இரட்சிக்கப்பட்ட ஒருவர் எப்போதாகிலும் இழந்துபோக முடியுமா?

பொருளடக்கம்

ஒருவர் இரட்சிப்பை இழந்துவிட முடியும் எனக் கற்பிப்பதற்காக

சிலர் வியாக்கியானப்படுத்தும் வேதவாக்குகள்

யோவான் 15:6; எசேக்கியேல் 3:20, 21; 2பேதுரு 2:20-22, நாய்களும் பன்றிகளும்; எபிரெயர் 10:26-29, யூதர்கள் கிறிஸ்துவை நிராகரிப்பது மத்தேயு 12:43-45, அசுத்த ஆவி் கலாத்தியர் 5:4, கிருபையில் இருந்து விழுதல்; தேவன் தனது புத்தகத்தில் இருந்து கிறிஸ்தவர்களை அழித்துவிடுவாரா? "தேவன் அவனுடைய பங்கை ஜீவபுத்தகத்தில் இருந்து எடுத்துப் போடுவார்" - வெளிப்படுத்தல் 22:19, 1கொரிந்தியர் 9:27.

நற்கருமங்கள் ஒருவரை இரட்சிக்கப்பட்டவராக வைத்திருக்குமா?

பிலிப்பியர் 2:12, உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்;

மத்தேயு 24:13, முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல்;

எபிரெயர் 6:4-6, மன்னிக்கப்பட முடியாத பாவம்

பாவத்தில் வீழ்ந்துபோன வேதாகம நபர்கள்:

யூதாஸ்

லோத்து - பின்வாங்கிப்போன கிறிஸ்தவன்

தாவீதினுடைய பாவங்கள்

குறிப்பாகக் காட்டும் உபதேசங்கள்

இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியாது என வேதாகமம் கற்பிக்கிறது

ஒரு கிறிஸ்தவன் மறுபடியும் பிறந்துள்ளான்

நித்திய ஜீவன் உண்டு

விசுவாசி ஏற்கனவே நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டுள்ளார்

விசுவாசிக்கிறவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை

கிறிஸ்துவின் கரத்தினின்று யாரும் எம்மைப் பறித்துக்கொள்ள முடியாது

தேவனின் அன்பில் இருந்து எதுவும் விசுவாசியை பிரிக்க முடியாது

நாம் கிரியையினாலா அல்லது கிருபையினாலா இரட்சிக்கப்பட்டுள்ளோம்?

முடிவுரை

ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு வாழ்கிறார் என்பது கருதப்பட வேண்டியதா?

பாவம் செலுத்துவதில்லை

இரட்சிக்கப்பட்ட ஒருவர் எப்போதாகிலும்

இழந்துபோக முடியுமா?

ஒருவர் தனது சொந்த ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்து கேட்ட கேள்விகளுள் மிகவும் முக்கியமாக பதில்காணப்பட வேண்டிய விடயம் இதுவாகும். யாராகிலும் இந்கக் கேள்விக்குப் பதில் கண்டு கொள்ளவில்லையானால், எதைக் குறித்து அக்கறையற்றிருந்தாலும் பரவாயில்லை, இன்றே எவ்வளவு செலவாயினும் இதற்கான பதிலைக் கண்டு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். தனது இரட்சிப்புக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்கனவே விவாசித்து ஏற்றுக் கொண்ட நபர் மறுபடியும் பிறந்தவராக இருக்கிறார், அவருக்கான மிகவும் முக்கியமாக கேள்வியானது எமது தலையங்கத்தில் கேட்கப்பட்டுள்ளது: "இரட்சிக்கப்பட்ட ஒருவர் எப்போதாகிலும் இழந்துபோக முடியுமா?"

இதனை அறிந்து கொள்ளாததினால் கலங்கித் தடுமாறும் மக்களை நான் எல்லா இடங்களிலும் காண்கிறேன், அவர்கள் தமது பாவங்களினால், தமது அக்கறையற்ற தன்மையினால், தாம் எதிர்த்து நிற்க முடியாமல் சோதனையில் திடீரென்று வீழ்ந்து போவதினால், அவர்களுக்குள்ள இரட்சிப்பை இழந்துவிடக் கூடும் என்றும் அதனால் பிசாசினுடைய பிள்ளைகளாகக் கூடும் என்றும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான கிறிஸ்தவர்கள் தமது இருதயமானது ஏமாற்றக் கூடியது என்றும், தாம் தேவனின் கிருபையைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அறிந்துள்ளார்கள்; அவர்கள் தமது இரட்சிப்பை இழந்துவிடுவார்கள் என்ற பயம் அடிக்கடி மனதில் தோன்றுகிறது, இதனால் பெரும்பாலும் இழந்துவிடுவோம் என்ற பயத்திலேயே மரித்திருக்கிறார்கள். நிலமை இவ்வாறாக இருப்பதினால்லேயே, நான் இந்த செய்தியைக் கொண்டுவருகின்றேன்.

ஒருவர் இரட்சிப்பை இழந்துவிட முடியும் எனக் கற்பிப்பதற்காக

சிலர் வியாக்கியானப்படுத்தும் வேதவாக்குகள்

இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் இழந்துபோக முடியும் எனக் கற்பிப்பதாக சந்தேகமான கிறிஸ்தவர்கள் சிந்திக்கும் அதிகமான வேதவாக்குகள் உள்ளன. அந்த வேதவாக்குகளை மீட்டுப்பார்த்து அவைகளில் ஒன்றாகிலும் இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியும் என கற்பிக்க அல்லது உபதேசிக்கவில்லை எனக் காண்பிக்க விரும்புகிறேன்.

யோவான் 15:6

"ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான் அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள் அவைகள் எரிந்துபோம்."

உலர்ந்துபோகும் ஒரு கிளையைப் போல ஒரு மனிதன் எறியுண்டு போவதை நீங்கள் இங்கே காணலாம். அத்துடன் அங்கேதான் அக்கினிக்குள் எறியுண்டு போகுதல் பற்றிய திகைக்க வைக்கும் கூற்றும் இருக்கிறது! தேவன் தன்னுடைய பிள்ளைகளில் ஒன்றை எறிந்துவிடுவார் அத்துடன் அந்த ஆத்துமா அக்கினிக்குள் எறியுண்டு போகும் என்பதை இது கருதுகின்றதா? இல்லை, மறுபடியும் வாசித்து, ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்துவுடஏன் உள்ள தொடர்பில் இல்லாதிருந்து கனிகொடுக்க முடியாதிருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அவன் உலர்ந்துபோவதுடன் அவனிடத்தில் இருந்த சந்தோஷம் முழுவதையும் இழந்துவிடக் கூடும். இந்த வசனத்திலே சேர்க்கப்பட்டவைகள் திராட்சைச் செடியில் இருந்து எறியுண்ட கொடிகளே என்பதைக் கவனியுங்கள், அவை மனிதர்கள் அல்ல. அப்படிப்பட்டவைகளைச் சேர்த்தவர்கள் மனிதர்கள் என்பதைக் கவனியுங்கள், இழந்து போனவர்களை நரகத்தில் போடுவது மனிதர்கள் அல்ல தூதர்கள் என மத்தேயு 13:41,42ல் எமக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

யோவான் 15ல் இரட்சகர் தனது சீஷர்களுடன் கனிகொடுத்தல் குறித்துப் பேசுகிறார். கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்திலும் அவரின் வல்லமையிலும் இல்லாமல் எம்மால் கனிகொடுக்க முடியாது என்பதை மறுபடியும் மறபடியும் அவர் இந்த அதிகாரத்தில் கற்பிக்கிறார். உலர்ந்துபோன கொடியானது கனிகொடுக்காதபடியினால் அது மனிதர்களுக்கு பிரயோஜனம் அற்றது, அதனால் எரிக்கப்படுகிறது, கிறிஸ்துவில் நிலைத்திராத ஒரு கிறிஸ்தவன் தேவனின் சேவைக்கு எவ்வளவு பயனற்றவனாக இருக்கிறான் என்பதைக் காண்பிக்கவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலே தேவனுக்கும் மனிதர்களுக்குமிடையேயான வித்தியாசமானது: மனிதர்கள் பழங்களுக்காக கொடியின் பெறுமதியைப் பார்க்கிறார்கள், ஆனால் தேவன் எம்மிலேயே அன்பு வைத்துள்ளார். இந்த வேதவாக்கு இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியும் எனக் கற்பிக்கவோ அல்லது கூறவோ இல்லை.

வேதாகமத்தை அது எழுதப்பட்ட வண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். அது சரியாகக் கருதுவதையே கூறுகிறது அத்துடன் அது சரியாகக் கூறுவதையே கருதுகிறது. தேவனின் வார்த்தையின் அர்த்தத்துடன் எதையுமே சேர்த்துக் கொள்ள வேண்டாம். இந்த இடத்தில் அக்கினி என்பது அக்கினியையே கருதுகிறது, இது நரகத்தைக் கருதவில்லை. திராட்சைக் கொடியும் அவ்வாறே அதனைக் கருதுகிறது என்றே நினைக்கிறேன். மனிதர்கள் அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள், அவைகள் எரிந்துபோம், எனினும் இது ஒரு கிறிஸ்தவன் நரகத்திலே எறியுண்டு போவான், அவன் அங்கே எரிந்துபோவான் எனக் கூறவும் கருதவும் இல்லை. நரகத்தில் உள்ள மனிதர்கள் எரிந்துபோவார்கள் என வேதாகமம் கற்பிக்கவும் இல்லை. அவர்கள் எந்நாளும் அங்கே இருப்பார்கள்.

எசேக்கியேல் 3:20,21

இரட்சிக்கப்பட்ட ஒருவர் இரட்சிப்பை இழந்துவிட முடியும் எனக் கற்பிப்பதற்காக சிலர் வியாக்கியானப்படுத்தும் வேதவாக்காக உமக்கு எசேக்கியேல் 3:20,21 காண்பித்திருக்கக் கூடும்.

“அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலைவைக்கும்போதும், அவன் சாவான்: நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான் அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்"

ஆயினும் கவனமாக இந்த வார்த்தைகளையும் முழு அதிகாரத்தையும் வாசிப்பதினால், இது ஒரு ஆத்துமாவின் இரட்சிப்பையோ அல்லது ஒரு ஆத்துமாவின் இழப்பையோ பற்றிக் குறிப்பிடவில்லை என்பதைக் கண்டு கொள்வீர்கள். இந்தச் செய்தியானது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது (பார்க்கவும் வசனம் 17). இங்கே குறிப்பிடப்பட்ட நீதிமானுடைய நீதி என்பது இரட்சிப்பைக் குறிப்பிடவில்லை, அது இஸ்ரவேலின் பிரஜையாக மேசேயினுடைய பிரமாணத்தைக் கைக் கொள்வதைக் கருதுகிறது. குறிப்பிடப்பட்ட தண்டனையானது நித்திய அழிவையோ அல்லது ஒரு ஆத்துமாவின் இழப்பையோ கருதவில்லை, அது சாதாரணமாக சரீரப்பிரகாரமான மரணத்தைக் கருதுகிறது. இந்த இடத்திலே பிழைப்பான் என்பது "அவன் தன் உயிரைப் பிழைக்க வைப்பதைக் கருதுகிறது" (வசனம் 18).

சில போதகர்கள் இதனை ஆவிக்குரிய அர்த்தம் கற்பித்து இது கூறாத அர்த்தம் ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். நீதிமான் என்பது கிறிஸ்துவுக்குள்ளான நீதிமானைக் கருதவில்லை, அது பிரமாணத்தின் கீழ் உள்ள யூதனுடைய சுய-நீதியைக் கருதுகிறது. ஒருபோதுமே ஒரு கொலை, விபச்சாரம், அல்லது மற்றைய எந்த குற்றச் செயல்களையும் புரியாத ஒரு யூதன், அப்படியிருந்தும், அவன் தன்னுடைய நீதியான வழியை விட்டுத் திரும்பி அவ்வாறான குற்றச் செயல்களைப் புரிந்தால், அவன் வெளியே கொண்டு செல்லப்பட்டு கல்லெறியப்பட வேண்டும்; அதாவது அவன் தன் பாவத்திலே மரிக்க வேண்டும். இந்தப் பகுதியானது தெளிவாக ஒரு இரட்சிக்கப்பட்ட நபர் இழந்துபோனவராகுவதைக் கருதவில்லை. எசேக்கியேல் 18:24 மற்றும் 33:12,13 இந்தப் பகுதிகளும் இதற்கு ஒத்ததாகவே இருக்கிறது. இவற்றையும் வாசித்துப் பார்க்கவும்.

வேதாகமத்தின் தெளிவான அர்த்தத்தைவிட்டு விலத்தி, ஆவிக்குரிய அர்த்தம் கொடுத்து அது கூறாத ஒன்றைக் கருதவைப்பதன் ஆபத்தை உங்களால் கண்டு கொள்ள முடிகின்றதா?

2 பேதுரு 2:20-22 - நாய்களும் பன்றிகளும்

"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது."

இந்த வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்ட மக்கள் யாராயிருப்பினும், அவர்களின் முன்னிலைமையிலும் பார்க்க பின்னிலைமை கேவலமாக இருக்கும் என நாம் பார்க்கிறோம். அநேகமான மக்கள் இந்த வேதவாக்கானது ஒருதடவை இரட்சிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் பின்னர் உலகத்தின் மாசுறுதல்களினால் இழுப்புண்டு இறுதியில் இழந்துபோய்விட்ட கதையைக் கூறுவதாக நினைக்கிறார்கள்.

ஆயினும் இந்தப் பகுதியைக் குறித்து வரும் காரியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிற்கூடாகத் தப்புவதற்குத் தெரிந்து கொண்டவர்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் என வேதவாக்கு கூறவில்லை. இழந்து போன அநேகர் கிறிஸ்துவைப் பற்றியும் சுவிசேஷத்தைப் பற்றியும் அறிந்துள்ளார்கள். அவர்கள் நீதியின் வழியை அறிந்து கொண்டவர்கள் என்பதை 21ம் வசனத்தில் இருந்து கண்டு கொள்கிறோம். ஆயினும் அவர்கள் அதன் வழியில் எப்போதாகிலும் நடந்தார்கள் என்பதை வேதவாக்கு குறிப்பிடவில்லை.

வசனம் 22ல் நாய் இன்னமும் ஒரு நாயாகவும் பன்றி இன்னமும் ஒரு பன்றியாகவுமே இருக்கிறது. நாய் தான்பண்ணிய வாந்திக்குத் திரும்புவது ஒரு பாவியை வருத்தப்படுத்திய பாவத்திடத்திற்கு அவர் திரும்புவதைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. கழுவப்பட்ட பன்றி சேற்றில் புரளுவதற்காக திரும்பியது அது இன்னமும் ஒரு பன்றியாக, பன்றிக்குரிய சுபாவத்துடன் இருப்பதைக் காண்பிக்கிறது. வேதாகமத்தில் எந்த இடத்திலும் தேவன் தனது மக்களை பன்றி என்றோ அல்லது நாய் என்றோ அழைக்கவில்லை. இரண்டுமே அவிசுவாசிகளை அடையாளம் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவன் இந்தப் பன்றியை அவர் விரும்புகிற மறுபடியும் பிறந்த ஒருவருக்கு இருக்க வேண்டிய சுபாவத்துடன் ஒரு ஆடாக மாற்றியிருப்பாரானால், ஆடு பன்றியைப்போல சேற்றில் புரளுவதற்கு விரும்பியிருக்காது, கவனமின்மையால் கூட மண்ணாகியிருக்கமாட்டாது. அதிகமான மக்கள் இன்னமும் பன்றியைப்போல வெளித்தோற்றம் மட்டும் கழுவப்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்களின் பாவமான சுபாவங்கள் ஒருபோதும் மாற்றப்படவில்லை.

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பாவங்களுக்குத் திரும்பிய பிரகாசிப்பிக்கப்பட்ட மக்களோடேயல்லாமல், கர்த்தர் இரட்சிக்கப்பட்ட மக்களோடு பேசுவில்லை என்பதை இந்த அதிகாரத்தில், முதலாம் வசனத்தில் இருந்து இரண்டாம் வசனம் வரை வாசிக்கையில் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

எபிரெயர் 10:26-29 - யூதர்கள் கிறிஸ்துவை நிராகரித்தல்

"சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய நியாயப் பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயி ருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்."

இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் இழந்துபோக முடியும் என இந்த வேதவாக்கு கற்பிக்கிறதா? புனிதமாக்கப்பட்ட ஒருவனைப் பற்றி 29ம் வசனம் பேசுகிறது.

ஆயினும் இது ஒரு கிறிஸ்தவனைக் குறிப்பிடவில்லை. எபிரெயர் புத்தகத்தில் இருக்கும் இது இஸ்ரவேலருக்கு குறிப்பிடப்பட்டது. வசனம் 29ல் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கையானது இஸ்ரவேலுடனான தேவனுடைய உடன்படிக்கையாகும், இங்கே இஸ்ரவேலர்கள் புனிதமாக்கப்பட்டவர்கள், அதாவது, வேறுபிரிக்கப்பட்டவர்கள், தேவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாகும். பழைய ஏற்பாட்டினுடைய எல்லா எபிரெய பலிகளும் இந்த உடன்படிக்கையை நினைவுபடுத்துவதற்காக செய்யப்பட்டவையாகும்; அத்துடன் இஸ்ரவேலுக்கான பூரணமான பலியாக சிந்தப்போவதை இரத்தம் சித்தரித்தது.

ஆகையால், இந்த வேதவாக்கு, வரப்போகும் இரட்சகரை எதிர் நோக்கியவாறு இருந்த இஸ்ரவேலருக்குப் பொருத்தமானதாகும்; ஆயினும் அவர் வந்தபோது, அல்லது அவரைக் குறித்த அறிவைப் பெற்றபோது, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மனப்பூர்வமாக கிறிஸ்துவை நிராகரித்தவர்கள் தங்களுடைய பாவங்களை நீக்குவதற்கான வேறெந்தப் பலியையும் கண்டு கொள்ள முடியாது. அதே அதிகாரத்தில் 39வது வசனத்தில், கிறிஸ்தவ யூதர்களைக் குறிப்பிட்டுக் கூறுகையில், “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த வேதவாக்கு, இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியும் எனக் கற்பிக்கவில்லை.

மத்தேயு 12:43-45 - அசுத்த ஆவி

"அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி் அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டு வந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்"

இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் இழந்துபோகக் கூடும் என்பதைக் கற்பிப்பதற்கு இதனைச் சிலவேளைகளில் பற்றிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அசுத்த ஆவி அனுப்பப்படாமல் தானாகவே வெளியே போயுள்ளது என்பதைக் கவனியுங்கள். அது கூறுவதைக் கவனியுங்கள், "நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன்" அந்த வீடு இன்னமும் அதற்குச் சொந்தமானதாக இருக்கிறது் அந்த மனிதன் இரட்சிக்கப்படாதவனாக இருக்கிறான். அந்த வீடு வெறுமையாகவும் இருப்பதைக் கவனியுங்கள்; அந்த வீட்டில் கிறிஸ்து குடியிருக்கவில்லை. இது ஒரு மனிதன் இரட்சிப்பு இல்லாமல் சீர்திருத்தப்பட்டதை சித்தரித்துக் காண்பிக்கிறது.

இந்த வசனத்தின் கடைசிப்பகுதியில் இது யாருக்கு நடக்கும் என்பதையும் அவர் பக்தியற்ற பரிசேயரைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் கவனியுங்கள் (வசனம் 38).

கலாத்தியர் 5:4 - கிருபையில் இருந்து வீழ்தல்

"நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்."

கலாத்தியர் 5:4ல் வேதவாக்கு, "நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்" எனக் கூறுகிறதா? ஆம், எனினும் முழு வசனத்தையும் வாசித்து நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள், அதாவது, தன்னைப் பாதுகாப்பதற்காக தனது சொந்த நீதியின் மீது நம்பிக்கையாக எண்ணுகிறவர்களைக் கருதுகிறதைக் கண்டு கொள்ளுங்கள். "நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்."

கிருபையானது நியாயப்பிரமாணத்திலும் பார்க்க மேன்மையான திட்டமாகும், இந்தக் கலாத்தியர்கள் தேவனின் உயர்வான இரக்கத்தின் சுவிசேஷத்தால் மக்கள் விசுவாசத்திற்கூடாக இரட்சிக்கப்பட முடியும் என்பதற்குப் பதிலாக விருத்தசேதனத்தினாலும் மேசேயினுடைய பிரமாணத்தினாலும் இரட்சிப்பு வருகிறது எனக் கற்பிக்க ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியும் என்று குறிப்பிடும் எதனையும் காணமுடியாது என்பதைக் கண்டுகொள்ளுவீர்கள். "கிருபையினின்று விழுந்தீர்கள்" இது, "கிருபையினால் இரட்சிக்கப்படுதல் எனும் தேவனின் திட்டத்தில் இருந்து விலத்தினீர்கள்; நீங்கள் தவறான உபதேசத்திற்குள் வீழ்ந்தீர்கள்" எனக் கருதுகிறது.

தேவன் தனது புத்தகத்தில் இருந்து கிறிஸ்தவர்களை அழித்துவிடுவாரா?

ஆரோன் தங்கத்தால் உருவாக்கிய கன்றுக்குட்டியை வழிபட்ட கேவலமான பாவத்தை இஸ்ரவேலர்கள் செய்த பின்னர் அவர்களுக்காக மேசே வேண்டுதல் செய்ததைக் குறித்து யாத்திராகமம் 32:31-33ல், எமக்குக் கூறப்பட்டுள்ளது.

"அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்."

மேசே இந்த இடத்தில் ஜீவபுத்தகத்தைக் குறிப்பிடுகிறார் என்றும் மனந்திரும்பியதின் பின்னர் பாவம் செய்த மக்களின் பெயர்களை தேவன் ஜீவபுத்தகத்தில் இருந்து அழித்துவிடுவதாகப் பயமுறுத்துவதாகவும் கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் விசுவாசிக்கிறார்கள். ஆனால் இந்த வேதவாக்கின் அர்த்தம் அதுவல்ல என்பதை, ஒரு கவனமான வாசிப்பினால் கண்டுகொள்ளுவீர்கள். முதலாவது இடத்தில், தேவன் ஜீவபுத்தகம் முழுவதிலும் எழுதிவிட்டார் என விசுவாசிக்க வேண்டியதில்லை. இந்த நேரம் வரைக்கும் அந்தப் புத்தகம் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் தேவன் தனது தெளிவான வாக்குறுதியை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கும் பின்னர் இஸ்ரவேல் ஜாதியினருக்கும் மேசேக்கூடாகக் கூறி, இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்திற்குள் சென்று அதை தமக்கு உரித்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெளிவாகவும் குறிப்பாகவும் வாக்குறுதியை வழங்கியிருந்தார். மக்களினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக, ஒரு ஜாதியினராக இஸ்ரவேலருக்கு தேவன் வழங்கிய வாக்குறுதியில் இருந்தும், கானான் தேசத்தில் இருந்தும் விலத்தப்படுவதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதையே மேசே கருதினார்.

ஆயினும் தேவன் கூறியது, "எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்" என்பதாகும். தேவனுக்கு விரோதமாக கலகம்பண்ணி விக்கிரகங்களை வழிபட்டவர்களை தனது திட்டத்தில் இருந்து விலத்துவதினால் கானானுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை அவர்கள் இழப்பார்கள் என்பதை தேவன் குறிப்பாகக் கருதுகிறார். சற்றுத் தாமதமாகி நாம் பார்க்கும் போது, அந்தக் காலத்தில் வாழ்ந்த வளர்ந்த மனிதர்கள் யாரும் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படாமல், அவர்களின் பாவங்களின் நிமித்தமாக தேவனின் வாக்குறுதியில் இருந்து கிறுக்கப்பட்டார்கள், பின்னர் அவர்களின் பிள்ளைகள் அந்தத் தேசத்தை சுதந்தரித்தார்கள்.

தேவன் இங்கே இரட்சிப்பைப் பற்றிப் பேசவில்லை, அவர் உடன்படிக்கைக்கும் பிரமாணத்திற்கும் கீழ் இருக்கும் இஸ்ரவேலருடன் இடைப்படுகிறார். இங்கே பரலோகத்தை அல்லது நரகத்தைக் குறித்த ஒரு அடிப்படைக் கேள்வியாக அல்ல, ஆயினும் அது சரீரப்பிரகாரமான ஜீவனையும் மரணத்தையும் பற்றியதாக, அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையின் கீழாக கானானுக்குள் கொண்டு செல்லப்படுவதா அல்லது நிராகரிக்கப்பட்டு அவர்களின் மரணித்த சரீரங்கள் வனாந்தரத்தில் விடப்படுவதா என்பதைப் பற்றியதாக இருக்கிறது.

பெயர்கள் அழிக்கப்படுவதை குறிப்பிடும் மற்றொரு வேதவாக்காக வெளிப்படுத்தல் 3:5 இருக்கிறது. "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்."

இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோக முடியும் என்பதற்கு ஆதாரமாக இந்த வேதவாக்கை ஒரு பெண் என்னிடம் ஒருதடவை கொண்டு வந்தாள். நாம் அந்த வேதவாக்கை ஒன்றாகப் பரீட்சித்துப் பார்த்தபோது, "ஒருவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடமாட்டேன் என தேவன் வாக்குறுதியாகக் கூறியுள்ளார் என்பதைக் கவனியுங்கள். ஜீவபுத்தகத்தில் இருந்து ஒருவனுடைய பெயரை நான் கிறுக்கிப்பேடுவேன் எனக் கூறும் ஒரு வசனத்தை நீங்கள் காண்பீர்களானால் அது வித்தியாசமானதாக இருக்கும்" என நான் கூறினேன்.

இந்த இடத்தில் தேவன் ஜீவபுத்தகத்தைப் பற்றித்தான் பேசுகிறார். எனினும் ஜெயங்கொள்வதற்காக கடினமாக உழைப்பவர்களைத் தேற்றுவதற்காக, அவர்களுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடமாட்டேன் என வாக்குறுதியாகக் கூறுகிறார். புத்தகம் கூறுவதிலும் அதிகமாக அதில் இருந்து வாசிக்க வேண்டாம். வேதாகமத்துடன் எதனையும் சேர்க்க வேண்டாம். தேவன் தான் கருதுவதைக் கூறியுள்ளார். அவர் அதிகமாகக் கருதியிருந்தாரானால், அதிகமாகக் கூறியிருப்பார். தன்னுடைய எந்தப் பிள்ளையினுடைய பெயரையும் ஜீவபுத்தகத்தில் இருந்து கிறுக்கிப்போடுவதாக தேவன் கருதவும் இல்லை கூறவும் இல்லை.

ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார் - வெளிப்படுத்தின விசேஷம் 22:19

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாம் இழந்துபோனவர்களாக முடியும் எனப் பயப்படுவதற்கு சிலதடவைகளில் கலக்கத்திற்குள்ளாகும் மற்றொரு வேதவாக்காக வெளிப்படுத்தல் 22:19ஐ வைத்துள்ளார்கள், அந்த வார்த்தை கூறுவது:

"ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்"

இந்தத் தடவை வேதவாக்கு தெளிவாக குறிப்பிட்ட சில மக்களைக் குறித்து அவர்களுடைய பங்கை ஜீவபுத்தகத்தில் இருந்து தேவன் எடுத்துப்போடுவார் எனக் கூறுகிறது. ஆயினும் ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்ட ஒருவனுடைய பெயரை தேவன் எடுத்துப்போடுவதாகக் கூறவில்லை. அப்படியானால் தேவன் எதனை இங்கே கருதுகிறார்?

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்காகவும் இரட்சிப்பானது செலுத்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்பதை இந்த வேதவாக்கு அத்தாட்சியடன் கருதுகிறது. 1யோவான் 2:2ல், "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் என எமக்குக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாவிக்கும் ஜீவபுத்தகத்திலும் பரிசுத்த நகரத்திலும் ஒரு பங்கு கிறிஸ்துவின் இரத்தத்தினால் வாங்கப்பட்டுள்ளது, பாவியானவன் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராகவும் அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனையும் ஏற்றுக் கொண்டால் அதனை அனுபவிக்கலாம்.

அந்தப் பங்கு எல்லா மனிதருக்கும் ஆயத்தமாக்கப்பட்டுள்ளது, அதனை அவர்கள் நல்வாய்ப்பாக பாவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒருவர் வேதாகமத்தை நிராகரித்து தேவனுடைய வெளிப்பாட்டிற்கு தன் முதுகை திருப்பிக் கொள்ளபவர், நிச்சயமாக, வேதாகமத்தில் சித்தரிக்கப்பட்ட இரட்சிப்பின் வழியைத் தவறவிடுவதுடன் இரட்சகரையும் ஏற்றுக் கொள்ளாததினால் பரலோகத்தையும் இழந்துவிடுவார். வேதாகமத்தை நிராகரிக்கும் எல்லாரும் இரட்சிப்பின் திட்டத்தையும் கிறிஸ்து அவர்களுக்காக சம்பாதித்த எல்லா நல்ல காரியங்களையும் இழந்துவிடுவார்கள் என்று இந்த வேதவாக்கு அத்தாட்சியாகக் கருதிக் கூறுகிறது. தேவனின் பிள்ளைகளில் ஒன்று இழந்து போகும் என இந்த வேதவாக்கு நிச்சயமாகக் கருதவில்லை. ஏற்கனவே ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர் இழந்து போகமாட்டார்.

"நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு," 1 கொரிந்தியர் 9:27

1கொரிந்தயர் 9:27ல் தான் ஆகாதவனாய் போகாதபடிக்கு எவ்வளவு கவனமாக தனது மாம்சத்தின் சுபாவத்தை ஒடுக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக பவுல் கூறுகின்றார். தன்னுடைய ஆத்துமாவை இழந்துவிடுவதாகப் பயப்படுவதாக பவுல் இங்கே கருதுகிறாரா? அந்த வசனத்தை வாசித்துப் பாருங்கள்.

"மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்."

இந்த இடத்தில் ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என்பது மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல் உண்மையில் "அனுமதி இல்லாமல்" எனப் பொருள்படுகிறது. தேவன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு மிகவும் பெரிதாக பயன்படுத்தியதன் பின்னர், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் பவுலினுடைய ஊழியத்திற்கு அனுமதியைக் காண்பித்த பின்னர், மாம்சத்தின் சுபாவம் தன்னை கட்டுப்படுத்துவதற்கு விட்டுக் கொடுத்தால், பவுல் கூட பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை இழந்து தேவனுடைய அனுமதி இல்லாமல் காணப்படுவார் என்பதை பவுல் உண்மையாகக் கருதுகிறார்.

எத்தனை பிரசங்கியார்கள் ஒருதடவையில் அதிகமான உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தியவர்கள், பெரிய ஊழியங்களில் பங்கு கொண்டவர்கள், அதிகமான ஆத்துமாக்களை ஆதாயம் செய்தவர்கள், அதிகமான இருதயங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தவர்கள், ஆனால் இப்போது வல்லமை இல்லாமல், குறைந்த உரையாடலுடன், ஊழியம் குற்றப்பட்டதாக, தேவனின் அனுமதி இல்லாமல் காணப்படுகிறார்கள்! ஊழியத்தைக் குறித்து சிந்திக்கையில், ஒருதடவை ஊழியத்தில் இருந்தவர்கள் இப்போது ஆகாதவர்களாக போய்விட்டார்கள், பிரயோஜனம் அற்றவர்களானார்கள், ஊழியத்தில் தேவனின் பாவனைக்கு ஏற்காத கருவிகளானார்கள்.

யோவான் 6:37ல் இரட்சிப்புக்காக தன்னிடத்தில் வருகிற ஒரு தனிப்பட்ட ஆத்துமாவையும் புறம்பே தள்ளுவதில்லை என இயேசு தெளிவாக வாக்குக் கொடுத்துள்ளார். கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பவர் தனது ஆத்துமாவை இழந்துவிடும் ஆபத்திற்குள்ளாக வாழவில்லை. அவர் தனது சேவையில் தேவனின் அனுமதியை இழந்து ஒதுக்கப்படக் கூடும். தேவனின் அனுமதி இல்லாததினால், தனது வல்லமையை இழந்து, பவுல் பயந்தது போன்ற ஒரு பிரசங்கியாராக, ஒதுக்கிவிடப்படக் கூடும். பவுல் தனது இரட்சிப்பை இழந்துவிடுவேன் எனப் பயப்படவில்லை.

நற்கருமங்களைச் செய்வது ஒரு கிறிஸ்தவனை இரட்சிக்கப்பட்டவனாக வைத்திருக்குமா?

கிறிஸ்தவனின் வேலையை முக்கியத்துவப்படுத்தும் வேதப்பகுதிகள் அதிகம் வேதாகமத்தில் காணப்படுகிறது, கிரியை செய்யாதபட்சத்தில் தமது இரட்சிப்பை இழந்துவிடுவார்கள் என இந்தப் பகுதிகள் கருதுவதாக மக்கள் அதிகமான தடவைகளில் விசுவாசிக்கிறார்கள்.

பிலிப்பியர் 2:12 - இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்

உதாரணத்திற்கு, பிலிப்பியர் 2:12 கூறுவதைப் பார்ப்போம்:

"....அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்." பிலிப்பியர் 2:12

எனினும் தொடர்ந்து வரும் வசனத்தை நீங்கள் வாசிப்பீர்களானால், "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் என்பதினால் பவுல் இங்கே ஏற்கனவே உங்களிடத்தில் உள்ளதை கிரியையிலே காண்பிப்பதைப் பற்றிப் பேசுவதைக் கண்டு கொள்ளுவீர்கள். தன்னிடத்தில் பஞ்சு விளைச்சல் இல்லாத ஒருவன் தன்னுடைய பஞ்சு விளைச்சலில் வேலை செய்ய முடியாது. தன்னுடைய இருதயத்தில் வெளிச்சம் இல்லாதபட்சத்தில் ஒருவனால் தனது வெளிச்சத்தைப் பிரகாசிக்க முடியாது. ஒரு மனிதனிடத்தில் இரட்சிப்பு இல்லாத பட்சத்தில் அவனால் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட முடியாது. தாகத்துடன் இருக்கும் இந்த உலகத்திற்காக நாம் ஒரு கிணறு நிறைந்த தண்ணீரை எமக்குள் உடையவர்களாக இருக்க முடியும் என இரட்சகர் வாக்களித்துள்ளார், அத்துடன் நாம் இந்த உலகத்திற்கு வெளிச்சமாகவும் உப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது உங்கள் இரட்சிப்புக்காக கிரியை செய்யுங்கள் எனக் கருதவில்லை, உங்கள் இரட்சிப்பு மற்றவர்களிடத்தில் நிறைவேறப் பிரயாசப்படுங்கள் என்பதைக் கருதுகிறது.

மத்தேயு 24:13 - முடிவுவரை நிலைத்திருத்தல்

"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."

கவனமில்லாமல் வாசிப்பவருக்கு, இந்த வேதவாக்கு விசுவாசத்தில் நிலைத்திருப்பதில் அல்லது முடிவுவரை நிலைத்திருப்பதில் இரட்சிப்பு தங்கியிருக்கிறது என்பதாக கற்பிப்பதாகக் காணப்படும். ஆனால் இந்த அதிகாரத்தைக் கவனமாக வாசிப்பீர்களானால், இந்தக் காலத்தின் முடிவில் உண்டாகும் உபத்திரவ காலத்தைக் குறித்து இயேசு பேசுவதைக் கண்டு கொள்ளுவீர்கள், இரட்சிப்பு என இங்கே குறிப்பிடப்பட்டது சரீர மீட்பைக் கருதுகிறது, அது ஆத்தும மீட்பைக் கருதவில்லை. வசனம் 21ல், "ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்"| இந்த இடத்தில் குறிப்பிட்ட காலமானது உபத்திரவ காலமாகும். வசனம் 22ல், "அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்." இந்த இடத்தில் குறிப்பிட்ட இரட்சிப்பு சரீர இரட்சிப்பைக் கருதுகிறது, அதாவது, உண்மையான இஸ்ரவேல் ஜாதியினரை இந்த மகா உபத்திரவ காலத்தில் சரீர மரணத்தில் இருந்து பாதுகாப்பதைக் கருதுகிறது.

வேதாகமத்தை அது கூறும் விதத்திலேயே ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் விசுவாசத்தோடு வாழ்வதினாலோ அல்லது கிரியைகளினாலோ இரட்சிப்பு வருகிறது என்பதாக இந்த வேதவாக்குக் கற்பிக்கவில்லை என்பதைக் கண்டிருப்பீர்கள்.

இந்த உபத்திரவ காலத்தில் கடுமையான ரீதியில் பாடுகளை அனுபவிக்கப் போகும் யூதர்களுக்கு தாக்கமான ரீதியில் இயேசு கூறுவது, "இந்த உபத்திரவ காலத்தின் முடிவுவரை நிலைத்திருக்க முடியுமானால் நிலைத்திருங்கள், நான் வந்து அந்திக் கிறிஸ்துவின் கைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பேன்" என்கிறார்.

எபிரெயர் 6:4-6 - மன்னிக்கப்பட முடியாத பாவம்

"ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவார்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்."

இந்த வசனம் கூறுவதைக் கவனியுங்கள், "மறுதலித்துப் போனவர்கள்......" இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதனை இந்த வசனம் குறிப்பிடுகின்றதா? அவன் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டுள்ளான், பரலோகத்தின் ஈவை ருசிபார்த்துள்ளான், தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் இருக்கிறான். பரிசுத்த ஆவியானவருடனும் அவன் ஏதோ காரியத்தில் பங்கு கொண்டுள்ளான்.

இந்த இடத்தில் கூறப்பட்ட "பரிசுத்த ஆவியைப் பெற்றும்" என்ற சொற்கள் பரிசுத்த ஆவியானவருடன் கூடச் சென்றும் என வாசிக்கப்படுகிறது. அது மாத்திரம் அல்லாது இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் இழந்துபோனவராக முடியும் என்பதை இது காண்பிக்கவில்லை என்பதற்கு அதிகமான காரியங்கள் உள்ளன. இழந்து போன ஒருவர் பிரகாசிப்பிக்கப்படக் கூடும், அதாவது அவர் கிறிஸ்துவைக் குறித்துக் கற்றுக் கொள்ளக் கூடும். அவர் தேவ வார்த்தையின் பரலோக அன்பளிப்பு போன்றவற்றை ருசிபார்க்க முடியும்; அத்துடன் இவர்கள் அவற்றைப் புசிக்கவில்லை, ஆயினும் சாதாரணமாக சுவைபார்த்தவர்கள் என்பதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஒரு இழந்து போன நபருடனும் கூடச் சென்று, தர்சு பட்டணத்து சவுலுக்குச் செய்ததைப் போன்று குத்தியுணர்த்தி, நாளுக்கு நாள் அவரின் மனச்சாட்சியைக் குத்திக் கொண்டிருக்கிறார். இந்த இடத்தில் கூறப்பட்ட நபர் ஒரு இழந்து போனவராகும்.

"இந்த வசனங்கள் என்னுடைய நிலைக்குச் சரியாகப் பொருந்துகிறது; நான் தேவனுடைன் சரியாக இருந்த ஒரு கிறிஸ்தவனாக இருந்தேன், ஆயினும் இந்த வேதவாக்குக் கூறுவதைப் போன்று நான் வீழ்ந்து போனேன்" என சில கிறிஸ்தவர்கள் கூறக்கூடும். இது உண்மையானால், யார் செய்திருந்தாலும் இந்த வேதவாக்கின்படி நம்பிக்கையற்றவராக அவர் சதாகாலத்திற்கும் இழந்துபோனவராவார். "தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்."

இல்லை, அருமை நண்பரே, இது பாவத்திற்குள் வீழ்ந்துபோன ஒரு கிறிஸ்தவனைக் கருதவில்லை, ஆயினும் இது பெரிதான அளவில் பிரகாசிப்பிக்கப்பட்ட பின்னர், ஆழ்ந்து ஆராய்ந்து, வெறுப்பால் உந்தப்பட்டு, இறுதியில் கிறிஸ்துவை நிராகரித்து பரிசுத்த ஆவியானவரையும் குற்றப்படுத்தும் இழந்து போன ஒரு மனிதனின் மன்னிக்கப்பட முடியாத பாவமாகும்.

மத்தேயு 12:31,32ல், பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகச் செய்யும் தூஷணத்தைத் தவிர மனுஷர் இந்தப் பூமியில் செய்யும் எந்தப் பாவமும் குற்றமும் அவர்களுக்கு மன்னிக்கப்படும் என இயேசு கூறியுள்ளர். அப்படியானால் மன்னிக்கப்பட முடியாத பாவம் ஒன்று மாத்திரம் உள்ளது, மற்றவை யாவும் மன்னிக்கப்படும் என்பதை அது கருதுகிறது. ஆயினும் எபிரெயர் 6:4-6ல் குறிப்பிடப்பட்ட பாவமானது மன்னிக்கப்பட முடியாததாகும், ஏனெனில் வேதவாக்கு, "மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்" எனக் கூறுகிறது.

ஆகவே, இது, ஒருபோதுமே இரட்சிக்கப்படாத இழந்துபோன ஒரு மனிதனின் மன்னிக்கப்பட முடியாத பாவமாகும், அத்துடன் இது தேவனின் பிள்ளையொன்று இழந்துபோனதாகுவதை முற்றிலும் கருதவில்லை.

பாவத்தில் வீழ்ந்துபோன

வேதாகம நபர்கள்

யூதாஸ்

வேதாகமத்தின் சிறந்த மனிதர்களில் அதிகமானோர் வேதனையுண்டாக்கும் பாவத்தில் வீழ்ந்துள்ளார்கள். இந்த மனிதர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தார்களா? அப்படியானால், அவர்கள் இழந்து போனார்களா? இதனுடன் தொடர்புடையதாக யூதாஸ் காரியோத்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளான். அவன் இரட்சகரைக் காட்டிக் கொடுத்தான், அவன் ஒரு இழந்துபோன ஆத்துமாவாக நரகத்திற்குச் சென்றான் என நான் நம்புகிறேன். அப்போஸ்தலர் 1:25ல், "யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் 6:64-71ல், யூதாஸ் ஒருபோதும் விசுவாசிக்கவில்லை என்றும் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை என்றும் இரட்சகர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதையும் அவன் பிசாசாக இருக்கிறான் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதில் உள்ள சில வசனங்களை வாசித்து யூதாஸைக் குறித்து இயேசு என்ன கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள்:

"ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:" -யோவான் 6:64

"அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்."- யோவான் 6:67-71

யூதாஸ் ஒருபோதுமே இரட்சிக்கப்பட்டு இருக்கவில்லை, ஆகவே ஒருபோதுமே அவன் தன் இரட்சிப்பை இழக்கவில்லை. அவன் ஒருபோதுமே கிறிஸ்துவை விசுவாசிக்காகபடியினால், ஒரு பிசாசாக இருந்தான்@ ஆகவே அவன் மரித்தபோது, அவன் தனக்குரிய இடத்திற்குச் சென்றான். நிச்சயமாக ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழந்து போவான் என்பதற்கு யூதாஸ் ஒரு உதாரணம் அல்ல.

லோத்து - பின்வாங்கிப்போன கிறிஸ்தவன்

பயங்கரமான பாவங்களின் குற்றமுடையவராக லோத்து இருந்தார். அவர் கெட்ட கூட்டத்துடன் செயற்பட்டார்; ஒரு ஆத்துமாவையும் ஆதாயம் செய்யாமல் தனது பட்டணத்தை நரகத்திற்குப் போகவிட்டார்; அவர் குடித்து வெறித்திருந்தார், அத்துடன் அவரின் குமாரத்திகளின் அழிவுக்கு மறைமுகமான பொறுப்பாக இருந்துள்ளார். யாராவது ஒரு மனிதர் தனது இரட்சிப்பை இழந்துவிடக் கூடுமானால், லோத்து தன்னுடைய இரட்சிப்பை இழந்திருக்கக் கூடும்.

ஆயினும் நாம் இந்த விடயத்தை ஊகிக்கக் கூடாது. நாம் 2பேதுரு 2:7,8ம் வசனத்திற்குத் திருப்புவோம், "அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க" என வேதவாக்கு லோத்துவைக் குறித்துக் கூறுவதை நாம் பார்க்கிறோம். லோத்து, சோதோமின் மத்தியில் இருக்கும்போதும் அவன் "நீதிமானாகிய லோத்து" என அழைக்கப்பட்டுள்ளான். அத்துடன் அவனுக்கு நீதியுள்ள ஒரு இருதயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது! லோத்தினுடைய நீதியும் தற்காலத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் நீதியும் ஒன்றாகவே இருக்கிறது, அது கிறிஸ்துவின் நீதியினால் பொறுப்பேற்கப்பட்டதாகும். அவன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் அல்லாமல் விசுவாசத்தினால் நீதியாக்கப்பட்டான் (ரோமர் 3:28), தனது கிரியைகளினால் அல்லாமல் கிறிஸ்துவின் கிருபையினால் நீதியாக்கப்பட்டவன். லோத்து நிச்சயமாக பாவம் செய்தவன், ஆயினும் தேவன் அவனைக் குறித்து இவ்வாறாகக் கூறியிருப்பதினால் அவன் நிச்சயமாக இழந்துபோனவன் அல்ல. தனது பாவங்களினால், லோத்து தன்னுடைய குடும்பத்தை இழந்தான், தன்னுடைய பணத்தை இழந்தான், தன்னுடைய சந்தோஷத்தை இழந்தான் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் அவன் தனது இரட்சிப்பை இழக்கவில்லை, ஏனெனில் தேவன் அவனை நீதியான இருதயத்துடன் உள்ள ஒரு நீதிமான் எனக் கூறியுள்ளார்.

தாவீதினுடைய பாவங்கள்

தாவீது கொலை மற்றும் விபசாரம் எனும் பாவங்களைச் செய்துள்ளார். நாம் அவரின் பாவங்களைக் கெட்டவையாகத் தீர்ப்பளிக்க வேண்டும். அவைகள் தீமையானவை ஆயினும் தாவீது கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழாக இருந்தார், அத்துடன் ஐம்பத்தோராவது சங்கீதத்தில், தாவீது தனது இரட்சிப்பை இழக்கவில்லை என்பதையும், இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்தார் என்பதையும் தாவீதின் ஜெபம் காண்பிக்கிறது. சங்கீதம் 51:11,12 கூறுவது:

"உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."

இரட்சிப்பை மீளத்தாரும் என தாவீது கேட்கவில்லை, இரட்சிப்பின் சந்தோஷத்தை மறுபடியும் தாரும் என தேவனிடம் கேட்கிறார். தேவன் தன்னோடுள்ள ஐக்கியத்தை முறித்துக் கொள்ளக்கூடாது, தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து தள்ளிவிடக் கூடாது, பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியத்தை எடுத்துவிடக் கூடாது எனக் கேட்கின்றார். தாவீதைப் போன்று பின்வாங்கிப்போனவர் அவ்வாறு இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத் தரவேண்டும் என ஜெபிக்க வேண்டும், ஆயினும் தேவன் தனது பிள்ளையை தள்ளிவிட்டார் என விசுவாசிக்க வேண்டியதில்லை. தாவீது பாவம் செய்தார் ஆயினும் அவர் மறுபடியும் இழந்துபோன ஒரு பாவியாகவில்லை. ஆகவே தாவீது தெயவீக உந்துதலின் அருளால் தேவனைப் போற்றினார்: "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்." (சங்கீதம் 32:1,2). தாவீது ஏன் தன்னுடைய இரட்சிப்பை இழந்துபோகவில்லை என்பதையும் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் ஏன் இழந்துபோக மாட்டான் என்பதையும் வேதவாக்குக் காண்பிக்கிறது.

"குறிப்பாகக் காட்டும்" உபதேசங்கள்

கலக்கமுற்றுள்ள என் நண்பர்களே, பெரும்பாலும் மற்றைய சிலவேதவாக்குகள் உங்கள் மனதுக்கு வரக்கூடும். இரட்சிப்பை இழந்துவிடக் கூடும் எனும் உபதேசத்தின் பொதுவான அடிப்படையாக உள்ளவற்றையே நான் கொடுத்துள்ளேன். ஆயினும் நீங்கள் இரட்சிக்கப்பட்ட ஒருவர் இழந்துபோவார் என வேறு சில வேதவாக்குகள் குறிப்பாகக் காண்பிப்பதாகக் கூறலாம். அது மிகவும் துக்கமானவற்றுள் ஒன்றாக இன்று உலகத்தை நிரப்பியுள்ள தவறான போதனையாக இருக்கிறது: வேதாகமம் எங்கேயுமே தெளிவாகக் கற்பிக்காதவற்றை மக்கள் உபதேசங்களாகக் கற்பிக்கிறார்கள், அவற்றை எங்கேயோ குறிப்பாகக் காண்பிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். தேவனின் வார்த்தையினால் தீர்வுகாணப்பட வேண்டியதற்கு ஒரு கேள்வி மிகவும் முக்கியமானதாகும்; நான் கொடுத்துள்ள வேதவாக்குகளை ஜெபத்துடனும், சொல்லுக்குச் சொல்லாகவும் எடுத்துக் கொள்ளுவீர்களானால், உங்களின் சொந்த இருதயத்தில் இந்த விடயத்திற்கான தீர்வை சதாகாலத்திற்கும் ஏற்படுத்திக் கொள்ளுவீர்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன் - அதாவது இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் ஒருபோதுமே இழந்துபோக மாட்டார்.

இரட்சிக்கப்பட்ட ஒரு நபர்

இழந்துபோக முடியாது என்பதற்கான

ஒரு நேர்த்தியான வேதாகம போதனை

இரட்சிக்கப்பட்ட நபர் இழந்துபோகக் கூடும் என்பதற்கு ஆதாரமாக வேதாகமத்தில் எந்தவொரு போதனையும் இல்லை என்பதைக் காண்பித்தேன். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்த மனிதனின் பாதுகாப்பையும் அபாயமின்மையையும் வேதாகமம் தெளிவாகவும் தவறின்றியும் கற்பிக்கும் அநேக பகுதிகளுள் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம். இரட்சிப்பைக் குறித்த வேதாகம போதனை ஒவ்வொன்றும் நித்தியமான இரட்சிப்பைக் குறித்ததாகும்.

ஒரு கிறிஸ்தவன் என்பவன் மறுபடியும் பிறந்தவனாவான்

யோவான் 1:13 மற்றும் யோவான் 3:3,5-7ல், இரட்சிப்பானது ஒரு பிறப்புடன் ஒப்பிடப்படுகிறது. இரட்சிக்கப்பட்ட நபர்கள் இப்போது தேவனின் பிள்ளைகளாக இருக்கிறார்கள் (1யோவான் 3:2). பிறந்த ஒரு பிள்ளை ஒருபோதும் பிறக்காததாக முடியாது, அத்துடன் ஒரு தகப்பன் பிள்ளை என்ற உறவு முடிவடைய முடியாதது. வேதாகமம் அநேக தடவைகளில் இரண்டாவது பிறப்பைப் பற்றிக் கூறுகிறது ஆயினும் ஒருபோதும் மூன்றாவது பிறப்பைப் பற்றிக் கூறவில்லை என்பதையும் கவனியுங்கள். ஒருதரம் மறுபடியும் பிறத்தல் போதுமானது. நான் என் தகப்பனுக்குப் பிள்ளையாக பிறந்தபோது தீர்வு ஏற்பட்டது போன்றே நான் தேவனின் பிள்ளையாகிய போதும் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேதாகமம் கூறுகின்ற விதத்திலேயே அதனை ஏற்றுக் கொள்ளும்படிக்கு நான் மறுபடியும் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஒருவன் கிறிஸ்தவனாக மறுபடியும் பிறக்கும்போது, அவன் தேவனின் பிள்ளையாகி, தேவனை "தனது தகப்பன்" என்று அழைக்கும் உரிமையைப் பெற்றுக் கொள்ளுகிறான் என்பதை இயேசு கூறும் பொழுது அதனைக் கருதியே கூறினார். ஒரு பாவி மனந்திரும்பும் பொழுது ஒரு மெய்யான மாற்றம் உண்டாகிறது. அவன் ஒரு தேவனின் பிள்ளையாகுவதுடன், எனது குடும்பத்திற்குள் என்னுடைய பிள்ளைகள் பிறப்பதைப் போன்றே நிச்சயமாக தேவனின் குடும்பத்திற்குள் பிறக்கிறான். இரண்டாவது பேதுரு 1:4 கூறுவது:

"இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது."

ஒரு கிறிஸ்தவன் உண்மையில் தேவனின் பிள்ளையாக இருப்பதுடன் தெய்வீக சுபாவத்திற்கு பங்குடையவர்களாகிறார்கள். அந்த மனிதன் எதைச் செய்தாலும், தேவன் அவனின் பிதாவாக இருக்கிறார், அத்துடன் அவன் தேவனின் பிள்ளையாக இருக்கிறான். என்னுடைய பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்வதின் காரணத்தினால் அல்லாது பிறப்பின் காரணத்தினால் அவர்கள் என்னுடைய குடும்பத்தில் இருக்கிறார்கள். நாம் இந்த அடிப்படையிலேயே, அவருடைய குடும்பத்திற்குள் பிறந்ததினால் இருக்கிறோம். இதுவே ரோமர் 8:14-17ன் அர்தமாகும்:

"மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்."

ஒரு தாயின் அன்பு அவளின் குழந்தைக்குத் தவறினாலும், தேவனின் அன்பு மகத்தானதாக இருக்கிறது. ஒரு பிள்ளை, பாவத்தின் கணப்பீட்டில் இருந்தாலும் கூட, அதன் பூவுலக தந்தையுடனான ஐக்கியத்தை இழக்கக்கூடும், இருப்பினும் பிள்ளை தகப்பனின் சுபாவத்தில் பங்குடையதாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரேவிதமான கண்கள், அங்க அடையாளங்கள் அல்லது வழிகள் இருக்கக்கூடும். அவ்வாறே, ஒரு கிறிஸ்தவன் தனது பாவத்தினால் பிதாவுடன் உள்ள இனிமையான ஐக்கியத்தை இழந்துவிடக் கூடும், ஆயினும் அவன் இன்னமும் தேவனின் பிள்ளையாக இருந்து, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவனாக இருக்கிறான். தேவன் தனது பிள்ளைகள் பாவம் செய்யும்போது அவர்களைத் தண்டிக்கின்றார், ஆயினும் அவர்கள் இன்னமும் அவரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

தேவனையும் அவரின் மக்களையும் குறிப்பிடுகையில் பிள்ளைக்கும் தகப்பனுக்குமிடையேயான ஒரு உறவுமுறையுடனும் பிறப்புடனும் வேதாகமம் ஒப்பிட்டுக் கூறுகின்றது, ஒருவர் இரட்சிக்கப்படும்போது தேவனுடன் ஒரு மாறாத நிரத்தரமான உறவுமுறைக்குள் பிரவேசிக்கிறார். ஒருவரின் ஐக்கியம் மாறலாம், ஆனால் உறவுமுறை மாறாது.

நித்திய ஜீவன்

"நித்திய ஜீவன்" மற்றும் "சதாகால வாழ்வு" போன்ற சொற்கள் நாற்பத்தைந்து தடவைகளுக்கு மோலாக வேதாகமத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. அதனைவிடவும், மற்றைய அநேக தடவைகளில் "நித்திய மீட்பு" "நித்திய மகிமை" "நித்திய இரட்சணியம்" "நித்திய சுதந்திரம்" எனும் அர்த்தமுள்ள சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த சொற்கள் அதிக தடவைகளில் மற்றைய இடங்களிலும் பார்க்க யோவானுடைய சுவிசேஷத்தில் பாவிக்கப்பட்டுள்ளது, ஆயினும் இவை பாவிக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு எனும் வாக்குறுதியுடன் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யோவான் 3:16 ஒரு சிறப்பான உதாரணமாகும். யோவனுடைய சுவிசேஷத்தில் நூற்றொரு தடவைகள் "விசுவாசி" "விசுவாசிப்பவனுக்கு" "விசுவாசித்த" என்ற சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன, அதிகமாக அவை இரட்சிப்பின் திட்டத்தைக் குறிப்பிடுகின்றன. அவை குறிப்பாக ஒருவன் விசுவாசிக்கின்றபோது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவான் எனக் கூறுகின்றன.

விசுவாசிக்கு ஏற்கனவெ நித்திய ஜீவன் இருக்கிறது

விசுவாசிக்கு தேவன் நித்திய ஜீவனை வாக்களித்துள்ளார், அந்த நித்திய ஜீவனை ஒரு விசுவாசி தற்காலத்திலே உடையவராக இருக்கிறார். யோவான் 3:36ல் "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்" எனக் கூறப்பட்டுள்ளது. இன்னொரு வித்த்தில் கூறினால் "குமாரனில் விசுவாசம் வைத்துள்ளவன் நித்திய ஜீவனை வைத்துள்ளான்" என்பதாகும். இந்த அர்த்தத்திலேயே வேதாகமம் கூறுகிறது. நான் அவரை விசுவாசிக்கிறேன் அதனால் நான் அதை உடையவனாக இருக்கிறேன். எனக்கு நித்திய ஜீவன் இருப்பதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறமுடியும்! விசுவாசிகளுக்கு நித்திய ஜீவன் இருக்கும் என வேதாகமம் கூறவில்லை மாறாக விசுவாசிப்பவர் அதனை இப்போதே உடையவராக இருக்கிறார் எனக் கூறுகிறது.

இதே விடயம் மறுபடியும் மறுபடியும் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

யோவான் 6:47ல், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". விசுவாசிப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டென தேவன் மறுபடியும் இங்கே கூறியுள்ளார்.

யோவான் 5:24ல், "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

தேவனின் வார்த்தையை அவ்வாறே ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம். நீர் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துள்ளீரானால், உமக்கு இப்போது ஜீவன் இருக்கிறது, அது சதாகாலமும் இருக்கக்கூடிய நித்திய ஜீவனாகும். அதனை நீர் இழந்துபோக முடியாது! கர்த்தரையே போற்றுவோம்!

நான் இயேசுவை விசுவாசித்தபோது ஜீவனைப் பெற்றுக்கொண்டேன் அத்துடன் அது நித்தியமானதாக இருக்கிறது. நான் நித்திய ஜீவனைப் பெற்று பத்து வருடங்களின் பின்னர் பாவம் செய்து அதனை இழந்துவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படியாயின் அது பத்து வருடங்கள் மாத்திரம் இருந்தமையால், அது நித்திய ஜீவனாக இருக்க மாட்டாது. எனினும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு நித்திய ஜீவனை தேவன் வாக்களித்துள்ளார். நீங்கள் ஒவ்வொருதடவையிலும் "விசுவாசிக்கிறவன்" என்பது நிகழ்காலத்தில் இருப்பதையும், நித்திய ஜீவன் என்பது நித்தியத்திற்குள் கடந்து செல்வதையும் கவனியுங்கள். நித்திய ஜீவனை உடைய யாராயினும் அதனை ஒருபோதும் இழந்துவிட முடியாது. சந்தேகிக்கும் ஆன்மாவே, உனது தகுதியற்ற நிலையைப் பாராது, நீ கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்போது நித்திய ஜீவனை பெறுவாய் எனும் தேவனின் நித்திய வாக்குறுதியைப் பார். தேவனின் வாக்குறுதியை அது கூறுகிறவாறே ஏற்றுக் கொண்டு அர்த்தப்படுத்தி தேவனுக்கு நன்றி செலுத்துவதிலும் பார்க்க நேர்மையான வழி வேறொன்றில்லை.

கர்த்தர் வாக்குறுதியின் மீது வாக்குறுதியை அடுக்கி வைத்துள்ளார். யோவான் 6:37ல், இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் ஒருபோதும் அதனை இழந்துவிட மாட்டார் என தேவன் வாக்களித்துள்ளார். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." அவர் கூறிய "புறம்பே தள்ளுவதில்லை" என்பதிற்காக நன்றிகூற முடியும். இரட்சிக்கப்பட்ட ஒரு நபரை இந்த உலகத்தின் எந்த நிபந்தைனையினாலும் புறம்பே தள்ளுவதில்லை என இயேசு கூறுகின்றார். நீர் இரட்சிக்கப்பட்ட பின்னரும் செய்த, உமது பாவங்களும் அவர் புறம்பே தள்ளுவதற்கு காரணமாகாது; நீர் பாவத்தில் நிலைத்திருக்கிறீராக இருந்தால் உமது இரட்சிப்பைக் குறித்து பரீட்சித்து பார்த்து உண்மையான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும். உண்மையாக இரட்சிக்கப்பட்டவன் பாவத்தில் நிலைத்திருக்க மாட்டான். அவ்வாறு அவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டு இரட்சிக்கப்பட்டவனை கிறிஸ்து ஒருபோதுமே புறம்பே தள்ளுவதில்லை. அவர் தனக்குத் தானே கூறியுள்ளார்.

மகத்தான பழைய பாடலான, எவ்வளவு உறுதியான ஒரு அஸ்திபாரம் எனும் பாடலை எனது தாயார் தனது பரலோக வீட்டிற்குள் பிரவேசிப்பதிற்கு சில நிமிடங்கள் முன்னதாகப் பாடும்படிக்குக் கேட்டார், அது மிகவும் இனிமையான வரிகள்:

இளைப்பாறுதலுக்காக இயேசுவில் சார்ந்திருக்கும் ஆத்துமாவே,

உன் பகைஞரிடத்தில் நான் உன்னைக் கைவிடேனே;

அதிரப்பண்ண நரகமே முயற்சித்தாலும், ஆத்துமாவே,

நான் ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதுமே கைவிடேனே!

இந்தப் பாதுகாப்பு சம்பாதித்துப் பெற்றுக் கொண்டது அல்ல. நாம் இதனைப் பெறுவதிற்குத் தகுதியற்றவர்கள். இந்தப் பாதுகாப்பானது தேவனின் பிள்ளை அவரின் வாக்குறுதிகளைக் கைக் கொள்வதிற்கு உண்மையுள்ளவராக தேவனின் நன்மையில தங்கியிருப்பதாகும். எனது முயற்சிகளிலும் கிரியைகளிலும் இது தங்கியதாக இராததினால் தேவனுக்கு நன்றி கூறமுடியும். நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை எனக் கூறியவரிலும் அவரின் வாக்குறுதியிலும் நான் பாதுகாப்பாக சார்ந்திருக்க முடியும்!

விசுவாசிக்கிறவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை

விசுவாசிக்கிறவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என யோவான் 5:24ல் அவர் கூறியுள்ளார். ஒரு விசுவாசி ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டார்! அது எந்த வரையறையும் இல்லாமல் நித்தியத்தின் முடிவுவரை செல்கிறது. அதற்கான காரணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: ஏனெனில் பாவிகள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் இப்போது விசுவாசிகளாக இருக்கிறார்கள். "விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படான்" என இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரட்சிக்கப்பட்டவனுக்கு ஏன் ஆக்கினைத் தீர்ப்பு இல்லையென்றால், அவன் சோதிக்கப்படுவதிற்கு நீதிமன்றத்திற்காகிலும் கொண்டுவரப்பட மாட்டான்! அவனுடைய இடத்தில் கிறிஸ்து ஏற்கனவே சோதிக்கப்பட்டு குற்றமற்ற அவர், குற்றவாளியாக எண்ணப்பட்டார், அத்துடன் விசுவாசியின் சகல பாவங்களுக்குமான தண்டனையை ஏற்றுக் கொண்டார்; பாவத்தின் மரணத்தை பாவி கடந்துவிட்டார், அவர் ஒருபோதும் ஆக்கினைக்குட்பட்டவர் அல்ல, அவர் நீதிமன்றத்திற்கும் வரவேண்டியதில்லை. "ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே" (ரோமர் 8:34).

கிறிஸ்துவின் கரத்தில் இருந்து யாரும் பறித்துக் கொள்வதுமில்லை

மற்றொரு ஆசீர்வாதமான வாக்குறுதி யோவான் 10:28ல் உள்ளது. தனது ஆடுகளைக் குறித்து அவர் கூறுகையில்: "நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை" என இயேசு கூறியுள்ளார். தேவனின் ஆடுகளுடைய பாதுகாப்பு குறித்து மூன்றுவிதமான வாக்குறுதிகள் இங்கே இருப்பதைப் பாருங்கள். முதலாவதாக" கிறிஸ்து அவைகளுக்கு "நித்திய" ஜீவனைக் கொடுக்கிறார். இரண்டாவதாக, அவைகள் ஒருக்காலும் தண்டனைக்குள்ளாவதில்லை. மூன்றாவதாக, அவைகளை ஒருவனும் கிறிஸ்துவின் கரத்தில் இருந்து பறித்துக் கொள்வதில்லை.

சகோதரனே, நீர் கிறிஸ்துவின் ஆடுகளில் ஒன்றாக இருக்கிறீரா? அப்படியானால் உமக்கு நித்திய ஜீவன் உண்டு, ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டீர் அத்துடன் அவரின் கரத்தில் இருந்து எடுக்கப்படவும் முடியாது. இது மிகவும் உறுதியான வாக்குறுதியாக இருப்பதை உங்கள் வேதாகமத்தில் பாருங்கள். அதாவது ஒருவனும் என்பது - ஒரு மனிதனும் அல்லது பிசாசும் - கிறிஸ்துவின் ஆடுகளை அவரின் கரத்தில் இருந்து பறிக்க முடியாது என்பதைக் கருதுகின்றது. அதனைத் தொடர்ந்துவரும் வசனம் மேலதிகமான பாதுகாப்பையும் கொடுக்கிறது. எம்மைக் கிறிஸ்துவிடம் கொடுத்த, பிதாவாகிய தேவன், எல்லாரிலும் பெரியவராக இருப்பதினால் எம்மைப் பிதாவின் கரத்தில் இருந்து பறித்துக் கொள்ளவும் முடியாது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துள்ள எமக்கு எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது!

தேவனின் அன்பைவிட்டு விசுவாசியை எதுவுமே பிரிக்கமுடியாது

பவுல் தனது ஆத்துமாவின் பாதுகாப்பைக் குறித்து நிச்சயமான நம்பிக்கையுடன் இருந்தார். இளம் பிரசங்கியாரான தீமோத்தேயுவுக்கு அவர் எழுதுகையில், "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:12) என்றார். இந்த விடயத்தைக் குறித்து பவுல் குறிப்பான "நிச்சயத்தை" உடையவராக இருந்தமையால், ரோமர் 8:38,39லும் தெய்வீக ஏவுதலினால் இதே சொல்லையே பாவித்துள்ளர். "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."

மரணத்தில் உள்ளவைகளாலும், ஜீவனில் உள்ளவைகளாலும் தேவனின் அன்பில் இருந்து எம்மைப் பிரிக்க முடியாது. தேவதூதர்களால் முடியாது. பிசாசுகள் வீழ்ந்துபோன தூதர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்காலத்தில் உள்ளவைகளால் தேவனின் அன்பை விட்டு எம்மைப் பிரிக்க முடியாது, அவ்வாறே எதிர்காலத்தில் நடக்கப் போகிறவைகளாலும் முடியாது என பவுல் இங்கே கூறுகின்றார். பரலோகம் வரைக்கும் உயர்வாக இருக்கும் எதுவானாலும் எமக்கிடையே வந்து தேவனின் அன்பை விட்டுப் பிரிக்க முடியாது, நரகம் வரைக்கும் தாழ்வில் இருக்கும் எதுவானாலும் அவரின் அன்பில் இருந்து எம்மைப் பிரிக்க முடியாது.

எமது சந்தேகங்களையும், எமது அவிசுவாசத்தையும், எமது மனச்சாட்சியின் தகுதியற்ற நிலையையும் அறிந்த கர்த்தர், இவைகள் ஒவ்வொன்றையும் பெயர் குறிப்பிட்ட பின்னர், மன்னிக்கப்பட்ட பாவிகளாகிய நாம் இன்னமும் பயப்படக்கூடுமென்று, "வேறெந்தச் சிருஷ்டியானாலும்" என்ற சொற்களையும் சேர்த்துள்ளார். சிருஷ்டிக்கப்பட்ட எதுவானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று குறிப்பிட்டுள்ளார்! இவ்விதமான இரட்சிப்பையே நான் பெற்றுள்ளேன், இவ்விதமான இரட்சிப்பையே ஒவ்வொரு விசுவாசிகளும் பெற்றுள்ளார்கள், இவ்விதமான இரட்சிப்பையே இழந்துபோன பாவிகள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது பெற்றுக் கொள்ள முடியும்!

நாம் கிரியையினாலா அல்லது கிருபையினாலா இரட்சிக்கப்பட்டோம்?

இந்த ஆசீர்வாதமான போதனை மிகவும் நல்லதும் உண்மையானதுமாக இருக்கிறது என அதிகமான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் இழந்துபோக மாட்டார்கள் எனும் உபதேசம் ஆபத்தானது என சிலர் கூறுகிறார்கள். தேவனின் வாக்குறுதியை சரியாக எடுக்கையில் ஒருவரும் ஆபத்தில் இருக்கமாட்டார்கள்.

அப்படியானால், இந்த மகத்தான இரட்சிப்பின் அடிப்படை தான் என்ன? இவை எல்லாமே கிறிஸ்துவின் சிறப்பிலேயே இருக்கின்றன. இரட்சிப்பு கிருபையினால் வருகிறது, "ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:9). "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5) என பவுல் தீத்துவுக்கு எழுதியுள்ளார். நல்லதைச் செய்து ஒருவரும் ஒருபோதும் இரட்சிப்பைப் பெற்றதில்லை, "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை" (ரோமர் 3:20). "ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்" (ரோமர் 3:28).

தனது கிரியைகளினால் மனிதன் இரட்சிக்கப்பட முடியாது கிரியைகளினால் இரட்சிக்கப்பட்டவனாக இருக்கவும் முடியாது. நீர் இரட்சிப்பை பெற்றபோது அதற்குத் தகுதியுடையவராக இருக்கவில்லை, அதைப் பெற்ற நாளில் இருந்து நீர் வாழும் ஒவ்வொரு நாளும் அதற்கு தகுதியுடையவரும் இல்லை. இரட்சிப்பானது கிருபையினால், அதாவது, தேவனின் அன்பான கருணையினால் வருகிறது. இரட்சிப்பின் பின்னர் ஒரு மனிதனின் பாதுகாப்பு அவனின் கிரியையில் தங்கியிருக்குமானால், அவன் கிரியையினால் இரட்சிக்கப்பட்டு, தனது கிரியையினால் இரட்சிப்பை சம்பாதித்துள்ளான். உண்மையில், இந்த உலகத்தில் உள்ள எவராயினும் பெறத் தகுதியுடையதைப் பெறுவதானால், அவர் நரகத்திற்குச் செல்ல வேண்டும், எல்லாரும் பாவம் செய்துள்ளார்கள், அத்துடன் நாளாந்தம் பாவம் செய்கிறார்கள். "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" (1 யோவான் 1:8). அத்துடன் பாவத்தின் சம்பளம் மரணம். மனிதன் தனது நற்கிரியைகளினால் இரட்சிக்கப்படவோ அல்லது அதைப் பாதுகாத்துக் கொள்ளவோ முடியாது. நித்தியத்தில் "ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு" அப்படியாயிற்று.

இரட்சிப்பானது தேவனின் "இலவச அன்பளிப்பு" நாம் இலவசமாக நீதியாக்கப்பட்டுள்ளோம். யாருமே பெற முன்னராகிலும் அல்லது பெற்ற பின்பாகிலும் தகுதியுடையவராக இருந்து இதைப் பெறவில்லை ஒருபோதும் பெறப்போவதுமில்லை.

கிறிஸ்தவர்களின் மீது பாவப் பாரம் சுமத்தப்படுவதில்லை

ரோமர் நான்காவது அதிகாரத்தை ஜெபத்துடனும் கவனமாகவும் வாசித்து, ஆபிரகாம் விசுவாசித்தான் அது அவனுக்கு நிதியாகக் எண்ணப்பட்டது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இந்த விடயம் ஒவ்வொரு விசுவாசிக்கும் உண்மையானது என்பதை வசனம் 5 தொடக்கம் 8 வரையில் எமக்குக் கூறப்பட்டுள்ளது:

"ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால்" அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். அந்தப்படி" கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ" எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ" அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ" அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்."

நான் அவரை விசுவாசித்தபோது எனது கணக்கில் சுமத்தப்பட்ட கிறிஸ்துவின் நீதியே உண்மையில் ஒரு கிறிஸ்தவனாக எனக்கிருக்கும் நீதியாகும். அவ்வாறே என்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது, அவைகளுக்காக அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார். கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, நான் பிறந்திருக்காத போதிலும், நான் எப்பொழுதும் செய்த அல்லது செய்யப்போகும் பாவங்களுக்காக மரித்தார். ஒரேதரம் பலியிடப்பட்ட அந்த பலி நம் எல்லாருடைய பாவத்திற்கும் செலுத்தப் போதுமானது, மனிதருடைய பாவங்களுக்கு ஒருபோதுமே வேறொரு பலி இருக்கப்போவதில்லை.

ஆகவே நான் கிறிஸ்துவை விசுவாசித்தபோது, நான் என்னுடைய எல்லாப் பாவத்திற்குமான மன்னிப்பைப் பெற்றுக் கொண்டேன், அந்த நேரத்தில இருந்து எனது பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டன, அவைகள் ஒருபோதும் என் மீது சுமத்தப்படவில்லை. "எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்" எனக் கர்த்தர் கருதியே கூறியுள்ளார். இதன் காரணத்தினாலேயே ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமாவுடைய இரட்சிப்பைப் பொறுத்தவரையில் அவன் ஆக்கினைக்குள்ளாக மாட்டான் என்பதையும் நியாயந்தீர்க்கப்பட மாட்டான் என்பதையும் கூறக்கூடியதாகவுள்ளது.

ஆகவே என்னுடைய ஆத்துமாவின் பாதுகாப்பு, நான் நல்லவனாக இல்லாததினால், எனது நற்கிரியைகளில் தங்கியிருக்கவில்லை ஆயினும் அது கிறிஸ்துவின் நீதியிலும் அவரின் விசுவாசமான வாக்குறுதியிலும் தங்கியிருக்கிறது.

கிறிஸ்தவன் எவ்வாறு வாழ்கிறார் என்பது முக்கியமானதா?

கிறிஸ்தவன் தனது ஆத்துமாவை இழந்து போகும் ஆபத்து இல்லாவிட்டால் அவன் எவ்வாறு வாழ்ந்தாலும் பரவாயில்லை என யாராகிலும் கூறுவார்கள். இப்படியான கூற்று எவ்வளவு மடமைத்தனமானதும் குறுகிய நோக்குடையதும் என்பதைப் பாருங்கள்! எனது மகள் என்ற முறையில் அவளின் நிலை பாதுகாப்பாக இருக்கிறது என்பதிற்காக அவள் எவ்வாறாகிலும் வாழலாம் என அவளிடம் நீங்கள் கூறுவீர்களா? அவள் என்னுடைய மகள் என்பது உண்மை; அவள் எப்பொழுதும் எனது மகளாகவே இருப்பாள். அவள் எதனைச் செய்தாலும், எனது மனித-தகப்பன் அன்பு அவளை ஏமாற்றி நான் அவளின் தகப்பன் இல்லை என்பதாக மாற்றாது என்பதை கூறுகிறேன். ஆயினும் அவள் தனது தந்தையின் இனிமையான ஐக்கியத்தை இலகுவாக இழந்துவிடுவதுடன், எனது மகள் எனும் பெருமையையும் இப்போது அவளுக்கிருக்கும் மகிழ்ச்சியையும் இழந்துவிடுவாள்.

அவ்வாறே தேவனுடைய பிள்ளைகளுக்கும் நடக்கும். பாவம் தகப்பனுடனான ஐக்கியத்தை நெருக்கிப்போடும், இரட்சிப்பின் சந்தோஷத்தை எடுத்துப்போடும், ஒரு கிறிஸ்தவன் பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகமான பலன்களை இழக்கச் செய்யும். முதலாவது கொரிந்தியர் 3:12-15ல் இந்தப் பலன்கள் குறித்துப் பேசுகிறது, அத்துடன் ஒரு கிறிஸ்தவனின் தீய கிரியைகள் எரிக்கப்பட்டும் நல்ல கிரியைகள் நிலைத்திருக்கும் எனக் கூறுகின்றது. ஆயினும் வேதவாக்கு, "ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்" எனக் கூறுகிறது.

ஆகவே ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு வாழ்கிறார் என்பது மிகவும் முக்கியமானது!

பாவம் செலுத்துவதில்லை

ஐக்கியம் மற்றும் பலன்கள் போன்ற விடயங்கள் தவிர, தனது சொந்தப் பிள்ளைகளின் பாவங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிக்கின்றார். எனது பிள்ளைகள் என்னுடையவர்கள்; ஆகவே அவர்களைத் திருத்தும் பொறுப்பு எனக்கிருக்கிறது, அவர்களின் நன்மைக்காக நான் அவர்களைச் சிட்சிக்கிறேன். ஆகவே தேவன் தனது அன்பில் தனது பிள்ளைகளின் பாவத்திற்காக அவர்களைத் தண்டிக்கின்றார் (எபிரெயர் 12:5-8). கிறிஸ்தவர்கள் இந்த வாழ்க்கையில தண்டிக்கப்படுவதுடன் கிறிஸ்துவின் நியாயாசனத்தில் வெளிப்படும்போது, வெட்கத்துடன் காணப்படுவார்கள், அங்கே நாம் எல்லாரும் நிற்கவேண்டும் (2கொரிந்தியர் 5:9-11), ஆயினும் நரகத்திற்கு ஒருபோதும் போகமாட்டோம்.

தாவீதின் பாவத்தினால், அவனின் குழந்தை மரித்தது; அவரின் உதாரணத்தினால், அவரின் மகன் தனது சகோதரி தாமாரைக் கெடுத்தான். அம்மோன் மற்றொரு சகோதரனான அப்சலோமினால் கொல்லப்பட்டான். பின்னர் அப்சலோம் தாவீதின் இராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்ததினால் கொல்லப்பட்டான்.

பாவம் தாவீதுக்கு எதையும் செலுத்துவதில்லை, அது யாருக்கும் செலுத்துவதுமில்லை. தேவன் தனது பிள்ளைகளின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கின்றார். ஆயினும், அவர் அவர்களைக் கைவிடாமலும் அவர்களின் ஆத்துமாக்களை இழந்துபோக விடாமலும் இருப்பதிற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தலாம் - தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்காக கிறிஸ்து மரித்திருக்கிறார்.

உண்மையில், நண்பனே, தேவனின் வல்லமையினால் இயேசு கிறிஸ்துவின் கிருபைக்கூடாக உமது ஆத்துமா பாதுகாக்கப்பட்டுள்ளது எனும் சத்தியத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டீரானால், முன்னொருபோதும் இல்லாதவாறு அவருக்கு சேவை செய்வதிற்கு நீர் ஆயத்தமாக இருக்கின்றீர். பயத்திலும் பார்க்க அன்பு மிகவும் ஒரு மகத்தான மனப்பாண்மையாக இருக்கிறது. "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை" (1 யோவான் 3:1).

இது தேவனின் ஐசுவரியத்தின் ஆழமாகும்! அவரின் இரட்சிப்பு நித்தியமானது, அவர் இரட்சித்தவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட மாட்டார்கள், அவர்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டி ருக்கிறார்கள்!

ஆச்சரியமான இரட்சகர்!

பாவிகளுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை ஏற்றுக் கொண்டு விசுவாசிப்பவர்களுக்கு அற்புதமான இரட்சிப்பு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது!

அற்புதமான வாழ்க்கை, நித்திய ஜீவன், முடிவில்லாத வாழ்க்கை, நீர் கிறிஸ்துவை விசுவாசிக்கும் பொழுதிலேயே ஆரம்பிக்கின்றது!

இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் இழந்துபோக மாட்டார் என்பதிற்காக, நன்றி தேவனே!