டாக்டர். கேட்டிஸ் ஹட்சன்
" அப்படியிருக்க , சகோதரரே , நீங்கள் உங்கள் ச ரீ ரங்களைப் ப ரி சுத்தமும் தேவனுக்குப் ப ிரி யமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று , தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் ; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை . நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்த ரி யாமல் , தேவனுடைய நன்மையும் பி ரி யமும் ப ரி பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக , உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறு ரூபமாகுங் கள் ” - ரோமர் 12:1,2.
இருபத்தொரு வருடங்களாக ஒரு போதகராக இருக்கையில் , மக்கள் அடிக்கடி என்னிடம் ஆலோசனைக்காக வருவார்கள் . அடிக்கடி கேட்கப்பட்ட ஒரு கேள்வி : " என்னுடைய வாழ்வுக்கான தேவனுடைய சித்தத்தை எப்படி நான் அறிந்து கொள்ளலாம் ?” என்பதாகும் .
ஒரு இளம் பிரசங்கியாராக கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்வதற்கு எப்படி கஷ் ட ப்பட்டேன் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஒரு பெரிய ஆத்துமாதாயம் செய்யும் சபையைக் கட்டுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது . இந்த விருப்பமானது கடவுளினால் கொடுக்கப்படுகின்ற விருப்பமா ? அல்லது எனது தனிப்பட்ட மகிமைக்கான சொந்த விருப்பமா ? எனக் கேட்டேன் . நான் என்ன செய்யவேண்டுமென கடவுள் விரும்புகிறார் எனத் தீர்மானிக்க வேண்டியி ருந்தது .
என்னைப் பொறுத்தவரையில் , கடவுளின் சித்தத்தைக் கண்டுபிடித்து , அதனைச் செய்யும் மனிதனே வெற்றியுள்ள மனிதனாவான் .
டாக்டர் போப் ஜோன்ஸ் சீனியர் அவர்கள் , ஒரு ஹைப்பர் கல்வினிஸ்ருக்குப் பதிலளிக்கையில் : தேவனின் சித்தத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறினார் . " நான் நரகத்திற்குப் போவது தேவனின் சித்தமாய் இருக்குமேயானால் நான் பரலோகத்திற்குப் போகத் தேவையில்லை . கடவுளின் சித்தமில்லாமல் நான் பரலோகத்தில் இருப்பதைவிட , கடவுளின் சித்தத்தின்படி நான் நரகத்தில் இருப்பது மேலானது . கடவுளுடைய சித்தத்தின்படி நான் நரகத்தில் இருப்பேனேயானால் , நரகமும் பரலோகமாக இருக்கும் ”.
கடவுளின் சித்தத்தில் இருப்பது மிகவும் முக்கியமாக இருக்குமேயானால் , நாம் எப்படி அவரின் சித்தத்தை அறிந்து கொள்ள முடியும் ? ரோமர் 12:2 கூறுவது : "… தேவனுடைய நன்மையும் , பி ரி யமும் , ப ரி பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியுங்கள் . ”
கடவுளின் சித்தத்தைப் பகுத்தறிவது சாத்தியமானது . நிச்சயமாக நீர் கடவுளுக்கு பகுத்தறிவிக்கத் தேவையில்லை . அவர் ஏற்கனவே அதை அறிபவர் . நீர் வேறுயாருக்காவது பகுத்தறிவிப்பீரானால் , அதை உமக்கே பகுத்தறிவித்துக் கொள்ளும் . உமது வாழ்விற்கான கடவுளின் சித்தத்தை ஆராய்ந்து , கண்டுபிடிப்பது எப்படி என பல யோசனைகளை உருவாக்க எனக்கு அனுமதியுங்கள் .
1 . உமது வாழ்விற்கான மிக முக்கியமான நோக்கமும் ,
சித்தமும் தேவனுக்கு உண்டென தெளிவாக விளங்கிக் கொள்ளும்
ஒவ்வொரு விசுவாசிக்குமான ஒரு மிக முக்கியமான திட்டமும் , நோக்கமும் அவரிடம் உண்டென்பதை விளங்கிக் கொள்வதே தேவனின் சித்தத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்க முயற்சிப்பதன் முதற்காரியமாய் உள்ளது . ஒரு முக்கியமான நோக்கமின்றி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் , காற்றில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பஞ்சுத் துண்டு போன்றதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை . ஆனால் , ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு பாதையும் , இலட்சியமும் உண்டு .
நாம் இதைத் தெளிவாக விளங்கிக் கொண்டதும் , கிறிஸ்தவ வாழ்வானது மிகவும் ஊக்கமுடையதாகுவதுடன் , புது அர்த்தத்தையும் எடுக்கின்றது . இப்படியாக ஒரு சித்தம் வெளிப்படும் என ஒருவர் பரி பூ ரணமாக நம்பும் வரையில் தேவனின் சித்தத்தை முக்கியமானதொன்றாகக் கருதி , அதைத் தேடுவதில் இறங்கமாட்டார் . ஏதாவதொன்று இருப்பது உமக்குத் தெரியும் வரையில் , அதைத் தேடுவதற்கான ஆர்வம் இருக்க மாட்டாது .
நான் ஒரு பையனாக இருந்தபோது , அடிக்கடி மீன்பிடிக்க சென்றேன் . எப்படியாயினும் , நான் ஒரு நல்ல மீன்பிடிப்பவனாக இருக்கவில்லை . நான் இலகுவில் அதைரியப்பட்டதுடன் , கொஞ்சம் பொறுமை யும் இருந்தது . சில நிமிடங்களின் பின் , அந்தக் குளத்திலே மீன்கள் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன் . ஒரு பக்கத்தில் தூ ண்டிலை வைத்துவிட்டு , மரங்களுக்குள் விளையாடச் செல்ல எண்ணிக் கொண்டிருந்தேன் .
சிறிது நேரத்திற்குள் ஒருவரின் கூக்குரலைக் கேட்டேன் , " இதற்கு யாராவது வந்து எனக்கு உதவி செய்யுங்கள் ! நான் ஒரு பெரிய மீனைப் பிடித்து விட்டேன் ! ” என்றான் . உங்களால் அந்த உத்வேகத்தை உணர முடியும் . நான் குளத்தினுடைய கரைக்கு ஓடிச் சென்று 5 இறாத்தல் எடையுள்ள மீன் , ஒரு நண்பனிடம் சிக்கியுள்ளதைக் கண்டேன் . இந்த மீன் பிடித்தல் , ஒரு புது அர்த்தத்தை எடுத்தது . நான் இதைக் குறித்து உத்வேகம் அடைந்தேன் . நான் நேரத்தை வீணடிக்காது , தூ ண்டில்களை எடுத்துக்கொண்டு மீன்பிடித்தல்களுக்குத் தயாரானேன் . அந்தக் குளத்தில் மீன்கள் உண்டென எனக்கு இப்போது நிச்சயமாகத் தெரியும் .
எம் ஒவ்வொருவருக்கும் தேவன் காண்பிக்கிறதை தனிப்பட்ட ஆர்வத்துடன் கவனிக்கிறபோது , அது திகைப்புள்ளதாக இருக்கும் . " உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது ” என மத்தேயு 10:30 கூறுகிறது . " அவர்கள் படும் வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் ” என யாத்திராகமம் 3:7 கூறுகிறது . " என் கண்ணீர்கள் அவர் கணக்கில் உள்ளது ” என சங்கீதம் 56:8 கூறுகிறது . " என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர் ” என சங்கீதம் 139:2 கூறுவதுடன் , சங்கீதம் 139:2-6 வரை எமது எல்லா சிந்தனைகளையும் , வழிகளையும் அவர் அறிந்திருக்கிறார் என கூறுகின்றது .
எம் ஒவ்வொருவர் மேலும் இவ்வளவு தனிப்பட்ட அக்கறையை கடவுள் காண்பிப்பாரானால் , எமது வாழ்விற்கான மிக முக்கியமான திட்டமும் , நோக்கமும் அவருக்கு உண்டென்று நாம் விசுவாசிக்க வேண்டும் . "..... தேவனுடைய நன்மையும் , பி ரி யமும் ப ரி பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியுங்கள் ”.
2 . தேவனின் சித்தத்தைக் குறித்து சரியான மனோபாவம்
எமக்கு இருக்க வேண்டும் .
" அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ , அவன் இந்த உபதேசத்தை..... அறிந்துகொள்ளுவான் ” ( யோவான் 7:17). தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி ஒருவரும் ஒருபோதும் கடவுளுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் . கடவுளுடைய சித்தம் இன்னதென்று நாம் அறிந்து கொள்ளாத போதும் , அவருடைய சித்தத்தைச் செய்ய எம்மை அர்ப்பணிக்க வேண்டும் .
" கேட்டிஸ் , எனக்காக ஒன்று செய்வீர்களா ?” என்று என் மனைவி அடிக்கடி கேட்பார் .
" ஆமாம் , நான் செய்வேன் ” என நான் ஒருபோதும் பதிலளி்த்ததில்லை . நான் எப்போதும் , " அது என்ன ?” என்றே கேட்பேன் . அது என்னதென்பதை நான் முதலாவது அறிந்துகொள்ளும் வரை எதையும் செய்வதற்கு நான் என்னை அர்ப்பணிப்பதில்லை . ஆனால் இவ்வாறானதொரு வகையில் கடவுளின் சித்தத்தை நாம் அணுக முடியாது .
" கர்த்தாவே , உம்முடைய சித்தத்தை எனக்குக் காண்பியும் , அதனைச் செய்வதா , இல்லையா என்பதை அப்போது நான் தீர்மானிக்க முடியும் ” என்று சிலர் கூறுவதைக் குறித்து நான் பயப்படுகிறேன் . ஆனால் கடவுள் கூறுவது , " நீ செய்வேன் என்பதைத் தீர்மானித்துக்கொள் , அப்போது அது என்னதென்பதை நான் உனக்கு அறிவிப்பேன் ” என்கிறார் .
" தேவனுடைய சித்தத்தைச் செய்ய நான் என்னை ஒப்புவிக்கும்போது , நான் செய்ய விரும்பாததொன்றைச் செய்ய அவர் என்னை வழிநடத்துவாராக இருந்தால் என்னவாகும் ?” என்று ஒரு வாலிபன் என்னைக் கேட்டான் . ஒருவிசை நான் யோசித்து விட்டு பின்பு பதிலளித்தேன் , " நீர் உண்மையிலேயே கிறிஸ்துவை நம்பவில்லை . நீ என்ன சொல்லுகிறாய் என்றால் , உனது வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்று தேவனுக்குத் தெரிந்ததைப் பார்க்கிலும் எனக்கு அதிகம் தெரியும் என்கிறாய் " . நான் தொடர்ந்தும் , " வாலிபனே , நீர் இருக்க வேண்டும் என தேவன் விரும்பும் இடத்தைவிட சந்தோஷமான இடத்தை காணமாட்டீர் . நீர் செய்யவேண்டுமென தேவன் விரும்பும் காரியத்தைவிட நல்லதொரு காரியத்தை நீர் காணமாட்டீர் ” என்றேன் .
நாம் எமது பெயர்களை ஒரு வெற்றுத்தாளின் அடியில் கையெழுத்திட்டு விட்டு , " அன்பான கர்த்தாவே , இப்போது இதை நீர் நிரப்பும் . நான் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகின்ற எதையாகிலும் செய்வேன் " என்று கூற வேண்டும் .
1961 ம் ஆண்டு என்னிடம் ஒரு சிறிய சபை இருந்தது . எனது பிரசங்கத்தி னூ டாக சிறிய பெறுபேற்றையே காணக்கூடியதாக இருந்தது . என்னுடைய இருதயம் ஆவலாக இருந்தது ; எனக்கு அதிகமாகத் தேவைப்பட்டது . நான் வாழ வேண்டும் என்றிருந்ததை விட , கடவுளை அதிகமாகப் பிரியப்படுத்த வேண்டும் என்றிருந்தேன் . ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் எனது முகத்தை வைத்துக்கொண்டு ஜெபித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது . " அன்பான கர்த்தாவே , நீர் எங்கே என்னை வழிநடத்துவீர் என்பது எனக்குத் தெரியாது . ஆனால் , அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை . நான் என்னத்தைச் செய்ய வேண்டும் என நீர் விரும்புகின்றீரோ , அதையே செய்ய நானும் விரும்புகின்றேன் . நான் எங்கேயாவது போவேன் , எதையாவது செய்வேன் , எப்படியாவது இருப்பேன் . நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறதை செய்யாதபடிக்கு என் னைத் தடுக்கக் கூடிய ஒரே காரியம் , எதுவென்று எனக்குத் தெரியாதது மாத்திரமே ”. பின்னும் நான் சேர்த்துக் கொண்டது : " அன்பான கர்த்தாவே , இந்நிலையில் , அது என் தவறாக இருக்கமாட்டாது ; உமதாகவே இருக்கும் . ”
இதை நான் என்னுடைய இருதய பூ ர்வமாகவே கருதுகிறேன் . இதில் வெறுமனே கூறுவது ஒன்று , இருதய பூ ர்வமாகக் கருதுவது இன்னொன்று .
அவருக்கு வேண்டியது எதையாகிலும் கிறிஸ்துவுக்காக செய்யாதிருப்பீரேயானால் , அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள போதுமான அளவிற்கு உம்மை நீர் அர்ப்பணிக்கவில்லை . " அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ , அவன் இந்த உபதேசத்தை ..... அறிந்து கொள்வான் . ”
3 . கடவுளுக்கென ஒரு பூ ரணமான ஒப்புக்கொடுத்தல்
இருக்க வேண்டு ம்
" அப்படியிருக்க , சகோதரரே , நீங்கள் உங்கள் ச ரீ ரங்களைப் ப ரி சுத்தமும் தேவனுக்குப் பி ரி யமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று , தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் ; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை . நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்த ரி யாமல் , தேவனுடைய நன்மையும் பி ரி யமும் ப ரி பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக , உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறு ரூபமாகுங் கள் ” - ரோமர் 12:1 , 2.
"தேவனுடைய நன்மையும் , பி ரி யமும் ப ரி பூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய நீர் விரும்புவீரானால் , உங்கள் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள் . உங்களை தேவனுக்கு அர்ப்பணியுங்கள் . தேவனுக்கு உங்களை விட்டுக்கொடுங்கள் . தேவனின் கரத்திலே ஒரு கருவியாக உங்களை வையுங்கள் " என்று பவுல் கூறுகின்றார் .
தேவனின் சித்தத்தை அறிந்துகொள்வதற்கு நீர் உபயோகப்படக் கூடியதாக இருக்க வேண்டும் . நீர் தேவனால் உபயோகிக்கப்படக் கூடியதாக இருந்தால் மாத்திரமே , தேவனுக்கு பெறுமதியானவராக இருப்பீர் .
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது , இணங்கக் கூடியதாக இருத்தல் எனலாம் - எமது வாழ்வில் எல்லாப் பகுதியையும் திறந்திருத்தல் , எல்லா நிலையையும் தேவன் நடத்த அனுமதிக்க விரும்புதலாகும் .
உயிர்மீட்சிக் கூட்டங்களுக்காக நான் பிரயாணங்களை மேற்கொள்கையில் , விடுதிகளில் அதிக நேரத்தை செலவழித்துள்ளேன் . காலை நேரங்களில் நான் சாப்பாட்டிற்காக செல்கையில் , அநேக கதவுகளில் , " என்னைத் தொந்தரவு செய்யாதே ” என்று எழுதப்பட்டிருப்பதை அவதானித்தேன் . உள்ளே இருப்பவர் என்ன கூறுகின்றாரெனில் , " நீ என்ன வேண்டுமானாலும் வெளியே செய்யலாம் , ஆனால் உள்ளே வரவேண்டாம் ” என்கிறார் .
எத்தனை விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட பகுதிகளிலும் " தொந்தரவு செய்யாதே ” என எழுதியுள்ளனர் என நான் ஆச்சரியப்படுகிறேன் .
தேவன் எமது வாழ்வின் எல்லா அறைகளுக்கும் வந்து எமக்கு வழிகாட்ட நாம் விரும்ப வேண்டும் . காரியத்தைச் செய்பவர் , தனது க ரி யத்தை தேவனே நடத்த வேண்டும் என விரும்ப வேண்டும் அல்லது தேவ கொள்கையின்படியிலாவது நடக்க வேண்டும் .
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது இணங்கக் கூடியதாக இருத்தல் எனக் கருதுவது மட்டுமல்லாமல் ; ஏற்றுக்கொள்ளக் கூடியதாக , பிரியமானதாக இருத்தல் எனவும் பொருள்படும் .
ரோமர் 12:1 கூறுகிறது , "..... உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் , தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுங்கள் ” நாம் எந்தப் பாவத்திற்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது . " என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் , ஆண்டவர் எனக்குச் செவிகொடார் ” என சங்கீதம் 66:18 கூறுகிறது . இதன் கருத்து , எனது வாழ்க்கையில் பாவத்திற்கு விட்டுக்கொடுப்பேனாக இருந்தால் , நான் தேவனை வழிகாட்டும்படி கேட்க முடியாது . நாம் பாவத்திற்கு பூ ரண நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சில விசுவாசிகள் பாவத்தை அறிக்கை செய்யும் போது , தாங்களாகவேதான் தேவனிடம் கூறுகின்றனர் என நினைக்கிறார்கள் என நான் யோசிக்கின்றேன் . இல்லை , தேவன் ஏற்கனவே இதனை அறிபவர் ; ஆகவே நீர் அதனை நன்கு அறிக்கை செய்து விட்டுவிடலாம் . " தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் , அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் ” என நீதிமொழிகள் 28:13 கூறுகிறது . ஒவ்வொரு தெரிந்த பாவத்தையும் அறிக்கையிடுங்கள் ; உங்கள் சரீரத்தை பரிசுத்தமும் , தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுங்கள் .
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது இணங்கக் கூடியதாக இருத்தல் , பிரியமானதாக இருத்தல் என்பது மட்டுமல்லாமல் , ஒத்துப்போகும் குணமுடையதாயிருத்தல் எனவும் பொருள்படும் . " தேவனுடைய நன்மையும் , பிரியமும் பரி பூ ரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாகுங்கள் . ” நாம் ஏதோவொன்றைச் செய்ய வேண்டுமென தேவன் விரும்புவாரானா ல் நாம் அதனை ஒத்துக் கொள்ள விரும்ப வேண்டும் .
" ஜோர்ஜியா இராஜ்யத்திலுள்ள 7,900 த்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட பெரிய சபையை உங்களால் எப்படி இராஜினாமா செய்ய முடிந்தது ?” என நான் அடிக்கடி கேட்கப்பட்டேன் . ஏதோ தவறு இருந்திருக்க வேண்டுமென சிலர் கருதினர் . இல்லை - தேவன் எனக்கு வேறொன்றை வைத்திருக்கிறார் என்பதை நான் அறிந்திருந்தேன் ; ஆகவே அந்தத் தீர்மானத்தை மேற்கொள்வது எனக்கு கடினமாக இருக்கவில்லை . நான் கர்த்தரிடத்தில் அவர் விரும்பும் எதையும் நான் செய்வேன் , நான் எங்கே போக வேண்டுமென தேவன் விரும்புகின்றாரோ அங்கே போவேன் , நான் என்னவாக இருக்க வேண்டுமென தேவன் விரும்புகின்றாரோ அவ்வாறு இருப்பேன் என்பதை 1961 ம் ஆண்டு தீர்மானித்தேன் .
நான் எனது நண்பர்களை இழந்தேன் என்பது நிச்சயம் , இன்னமும் நான் அவர்களை மிகவும் நேசிக்கின்றேன் . ஆயினும் நான் தேவனின் சித்தத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . அவர் எனக்கு அநேக ஆச்சரியமான புதிய நண்பர்களை " கர்த்தரின் பட்டயம் ” எனும் ஊழியத்தில் தந்துள்ளார் .
நீங்கள் " தேவனுடைய நன்மையும் , பிரியமும் , பரி பூ ரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய ” வேண்டுமானால் , " உங்கள் சரீரங்களை தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடு்ங்கள் , இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை ”. ஒரு அறிவுள்ள தலைக்கான நிபந்தனை , ஒப்புவிக்கப்பட்ட இதயமாக இருக்கிறது .
4 . சந்தேகமாக இருக்கும்போது , அதனை விட்டுவிடும்
"..... விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே ” என ரோமர் 14:23 கூறுவதுடன் , ரோமர் 14:5 " அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக் கடவன் ” எனக் கூறுகிறது . தேவன் ஒரு குறிப்பிட்ட வழியிலே வழிநடத்துவதாகக் காணப்படுமாக இருந்தும் , சந்தேகம் இருக்குமாயின் , சந்தேகத்தின் பலனை தேவனிடம் விட்டுவிடுவது எப்பொழுதுமே பாதுகாப்பானது .
ஒரு ஞாயிற்றுக்கிழ மை காலையில் ஒரு தம்பதியினர் ஞாயிறு பாடசாலைக்காக தயாராகிக் கொண்டிருந்தனர் . கணவன் உரத்த சத்தமாக , " தேனே ! இந்த மேற்சட்டை அழுக்கானதா ?” எனக் கேட்டார் .
அதற்கு அவள் உரத்த சத்தமாக , " எனக்கு தெரியாது , நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?” என்றாள் .
" நல்லது , இது பரவாயில்லைப் போல் இருக்கிறது ” என்றார் அவர் . அதற்குப் பதிலாக அவரின் மனைவி , " அது சந்தேகமாக இருக்குமேயானால் , அது அழுக்கானது தான் ! ” என்றாள் .
நாம் செயற்படும் முன்பதாக ஒரு காரியத்தைக் குறித்து முழு நிச்சயம் இருப்பது ஞானமானது என நான் கண்டுள்ளேன் . நான் அடிமை , தேவன்தான் எஜமான் . எஜமானுக்கு என்ன வேண்டுமென ஊகிப்பது அடிமையின் காரியமல்ல . அடிமை கீழ்ப்படிய வேண்டியவர் . தெளிவான கட்டளையைக் கொடுப்பது எஜமானின் பங்காகும் .
தேவனின் சித்தத்தைக் கண்டுகொள்வது , நாம் வைக்கோற் போருக்குள் ஊசியைத் தேடுவது போல இருக்கக் கூடாது . நாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென தேவன் விரும்புவாரேயானால் , அதனை எமக்குத் தெளிவாகக் காண்பிக்க வும் அவரால் இயலும். சிலவேளைகளில் ஒரு காரியத்தைக் குறித்து எனக்கு சந்தேகமாக இருந்தும் , வேதாகமத்திலும் தெளிவாக இல்லாத பட்சத்தில் , " அன்பான கர்த்தாவே ! நான் உம்முடைய சித்தத்தையே செய்ய வேண்டும் . ஆனால் , அது எதுவென்று எனக்கு நிச்சயமில்லை . நீர் அதை தெளிவாக எனக்குக் காண்பிப்பீரேயானால் , நான் சந்தோஷத்துடன் அதனைச் செய்வேன் ” என ஜெபிப்பேன் . தேவன் எப்போதும் பதிலளிப்பார் ! சந்தேகமாக இருக்கும்போது அதனை விட்டுவிடும் .
5 . அந்தக் காரியத்தைக் குறித்து உமக் கு சமாதானம் இருக்கிறதா ?
" தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது ” ( கொலோசெயர் 3:15). ஒரு மொழிபெயர்ப்பு , " தேவ சமாதானம் மத்தியஸ்தம் வகிக்கக் கடவது ” என்றும் , இன்னொரு மொழிபெயர்ப்பு , " தேவ சமாதானம் உங்களுக்காகக் காரியங்களைத் தீர்மானிக்கக் கடவது ” என்றும் கூறுகிறது . உங்களுக்கு இதனைக் குறித்து சமாதானம் இருக்கிறதா ?
நான் எனது இரண்டாவது காரை வாங்கியபோது , அந்த அனுபவம் எனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்தது . நான் இந்த அழகான , மினுமினுப்பான ஹட்சன் ஜெட் டை , பாவித்த கார்கள் கூட்டத்திற்குள் கண்டேன் . நான் அதிக தடவைகள் அதனைப் பார்த்தேன் . அது உள்ளும் புறமும் துப்பரவாக இருந்தது . என்னால் செலுத்தக் கூடியதாக இருந்த தொகையிலும் ஒரு கொஞ்சம் கூடுதலாக இருந்தது , எனினும் அது எனக்குத் தேவைப்பட்டது . நான் அதிக தடவைகள் அதனை வாங்கச் சென்றேன் . எனினும் , நான் அதைக் குறித்து இலகுவாக உணரவில்லை . நான் இதனை எடுத்துக்கொள்வேன் என அந்த வர்த்தகரிடம் சொல்ல எண்ணியபோது , ஏதோ உள்ளுணர்வில் கடினமாக இருந்தது ; எனக்கு அதைக் குறித்து சமாதானம் இருக்கவில்லை . எனினும் நான் அதனை ஒருவாறு வாங்கிக் கொண்டேன் .
அந்தக் கார் ஒரு பிரயோஜனம் அற்றது என நம்புகிறீர்களா ? நான் ஒருவாரம் கூட வைத்திருக்கவில்லை . இயந்திரத்தில் ஒரு முக்கிய உறுப்பு (Transmission) பழுதடைந்து விட்டது . பல நூற் று க்கணக்கான டொலர்கள் செலவானது . நான் வருத்தப்பட்டேன் .
ஒரு சி ல வார ங்கள் கழித்து வேறேதோ எல்லாம் பழுதாகியது . நான் அதனை விற்கும் வரையில் அல்லது கொடுத்துத் தீர்க்கும் வரையி்லும் பிரச்சினைகளே அல்லாமல் வேறொன்றும் இருக்கவில்லை .
ஒரு குறிப்பிட்ட திசையில் தேவன் உம்மை வழிநடத்துகின்றார் என நீர் நினைப்பீரானால் , அவர் அதற்கான சமாதானத்தையும் உமக்குத் தருவார் . உமக்கு சமாதானம் இருக்கும் வரைக்கும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்காதபடிக்கு ஞானமாய் இரு க்க வேண்டும். தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளக்கடவது !
6 . ஏற்கனவே உம்மிடமுள்ள ஒளியிலே நடவும்
தேவன் திட்டமிட்டுள்ள எல்லாவற்றையும் நாம் காணக்கூடிய சந்தர்ப்பம் எதுவுமே விசுவாசியின் வாழ்வில் இல்லை . ஏனெனில் , கிறிஸ்தவ வாழ்வானது ஒரு விசுவாச வாழ்வாக இருக்கிறது . எப்படியாயினும் , அடுத்த அடி எடுப்பதற்கு போதுமான ஒளியை நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுக்கிறார் . " உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் , என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது " என சங்கீதம் 119:105 கூறுகிறது .
முன்பக்கத்தில் ஒரு விளக்குடன் ( Lamp ) கூடிய சுரங்க வேலை செய்பவரின் தொப்பி ஒன்றை நீர் எப்போதாவது கண்டுள்ளீரா ? ஒரு சுரங்கவேலை செய்பவர் சுரங்கத்தினுள் நிற்கிறார் என்றும் , அவருக்கு முன்பாக இருபத்தைந்து அடி தூ ரத்திற்கு அந்த ஒளி பிரகாசிக்கின்றது என்றும் எண்ணிக்கொள்ளுங்கள் . சுரங்கவழியின் முடிவை நான் காணும் வரை அடுத்த அடியை எடுக்கப் போவதில்லை என அவர் கூறுவாரானால் , அவர் ஒருபோதுமே அடுத்த அடியை எடுக்க மாட்டார் . அவர் தன்னிடத்தில் ஏற்கனவே உள்ள ஒளியில் நடக்கும் வரைக்கும் , அவர் மேலதிக ஒளியை ஒருபோதும் பெறமாட்டார் . ஆனால் அந்த ஒளியில் அவர் நடக்கையில் , அவர் தனக்கு முன்னதாக ஒரு ஒளி அசைவைதக் கண்டுகொள்வார் . எவ்வளவு அதிகமாக அவர் நடக்கிறாரோ , அவ்வளவு அதிகமாக ஒளி நகரும் .
அவ்வாறே ஒரு விசுவாசியும் அடுத்த டுத்த அடிகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் .
இப்பொழுதிருந்து 25 வருடங்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என சில வேளைகளில் கவலையோடிருக்கும் கிறிஸ்தவக் கல் லூ ரிகளில் உள்ள வாலிபர்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் . நா ம் ஒரு மிஷனரியாக , சுவிசேஷகராக அல்லது ஒரு போதகராக எதுவாக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார் என நிச்சயம் அற்றவர்களாக சிலர் இருந்தனர் .
நான் எப்பொழுதும் ஆலோசனை கொடுப்பது : " நீங்கள் உங்களை பூ ரணமான ஒப்புவித்தலுடன் தேவனுக்கு உபயோகப்படக் கூடியதாக உருவாக்கிக் கொள்ளுங்கள் . அவர் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார் . அதற்கிடையில் உங்களால் முடிந்தவரை திறமையான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளுங்கள் . பாடசாலையில் இருந்து , கவனமாகப் படித்து , அடுத்த வெள்ளிக்கிழமை பரீட்சையில் சித்தி பெறுங்கள் " என்பதாகும்.
உங்களிடத்திலுள்ள ஒளியிலே நடவுங்கள் . தேவன் மேலதிக ஒளியைத் தருவார் . பேதுருவானவர் சிறையில் இருந்தபோது , இரும்புக் கதவண்டை நடந்து வரும் வரையிலும் அது திறந்திருக்கவில்லை . ( அப்போஸ்தலர் 12:10 ஐ வாசிக்கவும் ).
இன்றைக்கான அவரது சித்தம் இன்னதென்று நீர் கண்டு செயற்படும் வரை , அடுத்த வாரத்திற்கான அவரின் சித்தத்தைக் காண்பிக்கும்படி தேவனிடம் எதிர்பார்க்க வேண்டாம் . நாம் தூ ரநோக்கை எடுக்க தேவன் எம்மை அனுமதிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு . சிலருக்கு அதிக தூ ரத்திற்குப் பார்க்க முடியுமாக இருக்கலாம் . ஆனாலும் , ஒவ்வொரு விசுவாசிக்கும் அடுத்த அடி எடுப்பதற்குப் போதுமான ஒளி உண்டு .
7. உமது விருப்பங்கள் தேவ சித்தத்தை உறுதிசெய்ய , உதவ இடமளியு ம்
" ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறா ர் ” என பிலிப்பியர் 2:13 கூறுகிறது .
எமது வாழ்க்கை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்குமானால் , அவர் சரியான விருப்பத்தை எமக்குக் கொடுப்பார் . " க ர் த்த ரி டத்தில் மனமகிழ்ச்சியாயிரு ; அவ ர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வ ர் ” என சங்கீதம் 37:4 கூறுகிறது .
முக்கியமான காரியங்களைக் குறித்து நான் என்ன செய்வதென்று தெரியாதிருந்த போதிலும் நான் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது . நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் , ஆனால் அது சரியா என்ற நிச்சயம் எனக்கு இருக்கவில்லை . என்னுடைய விருப்பமும் அவரின் சித்தமும் ஒன்றாக இருக்க வேண்டுமென நான் கர்த்தரிடம் கேட்டேன் ; ஆகவே ஒரு காரியத்தை நான் செய்ய விரும்புகையில் , அவரின் சித்தத்தை நான் அறிவதற்காக போராடத் தேவையில்லை . பிலிப்பியர் 2:13 ஐ நான் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளேன் . " ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறா ர் ” தேவன் விருப்பத்தை மாத்திரம் கொடுக்கிறவராயிராமல் , அந்த விருப்பத்தை நிறைவேற்ற வல்லமையும் கொடுக்கிறார் . நாம் என்ன செய்ய வேண்டுமென தேவன் விரும்புவதைச் செய்வதில் மகிழ்ச்சியும் , நிறைவேற்றுவதில் அர்த்தமும் உண்டு .
8. பரிசுத்த ஆவியானவர் எம்மை வழிநடத்த போதுமானவர்
" மேலும் எவ ர் கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறா ர் களோ , அவ ர் கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறா ர் கள் ” ( ரோமர் 8:14). அநேக காரியங்கள் வேதவாக்கின் மூலம் எமக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது . ஆகவே நாம் அவைகளைக் குறித்து தேவனின் சித்தத்தைக் கேட்கத் தேவையில்லை . தேவ சித்தமும் , தேவ வார்த்தையும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் , அவை ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கமாட்டாது .
ஆத்துமாதாயம் செய்வது தேவனின் சித்தம் என்று எமக்குத் தெரியும் . ஆகவே பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த வழிநடத்தலுக்குக் காத்திருக்கவோ , ஜெபி்த்துக் காத்திருக்கவோ வேண்டியதில்லை . " நீங்கள் உலகம் எங்கும் போய் , சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் ” என மாற்கு 16:15 ம் வசனம் கட்டளையிடுகின்றது . அத்துடன் யோவான் 15:16 இல் இயேசு கூறினார் : " நீங்கள் என்னைத் தெ ரி ந்துகொள்ளவில்லை , நான் உங்களைத் தெ ரி ந்துகொண்டேன் ; நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கு நான் உங்களை ஏற்படுத்தினேன் ”. ஒரு கிறிஸ்தவன் தனக்கு பரிசுத்தாவியானவரின் விசேஷித்த வழிநடத்தல் இல்லை எனக் கூறி ஆத்துமாதாயம் செய்வதை நிராகரிப்பது , வேதவாக்கின் ஒரு தெளிவான கட்டளைக்குக் கீழ்ப்படியாததை மூடி மறைப்பதாகும் .
பாவிகளின் இரட்சிப்பைக் குறித்த காரியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என வேதாகமம் 2 பேதுரு 3:9 இல் தெளிவாக்குகின்றது .
தசமபாகம் செலுத்துவதற்கு ஒரு விசேஷித்த வழிநடத்துதல் எமக்குத் தேவையில்லை . " தசமபாகம் எல்லாம் கர்த்தருக்குரியது ” என லேவியராகமம் 27:30 கூறுகிறது . எமது வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி கர்த்தருக்குரியது என்று எமக்குத் தெரியும் . நாம் இதனை எங்கே கொடுப்பது எனக் கேட்கலாம் . ஆனால் ஏற்கனவே வேதவசனத்தில் முடிவெடுத்திருக்கையில் நாம் இதைக் கொடுப்பதா என்பதைக் குறித்து ஜெபிக்கத் தேவையில்லை .
இப்போது வேதவசனத்தில் முடிவெடுக்கப்படாத சில காரியங்கள் உண்டு . உதாரணத்திற்கு , எந்த சபையில் இணைந்து கொள்ள வேண்டும் என வேதாகமம் கூறவில்லை . " குறிப்பிட்ட ஒரு பட்டணத்திலுள்ள முதல் பப்டிஸ்ற் சபையில் இணைந்து கொள்வாயாக ” என இது கூறவில்லை . ஆகவே அவரின் தெரிவின்படியான சபைக்கு எம்மை வழிநடத்தும்படி தேவனிடம் ஜெபித்து , கேட்க எமக்கு உரிமை உண்டு . நாம் சபைக்குப் போக வேண்டும் ; " சபை கூடி வருதலை சிலர் விட்டுவிடுவது போல நாமும் விட்டுவிடாம ல்..... ” ( எபி ரெ யர் 10:25). ஆனால் நாம் எந்த சபையில் கூடிவர வேண்டும் என இந்த வசனம் கூறவில்லை . ஆகவே இந்தக் காரியத்தைக் குறித்து ஜெபிக்க எமக் கு உரிமை உண்டு . வேதாகமம் தெளிவான அறிவுறுத்தலை கொடுக்குமானால் , பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை .
வாலிபனுக்கு எந்தப் பெண்ணை விவாகம் செய்யவேண்டும் என்றோ , பெண்ணுக்கு எந்த வாலிபனை விவாகம் செய்ய வேண்டுமென்றோ வேதாகமம் கூறவில்லை . அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலை கட்டாயம் கேட்க வேண்டும் . எப்படியாயினும் , " அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக ” (2 கொரிந்தியர் 6:14) என வேதாகமம் கூறுகிறது . இங்கே ஒரு வழிகாட்டல் உண்டு . கிறிஸ்தவர்கள் , கிறிஸ்தவரல்லாதவரைத் திருமணம் செய்யக்கூடாது . ஆனால் அநேகமான கிறிஸ்தவப் பெண்கள் இருக்கையில் , சரியானதைத் தெரிந்துகொள்ள பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலை வாலிபன் எதிர்பார்க்கலாம் . தேவனின் ஆவியானவர் ஒருபோதும் தேவனின் வார்த்தைக்கு முரணாக வழிநடத்த மாட்டார் .
" நான் ஒரு குறிப்பிட்ட நபரை விரும்புகின்றேன் . நான் அவரைத் திருமணம் செய்யப் போகின்றேன் ” என ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார் .
" அவர் ஒரு கிறிஸ்தவரா ?” எனக் கேட்டேன் .
" இல்லை ”
" அப்படியாயின் நீங்கள் அவரைத் திருமணம் செய்யக் கூடாது ”
ஆயினும் அவள் , " நான் இதைக் குறித்து ஜெபம் பண்ணினேன் , இது கடவுளின் சித்தம் என எனக்குத் தெரியும் ” என்றாள் .
" அன்பான பெண்ணே , தேவன் ஒருபோதும் தமது வார்த்தைக்கு விரோதமாக வழிநடத்த மாட்டார் ; அத்துடன் , ' அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக ' என 2 கொரிந்தியர் 6:14 கட்டளையிடுகிறது " என நான் கூறினேன் .
ஆனாலும் அவள் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் , அந்த நபரைத் திருமணம் செய்து கொண்டாள் . அவள் ஒரு பெரும் துன்பமுள்ள வாழ்க்கைக்கு உள்ளானாள் என்பதைக் கூற நான் துக்கப்படுகிறேன் .
இதனை நிறைவுசெய்கையில் , நான் மீண்டும் கூறுவது , அநேகமான காரியங்கள் தேவ வார்த்தையில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . ஆனால் குறிப்பாக கூறாதவிடத்தில் , அவரின் சித்தத்தை எமக்குக் காண்பிக்கும்படி , தேவனை எதிர்பார்க்க எமக்கு உரிமை உண்டு .
தேவனின் சித்தம் கட்டாயமாக மாற்றமடையும் என கருதக்கூடாது . தேவன் , நீர் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாரோ அதனை ஏற்கனவே நீர் செய்து கொண்டிருக்கலாம் .
தேவ சித்தத்தை அறிந்து செயற்படுவதே வெற்றியளிக்கும் !