உணர்வில்லாத கரங்கள் எனது கழுத்தைக் கட்டிப்பிடிக்கும், உதடுகள் என்னை முத்தமிடும். எனது ஒவ்வொரு கட்டளைக்கும் முற்றிலுமான கீழ்ப்படிவு இருக்கும், ஆனால் இதில் நான் திருப்தியைக் காண்பேனா? இல்லை!
எனக்குக் கீழ்ப்படியாமற்போகும் இயல்புடன் சுயமாகச் சிந்திக்கும் பிள்ளைகளே எனக்குத் தேவை, நான் அவர்களில் கொண்ட அன்பினாலும்; அவர்களின் நன்மைக்காகவும் நான் வழங்கும் அறிவுறுத்தல்களை அவர்கள் தமது மனப்பூர்வமாக செயற்படுத்த வேண்டும்.
இழுக்கப்படும் நூலின் திசையில் ஆடும் பொம்மைகள் தேவனுக்குத் தேவையில்லை, அல்லது "மனிதனின்" உருவில் இயந்திரமாக முற்றிலும் கீழ்ப்படிந்து விண்வெளியையும் சுற்றிவரும் ரோபோக்கள் தேவையில்லை. தேவனின் பாதையில் நடந்து, அவரைப் பிரியப்படுத்தவும், கெளரவப் படுத்தவும் சுயமாகச் சிந்திக்கும் இதயத்தை உடையவர்களிலே தேவன் திருப்தி காண்கிறார். இதே வல்லமையினாலேயே நாம் தேவனை கனவீனப்படுத்தி மறுதலிப்பதையும் தெரிந்து கொள்ளுகிறோம்.
மிருகங்கள் எல்லாவற்றையும் மனிதனைச் சூழவுள்ள அனைத்து சிருஷ்டிப்புக்களைப் பார்க்கிலும் மனிதன் எவ்வளவோ மேன்மையானவன். இங்கே "தொடர்பு துண்டிக்கப்பட்டதாக" இல்லை; எனினும் மனிதனுக்கும் உயர்வான மிருகத்திற்கும் இடையே பெரும் பிளவு உண்டாயிருக்கிறது. தேவன் மனிதனுக்கு ஆச்சரியமான வல்லமையைக் கொடுத்துள்ளார், அதனால் மனிதன் தேவனுக்கும் கூட ஆழமாக "ஆம்" எனக் கூறுவதைப் போன்றே "இல்லை" என்றும் கூறக்கூடியவனாகப் படைத்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் உமது சொந்த விருப்பின்படி, நீர் தேவனுக்கு எதனைக் கூறுகிறீர் என நான் கேட்கலாமா?
மிகப் பிரமாண்டமான அகிலத்துடன் ஒப்பிடுகையில்
எமது சிறிய உலகத்தைப் பற்றி
தேவன் என்னத்தைக் கவனிக்கிறார்?
எமது ஞாயிற்றுத் தொகுதியை சிந்தித்துப் பாருங்கள், நெப்ரியூன் கிரகமானது எமது பூமி சூரியனிலிருந்து இருப்பதைப் போன்று முப்பது மடங்குகள் தூரத்தில் இருக்கிறது, ஆகவே இது எமது ஞாயிற்றுத் தொகுதி சூரியனைச் சுற்றி வருவதைப் போன்று, நெப்ரியூன்களில் ஒன்று இவைகளின் பின்னால் சுற்றி வருவதற்கு 164 எமது வருடங்கள் எடுக்கிறது! எமது பூமி தேவனுக்கு எவ்வளவு முக்கியமானதாகவும், மனிதன் எவ்வளவு முக்கியமற்றவனாகவும் இருக்கிறான்?
இதனைத்தான் தனது வாலிபப் பிராயத்தின் விசுவாசம் கடந்து போகையில் வானவியலாளர் கூறினார் - தொலைநோக்குக் கருவி இதனைத்தான் அவருக்குச் செய்துள்ளது. தனது தாயின் கடவுளின் மீதான விசுவாசத்தை வானத்தின் பிரமாண்டம் கொள்ளையாடிவிட்டது, ஆகவே ஒப்பிட்டுப் பார்க்கையில் மணலிலும் பார்க்க குறைவான மனிதனைக் குறித்து தேவன் எவ்வாறு தன்னைக் குழப்பிக் கொள்ள முடியும்?
ஆயினும் அறிவைக் குறித்த தாகம் அவரை இளைப்பாற விடவில்லை. வானத்தைக் குறித்துக் கற்றுக் கொள்வது இரவில் மாத்திரமே செய்யக் கூடியதாக இருந்தது; எவ்வாறு பகலின் அலுவலற்ற மணித்தியாலயங்களைச் செலவு செய்யலாம்? ஏன் ஒரு நுணுக்குக்காட்டி இருக்கக் கூடாது? இதோ! உலகம் அவரின் பாதத்தண்டையில் திறக்கப்பட்டது. மேலே உள்ளதைப் போன்றே உலகமும் அவருக்கு ஆச்சரியமானதாக இருந்தது, மெதுவாக அவரின் விசுவாசமும் மறுபடியும் வந்தது.
ஆம், தனது சிருஷ்டிப்புக்களில் மிகவும் உயர்வான, மனிதனில் நிச்சயமாக சுவாரசீகப்பட்டு நுணுக்கமாகச் செய்யப்பட்ட சிறிய சிருஷ்டிப்பின் ஆர்வத்திற்கும் ஒரு நிமிட விபரத்தைக் கொடுப்பதற்கும் தேவன் சமுகங் கொடுக்கிறார் - அவர் ஒரு பக்கச் சார்பு எடுப்பதற்குப் பதிலாக நடுநிலை எடுத்தார்; நடுநிலை அவரை தேவனின் பக்கத்தில் கொண்டு வந்தது. இவைகள் எல்லாவற்றின் பின்னர் யோவான் 3:16 உண்மையாக இருந்தது.
ஆனால் விசுவாசமானது பகுத்தறிவுக்கு நியாயமானதா? ஆம், அது பகுத்தறிவுக்கு நியாயமானது. விசுவாசமானது காரணத்திற்கு முரணானது என சிந்திப்பது தவறானது. விசுவாசமும் காரணமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்கிறது, ஆயினும் காரணம் செல்ல முடியாத இடத்திற்கு விசுவாசம் தொடர்ந்து செல்கிறது. காரணம், ஒரு மகத்தான பெருக்கத்திற்கு, விசுவாசத்தில் தங்கியிருக்கிறது, அறிவில்லாமல் காரணம் இருப்பதற்கு சாத்தியமற்றதாக இருக்கிறது; அறிவு என்பது மிகவும் பெரிய அளவில் மானிட சாட்சிகளில் வைக்கும் விசுவாசத்தின் விடயமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு, எட்டிக்காயை அதிகமாக உட்கொண்டால், அது ஒரு மானிடனுக்கு நஞ்சாகும் என நான் விசுவாசிக்கிறேன்; ஆனால் நான் ஒருபோதும் செயற்படுத்தப்பட்ட பரிசோதனையைக் காணவில்லை. மனிதர்கள் எழுதி வைத்த சாட்சியில் நான் விசுவாசம் வைத்துள்ளதால் ஒருபோதும் அதிகளவில் எட்டிக்காயை எதற்கும் உட்கொள்ளமாட்டேன்.
நீர் கவனமாகப் பரிசோதிப்பீரானால், உமக்குத் தெரிந்ததில் (?) பத்தில்-ஒன்பது மானிட சாட்சியின் விசுவாசத்தின் விடயமாக இருக்கிறது, அது கூறப்பட்டதாக அல்லது எழுதப்பட்டதாக இருக்கலாம், நீங்களாக அதனை நிரூபிக்கவில்லை. மற்றைய விடயங்களில் மனிதர்களின் சாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கையில், தேவனின் வார்த்தையில் எழுதப்பட்டுள்ள காரியங்கள் சரியென நிரூபித்துள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் சாட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டீரா?
எனது பாவங்களுக்காக ஏன் தேவன் மரணத்திற்குப் பாத்திரமாக நியாயந்தீர்க்க வேண்டும்? என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் வழங்க முடியாது, ஆயினும் அவரின் முடிவில்லாத பரிசுத்த சமுகத்தில் ஒரு பாவமும் தோன்ற முடியாது.
சில புராதன கலாச்சாரத்தில், ஒரு ஜாதியினரின் தலைவன் தனது மக்களால் சினமூட்டப்படும் போதும், தனது மனைவியை சாட்டையால் அடிப்பான், அதே செயற்பாடு எமது நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். இரண்டு நாடுகளிலும் ஒரே செயற்பாடு, ஆனால் ஒரு நாட்டில் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படுகிறதில்லை; மற்றைய நாட்டில் குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கான வித்தியாசமானது சாதாரணமாக எமக்குப் புகட்டப்பட்ட அறிவின் தெளிவு பெற்ற நிலையே காரணமாகும்.
ஒரு புராதன கலாச்சாரத்தில் சாதாரண வாழ்க்கையாகக் கருதப்படும் பாவம், எமது நாட்டில் ஒருவரை சிறையில் வாழவைக்கும் குற்றமாகும். எமக்கு சாதாரணமானதாகத் தோன்றும் மற்றைய பாவங்கள் முடிவற்ற மகா பரிசுத்த தேவனுக்கு எவ்வாறானதாகக் காணப்படும் என்பதை, உம்மால் முடியுமானால், சிந்தித்துப் பாரும் - "தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடத்தில் எவ்வளவேனும் இருள் இல்லை" 1யோவான் 1:5.
அது நீதியானதாக இருக்கலாம், எனினும் கிறிஸ்து எமது பாவத்தை சுமந்தவர் என்பதை நாம் நிராகரித்தபோதிலும் எம்மை பரலோகத்திற்கு ஏற்க மறுப்பது தேவனின் கிருபையா? ஆம், இது நீதியாகவும் கிருபையாகவும் இருக்கிறது. அழுக்குக் கந்தையுடுத்திய மிகவும் ஏழையான ஒரு பிச்சைக்காரனை பேரொளி வீசும் ஒரு அழகிய நடன அரங்குக்குள் கொண்டுவந்து விடுவது கருணையானதாக இருக்குமா? அவன் தனது அழுக்கையும் பழந்துணியையும் குறித்த நினைவாக இருக்கமாட்டானா? வீதியின் இருளான இடத்திற்குள் அவன் மறுபடியும் தப்பித்துப் போவதற்கு தன்னால் முடிந்ததைச் செய்ய மாட்டானா? அவன் அவ்வாறு செய்வதற்கு முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருப்பான்.
தேவன் வழங்கும் சுத்திகரிப்பின் ஒரே வல்லமையான வழியை நிராகரித்த அந்த மனிதனை பரலோகத்தின் பரிசுத்தமான வெளிச்சத்திற்கு முன்பாக அவனுடைய பாவங்களுடன் ஒரு மனிதனைக் கொண்டு வருவது தேவனின் பகுதியில் கருணையாகவும் இரக்கமாகவும் இருக்குமா?
நீரும் நானும் எமது நண்பர்கள் எமது மனதுக்குள் உள்ளதையும் அதில் எப்பொழுதும் இருந்துள்ள சிந்தனைகளையும் காண்பதை விரும்பமாட்டோமாயின், (எமது நண்பர்களின் தராதரம் எம்முடையதிலும் உயர்வானதல்ல), முற்றிலும் பரிசுத்தமான தன்மை எமது பாவத்தை அதன் பயங்கரத்துடன் வெளிப்படுத்தும், தேவனுக்கு முன்பாக நிற்பது எப்படியானதாக இருக்கும்?
இயேசு கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொள்வதை நிராகரித்து தமது பாவங்களுடன் நித்தியத்திற்குள் போவோரின் உணர்வை வெளிப்படுத்தல் 6:16 எமக்குக் கூறுகிறது. சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரின் முகத்திற்கு தம்மை மறைப்பதற்கு பர்வதங்களையும், கன்மலைகளையும் நோக்கி தம்மேல் விழும்படிக்குக் கூப்பிடுகிறார்கள். தன்னை இரட்சகராகவும், கர்த்தராகவும் ஏற்றுக் கொள்ளும் யாவருக்கும் பரலோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அதே கிறிஸ்துவின் சமுகத்திற்கே அவர்கள் பயப்படுகிறார்கள்.
எம்மெல்லாரையும் தேவன் பரலோகத்திற்கு கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைக்குப் பொருத்தமற்ற நிலையை நீங்கள் பார்க்கிறீர்கள் -பரலோகமானது ஒரு இடமாக இருக்கின்றது போலவே அது ஒரு நிபந்தனையாகவும் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் தமது பாவங்களில் இருந்து கழுவப்பட்டவர்களுக்கு பரலோகத்தை நியமித்துக் கொடுக்கும், அதே பிரசன்னம் செய்த தவறிற்கு தங்கள் இருதயத்தில் மனந்திரும்பாமல், தமது பாவங்களில் இருப்பவர்களுக்கு, தமது பரிசுத்தமான முடிவற்ற வெளிச்சத்தில் நிற்க வேண்டியதற்கு, நரகத்தை அமைத்துக் கொடுக்கும்.
நாம் நேர்மையான காரணமுடையவர்களாக இருப்போம் - உங்களை சிநேகித்தவரின் விலையேறப்பெற்ற பலிசெலுத்தி வழங்கிய அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்குப் பாத்திரம் அற்றதாக எண்ணியும், நீங்கள் நிராகரித்த உங்களில் அன்பு கொண்டு, மிகவும் நேசித்தவருக்கு முன்பாக உண்மையான சந்தோஷத்துடன் உங்களால் இருக்கமுடியுமா?
பதிலீடாக வைப்பதினால் இரட்சிப்பு,
குற்றமில்லாதவர் குற்றவாளியின் தண்டனையை
ஏற்றுக் கொள்வதாகும்
தேவன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய ஆதாரத்தையும், மனிதர்கள் மீதுள்ள அவரின் பரிசுத்த உரிமையை வேதாகமத்தில் வெளிப்படுத்தியதையும் நாம் கண்டு கொண்டோம். "எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3:23) என்பதும் எமக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் பாவத்திற்காக மரிப்பதற்கு இந்தப் பூமிக்கு வந்த, தேவனின் குமாரன், இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் முகங்கொடுத்துள்ளோம். இரட்சிப்புக்கான தேவனின் திட்டத்தைக் குறித்து வேறு யோசனைகளையுடைய மக்களால் எழுப்பப்பட்ட எண்ணிக்கையான எதிர்ப்புக் கேள்விகளுக்கும் பதில் கண்டு கொண்டோம்.
இப்போது பாவிகளான மனிதர்களுக்கான தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் ஆச்சரியத்தையும்; ஞானத்தையும் சிந்திக்கப்போகிறோம். ஒரு வார்த்தையில் கூறுவதானால், பதிலீடாக வைக்கும் இரட்சிப்பாக இருக்கிறது.
தேவனின் அன்பு பாவியை மன்னித்திருக்கும், ஆனால் தேவனின் நீதி மன்னிப்பைத் தடுத்தது. தேவனின் நீதி பாவியை நியாயந்தீர்த்திருக்கும், ஆனால் தேவனின் அன்பு நியாயத் தீர்ப்பை கட்டுப்படுத்தியது. அவரின் இயற்கையாய் அமைந்த நீதியுடன் அவரின் அவசியமான அன்பின் குணத்தையும் எவ்வாறு ஒப்புரவாக்குவது என்பது மானிடத் தத்துவ ஞானிகளால் தீர்வுகாண முடியாத ஒரு பிரச்சனையாக இருந்தது; இதனைத் தீர்ப்பதில் தெய்வீக ஞானமும் கருணையும் தமது உன்னதத்தை வெளிப்படுத்தின. அது தேவ குமாரன் பதிலீடாக (எமக்குப் பதிலாக) பாடுபட்டு மரணித்ததாகும்.
"ஆயினும்" ஒருவர், "பிரதிநிதியின் மீது எல்லாவற்றையும் வைத்துவிடுவதினால் கிறிஸ்தவம் தனது முக்கியமான அஸ்திபாரத்தில் தவறுவிடவில்லையா, நியாயமான விசாரணை ஒன்றில் பிரதிநிதி நிற்கமாட்டார். இது குற்றமற்றவராகிய, கிறிஸ்துவை, குற்றமுள்ளவரின் தண்டனையை ஏற்கவைத்து குற்றவாளியை விடுதலையாகிப் போகவைக்கிறதே. இது முற்றிலுமாக எமது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிர்மாறாக இருக்கிறதே, நீதியானது குற்றமற்றவனைப் பாதுகாப்பதுடன் குற்றவாளியின் மீது முழுத் தண்டனையைக் கொண்டுவர வேண்டும் என நாம் நம்புகிறோம் அல்லவா" என இதனை எதிர்க்கக்கூடும்.
ஆனால் தேவனின் பரிபூரணமான நீதியும் பரிபூரணமான கருணையும் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டது. அவர் அங்கே குற்றமில்லாத ஒருவனைக் கொண்டு வந்து குற்றவாளியின் தண்டனையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தவில்லை. இந்த விடயத்தில் தேவன் ஒரு நீதிபதியாக இருக்கிறார்; சட்டம் படிப்பதற்காக இணைந்து சென்ற இரண்டு இளைஞர்களில், ஒருவன் வளர்ச்சியடைந்து முன்னுக்கு வந்தான், மற்றவன் குடித்து தனது வாழ்க்கையை வீணாக்கினான் என்பது பதிவாகியது. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வீணாகிய நபர் தனது பழைய நண்பருக்கு முன்பாக, குற்றச் செயல் புரிந்ததிற்காகக் கொண்டுவரப்பட்டார், இவ்விதமான சூழ்நிலையில் எவ்விதமான நியாயம் முன்வைக்கப்படும் என அங்கிருந்த வழக்கறிஞர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தனர். அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒருசமயம் தனது நண்பராக இருந்தவருக்கு சட்டத்தினால் கடினமாகக் கொடுக்கக் கூடிய தண்டனைக் கூற்றை அனுமதித்து பின்னர் தானே குற்றப்பணத்தையும் செலுத்தி பழைய நண்பனை விடுதலையாக்கினார்.
தேவனுக்கு விரோதமாகவே நாம் பாவம் செய்துள்ளோம், நீதியாக அவர் தனது நியாயாசனத்தில் உட்கார்ந்திருந்து தன்னால் முடிந்தளவு கடுமையான தண்டனையை வழங்கினார் - அது பாவிக்கு மரணத்தீர்ப்பளித்ததாகும். பின்னர், கருணையில், அவருடைய சிங்காசனத்தில் இருந்து இறங்கி, அவரின் குமாரன் எனும் நபரில் பாவியின் இடத்தை எடுத்தார், முழுத் தண்டனையையும் தானே பொறுப்பெடுத்தார், 2கொரிந்தியர் 5:19ல் "தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் (கிறிஸ்துவுக்கூடாக அல்ல; கிறிஸ்துவில்) அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்."
பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியானவராகிய தேவன் ஆகியவர்கள் ஒரே தேவனாக இருக்கின்றனர். அதே தேவனுக்கு விரோதமாகவே நாம் பாவம் செய்து, நியாயத்தீர்ப்பு கூறப்பட்டு, அபராதம் செலுத்தப்பட்டு, இப்போது முற்றிலும் இலவசமான மன்னிப்பை, முற்றிலுமான நீதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனாலேயே அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 1:16-17ல் எழுதுகையில்: "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; ...விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது" என்றார்.
நானும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படமாட்டேன் என்று கூறுவேன், தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட நீதியான மன்னிப்பில் ஒரு களங்கத்தையும் எந்தவொரு மனிதனாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நிமிடத்திலேயே, நீர் இதனை ஏற்றுக் கொள்வீரானால், அந்த நீதியை இப்பொழுதே உடையவராவீர்.
கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வது மாத்திரமே என்னை முழு நித்தியத்திலும் இருந்து பாதுகாப்பதற்கு அவசியமானதா? ஆம். பற்றிக் கொள்வதற்குக் கடினமானதாக இருப்பினும் நான் அதனை சாதாரணமாக ஒத்துக் கொள்கிறேன். ஏனெனில், நான் 50,000 ரூபாய் கடன்பட்டு அதனை செலுத்துவதற்கு ஒன்றுமில்லாதிருக்கையில், ஒரு நண்பன் எனக்காக அந்தக் கடனைச் செலுத்திவிட்டு, பற்றுச்சீட்டை என்னிடம் கொடுத்திருக்கையில், நான் கடனைக் குறித்து இனிமேலும் கவலைப்பட வேண்டியதில்லை. எனக்குக் கடன் கொடுத்தவரின் கையெழுத்திட்ட பற்றுச் சீட்டு என்னிடம் இருப்பதால், அவரின் முகத்தை என்னால் நிமிர்ந்து பார்க்க முடியும்.
என்னுடைய இடத்தில் எனக்காக கிறிஸ்து தனது உயிரைக் கொடுத்து, "எல்லாம் முடிந்தது" என்றார். அதன் அர்த்தமானது, பதிலாகச் செய்யும் வேலை முடிந்தது என்பதாகும்; அத்துடன் தேவன் எனக்கு பற்றுச்சீட்டைக் கொடுத்தார். அந்த நிச்சயமானது அவர் கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட வேலையில் திருப்தியடைந்தார், அதனால் அவர் (தேவன்) கிறிஸ்துவை மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பினார்.
"ஆனால் என்னால் அதனைப் பார்க்க முடியவில்லை" என்றார் ஒரு குறிப்பிட்ட மரவேலை செய்பவர், ஒரு நண்பராக அவருக்கு இதனை விளங்கப்படுத்த முயற்சித்தேன். இறுதியாக ஒரு யோசனை வந்தது, சமதளமாக சீவும் உளியைக் கையில் எடுத்து, பிரஞ்சு பளபளப்பு பூசப்பட்டு அழகாக அருகில் வைக்கப்பட்டிருந்த மேசையை சீவுவதற்கு முற்பட்டுக் காண்பித்தேன்.
"நிறுத்துங்கள்" என அலறினான் மரவேலை செய்பவன். "அது முற்றுப்பெற்ற வேலை என்பதை உம்மால் காணமுடியவில்லையா? அந்தக் கருவியை அதன் மேல் பாவித்தால் அது கெடுக்கப்பட்டுவிடும்" என்றார்.
"ஏன்" எனக் கேட்டேன், "இவ்வாறே நான் உமக்குக் காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவின் மீட்பின் வேலையும் இருக்கிறது. உமக்காக அவர் தனது ஜீவனைக் கொடுத்த போது அந்த வேலை முற்றுப்பெற்றது; அந்த நிறைவேற்றப்பட்ட வேலையுடன் ஏதாவது ஒன்றைச் சேர்த்தால், நீர் அதனை கெடுப்பதை மாத்திரம் செய்வீர். அதன் தராதரத்துடன் அது இருக்கிற வண்ணமாகவே - உமக்காக அவர் கொடுத்த ஜீவனை ஏற்றுக் கொள்ளும் - நீர் விடுதலையாகிச் செல்லுவீர்."
மரவேலை செய்பவர் பளிச்சிட்டதைக் கண்டது போல, இதனை கண்டு கொண்டு இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
ஆயினும் இன்னமும் ஒரு பெரிய சிரமமுண்டு. கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத நற்பண்புகளுள்ள, உயர்வான, உண்மையான மனிதரை நான் அறிந்திருக்கிறேன். நல்லவனாக இல்லாத போதிலும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்காக மற்றொருவன் நித்திய ஜீவனை அனுபவிக்கையில், இந்த நல்ல மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாததிற்காக நித்தியத்தில் இழந்து போனவனாக இருப்பான் எனக் கூறுகிறீர்களா?
ஆம், உயிரியல் குறித்து நான் கற்றுக் கொள்ளும் வரையில் வருடக்கணக்கில் இது மிகவும் சிரமமானதாகவே எனக்கு இருந்தது என்பதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன்; பின்னர் எனது சிரமம் யாவும் மறைந்துவிட்டது. உயிரியல் என்பது உயிர்கள் பற்றிய கொள்கையாகும். இது ஏற்கனவே தோற்றத்தில் உள்ள உயிர்களில் இருந்து உயிர்கள் உண்டாகின்றன எனும் கொள்கையாகும். மற்றொரு விதத்தில் கூறினால், ஏற்கனவே உயிரற்றதில் இருந்து உயிர் உண்டாகாது என்பதாகும். அதாவது புறத்தூண்டுதலின்றிய உயிர் எனும் ஒன்று இல்லை என்பதாகும். சடப்பொருள்கள் தானாக உயிர் பெறாது. (எப்போதாவது உயிர் உண்டாக வேண்டுமானால், ஏற்கனவே உயிருடன் உள்ளவற்றில் தொடர்புடன் இருந்து கொண்டிருக்க வேண்டும்.)
எந்த விதிக்கும் உட்படாத கூற்றை இயேசு கூறவில்லை, "மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்" யோவான் 3:6,7 என்பதிலும் அப்போஸ்தலர் 1யோவான் 5:12ல், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" என்பதிலும் ஒரு விஞ்ஞான ரீதியான உண்மையை வெளிப்படுத்தினார்.
உயிரியலின் கொள்கையைத் தட்டிக்கழிப்பதற்கு பெருமுயற்சி செய்வதே எமது நாட்களிலுள்ள பெரிய தவறாக இருக்கிறது. உயர்வாக விருத்தியடைந்த நன்னடத்தையான மனிதனுக்கும் ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்குமிடையேயான வித்தியாசம் தரத்தில் அல்ல, வர்க்கத்தில் இருக்கிறது ஒருவருக்கு மானிடவர்க்கத்தின் உயர் தரம் இருக்கிறது; மற்றவருக்கு ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கிறது. வித்தியாசமானது மிகுந்த அடிப்படை ஆழமாக இருக்கிறது, ஒருவர் மற்றொன்றில் இருந்து வளரமுடியாது. நிக்கதேமுவைப் போன்ற மிகவும் நேர்த்தியான மனிதனுக்கு கிறிஸ்து கூறியது, "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்" யோவான் 3:7. "உனது பழைய வாழ்க்கையை மேலும் அபிவிருத்தி செய்து கொள்வது போதாது. என்னை ஏற்றுக் கொள்வதினால் உண்டாகும், ஒரு புதிய, தெய்வீக வாழ்வே உமக்குத் தேவையானது."
நான் எவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எனது இரட்சகராக ஏற்றுக் கொள்வது? தேவனோடுள்ள எனது உறவுமுறையானது, எபேசியர் 2:1ன்படி, "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்" என்ற நிலையில் இருப்பதை நான் அறிந்து கொள்வேனாக இருந்தால், என்னுடைய இடத்தில் இயேசு கிறிஸ்து தனது ஜீவனைக் கொடுத்தார் என்பதை விசுவாசித்தால், அத்துடன் அவரை எனது இரட்சகராக ஏற்றுக் கொண்டால் எனக்கு நித்திய இரட்சிப்பு உண்டாகும், எனும் இந்த உண்மைகளை நான் ஒரு அக்கறையற்ற, இயந்திரவியல் முறையில் புரிந்து கொண்டால் நித்திய ஜீவனைக் கொடுக்குமா? அது நிச்சயமாக இல்லை!
மிகுந்த ஆஸ்தியுடைய ஒரு மனிதன் தனது எல்லாப் பணத்தையும் இழந்துவிடுகிறான்; அதனால் சமுக அந்தஸ்தை இழப்பதற்குப் பதிலாக, தனது மகள் வெறுப்பவனாக இருக்கிறபோதிலும், ஒரு பணக்காரனின் கரத்தில் அவளைக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்கிறான். முதலில் அவள் அந்த நோக்கத்தை முற்றிலும் நிராகரித்தாள்; அந்தத் திருமணத்தினால் பயனளிக்கும் நன்மைகளையும், இதுவே நான் தாழ்ச்சியடையாமல் இருப்பதற்கான ஒரே நம்பிக்கை என்பதையும் தகப்பன் எடுத்துக் காட்டியபோது, அவள் ஒத்துக் கொண்டு, திருமண வைபவத்திற்கூடாகச் சென்று, அந்த நாட்டின் சட்டத்தின்படி அவனுக்கு மனைவியானாள். ஆயினும் அவளின் இருதயம் அவனுடையதாக இருக்குமா? உண்மையில் இல்லை!
நீங்கள் இதனை இப்போது காண்கிறீர்கள், இல்லையா? ஒரு மனிதனும் ஒரு பெண்ணும் உண்மையில் ஒன்றாக வேண்டுமானால், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கான ஒருவித அன்புக்குள்ளாக, அவர்களின் அகச்சார்பான உள்ளத்தின் ஆழத்தில் இருந்து, அவர்களின் எல்லாவித உணர்வையும் அன்பையும் சொற்களால் முற்றிலும் வெளிப்படுத்த முடியாத அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
சாத்தியமானவரையில் ஒருவராலும் விளங்கிக் கொள்ள முடியாத உணர்வுகள் உலாவுகிற, எமக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட, அகச்சார்பான ஒரு ஒதுக்கிடம் எம்மெல்லாருக்கும் இருக்கிறது. இயேசு கிறிஸ்து, தேவனின் குமாரன், எமக்கான அவரின் அன்பின் காரணத்தினால், அங்கே பிரவேசிப்பதற்கான உரிமையைக் கேட்கிறார். எமது வாழ்க்கையின் வேறெந்த இடத்தையும் அவர் எடுக்க மாட்டார். எமக்கு அவர் காண்பித்த அன்பு அந்த இடத்திற்கு உரிமையளிக்கிறது. நான் அதனை அவருக்கு மறுத்து வைத்திருப்பேனா?
தனது பிதாவின் மகிமையை விட்டிறங்கி, பூமிக்கு வந்து, உண்மையான மனிதனாக, எனக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக, என்னுடைய இடத்தில் பாடுகள்பட்டு மரிப்பதற்கான அவரின் மகத்தான அன்பை நான் சிந்திக்கையில், என்னுடைய இருதயம் அவருக்கு நேராக மென்மையடைகிறது.
ஒரு எரிகிற கட்டடத்திற்குள் நான் வியாதியுற்றவனாகவும், உதவியற்றவனாகவும் படுத்திருக்கையில், என்னைக் காப்பாற்றுவதற்காக ஒரு நண்பன் விரைவாக உள்ளே ஓடி வந்து, எனக்கு ஒரு பாதிப்பும் உண்டாகாதபடிக்கு ஒரு தடித்த போர்வையால் என்னைச் சுற்றி, வெளியே கொண்டு வருகையில், அவனுக்கோவெனில், பாரதூரமான அளவிற்கு முகத்திலும், கரங்களிலும் நெருப்பு சூட்டினால் வெந்துபோயிருக்கையில், என்னுடைய இருதயம் அவனிடத்திற்குச் செல்லாதா? செல்லும் என்பதை தேவன் அறிவார்.
நான் இப்போது நேருக்கு நேராக எனது இரட்சகருடன் இருக்கிறேன். எனக்காக சிலுவையில் தனது மரணத்தை எதிர்பார்த்து கெத்சமனே தோட்டத்தில் பாடுபடும் அவரைக் காண்கிறேன். நான் அவரை பிலாத்துவின் நீதிமன்றத்தில் காண்கிறேன்; "உன்னை அறைந்தது யார்? என தீர்க்கதரிசனமாகச் சொல்" என்று போர்ச் சேவகர்கள் முகத்தில் அறைகிறார்கள். அவர்கள் முட்களினால் அவருக்கு ஒரு கிரீடத்தைச் சூடுவதை நான் காண்கிறேன்.
நொருக்கப்பட்டவரும், இரத்தம் சிந்துபவருமாக அவரை நீதிமன்றத்தில் இருந்து கைகளிலும், கால்களிலும் ஆணிகளை அறைவதற்காக கல்வாரிக்கு கொண்டு செல்கிறார்கள். இரண்டு கள்வர்களின் நடுவே சாவதற்காக அவர் உயர்த்தப்பட்டு, அவர்களுக்காக தனது ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருக்கையிலும், அவரைப் பரியாசம் பண்ணவும் திட்டவும் மக்கள் கூடிக் கொண்டார்கள். அதன் பின்னர், "பிதாவே, தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்" என்று அவர் கூறுவதைக் கேட்கையில் சுயமாக-பலிசெலுத்தும் அன்பு மெய்யாகக் கருதுவதை விளங்கிக் கொண்டேன்.
கண்ணீர் ஊற்றெடுத்து எமது கன்னங்களில் ஓடும்வரையில் கிறிஸ்துவின் சரீரப்பிரகார பாடுகளுக்குள்ளாகும் ஆழ்ந்த அனுதாபத்திற்குள் நாம் பிரவேசிக்க முடியுமா? அது அவ்வளவுமாக இருப்பின், சிலுவையில் நடந்ததின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளத் தவறியவர்களாக இருப்போம்.
நாம் 2கொரிந்தியர் 5:21ல், "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார்" என வாசிக்கிறோம். வணங்கிய தலையுடனும், தாழ்மையான இருதயத்துடனும் என்னுடன் வாருங்கள் என உங்களைக் கெஞ்சுகிறேன்; நாம் முடியுமாயின், கிறிஸ்து குமாரனின், பிதாவாகிய தேவனின், பரிசுத்தமாகிய அவர், நாம் குஸ்டரோகத்தை வெறுப்பதிலும் பார்க்க பாவத்தை வெறுக்கும் அவர் "எமக்காக பாவமாகி இருக்கும்" ஆத்தும வியாகுலத்திற்குள் பிரவேசிப்போம்.
பாவத்தின் வெறுப்பினால் திரும்பி, ஆத்துமாவின் வேதனையினால் அழுது, "என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணியது" (மத்தேயு 26:39) ஏன் என்று இப்போது நாம் விளங்கிக் கொள்கிறோம். கெத்சமனேயில் இருந்து வரும் அழுகையிலும், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு," "பாவம் அறியாத அவரை (கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கி," "அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16; 2கொரிந்தியர் 5:21).
உயர்வான குணத்தின் அல்லது மனிதரின் யோசனையியை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், எனக்காக இவ்வளவைப் பொறுமையுடன் சகித்தவரை நிராகரிக்கத் துணியமாட்டேன் என நான் கூறியதை இப்போது விளங்கிக் கொள்கிறீர்களா? எனது அறிவுக் கூர்மை இது எல்லாவற்றையும் காரணப்படுத்திக் காட்டுகிறது; எனது உணர்வு எழுர்ச்சியூட்டுகிறது, அத்துடன் இவை இரண்டுமே இப்போது எனது உறுதிப்பாட்டை தீர்மானம் எடுக்க மனப்பூர்வமாக முறையீடு செய்கின்றன. எனக்கும் எனது தேவனுக்கும் உண்மையாக இருப்பதற்கும் எனது எதிர்காலத்திற்காகவும் ஒரேயொரு செல்லும் திசை மாத்திரம் திறந்திருக்கிறது, நான் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்று இயேசு கிறிஸ்து எனது தனிப்பட்ட மீட்பரும் கர்த்தருமாக இருக்கிறார்.
எனக்கான அவரின் அன்பின் காரணத்தினால், அவர் என்னை இங்கே ஆசீர்வதித்ததின் காரணத்தினால், இதற்குப் பின்னுள்ள ஒரு மகிமையின் நிச்சயத்தின் காரணத்தினால், நான் அனுபவிக்கும் ஆசீர்வாதத்தின் சந்தோஷத்தில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது இருதயத்தின் விருப்பமாகும். கிறிஸ்து எல்லாவற்றையும் செய்துவிட்டார். நான் இதனை பயபக்தியான கெளரவத்துடன் கூறுகிறேன். அவர் மேலும் எதையாகிலும் செய்ய வேண்டியதில்லை. உமது பாவத்தின் தண்டனையை அவர் சுமந்தார்; தேவ வல்லமையால் அவர் மறுபடியும் உயிருடன் எழுந்தார்; இப்போது அவர் தன்னை உமக்கு வழங்குகிறார். மீட்பரும் கர்த்தருமாக அவரை ஏற்றுக் கொளளுவீரா?
இது ஒரு விசித்திரமான இரகசியமாக இருக்கிறது; இந்த எல்லா இரகசியங்களும் என்னை மலைக்க வைத்துள்ளது என நீங்கள் கூறலாம். நீங்கள் இதன் இரகசியத்தை விளங்கிக் கொள்ளுங்கள் என நான் கேட்கவில்லை. எனக்கும் இதன் இரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை, இந்த வாழ்க்கையில் எந்தக் கிறிஸ்தவனாலும் அதனைப் புரிந்து கொள்ளவும் முடியாது. இதன் உண்மையில் சந்தோஷப்படும்படிக்கே நான் உங்களைக் கேட்கிறேன்.
மின்சாரம் ஒரு விசித்திரமான இரகசியமாகத்தான் இருக்கிறது. இதனை ஆழுகை செய்யும் அநேக விதிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம், ஆயினும் அது உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதைக் கூறமுடியாதுள்ளது. நீரும் நானும் அதன் நன்மைகளைப் பயன்படுத்துகையில் மின்சாரத்தின் இரகசியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இயேசு கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொண்டு மெய்யாகவே மிகவும் மாற்றமடைந்து, கிறிஸ்துவுக்குள் புதிய மனிதராகியவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்களாகவே கண்டு கொண்ட இந்த உண்மைகள் உங்களைச் செல்வாக்குச் செலுத்த அனுமதிக்க மாட்டீர்களா? ஆம், இது சாதாரணமாக மின் விளக்கின் ஆழியை இயங்கச் செய்வது போன்றதுதான்.
நீர் இருக்கின்ற விதமாகவே தேவனிடம் கூறவேண்டியது: "ஓ தேவனே, என்னால் இந்த விசித்திரமான இரகசியத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் என்னில் இவ்வளவு அக்கறை கொண்டு எனது பாவத்தின் தண்டனையைப் பொறுப்பதற்காக இயேசு கிறிஸ்துவை அனுப்பினீர் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் எனது எல்லா விளக்கக் குறைவுடனும் நான் என்னை முற்றிலுமாக விருப்பத்துடன் ஒப்புவிக்கிறேன். எனக்காக அவர் மரித்தார் எனும் உண்மையையும் ‘குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடைவான்’ என யோவான் 3:16 கொடுத்த வாக்குறுதியையும் நான் விசுவாசிக்கிறேன்."
மின்சாரத்தின் இரகசியத்தை பொறியியலாளருடன் விட்டுவிட்டு அதன் பயன்களை நீர் அனுபவிப்பது போன்று, இரட்சிப்பின் இரகசியத்தை தேவனுடன் விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட இரட்சகரின் முடிவற்ற பலன்களை உமக்காக எடுத்துக் கொள்ளும். அவருக்கு உம்மை விட்டுக்கொடும். அவர் உமது வாழ்க்கைக்குள் வர விரும்புகிறார்.
தீர்மானப் பத்திரம்
ரோபர்ட் ஏ. லைட்லோ அவர்கள் எழுதிய "அந்தக் காரணம் ஏன்" எனும் ஆசீர்வாதமான செய்தியையும் நேர்மையான வேண்டுதலையும் நீர் வாசித்துள்ளீர். இப்போது இந்த மொழிபெயர்ப்பாளர் திரு. லைட்லோ அவர்களுடன் இணைந்து, இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படிக்கு உம்மை ஊக்குவிக்கிறேன். ஒருபோதுமே உமக்கு இதிலும் பார்க்க மிகவும் முக்கியமான தீர்மானம் எடுப்பதற்கில்லை. உமது பாவத்தை இயேசு கிறிஸ்து தமது சொந்த சரீரத்தில் சுமந்து பாவியானவன் பெறவேண்டிய தண்டனையை அனுபவித்தார் என்பது உண்மையானது. அவர் மரித்ததில் இருந்து உயிர்த்ததினால் தேவன் அவர் செலுத்தியதில் திருப்பதியடைந்தார் என்பதைக் காட்டுகிறது. இப்போது தீர்மானம் உம்முடையது. நீர் அவரை ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும். நடுவான இடம் என்று ஒன்றில்லை. "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்;" மத்தேயு 12:30 என இயேசு கூறினார். நீர் ஒரு பாவி என்பதை ஒத்துக் கொண்டு இயேசு கிறிஸ்து உமக்காக மரித்ததை விசுவாசிப்பீரானால், அவரை உமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளும். நீர் இவ்வாறு ஏற்றுக் கொண்டதை எனக்கு எழுதித் தெரிவிப்பீரானால் உமது புதிய கிறிஸ்தவ வாழ்க்கை வளர்ச்சியடைவதற்கு உதவக் கூடிய மற்றைய இலவசப் புத்தகங்களை அனுப்பி வைப்பேன். இலவசப் புத்தகத்தைப் பெறுவதற்கு கீழுள்ள தீர்மானப் பத்திரத்தை நிரப்பி அனுப்பி வைக்கவும்.
பாஸ்டர்,
பைபிள் பப்டிஸ்ற் சபை,
ரோபர்ட் ஏ. லைட்லோ அவர்கள் எழுதிய "அந்தக் காரணம் ஏன்" எனும் ஆசீர்வாதமான செய்தியை வாசித்தேன். நான் ஒரு பாவி என்பதை அறிந்து கொண்டேன். திருவாளர். லைட்லோ விளங்கப்படுத்தியது போல இயேசு கிறிஸ்து எனக்காக மரித்தார் என விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவை நான் இங்கே இப்போதே என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் சாகும்போது என்னைப் பரலோகம் கொண்டு செல்வதற்காக நான் முற்றிலுமாக அவரில் மாத்திரம் தங்கியிருக்கிறேன். இயேசுவை எனது இரட்சகராக நான் விசுவாசிப்பதனால், தேவனின் வார்த்தையின் அதிகாரத்தினால் எனக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். யோவான் 3:36ல் "குமாரனை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என இயேசு கொடுத்த வாக்குறுதியை நான் விசுவாசிக்கிறேன். தேவன் பொய் சொல்லமாட்டார் என்பதால் எனக்கு நித்திய ஜீவன் உண்டென அறிந்திருக்கிறேன்.
பெயர்: --------------------------------------------------------------
முகவரி: ---------------------------------------------------------------------------------------------------------------------------------
தொலை பேசி: -----------------------------------------
மின்னஞ்சல்: -----------------------------------------
Bible Baptist Church