டாக்டர். கேட்டிஸ் ஹட்சன்
• ஒரு ஆவிக்குரிய அடையாளம் • பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் • ஒரு விசேஷமான ஜெபிக்கும் பாஷை • ஆவியின் நிறைவாக்குதல் • பரிசுத்தம்
அந்த பாஷைக் குழப்பம் அதன் கருத்து அதன் பின் உள்ள கொள்கை அதற்கான முறை அதைக் குறித்த தவறான புரிந்து கொள்ளல்
"மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே” - 1 கொரிந்தியர் 14:6-9 இந்த அந்நியபாஷையைக் குறித்த படிப்பு பிரயோஜனமானது. ஏனெனில் இது வேதாகமத்தில் உள்ளது. இரண்டு பிரதான காரணங்களுக்காக இது எவ்வாறு இந்த முக்கியமான பாடத்துடன் தொடர்புகொள்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாவது, இந்த அந்நியபாஷை அல்லது ஆவியின் வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குழுவினர் வேகமான வளர்ச்சியை அனுபவிக்கின்றனர். ஒரு ஆழமான அனுபவத்தைத் தேடுவதற்காக நல்ல – கருத்துடைய உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த குழுவிற்குள் வழிநடத்தப்பட்டுள்ளனர். ஒரு பிழையான புரிந்துகொள்ளுதலுடன், ஆயிரக்கணக்கான விசுவாசிகள் ஆத்துமாதாயம் செய்வதற்கான பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும், நிறைவாக்குதலையும் தேடுவதற்குப் பதிலாக அந்நிய பாஷையில் பேசும் அனுபவத்தைத் தேடுகின்றனர். இன்னொரு கரத்தில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு இது மதவெறியாக காணப்படுவதன் மூலம் மிகவும் பின்தள்ளப்பட்டு பரிசுத்தாவியானவரின் நிறைவாக்குதல் குறித்த படிப்பில் இருந்து முற்றிலுமாகத் தம்மை விலக்கிக்கொள்கின்றனர். இவர்கள் மரத்தில் ஏறும்படிக்கு ஒருபோதும் தொந்தரவு செய்யப்படாதபடிக்கு ஒரு மரக்கிளையில் இருந்து போய்விடுவோமோ என மிகவும் பயப்படுகின்றனர். ஆசீர்வாதமான தேவனின் பரிசுத்த ஆவியானவரினால் எல்லா இடத்திலுமுள்ள கிறிஸ்தவர்கள் நிரப்பப்பட்டு இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். பரிசுத்தாவியானவரின் வல்லமை இல்லாமல் உயிர்மீட்சியோ, பெரிதான ஆத்துமாதாயம் செய்யும் சபைகளோ இருக்க முடியாது. "பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலுமல்ல என்னுடைய ஆவியினாலே ஆகும்” என சகரியா 4:6 கூறுகிறது. இப்போது அந்நியபாஷையில் பேசுவது குறித்து படிப்பதற்கான இரண்டாவது பிரதானமான காரணத்தைப் பார்ப்போம். உண்மையின் விடயம் அறியப்பட வேண்டுமென்று நேர்மையான விசுவாசிகளின் மத்தியில் அதிகளவில் வித்தியாசமான அபிப்பிராயங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு நேர்மையான கிறிஸ்தவனும் இந்த அந்நியபாஷையின் படிப்பை தவறான எண்ணம் இல்லாமல், திறந்த மனதுடன் அணுக வேண்டும். பரிசுத்தாவியானவரினால் நிரப்பப்பட்டிருத்தல் எனும் முக்கியமான விடயத்தில் அடிப்படைக் கொள்கையில், தேவனை நேசித்து வேதாகமத்தை விசுவாசிப்பவர்கள் ஒருவரில் ஒருவர் முரண்பட்டு, கொடூரமாக சிந்திக்கும் போது நிச்சயமாகவே தேவன் துக்கப்படுவார். இந்தப் படிப்பில், அனுபவங்களைக் குறித்து நான் பேசமாட்டேன். வேதாகமம் என்ன கூறுகிறது? என்று மட்டும் பார்ப்போம். ஒருவரின் அனுபவம் வேதாகமத்துடன் ஒத்துப் போகவில்லையானால், அந்த அனுபவம் தவறானது. வேதாகமம் தவறானதல்ல. அனுபவம் உபதேசமல்ல; வேதாகமம் உபதேசமாக இருக்கிறது. ஒருவரின் அனுபவத்தின் மூலமாக உபதேசம் அமைக்கப்படாமல், வேதாகமம் கூறுவதன் மூலமாக உபதேசம் அமைக்கப்பட வேண்டும். பல வருடங்களுக்கு முன்பதாக ஒரு பிரபல்யமான வாராந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு துப்பறிபவனை முக்கியப்படுத்தி விளம்பரம் கொடுத்தது. நான் சரியாக ஞாபகப்படுத்துவதாக இருந்தால் அவரின் பெயர் சேர்ஜன்ட் பிரைடே. ஒவ்வொரு கதையிலும் ஒரு சூழ்நிலை உருவாகும்போதும் தான் விசாரிக்கும் சாட்சியிடம், "திருவாளரே! உண்மை மாத்திரம், உண்மையை மாத்திரம் கூறும்” என சேர்ஜன்ட் பிரைடே கூறினார். தேவனின் உதவியுடன் நானும் அதைமட்டுமே செய்வேன். அதன் கருத்து, அதன்பின் உள்ள கொள்கை, அதற்கான முறை, அதைக் குறித்த தவறான புரிந்து கொள்ளல் என்பன குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
அதன் கருத்து
அப்போஸ்தலர் 2:4 இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள "பாஷைகள்” (TONGUES) என்பதன் கிரேக்க சொல், "க்ளோசா” (GLOSSA) என்பதாகும். இச் சொல் புதிய ஏற்பாட்டில் 50 தடவைகள் காணப்படுகிறது. இதில் 16 தடவைகள் மானிட சரீர வாயிலுள்ள நாவைக் குறிக்கிறது; ஒரு தடைவ அப்போஸ்தலர் 2:3 இல், "அக்கினிமயமான நாவுகள்” என்பதற்கு பயன்பட்டுள்ளது; 33 தடவைகள், "பாஷை” யைக் கருதுகிறது. ஆனால் ஒரு தடவையாகிலும் இந்தப் "பாஷை” என்பது, தேவன் மாத்திரம் விளங்கிக்கொள்ளக் கூடிய பரலோக பாஷையாக வேதாகமத்தில் கருதப்படவில்லை. இது ஒருபோதும், ஏதோ மனித புத்திக்கு எட்டாததாகவோ அல்லது மானிடவர்க்கத்திற்கு தெரியாததாகவோ கருதப்படவில்லை. அப்போஸ்தலர் 2 இல் இது, ஒரு அர்த்தமில்லாமல் பிதற்றியதாக அல்லாமல் பெந்தேகொஸ்தே நாளில் பிரசன்னமாகி இருந்த மக்களால் பேசவும் அறிந்து கொள்ளவும் கூடியதாக இருந்த சாதாரண, மானிட மொழியாகும்; அத்துடன் அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட பாஷைகளின் தேசிய இனமும் கொடுக்கப்பட்டுள்ளது: "எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்” – அப்போஸ்தலர் 2:7-11. அப்போஸ்தலர் 2 இலுள்ள "பாஷை” என்பதைக் கவனியுங்கள். "அவர்கள் எல்லாரும் பரிசுத்தாவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ் வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்” என 4ம் வசனம் கூறுகிறது. இது அவர்கள் விளங்கிக்கொள்ள முடியாத பாஷையைப் பேசினார்கள் என்று கூறவில்லை; அவர்கள் சாதாரணமாக வெவ் வேறு மொழிகளில் பேசினார்கள். "எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என 7ம், 8ம் வசனங்கள் கூறுகிறது. மீண்டும், அவர்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டிருந்தபடியினால் அவர்கள் பேசிய பரலோக பாஷையை எல்லா மனிதர்களும் விளங்கிக் கொண்டனர் என வேதாகமம் கூறவில்லை. "நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என இது கேட்பதுடன், 9ம் வசனம் தொடக்கம் 11ம் வசனம் வரை அங்கே பேசப்பட்ட பாஷைகளின் தேசிய இனமும் பட்டியலிடப்பட்டுள்ளது. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் 3 இடங்களில் மட்டுமே மக்கள் அந்நியபாஷைகளில் பேசியது குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுமிடத்து, பெந்தேகொஸ்தேயில் - அப்போஸ்தலர் 2:1-11; செசரியாவில் - அப்போஸ்தலர் 10:44-46; மற்றும் எபேசுவில் - அப்போஸ்தலர் 19:1-6. அப்போஸ்தலர் 10:46 இல் கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் கேள்விப்பட்ட போது, "பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. அப்பொழுது பேதுரு, "நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் பப்டிஸ ம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” என்று கேட்டார். இவர்கள் புதிதாக மனந்திரும்பியவர்கள் , பேதுரு, பப்டிஸம் பெற வேண்டும் என யோசனை கூறினார். கொர்நேலியுவினாலும், அவன் வீட்டாரினாலும் பேசப்பட்ட பாஷை ஆச்சரியமான பாஷையல்ல. அவர்கள் பல பாஷைகளில் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள் எனக் கூறுகிறது. கொர்நேலியுவும் அவன் வீட்டாரும் ரோமில் இருந்த இத்தாலிய அமைப்பின் அங்கத்தவர்களாக இருந்தனர் , அவர்களின் இயற்கையான மொழி இலத்தீனாக இருந்தது. ரோம உலகின் பல தேச மக்களிலும் இருந்து அரசாங்க அலுவலர்களும், சேவகர்களும், அடிமைகளும், இராணுவத்தினரும் நூற்றுக்கதிபதியின் வீட்டில் வாழ்வது சாத்தியமானது. இவர்கள் தமது பரலோகப் பரவசத்தினால் ஒவ்வொருவரும் தமது தாய் மொழியில் தேவனை புகழ்ந்திருக்க மாட்டார்களா? அதிக மகிழ்ச்சியான அல்லது ஆபத்தான சந்தர்ப்பங்களில் அந்நியநாட்டவர் ஒருவர், தான் அண்மையில் கற்றுக்கொண்ட மொழியைப் பார்க்கிலும் தனது தேசிய மொழியிலேயே கத்துவார் என்பது மனோதத்துவ ரீதியான உண்மையாகும். அப்படியாக இருப்பினும்கூட , அப்போஸ்தலர் 10:46இல் குறிப்பிடப்பட்ட பாஷைகள் என்பது, அறியப்பட்ட பாஷைகளாகும் , ஒரு பரவசப் பிதற்றல் அல்ல. மக்கள் அந்நிய பாஷைகளில் பேசியதன் மூன்றாவது சரித்திரப் பதிவு அப்போஸ்தலர் 19:1-6 இல் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இந்த 12 மனிதர்களையும் எபேசுவில் கண்டபோது, "நீங்கள் விசுவாசிகளானபோ து , பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள்; "பரிசுத்த ஆவி யானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். இப்போது யோவான் ஸ்நானகன் பரிசுத்த ஆவியைக் குறித்துப் பிரசங்கித்து இருக்கக்கூடியதாக (மத்தேயு 3:11), அவருக்குப் பின்சென்றவர்கள் பரிசுத்தாவியைக் குறித்த அறிவில்லாமல் இருப்பது எப்படி? யோவான் ஸ்நானகனின் வெளிப்படையான உண்மைச் செய்தி சீஷரிடமிருந்து இன்னொருவருக்குக் கடந்து செல்லும்போது, படிப்படியாக இழக்கப்பட்டுள்ளது; அதன்பின்னர் தவறாக வழிநடத்தப்பட்ட இந்த மனிதர்கள் சுவிசேஷத்தைத் தெளிவாகக் கேள்விப்பட்ட போது, அவர்கள் பப்டிஸம் பெற்றனர் (வசனம் 5). "அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவ யானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்கதரிசனஞ் சொன்னார்கள்” என 6ம் வசனம் கூறுகிறது. இங்கே மீண்டும் வேதாகமம் அவர்கள் பரலோக பாஷைகளையோ அல்லது பரவசச் சொற்களையோ பேசினார்கள் எனக் கூறாமல், அவர்கள் பாஷைகளை அல்லது மொழிகளைப் பேசினார்கள் எனக் கூறுகிறது. ரோம உலகின் வித்தியாசமான பகுதிகளில் இருந்து வந்த மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான பரந்த பட்டணமே எபேசு பட்டணமாகும். என்ன பாஷை பேசப்பட்டதென வேதாகமம் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட பாஷை பயன்படுத்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுகிறது. "….. அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள்” (பன்மை). அத்துடன், "அந்த மனுஷர் எல்லாரும் ஏறக்குறைய பன்னிரண்டு பேராயிருந்தார்கள்” என 7ம் வசனம் கூறுகிறது. ஒரு டசின் வித்தியாசமான மொழிகள் பேசப்படுவதற்கு சாத்தியமுண்டு, இவர்கள் புதிய கிறிஸ்தவர்களாக, சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசினம் சொன்னார்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்திலுள்ள இந்த 3 எடுத்துக்காட்டுகளையும் தவிர, அப்போஸ்தலனாகிய பவுல் ஆவியின் வரங்களைக் குறித்து (1கொரிந்தியர் 12:1-14) பேசும் சந்தர்ப்பத்திலும், 1கொரிந்தியர் 14ம் அதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1கொரிந்தியர் 14ம் அதிகாரத்தைக் கற்றுக்கொள்ளும் போது, பாஷை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவிக்குரிய அல்லது பரலோக பாஷையை அல்ல என்பது வெளியாகும். பாஷைகள் எனக் குறிப்பிடப்பட்டது, சாதாரண மானிடபாஷைகள் ஆகும். இது அர்த்தமில்லாத பிதற்றலோ, மானிட செவிகளுக்குப் பழக்கமில்லாத உளறலின் சத்தமோ அல்ல. இவ் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்நிய பாஷைகள் என்பதற்கு ஆங்கில வேதாகமத்தில் "UNKNOWN, TONGUE” (அறியப்படாத மொழி) என்று போடப்பட்டுள்ளது; இதில் " UNKNOWN ” (அறியப்படாத) என்பது, சரிவான எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அதாவது, இது ஒரு வழங்கப்பட்ட சொல்லாகும். விளங்கிக் கொள்ளும் காரணத்திற்காக வேதாகம மொழிபெயர்ப்பாளர்களினால், இச்சொல் போடப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்ட பாஷைகள் என்பது சமூகமாய் இருந்தவர்களால் அறியப்படாத சாதாரண வெளிநாட்டு மொழிகளாகும். இதனை 23ம், 24ம் வசனங்கள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன. "ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்”. இப்போது, இந்த நிகழ்வினை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். ஒரு சபை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மக்கள் எண்ணிக்கையான வெளிநாட்டு மொழிகளில் பேசுகிறார்கள். வேதாகமம் கூறுவது போன்று சில கல்லாத அல்லது படிப்பறிவில்லாதவர்கள், ஆராதனைக்குள் வருவதற்கு நேரிட்டது. ஒரு எண்ணிக்கையான மக்கள், எல்லாரும் வித்தியாசம் வித்தியாசமான மொழிகளில் பேசுவதை அவர்கள் கேட்கிறர்கள்; இது முற்றிலும் குழப்பமானது. ஆகவே அவன் எல்லாருக்கும் பைத்தியம் எனும் முடிவுக்கு வருகிறான். ஆனால் சபை அங்கத்தவர்கள், கல்லாதவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத வெளிநாட்டு மொழிகளில் பேசுவதற்குப் பதிலாக, விளங்கிக்கொள்ள இலகுவான சொற்களை பேசுவார்களானால், அவிசுவாசியும் கல்லாதவனும், எல்லாராலும் உணர்த்துவிக்கப்படுவான். இந்த 23ம், 24ம் வசனங்களில், "கல்லாதவன்” எனும் சொல் பயன்படுத்தப்படுவதால், இங்கே குறிப்பிடப்பட்ட பாஷைகள் என்பது, இயற்கைக்கு அப்பாற்பட்ட பாஷைகள் அல்ல என்பதைக் காட்டுகிறது. ஒழுங்காகப் படிப்பதன் மூலம், இந்த பாஷைகளைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவர் சரியாகப் படிப்பாரானால், எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் பழகிக் கொள்ளலாம். 1கொரிந்தியர் 14இல் பயன்பட்டுள்ள பாஷைகள் என்பது, இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வரமாக இருக்குமானால், கற்றுக்கொண்டவர்களுக்குப் போலவே கல்லாதவர்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கும். அந்நிய பாஷைகளில் பேசுவது என்பதன் கருத்து, மனிதர்களுக்குத் தெரியாததும் தேவனுக்கு மாத்திரம் தெரிந்ததுமான இரகசியபாஷையில் பேசுவது எனப்படுமானால், ஒரு மனிதனுக்கு எவ்வளவுதான் கல்வியறிவும் பயிற்சியும் இருந்தாலும், அ வ னால் பரலோக பாஷை யை விளங்கிக்கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களால் அறிந்து பேசப்படும் வெளிநாட்டு மொழிகள் கற்றுக்கொள்ளப்படக் கூடியது. கல்லாத மனிதரால் விளங்கிக்கொள்ள முடியாத, "பாஷை” என்பது காண்பிப்பது என்னவென்றால், இவை அறிந்துகொள்ளக் கூடிய, சாதாரண, மானிட மொழிகள் என்பதாகும். வேதாகமத்திலுள்ள பாஷைகள் என்பது, சாதாரணமாக மொழிகளைக் கருதுகிறது. அத்துடன் 1கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் வெளிநாட்டு மொழிகளையும், சபை ஆராதனைக்கு சமூகமளிப்பவருக்குத் தெரியாத பாஷையைக் கருதுகிறது என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
அதன்பின் உள்ள கொள்கை
வேதாகமத்தில் மூன்று இடங்களில் மாத்திரம் மக்கள் அந்நிய பாஷைகளில் பேசியுள்ளார்கள் என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்; அப்போஸ்தலர் 2:1-11; 10:44-46; 19:1-6. அந்நியபாஷைகள் குறித்த மிகவும் முக்கியமான வேதப்பகுதி அப்போஸ்தலர் 2:1-11ல் காணப்படுகிறது. முதலாவதாக, இது ஏன் முக்கியமானதென்றால், இதுதான் புதிய ஏற்பாட்டில் முதல் தடவையாக அந்நிய பாஷையில் பேசப்பட்டது. இரண்டாவதாக, இது ஏன் முக்கியமானதென்றால், மற்றய இடங்களில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிலும் அப்போஸ்தலர் 2 இல் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. மூன்றாவதாக, இது ஏன் முக்கியமான பகுதி என்றால், அந்நிய பாஷைகளில் பேசுவதென்பது ஒரு அற்புதமான வரம் என்பதை இந்த இடத்தில் தான் நாம் முற்றிலுமாக நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். அப்போஸ்தலர் 2:4ல்: "அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ் வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்”. இப்போது , இந்த பெந்தகொஸ்தே தினத்தில் வழங்கப்பட்ட தெய்வீக வரத்தின் பின்னால் உள்ள கொள்கை என்ன? அங்கே கிட்டத்தட்ட 3000 இரட்சிக்கப்படாத மக்கள் இருந்தனர். இதிலும் அதிகமாகவும் இருந்திருக்கலாம்; எனினும் 41ம் வசனத்தின்படி, 3000 பேர்கள் இரட்சிக்கப்பட்டனர்; "அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் பப்டிஸம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்”. பெந்தகொஸ்தே தினமன்று தேவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது; 3000 இரட்சிக்கப்படாத மக்கள் பிரசன்னமாகி இருந்தனர். அந்தக் கலிலேயர்கள் இரட்சிப்பின் திட்டத்தை அறிந்திருந்தனர். அவர்களால் சுவிஷேத்தினை த் தெளிவாகக் கூறலாம் , ஆனால் செய்தியினைக் கேட்க வேண்டியவர்களின் பாஷைகளில் இவர்களால் பேசமுடியாது. தேவன் பாஷைத் தடை எனும் பிரச்சினைக்கு முகங்கொடுத்தார். தேவன் இந்த 3000 பெறுமதியான ஆத்துமாக்களை இரட்சிக்க விரும்பினார் , ஆனால் சுவிசேஷத்தை எவ்வாறு பிரசங்கிப்பது என்பதை தெரிந்து கொண்ட இந்த மனிதர்களால் , இரட்சிக்கப்படாதவர்களின் பாஷைகளில் பேசமுடியவில்லை. ஆகவே , தேவன் அவர்கள் கற்றுக்கொண்டிராத பாஷைகளில் அவர்களைப் பேச அனுமதித்தார். அவர்கள் அப்போஸ்தலர் 2:4 இன்படி, "…. ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே…”. இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வெவ் வேறு பாஷைகளில் பேசினார்கள். தேவனின் அற்புதமான கிரியைகளை தமது சொந்த மொழியில் கேட்டுக்கொண்டிருந்த 16 வித்தியாசமான தேசிய இனங்கள் பேரிடப்பட்டுள்ளது. ஆவியினால் நிரப்பப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் பெந்தகொஸ்துவில், பார்த்தரும் என ஆரம்பித்து கிரேத்தரும், அரபியரும் என முடிவடையும் பதினாறு வித்தியாசமான பாஷைகளில் இயேசுவுக்காக சாட்சி கூறினார்கள். "எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்” – அப்போஸ்தலர் 2:7-11 இந்தப் பெறுமதி வாய்ந்த இரட்சிக்கப்படாத மக்கள் சுவிசேஷத்தைக் கேட்டபோது, இயேசு கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக விசுவாசித்தனர். "அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் பப்டிஸம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்” என வேதாகமம் அப்போஸ்தலர் 2:41ல் கூறுகிறது. பெந்தகொஸ்தே தினமன்று முக்கியமாக இருந்த காரியம், அந்நிய பாஷைகளில் பேசுவது அல்ல. 3000 பாவிகள் மனந்திரும்புவதே முக்கியமாக இருந்தது. அது ஆத்துமாதாயம் செய்ய வேண்டிய இடமாக இருந்ததேயல்லாமல், அந்நிய பாஷைகளில் பேச வேண்டியதாக இருக்கவில்லை. இந்த அந்நிய பாஷை இரண்டாம் பட்சமானதும், இடையில் ஏற்பட்டதுமாகும். இது ஒரு முடிவுக்குக் காரணமாக இருந்தது மட்டும் தான்; அந்த முடிவு ஆத்தும ஆதாயமே! இது குறிப்பாக அப்போஸ்தலர் 1:8ஐ ஒத்ததாகும். அங்கே இயேசு கூறியது,
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” இது யோவான் ஸ்நானகனைக் குறித்து லூக்கா 1:15,16 இல் கூறப்பட்டது,
"அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேக ரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.” அந்நிய பாஷைகளில் பேசுவதில் அவசியம் கவனிக்க வேண்டியதைக் கூறுவதானால், ஒருவர் உங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய்களை ஒரு கடதாசிப்பையில் கொண்டு வந்து தருகையில், நீங்கள் பணத்தைக் குப்பைக்குள் புதைத்துவிட்டு, கடதாசிப் பையின் நிமித்தம் மகிழ்வது போன்றது. பணத்தைக் கொண்டு வந்து தருவதற்கு கடதாசிப்பை கருவியாக இருந்தது. பணம் தான் முக்கியமான காரியம், பையல்ல. பெந்தகொஸ்தே தினமன்று செய்தி வழங்கப்படுவதற்கு அந்நிய பாஷைகள் கருவியாக இருந்தது. அதன் பெறுபேற்றினால் 3000 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர். அந்த 3000 பாவிகளின் இரட்சிப்புத்தான் முக்கியமான காரியமாக இருந்ததேயல்லாமல், செய்தியினை வழங்கிய பாஷையல்ல. ஆத்தும ஆதாயம் தான் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தின் அந்நிய பாஷைகளில் பேசியதன் பின்னால் உள்ள காரியம். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த 3 சந்தர்ப்பங்களைத் தவிர , மற்றுமொரு இடத்தில் புதிய ஏற்பாட்டில் அந்நிய பாஷைகளில் பேசுவது குறிப்பிடப்பட்டுள்ளது. இது அப்போஸ்தலனாகிய பவுலினால் 1கொரிந்தியர் 12:1-14 இல் ஆவியின் வரம் குறித்து பேசப்பட்டுள்ளது. மற்றைய வரங்களுடன், "பற்பல பாஷைகளைப் பேசுதல்” என்பதையும் 10ம் வசனம் பட்டியலிடுகின்றது. புதிய ஏற்பாட்டு சபைகளுள் கொரிந்து சபை மட்டும் தான் அந்நிய பாஷைகளில் பேசியது. இதனோடு தொடர்புபட்டதாக மக்கதோனியா, அகாயா, யூதேயா, சமாரியா, ஆசியா, ரோமாபுரி அல்லது வேறு ஏதாவது இடங்கள் குறிப்பிடப்படவில்லை. 1கொரிந்தியர் 14ம் அதிகா ரம், அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான ஒரு அறிவுரைப் பட்டியலை உள்ளடக்கியதாயிராமல், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான ஒரு நீண்ட நிபந்தனைப் பட்டியலை உள்ளடக்கி உள்ளது. கொரிந்துவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வரத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பவுல் ஊக்கம் கொடுக்காமல் அதன் பாவனையில் இருந்து விலகி இருக்கச் செய்கிறார். எவ்வாறு அந்நிய பாஷைகளில் பேசுவது என்ற ஒரு கோர்வைச் சட்டங்களை அவர் கொடுக்காமல், அதன் பாவனையை சபையில் தடுப்பதற்கு இறுக்கமான ஒழுங்குகளை அமைக்கிறார். 1கொரிந்தியர் 14இல் காணப்படும் இந்த ஒழுங்குகள் சிலவற்றைக் கொடுப்பதற்கு முன்பதாக , 1கொரிந்தியர் 14இல் உள்ள பாஷைகள், அப்போஸ்தலர் 2, அப்போஸ்தலர் 10, மற்றும் அப்போஸ்தலர் 19 ஆகியவற்றினின்று வித்தியாசமானது எனும் உண்மைக்கு நாம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்போஸ்தலர் 2இல், அங்கே சமூகம் கொடுத்திருந்தவர்களின் பாஷைகளில் சாதாரணமாக சீஷர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்டு, கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து, 3000 பேர்கள் இரட்சிக்கப்பட்டனர். பெந்தகொஸ்தே தினமன்று பயன்படுத்தப்பட்ட பாஷைகள் கேட்டவர்களுக்குத் தெரியாத மொழிகள் அல்ல. 1கொரிந்தியர் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாஷைகள், கூட்டத்தினருக்குத் தெரியாததாகும். சபையில் இருந்த மக்களால் அறியப்படாத வேறுநாட்டு மொழிகளானதால், அவைகள் அந்நிய பாஷைகள். இப்போது, அந்நிய பாஷைகளைப் பேசுவது குறித்து பவுல் அநேக ஒழுங்குகளை முன்வைப்பதைக் கவனியுங்கள். முதலாவது, சபையில் மக்கள் சமூகமளித்திருக்கும் போது என்ன கூறப்பட்டதென விளங்கிக்கொள்ளாதவிடத்து பாஷைகள் அல்லது வேறுமொழிகள் சபையில் பயன்படுத்தப்படக் கூடாது. "யாராவது அந்நிய பாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்” – 1 கொரிந்தியர் 14:27,28 இரண்டாவது, எந்த ஆராதனையிலும் இரண்டு அல்லது மூன்றிற்கு மேற்பட மற்றய மொழிகள் அல்லது பாஷைகளில் ஒருபோதும் பேசக்கூடாது. "யாராவது அந்நிய பாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்” – வசனம் 27. மூன்றாவது, ஒரு தடவையில், ஒருவர் மாத்திரம் பேசலாம். எந்த நேரத்திலாவது ஒரே தடவையில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் பேசுவார்களானால், அது ஒழுங்கை மீறுவது என்பது தெளிவானது. "…. அது இரண்டுபேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவு ம் " வேண்டும் – 1கொரிந்தியர் 14:27. ஒரு ஆராதனையில் எப்போதாகிலும் வேறு பாஷையில் பேசுவதானால் , அது, "ஒவ்வொருவராய்” பேசப்பட வேண்டும். ஒருபோதும் ஒரே நேரத்தில் இரண்டுபேர் பேசக்கூடாது. நான்காவது, அந்நிய பாஷைகள் பேசப்பட்ட சமய ஆராதனைகளில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தேவன் காரணமல்ல; "தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது” 1கொரிந்தியர் 14:33. ஐந்தாவது, எந்தவொரு காரணத்தைக் கொண்டும் அறியப்படாத மொழியில் ஒரு பெண் சபையில் பேச முடியாது. "சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே” 1கொரிந்தியர் 14:34,35. சபையில் பெண்கள் ஜெபிக்கும்போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும்போது எவ்வாறு அவர்கள் உடுத்திக்கொள்ள வேண்டும் என பவுல் 1கொரிந்தியர் 11:3-10 இல் கூறியிருக்கையில், இப்போது, அவர் 1கொரிந்தியர் 14:34,35 இல் பெண்கள், முற்றிலுமாக பேசக்கூடாது, அவர்கள் அமைதியாய் இருக்க வேண்டும் என்பது ஒரு வித்தியாசமான கூற்றாகவே இருக்கிறது. இப்போது அவர் எழுதியது என்னவென மறந்துவிட்டாரா? அவர் மந்த அறிவுள்ளவரா? அவர் தனது ஞாபகசக்தியை இழந்துவிட்டாரா? இல்லை, முற்றிலுமாக இல்லை! பெண்கள் சபையில் பேசுவதைத் தடை செய்யும் இந்த வசனங்கள், பாஷைகளில் பேசுவது குறித்தே இந்த அதிகாரங்களில் காணப்படுகிறது. சபையில் பாஷையின் பயன்பாடு குறித்து ஒழுங்கு முறைகளை கொடுத்துக் கொண்டிருக்கையிலே தான் பெண்கள் அமைதியாய் இருக்க வேண்டுமென அவர் கூறுகிறார். அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. டாக்டர் W.A கிறிஸ்பெல் அவர்கள் கூறுகையில்:
"புராதன கொரிந்து பட்டணத்திற்கு முன்னால், ஆழமான நீலக்கடல் இருந்தது. கொரிந்து பட்டணத்திற்குப் பின்னால் செங்குத்தாக இருந்த, உயர்ந்த பலிபீடம், கிறீஸில் உள்ள ஏத்தியர்கள் கட்டிய உயர்ந்த பலிபீடத்திலும் பார்க்க அதிபிரசித்தி வாய்ந்தது. வீனஸ் பெண் தெய்வத்தின் ஒரு மிகவும் அழகான ஆலயம் கொரிந்துவில் உள்ள அக்ரபோலிக்கு கவர்ச்சிகரமான கிரீடம் அளிப்பதாக இருந்தது. கிரேக்க பெண் தெய்வத்தின் அழகும் அன்பும், காமக்களியாட்டுக்களுடன் ஆராதிக்கப்பட்டது. இந்த ஆராதனைக் களியாட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட ஆலய விபசா ரர் கள் எனப்படுபவர்கள் இன்பவெள்ளம் நிரம்பிய வெறியோடு ஒழுக்கம் கெட்ட சமய ஆராதனையில் , அந்நியருக்குப் பின்சென்றனர். இச்சை நிரம்பிய பெண்களின் பார்வை யில் , ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைகளுக்குத் தங்களின் அர்ப்பணிப்பில் , அந்நிய பாஷைகளில் பேசுவது , அந்த நாட்களின் கிரயிகோ – ரோம கலாச்சாரத்தில் , பொதுவானதொன்றாக இருந்தது. இவ்வாறாக பேசுவதனால் பவுலுக்கு ஏற்பட்ட அருவருப்பு அவரை அறிவுரை கொடுக்கவும், தெளிவுபடுத்தவும் அர்ப்பணித்தது. தேவனின் மக்களில் ஒரு கூட்டத்தில் அந்நியர்கள் நடந்து வருவதை பவுல் சிந்தித்துப் பார்க்கிறார். பெண்கள் அறியப்படாத மொழிகளில் பேசுகிறதைக் கேட்கிறவர்களும் , பார்க்கிறவர்களும் உடனடியாக, 'நாம் என்னத்தைக் கேட்கிறோம், வீனஸ் தேவதையின் அன்பையும் அழகையும் ஆராதிக்கும் ஒரு சிறு கூட்டமா? நாம் உள்ளே சென்று, சிற்றின்ப மகிழ்ச்சியில் பூரிப்போம்' என்பார்கள். 'இல்லை', இல்லை! என அப்போஸ்தலன் ஒரு ஆயிரம் தடவைகள் கூறுகின்றார்! அந்நிய பாஷையில் பேசவேண்டி வரும்போது, உங்கள் பெண்கள் சபையிலே அமைதியாக இருக்கட்டும். ஸ்திரீகள் சபையிலே அந்நிய பாஷையில் பேசுவது அயோக்கியமாக இருக்குமே! (அயோக்கியம் என்ற சொல்லை அடையாளமிட்டுக் கொள்ளுங்கள்) இந்தத் தடை உத்தரவு அகற்றப்படாமல் இன்னமும் நிலைத்திருக்கிறது. பகிரங்க ஆராதனையில் இந்த தன்னிச்சையான, பார்க்க சகிக்க முடியாத அந்நிய பாஷை - பேசும் பெண்களின் தன்னடக்கமின்மை, கர்த்தரின் நாமத்தை அவமானப்படுத்துகிறது.”
ஆறாவது, கூட்டத்தினரால் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு பாஷையில் பேசும்படிக்கு பவுல் சபையை ஊக்குவிக்கிறார்: "உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்” – 1கொரிந்தியர் 14:18,19. இது மிக அதிகமான பெருத்த வித்தியாசம் 5 இற்கு 10,000! (5:10000) எந்தவொரு சாதாரண தெளிவான சிந்தனையுடைய நபரின் நிதானிப்பினால் அந்நிய பாஷைகளில் பேசுவதை சதாகாலத்திற்கும் நிறுத்த இது போதுமானது. இந்த நடைமுறைக்கு சபையில் இடமில்லை. அந்நிய பாஷையானது, பகிரங்க வழிபாட்டு ஆராதனைக்கு ஏன் பொருத்தமற்றது என்பதற்கான 5 காரணங்களை எனது வேதாகமத்தின் ஓரங்களில் அண்மையில் எழுதினேன். 1. இது பொதுவாக எல்லாராலும் விளங்கிக்கொள்ள முடியாததாகையால், இதனைப் பெறுமதியுடையதாக்க ஒரு மொழிபெயர்ப்பாளரின் சேவை தேவைப்படுகிறது.
2. இது அவிசுவாசிக்கு வெறுப்பூட்டுவதுடன், என்ன கூறப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ள முடியாத விசுவாசிகளுக்கு எதையுமே போதிக்க மாட்டாது.
3. தங்கள் சிந்தனைகளிலிருந்து, அறியப்பட்ட மொழிகளைப் பயன்படுத்தும் போது, இந்த அறிவில்லாத விதத்தில் பேசுகிறவர்களுக்கு, பைத்தியம் எனும் முடிவுக்கு வர அவிசுவாசிகளுக்கு இது இடம் அளிக்கிறது.
4. இந்த அந்நியபாஷைகளைப் பேசுகிறவர்கள், இதனைப் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வதனால், தேவன் குழப்பத்திற்குக் காரணமானவர் எனும் முடிவுக்கு இதனைக் கேட்பவர்களைக் கொண்டு வருகிறது.
5. தனது சாட்சிகள் எல்லாராலும் விளங்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனும் தேவனின் நோக்கத்திற்கு இது உண்மையிலே இடையூறு செய்கிறது. உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஏன் இவ்வாறான ஒரு சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்த வேண்டும்? அப்போஸ்தலர்களோ அல்லது தேவனோ இவ்வாறான காரணத்தை ஒருபோதுமே பயன்படுத்தவில்லை.
அதைக் குறித்த தவறான புரிந்துகொள்ளல்
அந்நிய பாஷைகளில் பேசுவது குறித்து அநேகமான தவறான புரிந்துகொள்ளல்கள் உள்ளன. இது பரிசுத்தாவியின் நிறைவாக்குதலின் அடையாளமாக இருக்கிறதென சிலர் கூறுகின்றனர். அந்நிய பாஷைகள் ஒரு ஜெப பாஷையாக இருக்கிறது, இதனால் தேவனுடன் பேசுகிறோம் என மற்றவர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்நிய பாஷைகளில் பேசுவது, ஆவிக்குரிய தன்மையின் ஒரு அடையாளமாக இருக்கிறது, ஒருவர் ஆவிக்குரிய ரீதியில் போதுமான அளவு வளர்ச்சியடையும் போது அந்நிய பாஷைகளில் பேசுவார்கள் என்கிறார்கள். அந்நிய பாஷைகளில் பேசுவது, பரிசுத்த ஆவியின் நிறைவாக்குதலின் அடையாளமாக இருக்கிறதா? வேதாகமம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம். அந்நிய பாஷைகளில் பேசுவது, பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டு இருப்பதற்கு அடையாளம் அல்லது அடையாளத்தின் ஒரு பகுதி என்று பெந்தகொஸ்தே தினத்திற்கு முன்பாகிலும் பின்பாகிலும் இவ்வாறானதொரு சிறிய கூற்று வேதாகமத்தில் இல்லை. இது தேவனின் வார்த்தையில் காணப்படாத ஒரு கூற்றின் மீது கட்டப்பட்ட உபதேசம். பெந்தகொஸ்தே இயக்கத்தினரின் ஒரு நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், போதகர் டொனால்கி என்பவர், பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தின் முதலாவது அடையாளம் தான் அந்நிய பாஷையில் பேசுதல் எனும் தனது புத்தகத்தில் கூறுகையில்:
"இந்த அனுபவம் பெறப்பட்ட இடமாகிய அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவாகிய நிகழ்வின், கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியடைந்த அடையாளத்தின் மீது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் முதலாவது அடையாளமே அந்நிய பாஷையில் பேசுதல் எனும் உபதேசம் தங்கியுள்ளது. இதைக் குறித்த எந்த உபதேசமும் கட்டாயமாக அதன் அடிப்படைக்கான வரையறைகளின் எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டியதன் அவசியம், புதிய ஏற்பாடானது தெளிவான, தீர்க்கமான கூற்றை எங்கேயுமே எது அந்த அடையாளமாக கட்டாயம் இருக்க வேண்டும் என உள்ளடக்கவில்லை” என்றார்.
அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியின் அடையாளமாக இருக்கிறது எனப் போதிப்பவர்கள், வேதாகமம் இதைக் குறித்து ஒன்றும் கூறாத போதிலும் இவ்வாறான யோசனையை சரித்திரத்தில் இருந்தும், புத்தகங்களில் இருந்தும், அல்லது மானிட அனுபவங்களில் இருந்துமே எடுக்கின்றனரே அல்லாமல் வேதாகமத்தில் இருந்து அல்ல. அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியின் நிறைவாக்குதலின் அடையாளம் அல்ல என்பதை விசுவாசிப்பதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. முதலாவது, நான் குறிப்பிட்டுள்ளது போல, அந்நிய பாஷைகளில் பேசுவதுதான் அடையாளம் என வேதாகமத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. இரண்டாவது, இன்னொரு அடையாளம் வாக்களிக்கப்பட்டுள்ளது: "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என அப்போஸ்தலர் 1:8 கூறுகிறது. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் போது சாட்சிகளாக இருப்பதற்கான வல்லமையைப் பெற்றுக் கொள்வார்கள் என இங்கே வேதாகமம் கூறுகிறது. இதுதான் உண்மையிலே அப்போஸ்தலர் 2ல் நடந்தது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். 3000 ஆத்துமாக்கள் இரட்சிக்கபப்பட்டனர்! இது யோவான் ஸ்நானகனைக் குறித்து, "அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேக ரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்” என லூக்கா 1:15,16 ல் கூறப்பட்டது. கவனிக்கவும் இதில் யோவான்ஸ்நானகன் அந்நிய பாஷையில் பேசுவது குறித்து ஒன்றும் கூறப்படவில்லை. "அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திருப்புவான்” எனக் கூறுகிறது. அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும் போது, ஒரு மகத்தான ஆத்தும ஆதாயக்காரராக இருப்பார். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதற்கு அடையாளம் ஒன்றிருக்குமானால், அது ஆத்தும ஆதாயம் தான், அந்நிய பாஷையில் பேசுவது அல்ல. மூன்றாவது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த அந்நிய பாஷைகளில் பேசாத உதாரணங்கள் வேதாகமத்தில் உண்டு: இயேசு – லூக்கா 3:21,22; அப்போஸ்தலர் 10:38; யோவான் ஸ்நானகன் - லூக்கா 1:15,16; சமாரியாவில் இரட்சிக்கப்பட்டவர்கள் - அப்போஸ்தலர் 8:14-17; அப்போஸ்தலன் பவுல் - அப்போஸ்தலர் 9:17. எமது நாட்களிலுள்ள மகத்தான ஆத்தும ஆதாயக்காரர்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள மனிதர்கள். ஆனால் ஒருபோதுமே அந்நிய பாஷைகளில் பேசவில்லை. கடந்த வருடங்களில் மகத்தான சுவிசேஷகர்களும், பிரசங்கிமார்களுமாக இருந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள். ஆனால் ஒருபோதும் அந்நிய பாஷைகளில் பேசவில்லை: D.L. மூடி, சார்ள்ஸ் G. பின்னி, டாக். R.A. ரொரி, ஜோன் வெஸ்லி, ஜோர்ஜ் வைற்பீல்ட், சார்ள்ஸ் H. ஸ்பேர்ஜன், பில்லி சண்டே, J.W. சாப்மன், ஜோர்ஜ், T. ஜிப்ஸி ஸ்மித் இன்னும் அநேகம் அநேகமானோர். பரிசுத்த ஆவியின் நிறைவிற்கான மற்றொரு அடையாளத்தை தேவன் கொடுத்திருக்கையில், தேவன் ஒன்றுமே கூறாத வர்க்கத்தைச் சேர்ந்த அந்நிய பாஷைகளில் பேசுவதுதான் அடையாளம் என விசுவாசிப்பது மடமைத்தனமும், தவறானதுமாகும். அந்நிய பாஷைகளில் பேசுவது குறித்து மற்றுமொரு தவறான புரிந்து கொள்ளல் உண்டு. அந்நிய பாஷைகளில் பேசுகிற சிலர், இது ஒரு ஜெப பாஷையாக இருக்கிறது என 1கொரிந்தியர் 14:2 இல் உள்ள, "அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்” எனும் வசனத்தை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றனர். ஒரு சிறிய படிப்பு இங்கே உங்கள் மனதைத் தெளிவாக்கும். இந்த வசனம் சாதாரணமாகக் கூறுவது, ஒருவனும் புரிந்து கொள்ளாத, ஒரு அந்நிய மொழியில் ஒருவன் சபையில் பேசுவானானால் அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேனிடத்தில் பேசுகிறான். இந்த வசனம் மேலும் விளங்கப்படுத்துவது, "… அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே…” என்கிறது. இங்கே குறிப்பிடப்பட்ட பாஷைகள் என்பது தேவனுக்கு மட்டும் தெரிந்த மொழி என வேதவாக்கு கூறவும், கருதவும் இலலை. ஒரு அறியப்படாத பாஷை என்பது உங்களுக்கோ அல்லது அது பேசப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நபருக்கோ தெரியாததாகும். சீனமொழி தெரியாத ஆங்கிலம் - பேசும் சபையோரிடம் நான் சீனாமொழியில் பேசுவேனானால், நான் மனிதரிடத்தில் பேசவில்லை. ஏனெனில் அவர்கள் அந்த மொழியை விளங்கிக்கொள்ள மாட்டார்கள். தேவனுக்கு எல்லா மொழிகளும் தெரிந்தும் விளங்கிக் கொள்பவருமாக இருப்பதானால், நான் அவரிட த் தில் பேசுகிறேன். இந்த இடத்தில் தேவன் கருதுவது என்னவெனில், சாதாரணமாக வெளிநாட்டு மொழிகளானது சமூகமாகி இருப்பவர்களுக்குத்தான் அறியப்படாத மொழியே அல்லாமல், தேவனுக்கு அறியப்படாத மொழியல்ல. அண்மையில் ஒரு உணவுச்சாலையில் எனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்த அநேக மக்களுக்கு அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய போஜனத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கையில், அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள விரும்பினேன். பேசப்பட்ட மொழி எனக்குத் தெரியாததாகையால், அவர்கள் என்னுடன் பேசவில்லை. எப்படியாயினு ம் அவர்கள் பேசிய மொழி, தேவனுக்குத் தெரியாததல்ல. அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கேட்டும் விளங்கியும் கொண்டார். ஒரு விசேஷித்த ஜெப பாஷை எனும் காரியம் இல்லை. தேவன் ஒரு பாஷையை விளங்கிக் கொள்வது போன்றே, மற்றைய பாஷைகளையும் விளங்கிக் கொள்வார். அவர் எல்லாம் அறிபவர். தேவனுக்குத் தெரியாத பாஷை ஒன்றுமில்லை. அ வர் எல்லா சம்பாஷ ணை யையும் கேட்பவர். மிகவும் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்ணை பல வருடங்களுக்கு முன்னதாக கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தினேன். நான் அவளை ஜெபிக்கும்படி கேட்டபோது, அவள் தன்னால் ஜெபிக்கக் கூடிய அளவிற்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதை வெளிக்காட்டினாள். அவள் தனது தேசிய மொழியிலேயே ஜெபிக்கலாம் என நான் யோசனையாக கூறியபோது, அவள் அவ்வாறே செய்தாள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாதது. அவள் என்ன கூறினாள் என்பது முற்றிலுமாக எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் தேவன் கேட்டார் என்பது எனக்குத் தெரியும். அவள் ஜெபித்து முடித்தபோது, எனக்குக் கரம் கொடுக்கும்படி தனது கரத்தை நீட்டுகையில் அவள் முகத்தில் ஒரு பிரகாசம் வந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு பப்டிஸம் கொடுக்கும் மகிழ்ச்சியான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவள் ஒரு விசுவாசமுள்ள சபை அங்கத்தவளாக்கப்பட்டாள். ஒரு விசேஷித்த ஜெப பாஷை எனப்படும் ஒரு காரியம் இல்லை. ஆவிக்குரிய தன்மையின் ஒரு அடையாளமாக அந்நிய பாஷையில் பேசுவது இருக்கிறது என விசுவாசிப்பவர்கள் உண்டு. இது மற்றுமொரு தவறான புரிந்து கொள்ளல். ஒரே ஒரு சபை மட்டுமே வேதாகமத்தில் அந்நிய பாஷைகளில் பேசியுள்ளது – அது கொரிந்து சபை. இது ஒரு ஆவிக்குரிய சபை அல்ல என்பது வேதவாக்குகளில் இருந்து தெளிவாகிறது. "நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” என பவுல் 1 கொரிந்தியர் 3:2,3 இல் கூறுகிறார். கொரிந்துவில் உள்ள சபையானது, ஆவிக்குரியது அல்ல, மாம்சத்திற்குரியது என வேதாகமம் குறிப்பாகக் கூறுகிறது. அவர்கள் பலமான ஆகாரத்தை உட்கொள்ள முடியாமல், வார்த்தையின் பாலினாலே போஷிக்கப்பட வேண்டியிருந்தது (1கொரிந்தியர் 3:2). அவர்களில் சிலர் இறுமாப்படைந்திருந்து, பவுலைத் துக்கப்படுத்தினார்கள் (1கொரி 4:18). அவர்களிடத்தில் வேசித்தனம் இருந்தது; ஒரு மனிதன் அவனின் வளர்ப்புத் தாயுடன் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான், சபையானது பகிரங்கமாக அவனுடன் பங்குகொண்டது (1கொரி 5:1). சபை அங்கத்தவர்கள் ஒருவரோடு ஒருவருக்குள்ள வழக்குக்காக அவிசுவாசிக்கு முன் சென்றனர் (1கொரி 6:1-8). சபை அங்கத்தவர்களில் சிலர் விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைப் புசித்தார்கள் (1கொரி 8). கர்த்தருடைய பந்தியில் கருத்து முரண்பாடுகளும் பிரிவினைகளும் காணப்பட்டன. சிலர் வெறியோடு ஐக்கியத்திற்கு வந்தனர் (1கொரி 11:17-21). சபை அங்கத்தவர்களில் சிலர் உயிர்த்தெழுதலை மறுதலித்தனர் (1கொரி 15:12). இந்த ஆவிக்குரியதல்லாத மாம்சத்திற்குரிய சபையிலுள்ள அங்கத்தவர்களே வேதாகமத்தில் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். ஆகவே, அந்நிய பாஷைகளில் பேசுவது, ஆவிக்குரிய தன்மையின் ஒரு அடையாளமாக இருக்கமாட்டாது. இப்போது, நிறைவு செய்வதற்கான வார்த்தைகள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என நான் அறிவுரை கூறுகின்றேன். பரிசுத்த ஆவியின் நிறைவாக்குதல் இல்லாமல், தேவனின் வேலையை செய்ய முயற்சிப்பது முற்றிலும் வீணானது. நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் போது, கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கு உங்கள் நேரத்தை செலவிடுங்கள். பரிசுத்தாவியானவர் உலகத்திற்கு வந்ததற்கான முழு நோக்கமும், "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவதற்காகும்” (யோவான் 16:8). நீங்கள் மனிதருடைய பாஷைகளையும், தூதர்களுடைய பாஷைகளையும் பேசியும் கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவையாகிலும் ஒருபோதுமே வழிநடத்தவில்லையானால் என்னவாகும்! நீங்கள் ஒரு டசின் பாஷைகளை மனித ஞானத்தாலோ அல்லது ஒரு அற்புதத்தினாலோ பேசக் கூடியதாக இருந்தும், நீங்கள் ஒருவருக்காவது இரட்சிப்பின் திட்டத்தையோ அல்லது ஒரு பாவி எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும் என்பதையோ ஒருபோதுமே கூறாவிட்டால் என்ன பிரயோஜனம்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்து ஆத்தும ஆதாயம் செய்யுங்கள்!