டாக்டர் ஜோன் ஆர். ரைஸ்
பாவிகளுக்குத் தெளிவாக்கப்படுகிறது.
டாக்டர் ஜோன் ஆர் ரைஸ்
இரட்சிக்கப்படுவதற்கு
நான் என்ன செய்ய வேண்டும் ?
இரட்சிக்கப்படுவதற்கு நான் என் செய்ய வேண்டும் ? இங்கே இந்த சாதாரணமான குறுகிய கேள்விக்கு ஒவ்வொரு மனிதனும் பதிலைக் கற்றுக்கொள்ள வேண்டும், அல்லது இழந்துபோன நிலையில் கடவுளுக்குத் தூரமாக, சாபத்தின் கடும் வேதனையை அனுபவிக்க நேரிடும் !
தேவனுக்கு நன்றி! இந்தக் கேள்வி கேட்கப்பட்டு தேவனின் வார்த்தையில் பதிலளிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு ஆத்துமாவும் சாதாரணமாக இதனை விளங்கிக் கொள்ள முடியும். தேவனின் வார்த்தையிலுள்ள வேறு கேள்விகளும் ஆத்துமாவின் நன்மைக்கு உதவக் கூடியதாக இருப்பதுடன் , வேதாகமத்தில் அநேக இடங்களில் இரட்சிப்பின் திட்டம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் , ஒரே ஒரு இடத்தில்தான் இந்தக் கேள்வி சொல்லுக்கு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கேதான் இதற்கான பதிலையும் நாம் காணலாம்.
பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்து சிறையிலே இருந்தார்கள். ஒரு பலத்த பூமி அதிர்ச்சியினால் அவர்களின் கால்களில் இருந்த கட்டுகளையும் , சிறைச்சாலைக் கதவுகளையும் தேவன் உடைக்கும் வரைக்கும் நடுராத்திரியில் பாடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எளிய சிறைக் காவலாளி தனது பாவங்களின் நிமித்தமாக குற்றத்தை அறிந்து , பயத்துடன் இந்தப் பிரசங்கியார்களிடம் வந்து , இந்தக் கேள்வியைக் கேட்டார். இதனை அப்போஸ்தலர் 16:29-31 இல் வாசிக்கலாம்.
" அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச் சொல்லி , உள்ளே ஓடி , நடுநடுங்கி , பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து , அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே , இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி , அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்றார்கள் ”
" இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும் ?” " கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி , அப்பொழுது இரட்சிக்கப்படுவாய்! ”. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் , பெண்ணுக்கும் , ஒவ்வொரு மனிதனுக்கும் தேவனின் தெளிவான இரட்சிப்பின் திட்டம் உண்டு.
நான் என்ன செய்ய வேண்டும் ?
பாவியே , நீர் இரட்சிக்கப்பட விரும்புவீரானால் நீர் ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தக் காவலாளிக்கு நம்பிக்கை இருந்தது என்னவெனில் , இவன் தன்னைப் பாவி எனக் கண்டுகொண்டு , நடுங்கி , அவர்களிடம் வந்து , " நான் என்ன செய்ய வேண்டும் ?” எனக் கேட்டான்.
வாசகரே , நீரும்கூட ஒரு பாவிதான். இந்த உண்மையை தேவனின் வார்த்தை ஆரம்பத்திலிருந்து முடியும் வரைக்கும் எடுத்துக் காட்டுகிறது.
" நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து , அவனவன் தன் தன் வழியிலே போனோம் ; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் ” என ஏசாயா 53:6 கற்பிக்கிறது.
நாம் எல்லாரும் வழிதப்பிப் போனோம் ! பாவிகள் தங்களை நல்லவர்களென விசுவாசித்திருப்பதில் தேவன் திருப்திப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் , பெண்ணும் , பிள்ளையும் பாவியென்பதை ரோமர் 3 ஆவது அதிகாரத்தில் வேதவாக்கு குறி்ப்பாகக் கூறுகிறது.
" ஆனாலும் என்ன ? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவார்களா ? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை ; உணர்வுள்ளவன் இல்லை ; தேவனைத் தேடுகிறவன் இல்லை ; எல்லாரும் வழிதப்பி , ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் ; நன்மை செய்கிறவன் இல்லை , ஒருவனாகிலும் இல்லை ” ரோமர் 3 : 9-12
" வித்தியாசமே இல்லை , எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள் ” என 22 ம் , 23 ம் வசனங்கள் மீண்டும் கூறுகின்றன. அதனாலேயே தான் இயேசு , யோவான் 3 ஆவது அதிகாரத்தில் , " நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம் ” என நிக்கொதேமுக்குக் கூறினார். அதே அதிகாரத்தில் கொஞ்சம் தாமதமாகி , 18 ம் வசனத்தில் , " இயேசுவை விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று ” என்று கூறினார்.
தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஒரு பாவி என்பதை இந்த வேதவசனங்கள் தெளிவாகக் காட்டுவதுடன் , கிறிஸ்துவின்மீது தனது விசுவாசத்தை வைத்து , இரட்சிக்கப்படும் வரைக்கும் அவன் ஒரு இழந்துபோன பாவியாகவே இருக்கிறான். அவனுக்கு இரட்சிப்பு தேவை எனவும் கூறுகிறது. இருதயம் தவறானதாக இருக்கிறது. அதனை தேவனால் மட்டுமே சரிப்படுத்த முடியும். நீர் இரட்சிக்கப்பட வேண்டுமானால் , " நான் ஒரு பாவி , நான் இழந்துபோன நிலையில் உள்ளேன் , நான் இரட்சிக்கப்பட வேண்டும் ” என உமது சொந்த இருதயத்தில் ஒத்துக்கொள்ள வேண்டும். தான் ஒரு பாவியென ஏற்றுக்கொண்டு , இரட்சிக்கப்பட வேண்டுமென வராத ஒருவரும் ஒருபோதுமே இரட்சிக்கப்பட முடியாது.
நல்ல மனிதர்களையல்ல ,
பாவிகளையே இரட்சிக்க கிறிஸ்து மரித்தார்!
ஓ , நீர் இன்றே இதனைக் காணவேண்டுமென நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்! நீர் ஒரு எளிய இழந்துபோன பாவி , நரகத்திற்குப் போகின்ற ஒரு பாவியாக இருக்கிறீர்! உமது இருதயம் இருளடைந்திருக்கிறது. நீர் உமது இருதயத்தைக் கடினப்படுத்தியுள்ளீர் , நீர் தேவனின் அழைப்பை எதிர்த்து , கிறிஸ்துவை நிராகரித்துள்ளீர். மனிதர்களின் பார்வையில் நீர் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் , நீர் ஒரு பயங்கரமான பாவியாக இருக்கிறீர். நீர் கிறிஸ்துவிடம் திரும்பாவிட்டால் நீர் நித்தியத்தை நரகத்திலே கழிக்க வேண்டி ஏற்படும்.
ஒரு பாவி! அதுதான் நீர்! இதனை உமது சொந்த இருதயத்தில் ஏற்றுக்கொண்டு தேவனிடம் இதனை அறிக்கை செய்யும். நீர் பாவியாக இருப்பதனால் உமக்கு இரட்சிப்புத் தேவை. இதனைவிட இவ்வுலகில் உமக்கு எதுவுமே தேவையில்லை.
இந்த விடயத்திற்கு உமது இருதயத்தில் முடிவெடுத்துவிட்டீரென்றால் , " இரட்சிக்கப்படும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் ?” என்ற உமது கேள்விக்கான தேவனின் பதிலைக் கற்றுக்கொள்ள நீர் தயாராக இருக்கிறீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியும்!
இரட்சிக்கப்படுவதற்கான தேவனின் இலகுவான வழி இங்கே இருக்கிறது. நீர் ஒரு பாவியாக இருக்கிறீர் , உமது இதயம் தவறாக இருக்கிறது , உம்மை உம்மாலே இரட்சிக்க முடியாது , நீர் ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தப்பட்டு இருக்கிறீர். உமது நிலைமை இவ்வாறு இருப்பதனால் , இரட்சிக்கப்படும்படிக்கு நீர் செய்ய வேண்டியது , இந்த நிலையிலேயே சாதாரணமாக கர்த்தராகிய இயேசுவின் மீது உமது விசுவாசத்தை வையும். நீர் அவர்மீது உமது விசுவாசத்தை வைக்கும்போது , " அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய் ” எனும் தேவனின் வாக்குத்தத்தம் உமக்கு உரியதாகும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ அல்லது இரட்சகர் ஒருவர் இருக்கிறார் என்றோ நீங்கள் சாதாரணமாக விசுவாசிக்க வேண்டுமென நான் கருதவில்லை. பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன (யாக்கோபு 2:19).
நீங்கள் வியாதியாக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வைத்தியர் நல்லவர் என நம்பலாம். ஒரு குறிப்பிட்ட மனிதன் நல்ல வழக்கறிஞர் என உங்களுடைய வழக்குக்காக அவர் பேசாமலே நீங்கள் நம்பலாம். இவ்வாறு நீங்கள் இயேசுவைக் குறித்த உண்மையை நம்ப முடியாது ; நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் , அதாவது அவர் மீது சார்ந்திருப்பது , அவரைப் பற்றிக்கொள்வது , அவரில் தங்கியிருப்பதாகும். நீங்கள் இதனைச் செய்யும்போது இரட்சிக்கப்படுவீர்கள்.
நல்ல கிரியைகளினால்
இரட்சிக்கப்படுவதில்லை
நிச்சயமாக , நீர் இரட்சிப்புக்குத் தகுதியுடையவரல்ல. அதற்குத் தகுதியுடையவராக்குவதற்கு உம்மால் எதையுமே செய்ய முடியாது. பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்வதனால் நீர் இரட்சிக்கப்பட முடியாது என வேதவாக்கு தெளிவாகக் காட்டுகிறது.
" இப்படியிருக்க , பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் , எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை ” என ரோமர் 3:20 கூறுகிறது
இதே காரியத்தையே கலாத்தியர் 3:11 உம் கூறுகிறது:
" நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் , விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே ”
அநேகம், அநேகமான வேதவாக்குகள் மானிட நற்கருமங்களினால் இரட்சிப்பு இல்லை என திரும்பத் திரும்பக் கூறுகின்றன.
" நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே , மறுஜென்ம முழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் ” - தீத்து 3:5
" கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல , இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” - எபேசியர் 2:8,9.
நாம் பாவிகளென்பதையும் , ஒருவரும் இரட்சிப்புக்குத் தகுதியுடையவரல்ல என்பதையும் , ஒருவரும் தன்னைத்தான் இரட்சிக்க முடியாதென்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரட்சிப்பு இலவசமாக இல்லாவிட்டால் பாவிகள் இதனைப் பெற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் வேத வசனம் கூறுவது போல பாவத்திற்காக செலுத்துவதற்கு இரத்தம் தேவைப்படுகிறது:
" இரத்தம் சிந்துதலில்லாமல்
மன்னிப்பு உண்டாகாது ” - எபிரெயர் 9:22.
" அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே , குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் ” - ரோமர் 5:6
" நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து , அவனவன் தன் தன் வழியிலே போனோம் , கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் ” - ஏசாயா 53:6.
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நாமெல்லாரும் வாங்கப்பட்டோம் என பேதுரு கூறுகிறார்:
" உங்கள் முன்னோர்களால் பாரம்பாியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் , குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே ” - 1 பேதுரு 1:18,19.
ஒவ்வொரு ஆட்டுக் குட்டியும் , எருதும் , இளங்கன்றும் , ஆடும் , காட்டுப்புறாவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலிபீடத்தின் மீது காணிக்கையாக வைக்கப்பட்டமை இதனைச் சித்தரித்துக் காண்பிக்கவேயாகும். அந்த மனிதன் , ஒரு குற்ற உணர்வுள்ள பாவி , ஒரு மனிதனின் பாவத்திற்காகச் செலுத்தக் குற்றமில்லாத ஒன்று , தனது இரத்தத்தைச் சிந்த வேண்டியுள்ளது. இயேசு எங்களுடைய பாவங்களுக்காக மரித்தார். தேவனுக்கு நன்றி! தேவனின் இலவச அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் , இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்குமாகக் கொண்டுவரப்பட்ட இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
" பாவத்தின் சம்பளம் மரணம் , தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் ” - ரோமர் 6:23.
அன்பான பாவியே , சபை அங்கத்துவம் உம்மைப் பாதுகாக்க மாட்டாது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும். நீர் பப்டிஸம் பெற்றிருப்பீரானால் அது உம்மைப் பாதுகாக்க மாட்டாது. பப்டிஸம் யாரையும் இரட்சிப்பதுமில்லை , இரட்சிப்பைப் பாதுகாப்பதுமில்லை. இயேசு கிறிஸ்துவை ஏற்கனவே தங்கள் இரட்சகராகக் கண்டு கொண்டவர்களின் கடமையின் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பப்டிஸம் இருக்கிறது.
ஒரு நீதியான வாழ்க்கை , ஒரு நல்ல அயலவராக இருத்தல் , அல்லது நல்ல பிரஜையாக இருத்தல், இவையெல்லாம் இரட்சிப்பைப் பெற்றுத்தரத் தவறுகின்றன , ஏனெனில் இது , " நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே …. நம்மை இரட்சித்தார். ” - தீத்து 3:5. நீர் செய்கின்ற கிரியைகளிலே தங்கியிராமல் , இயேசு உமக்காக செய்த கிரியைகளிலேயும் , அவர் செய்வதாக வாக்களித்துள்ள கிரியைகளிலேயும் தங்கியிரும்.
மனந்திரும்புதல் என்றால் என்ன ?
நாம் மனம் திரும்ப வேண்டுமென வேதாகமம் கூறவில்லையா ? ஆம் , தெளிவாகக் கூறுகிறது. " தேவன் …… மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷர் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார் ” ( அப்போஸ்தலர் 17:30). மீண்டும் , " நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் ” ( லூ க்கா 13:3 , 5) எனக் கூறுகின்றார்.
மனிதர்கள் கட்டாயம் மனந்திரும்ப வேண்டும் என்பதுதான் யோவான் ஸ்நானகனின் , இயேசு கிறிஸ்துவின் , பேதுருவின் மற்றும் பவுலின் பிரசங்கமாக இருந்தது. நிச்சயமாக தேவனின் இரட்சிப்பின் திட்டத்தில் மனந்திரும்புதல் இருக்கிறது. இங்கேயுள்ள பிரச்சினையானது , எப்படியாயினும் மனந்திரும்புதல் என்னத்தைக் கருதுகிறது என்பதை மனிதர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அத்துடன் , மனந்திரும்புதல் என்றால் ஒரு காலம்வரை பாவத்தின் நிமித்தம் துக்கப்பட்டு புலம்ப வேண்டும் அல்லது பாவத்திற்காகக் கவலைப்பட வேண்டும் எனும் ஒரு எண்ணத்தை வளர்த்துள்ளது. இது , " மனந்திரும்பு ” என்பதற்குப் பதிலாக " பிராயச்சித்தம் செய் ” என்பதிலிருந்தே இந்த எண்ணம் வந்துள்ளது.
ஆகவே விசாரணையின் இடம் , மக்களுக்கு வேதாகமத்திலிருந்து இரட்சிப்பின் திட்டம் போதிக்கப்பட வேண்டிய இடம் , உயிர்மீட்சிக் கூட்டங்களில் " துக்கிப்பவர்களின் காட்சி ” ஆகின்றன. தங்கள் பாவங்களின் நிமித்தம் துக்கித்துக் கவலைப்படும் ஒரு நடவடிக்கைக்கூடாகப் போகும்வரைக்கும் அவர்களின் ஜெபங்கள் கேட்கப்படவோ அல்லது அவர்களின் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறவோ முடியாது என ஆயிரக்கணக்கான மக்கள் போதிக்கப்பட்டுள்ளனர்.
என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் பாவத்தின் நிமித்தமாக ஒரு மனந்திரும்பிய , உடைந்த இருதயத்துடன் அவரிடம் வரவேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். தேவனிடமிருந்து நீர் விலகிச் சென்றுள்ளீர். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை நீர் அலட்சியப்படுத்தியுள்ளீர். நீர் மீண்டும் ஒருபோதும் வாழமுடியாத உமது வாழ்க்கையின் வருடங்களை அநியாயமாக்கி உள்ளீர். உமது பிதாவாகிய பிசாசை நீர் சேவித்துள்ளீர்.
நீர் கவலைப்பட்டு புலம்ப வேண்டியது அநேகம் உண்டு. உமக்காக மரித்த இரட்சகரையும் , உம்மை சிருஷ்டித்த தேவனையும் நீர் தவறாக நடத்தியதற்காக நீர் உமது இருதயத்தில் ஆழமான வெட்கத்தையும் துக்கத்தையும் உணருவீரானால் , நான் அதற்காக ஆச்சரியப்பட மாட்டேன். உம்மால் கண்ணீரை அடக்கிக் கொள்ள முடியாவிட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன்! ஆனால் நீர் அறிய வேண்டுமென நான் விரும்புவது என்னவெனில் , கண்ணீரோ அல்லது கண்ணீர் இல்லையோ , எவ்வளவு துக்கம் உமது இதயத்தில் இருக்கிறதோ அல்லது இல்லையோ இவைகள் உம்மை இரட்சிக்க மாட்டாது.
நீர் உமது பாவங்களின் நிமித்தம் துக்கப்பட்டு அவைகளால் வெட்கப்பட வேண்டும். " தேவனுக்கேற்ற துக்கம் , மனந்திரும்புதலை உண்டாக்குகிறது ” (2 கொரிந்தியர் 7:10) - சரியான விதத்தில் துக்கப்படுதல் , உடனடியான மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது. ஆனால் கவலைப்படுதல் என்பது , மனந்திரும்புதல் அல்ல.
எப்போதும் என் கண்ணீர்கள் வடியலாம்
என் மனோவேகம் ஓய்வை அறியாதே போகலாம்
பாவத்திற்கான பரிகாரம் இவையல்ல ;
நீர் இரட்சிக்கப்பட வேண்டும் , அது மாத்திரமே .
மனந்திரும்பு என்பதன் உண்மையான கருத்து , பாவத்தைக் குறித்தும் தேவனைக் குறித்தும் மனதில் அல்லது ஆவியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதாகும். அதாவது உமது பாவங்களில் இருந்து திரும்பி , உம்மையாகவே உமது முழு இருதயத்துடனும் உம்மை இரட்சிப்பதற்கு இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும். அப்போது , கிறிஸ்துவை விசுவாசிக்கிற மனிதன் எவ்வாறு மனந்திரும்புகிறான் என்பதையும் , மனந்திரும்பிய மனிதன் கிறிஸ்துவை விசுவாசிப்பதையும் நீங்கள் காணலாம். அந்த சிறைக் காவலாளி , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்காக தனது பாவங்களிலிருந்து திரும்பிய போது , மனந்திரும்பினார்.
உடனடி இரட்சிப்பு !
அந்த சிறைக்காவலாளி , துக்கங்கொண்டாடும் ஒரு காலத்திற்குள்ளாகச் செல்லவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிக்கு அவருக்குக் கூறப்பட்டது. அவர் அவ்வாறு செய்து , இரட்சிக்கப்பட்டார். அத்துடன் அவரின் குடும்பம் முழுவதும் அதே விதத்திலேயே உடனடியாக அந்த இராத்திரியிலேயே இரட்சிக்கப்பட்டது.
புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு இடத்திலும் பாருங்கள் ஒரு நடவடிக்கைக் கூடாகவோ அல்லது துக்கிக்கும் காலங்களுக்கூடாகவோ அல்லாமல் ஒரே தடவையில் மக்கள் எல்லாம் இரட்சிக்கப்பட்டதைக் காண்பீர்கள்.
சகேயு மரத்தில் இருந்து , இயேசுவை விசுவாசித்து , சீக்கிரமாய் இறங்கி வந்து , சந்தோஷத்துடன் அவரை ஏற்றுக்கொண்டான். (லூக்கா 19:6-9). " இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது ” என இயேசு கூறினார்.
கொர்நேலியுவும் , அவனிடத்தில் கூடியிருந்த வீட்டார் அனைவரும் விசுவாசிப்பதன் மூலமாக இரட்சிக்கப்பட முடியும் என பேதுருவினால் அவர்களுக்குக் கூறப்பட்டபோது அவர்கள் உடனடியாக , " இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் ” , அவர்கள் சந்தோஷமாக இரட்சிக்கப்பட்டனர் என வேதவசனங்கள் கூறுகின்றது (அப்போஸ்தலர் 10:44-48).
சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வன் , துன்மார்க்கமான பாவியாக இருந்தான். அவன் சில நிமிடங்களுக்கு முன்பாக மற்றைய கள்வன் இயேசுவை ஏளனம் செய்வதைக் கேட்டிருந்தும் , அவன் இயேசுவிடம் கேட்டபோது உடனடியாக இரட்சிக்கப்பட்டான் (லூக்கா 22:42 , 43).
யோவான் முதலாம் அதிகாரத்தில் 39-49 ம் வசனங்களில் , அந்திரேயா , சீமோன் பேதுரு , பிலிப்பு , நாத்தான்வேல் ஆகிய இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் மீது தனிப்பட்ட விசுவாசம் வைத்ததன் மூலமாக உடனடியாக இரட்சிக்கப்பட்டனர். இயேசுவை விசுவாசித்து , இரட்சிக்கப்பட முன்பதாக தங்களது பாவங்களின் நிமித்தமாக அழுது புலம்ப வேண்டுமென்றோ அல்லது துக்கம் கொண்டாட வேண்டுமென்றோ அல்லது தாமதம்பண்ணவேண்டும் என்றோ வேதாகமக் காலத்தில் எப்போதாகிலும் யாருக்காவது கூறப்பட்டதாகப் பதிவுகள் எதுவுமில்லை ! கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பவர் , மனந்திரும்புகிறார். மனந்திரும்புதலும் விசுவாசமும் ஒரே காரியம். வித்தியாசமான சொற்களில் போடப்பட்டுள்ளது. இதற்கு அதிக நேரமோ அல்லது கவலைப்பட்டு துக்கம்கொண்டாடும் ஒரு நடவடிக்கையோ தேவையில்லை.
இரட்சிப்பு உடனடியாக நேரிடக்கூடியதாக இருக்கிறது. இன்றைய நாளில் நீர் இரட்சிக்கப்படுவதிலிருந்து உம்மைத் தடுக்கக் கூடியது என்னவெனில் , உமது இருதயத்தின் துன்மார்க்கம் , பாவத்தைப் பிடித்துக்கொண்டு , இரட்சிப்புக்காக இயேசுவை விசுவாசிக்காமலும் அவரிடம் திரும்பாமலும் இருப்பதேயாகும். இந்த நிமிடமே உமது பாவங்களி்ன் நிமித்தம் துக்கப்பட்டு , வெட்கத்துடன் திரும்பி கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து , இரட்சிக்கப்படும்படி நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் !
ஜெபம் இல்லாமல் ஒருவர்
இரட்சிக்கப்பட முடியுமா ?
வேதாகமத்தில் அநேக இடங்களில் பாவிகள் , சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வனைப் போல அல்லது ஆலயத்தில் இருந்த ஆயக்காரனைப்போல ஜெபித்துள்ளனர். உண்மையில் ரோமர் 10:13 கூறுவது ,
" கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் ” என்பதாகும்.
மனமுவந்து தேவனை நோக்கிக் கூப்பிடாமலும் , ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜெபிக்காமலும் ஒரு பாவியானவன் இரட்சிக்கப்பட முடியாது என அநேக மக்கள் விசுவாசிக்கின்றனர். எப்படியாயினும் , இரட்சிக்கப்படுவதற்கு ஒரு பாவி கட்டாயம் ஜெபிக்க வேண்டுமென வேதாகமம் கூறவில்லை. உண்மையிலே ரோமர் 10:13 ஐ உடனடியாகத் தொடர்ந்து வரும் வசனம் , தேவனை நோக்கிக் கூப்பிடுதல் இருதயத்திலுள்ள விசுவாசத்தின் ஒரு அடையாளமும் அந்த விசுவாசமே உண்மையில் தீர்மானம் எடுக்க வைத்தது என்பதை விளங்கப்படுத்திக் காண்பிக்கிறது. அதனை மீண்டும் வாசிக்கவும்.
" ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவர் விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுது கொள்ளுவார்கள் ?” - ரோமர் 10:13 , 14.
பாவி ஜெபிப்பதற்குக் கர்த்தர் ஊக்குவிக்கிறார். அவர் ஜெபிக்கும்போது , தனது இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பாரானால் , அந்தப் பாவியினுடைய ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு பதிலளிப்பார். சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வனின் ஜெபத்தை , ஆலயத்தில் ஆயக்காரனின் ஜெபத்தை , குருடனான பர்த்திமேயுவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். ஆனால் , " அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்வார்கள் ?” என வேதாகமம் கூறுகிறது.
இரட்சிக்கப்படவேண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் விசுவாசிக்க வேண்டும். ஜெபம் விசுவாசத்தின் அடையாளமாக இருக்கிறது , ஒருவர் எவ்வளவு நீளமாக ஜெபித்தாலும் அவர் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவில்லையானால் ஒருபோதுமே இரட்சிக்கப்பட முடியாது. மனமுவந்து ஜெபிக்காத போதிலும் கிறிஸ்துவி்ன்மீது விசுவாசம் வைப்பாரானால் , அவர் இரட்சிக்கப்படுவார். ஒரே ஒரு இரட்சிப்பின் திட்டம்தான் உண்டு. ஒரு பாவி இரட்சிக்கப்படுவதற்கு ஒரேயொரு நடவடிக்கைதான் செய்ய வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும்!
தேவன் கடின இருதயம் உள்ளவராய் இருக்கிறார். அது பாவியின் சத்தத்தைக் கேட்டு , இரட்சிக்க முன்பதாக அநேகம் கண்ணீர்களையும் , சுத்தமான அழுகையையும் , துக்கமான நீண்ட நாட்களையும் எடுக்கிறது எனும் அபிப்பிராயத்தை பாவிகளின் மீது பிரசங்கிகளாகிய நாம் , சில வழிகளில் விட்டுள்ளோம். பாவிகள் இரட்சிக்கப்பட்டார்களா ? இல்லையா ? என தேவனுக்குக் கவலையில்லை. பாவிகள் ஏதாவது வகையில் தேவனின் இருதயத்தைத் தொட்டுத் தம்மை மன்னிப்பதற்கு அவரைத் தயார்ப்படுத்த வேண்டும் எனும் அபிப்பிராயத்தை நாம் விட்டுள்ளோம். பரிசுத்தமான ஒரு நல்ல தேவனைக் குறித்து இந்த மேற்கூறிய கூற்றானது என்னவொரு அவதூறு! அந்த , " தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ , அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் ”.
மனிதர்களின் பாவங்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று. இரட்சிக்கப்பட விரும்புகிற எந்தவொரு பாவியினிடமிருந்தும் தேவனின் கோபம் ஏற்கனவே திருப்பப்பட்டாயிற்று. பாவி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவதைப் பார்க்கிலும் , ஒவ்வொரு பாவியையும் இரட்சிப்பதற்கு பிதாவும் குமாரனும் இருவருமே ஒரு மில்லியன் தடவைகளிலும் அதிகமாக ஆவலுடையவர்களாக இருக்கின்றனர். எனது பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் இரக்க வேண்டி இல்லாதபடியால் தேவனுக்கு நன்றி! நான் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அதே நிமிடத்திலேயே அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.
இருதயத்தின் மாற்றத்தை
எவ்வாறு பெற்றுக்கொள்வது ?
விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்படுதல் எனும் இந்த வழி மிகவும் இலகுவானதாகக் காணப்படுகிறது. இது இலகுவானதுதான். " ஆனால் இருதயத்தின் ஒரு மாற்றம் கட்டாயம் தேவை என நான் நினைக்கிறேன் ” என சில பாவிகள் கூறக்கூடும். அவ்வாறே நீங்களும் கூறலாம். அன்பான பாவியே , அது தேவனின் பகுதி. இயேசு நிக்கதேமுவுடன் பேசிக்கொண்டிருக்கையில் , " நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் ” எனக் கூறினார். அதே அதிகாரத்தில் நிக்கதேமு எவ்வாறு புதிய பிறப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கூறினார்.
" தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் ” - யோவான் 3:16.
உமது இருதயத்தில் மாற்றம். பாவியே , அது தேவனின் பகுதி. அவர் அதனைச் சந்திப்பார் என்பதில் நீர் நிச்சயமாக இருக்கலாம். உமது பகுதி சாதாரணமாக அவரை விசுவாசிப்பதாகும். உமது நித்திய இரட்சிப்புக்காக வேறு என்னவெல்லாம் தேவையோ , அதனையெல்லாம் நீர் அவரில் விசுவாசம் வைக்கும்போது அல்லது நம்பிக்கை வைக்கும்போது கர்த்தர் பார்த்துக்கொள்வார்.
நான் எப்படி உணர வேண்டும் ?
இருதயத்தின் மாற்றம் என்பது உணர்வின் ஒரு விடயம் என சில மக்களுக்கு யோசனை உண்டு. தங்களுக்கு வேண்டும் எனும் பாரதூரமான உணர்வு வரும் வரைக்கும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள சிலருக்கு விருப்பமில்லை.
இங்கே பிசாசு உங்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம். நான் இருதய பூர்வமாக விசுவாசிக்கிறேன் , நாளாந்தம் அவர் எனக்குக் கொடு்க்கும் சந்தோஷத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். ஒருவர் இரட்சிக்கப்பட முன்பு எவ்வாறு உணருவார் என்றோ அல்லது நீர் இரட்சிக்கப்பட்ட பின்பு எவ்வாறு உணருவீர் என்றோ வேதாகமம் எங்கேயும் கூறவில்லை. உண்மையில் மக்கள் ஒரேமாதிரி உணரமாட்டார்கள்.
இரட்சிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் மாறுபடும். சிலர் தாம் இரட்சிக்கப்பட்டவுடன் அழுவார்கள் , சிலர் சிரிப்பார்கள் , மிகவும் சொற்பமானோர் சத்தமிட்டு தேவனைப் போற்றுவார்கள் , ஒருவர் மற்றவரிலும் பார்க்க அதிகம் இரட்சிக்கப்பட்டவரல்ல. உமக்குத் தேவையானது என்ன ? அன்பான பாவியே , அது இரட்சிப்பு. இது தேவனைப் பிரியப்படுத்தும் என்பதை நீர் எவ்வாறாயினும் திருப்தியாக உணர வேண்டும். அவ்வாறே அவரும் உமது பாவங்களை மன்னிப்பார்.
மற்றுமொரு உண்மையை நீங்கள் கவனித்ததை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அது நீங்கள் சரியாகும் வரைக்கும் , சரியாக உணர முடியாது என்பதாகும். நீர் கர்த்தரை விசுவாசிக்க முன்பு சந்தோஷம் வரமாட்டாது. ஒருவர் மாத்திரையின் பெறுபேற்றை அதனை உட்கொள்ளும் முன்பு உணர மாட்டார். வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரர்கள் பாம்புகளால் கடிக்கப்பட்டு , மரணிக்கும் நேரத்தில் மரத்திலே தூக்கப்பட்டிருந்த வெண்கல சர்ப்பத்தைப் பார்க்கும்வரைக்கும் அவர்கள் குணப்படவும் இல்லை , குணப்பட்டதாக உணரவும் இல்லை (எண்ணாகமம் 21:6-9).
உணர்வின் மூலமாக மக்கள் இரட்சிக்கப்படவில்லை ; அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக இரட்சிக்கப்படுகின்றனர்.
அந்த கெட்ட குமாரன் , வீட்டிலிருந்து தொலைவிலுள்ள பன்றிக்கூட்டில் இருந்து கொண்டு , எழுந்து தன் தகப்பனிடம் செல்லத் தீர்மானித்தான். ஆனால் அவன் நன்றாக உணரவில்லை. அவன் பாதணிகள் இல்லாதவனாக அழுக்கான உடைகளுடன் , மகன் என்பதற்குரிய மோதிரம் இல்லாமல் , தகப்பனின் மன்னிப்பிற்கான எந்த அடையாளமும் இல்லாமல் பசியினால் அழிந்து கொண்டிருந்தான் ! இருப்பினும் , அவன் எழுந்து தன் தகப்பனிடம் உணர்ச்சியினால் அல்லாமல் , தன் தகப்பன்மீது கொண்ட விசுவாசத்தினாலே வந்தான். தன்னிடத்தில் வருகின்ற ஒவ்வொரு பாவியையும் ஏற்றுக் கொள்வது போன்றே அவனுடைய தகப்பனும் அவனை ஏற்றுக் கொண்டான். தேவனுக்கே நன்றி! அந்த கெட்ட குமாரன் , தன் தகப்பனுடன் பந்தியில் உட்கார்ந்திருக்கையில் சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய பாதரட்சையுடனும் , கிறிஸ்துவின் நீதியெனும் வஸ்திரத்துடனும் , விரைவிலே குமாரனுக்குரிய மோதிரத்துடனும் தகப்பனின் வலதுபக்கத்தில் இருந்து கொழுத்த கன்றைப் புசிக்கையில் , தகப்பனின் அன்பில் களிகூருகையில் அவனின் உணர்வு அதிகமாயிருந்தது.
இரட்சிப்பின் பின்பே உணர்வு வருகிறது. உணர்வுகளைக் கர்த்தருடன் விட்டுவிட்டு , விசுவாசத்தின் மூலமாக இரட்சகரிடம் இன்றே வாரும்.
நீர் இரட்சிக்கப்பட்ட பின்பு பப்டிஸத்திற்கூடாக கர்த்தரைப் பின்பற்றுவதன் மூலமாகவும் , அவரின் வார்த்தையை வாசிப்பதனாலும் , ஆத்தும ஆதாயம் செய்வதாலும் , மற்றைய வழிகளில் அவரைப் பிரியப்படுத்துவதாலும் சமாதானத்தையும் , மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்வீர்கள். ஒரு கிறிஸ்தவ வாழ்வின் மகிழ்ச்சிக்காக நாளாந்தம் மீண்டும் மீண்டும் கர்த்தரிடம் நீர் போக வேண்டும். கிறிஸ்துவை உமது இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர்மீது சார்ந்திருக்கும்போது , இரட்சிப்பு ஒரே தடவையில் முடிவெடுக்கப்படுகிறது. தேவனுக்கு நன்றி!
பகிரங்க அறிக்கையிடல் என்றால் என்ன ?
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் , கிறிஸ்துவை பகிரங்கமாக அறிக்கை செய்ய வேண்டும். கிறிஸ்துவைத் தமது இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்களை அவர் தனது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார் என மத்தேயு 10:32 மற்றும் ரோமர் 10:9 ஆகிய வசனங்கள் தெளிவாகக் கற்பி்க்கின்றன. நாம் ஏற்கனவே எமது இருதயத்தில் விசுவாசித்ததை வாயினால் அறிக்கை செய்ய வேண்டும். இதைக்குறித்து ரோமர் 10:10 கூறுவது:
" நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் , இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும் ”
கிறிஸ்துவை உமது இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு அவரை உமது இருதயத்தில் நீர் விசுவாசிப்பதை சாதாரணமாக நி ரூபியும். எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது குறித்த வேதாகமத்தில் உள்ள மற்றைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இவ்வாறே கூறுகிறது: " என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதி்ல்லை ” என யோவான் 6:37 கூறுகிறது. இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ , அத்தனை பேர்களுக்கும் யோவான் 1:12 ல் இரட்சிப்பு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை நீர் விசுவாசிக்காமல் கிறிஸ்துவிடம் வரமுடியாது. அத்துடன் இயேசுவை ஏற்றுக்கொள்வதும் , அவரின் நாமத்தின் மீது விசுவாசம் வைப்பதும் ஒரேமாதிரியானது என யோவான் 1:12 காண்பிக்கிறது.
அன்பான பாவியே , இதை ஒரு சிரமமான காரியமாக்க வேண்டாம். உமக்கும் இயேசுவிற்கும் இடையே ஒரு சாதாரண படி மட்டுமே உண்டு. நீர் அவரை விசுவாசிக்கும்போது , மற்றைய எல்லாவற்றிற்கும் முடிவு கட்டப்பட்டது. அத்துடன் , நீர் மனந்திரும்பியுள்ளீர். நீர் கிறிஸ்துவிடம் வந்துள்ளீர். நீர் அவரை ஏற்றுக்கொண்டுள்ளீர். இரட்சிக்கப்படுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் நீர் செய்துள்ளீர். அப்போஸ்தலர் 16:31 ல் உள்ள பதிலின் பெறுமதியை அவ்வாறே எடுத்துக்கொள்ளும் : " கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி , அப்போது இரட்சிக்கப்படுவாய் ” .
விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு உண்டு என வேதாகமம் முழுவதிலும் வாக்களிக்கப்பட்டு்ள்ளது. பின்வரும் வேதவாக்குகளைக் கவனமாக வாசித்து , அவற்றை மீண்டும் மீண்டும் , அநேகம் அநேகம் தடவைகள் பார்த்து , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் இவற்றை வாக்களித்துள்ளார் என்பதைக் கண்டுகொள்ளுங்கள்.
" அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ , அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி , அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் ” - யோவான் 1:12
" சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷ குமாரனும். தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு , உயர்த்தப்பட வேண்டும். தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் ” - யோவான் 3:14-16.
"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ , தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் , அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று ” - யோவான் 3:18.
" குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை , தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான் ” - யோவான் 3:36.
" என் வசனத்தைக் கேட்டு , என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு ; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் , மரணத்தைவிட்டு நீங்கி , ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ” - யோவான் 5:24.
" குமாரனைக் கண்டு , அவர்டத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ , அவன் நித்தியஜீவனை அடைவதும் ; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும் , என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார் ” - யோவான் 6:40.
" என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ” - யோவான் 6:47
" அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான் ” - அப்போஸ்தலர் 10:43.
" மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ , விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது ” - அப்போஸ்தலர் 13:39.
நாம் ஆரம்பித்த வேதவாக்கை மீண்டும் வாசிக்கவும் :
" அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே , இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி , அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னான் ” - அப்போஸ்தலர் 16:30-31.
அந்த மகத்தான வைத்தியரான
இயேசுவை விசுவாசியும்!
நீர் வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இரப்பீரானால் நீர் நம்பக்கூடிய நல்ல வைத்தியர் இருக்கையில் , உமது இந்த நிலைக்குத் தேவையான சிகிச்சையைக் கொடுத்து தேவனின் உதவியுடன் நீர் சுகம் பெறும்படிக்கு அவரிடம் செல்ல மாட்டீரா ? அவ்வாறே கிறிஸ்துவை விசுவாசித்து , உமது இரட்சிப்புக்காக அவர்மீது சார்ந்து இன்றைக்கே அவரிடம் திரும்பும்.
அநேக தடவைகளில் மானிட வைத்தியர்கள் தவறுபவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் திறமையின் பெறுபேறு படிப்படியானது. அத்துடன் இயேசுவை சித்தரிக்கக்கூடிய ஒரு பரிரணமான வைத்தியர் இல்லை. வைத்தியர்களால் அற்புதத்தை நடப்பிக்க முடியாது. ஆனால் இயேசுவால் முடியும். நீர் அவரை விசுவாசிக்கும்போது , உமது பகுதியில் மேலதிகமான முயற்சி இல்லாமலே எளிய துன்மார்க்கமான இருதயத்திற்கு தேவையான மாற்றத்தை உடனடியாகத் திடீரென அவரால் ஏற்படுத்த முடியும்.
இயேசு எமது வழக்கறிஞர்
நீர் ஒரு குற்றத்தைப் புரிந்து சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பீரானால் , பெரும்பாலும் முதலாவதாக உமது எதிர்த்தரப்பில் வாதாடுவதற்கு உமக்கு நம்பிக்கையுள்ள வழக்கறிஞர்களை உமக்காக அனுப்பப் பார்ப்பீர். தேவனின் பார்வையில் நீர் ஒரு குற்றவாளியாக நாளாந்தம் தேவனின் கோபத்தினால் ஏற்கனவே ஆக்கினைக்குட்படுத்தப்பட்டுள்ளீர். ஆனாலும் தேவன் பாவிகளாகிய எமது பகுதியை எடுப்பதற்கு ஒருவரை வழங்கியுள்ளார். அவர் தேவனின் நீதியின் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளுக்காகப் போகிறார் , இயேசுதான் அந்த வழக்கறிஞர்.
" என் பிள்ளைகளே , நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் ; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற ( அல்லது வழக்கறி ஞர் ) இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல , சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் ” - 1 யோவான் 2:1 , 2.
உமது வழக்கில் உம்மைப் பாதுகாப்பதற்கான வழக்கறிஞராக மாத்திரம் இயேசு இல்லாமல் , அவர் ஏற்கனவே உமது குற்றத்திற்கான அபராதத்தை செலுத்தியுள்ளபடியால் உம்மை உடனடியாக மன்னித்து , நீதியாக்கும்படிக்கு நீர் அவரை பாதுகாப்பாக நம்பலாம். ஒரு வழக்கறிஞரிடம் துணிந்து போவது போன்று , ஏன் நீர் இயேசுவிடம் துணிந்து போகக் கூடாது ? எந்த வழக்கறிஞரைப் பார்க்கிலும் இயேசு திறமானவர். நிச்சயமாகவே நீர் அவருக்கான கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை. அவர் ஒருபோதும் மாறமாட்டார்.
ஒரு திருமணம்
ஒரு இளம் மனிதனும் , இளம் பெண்ணும் ஒன்றாகப் பக்கம் பக்கமாக பிரசங்கியாருக்கு முன்பாக நிற்கின்றனர். " நீங்கள் வலது கரங்களை இணையுங்கள் ” எனப் பிரசங்கியார் கூறுகிறார். அதன் பின்னர் அந்த இளம் மனிதனிடம் , " நீர் இந்த இளம் பெண்ணை உமது சட்டப்படியான திருமணப் பெண்ணாக ஏற்றுக்கொண்டு மரணம் உங்களைப் பிரிக்கும் வரையில் இவளை நேசித்து , மனதில் வைத்துக்கொள்வீரா ?” எனக் கேட்கிறார். அதற்கு அவன் , " ஆம் , நான் செய்வேன் ” எனப் பதிலளிக்கிறான். அந்த இளம் பெண்ணிடம் , " நீர் இந்த இளம் மனிதனை உமது சட்டப்படியான மணவாளனாக மரணம் உங்களைப் பிரிக்கும் வரைக்கும் ஏற்றுக்கொள்வீரா ?” எனக் கேட்கிறார். அதற்கு அவள் , " ஆம் , நான் செய்வேன் ” எனப் பதிலளிக்கிறாள். அதன்பின்னர் அந்தப் பிரசங்கியார் , " நான் உங்களை கணவன் , மனைவி என உச்சரிக்கிறேன் ” என்பார். அவர்கள் மனிதர்களின் பார்வையிலும் , தேவனுடைய பார்வையிலும் திருமணம் செய்துகொண்டனர்.
என்ன ஒரு சாதாரண இரட்சிப்பின் திட்டம்! இயேசுவே மணவாளன். அவரை விசுவாசிக்கும் நாம் மணவாட்டியாக இருக்க வேண்டியவர்கள். ஏற்கனவே அவர் உம்மீது அன்பு வைத்ததுடன் , அவரின் அன்பை ஏற்றுக் கொள்ளும்படி உம்மை ஊக்குவிக்கிறார். தனது அன்பை ஏற்றுக் கொள்ளும்படி இயேசு உம்மை அழைக்கிறார். தமது மணவாட்டியின் ஒரு பகுதியாவதற்கும் , இரட்சிக்கப்படுவதற்கும் தன்னை இப்போதே விசுவாசிக்கும்படி இயேசு உம்மை அழைக்கிறார்.
சாதாரண விசுவாசத்துடன் அந்த இளம் பெண் கணவனை ஏற்றுக்கொள்வது போன்று , நீர் இப்போது உமது இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரிடம் , " நான் செய்வேன் ” எனக் கூறுவீரா ?
அதனை நிச்சயப்படுத்தும் - அவரை இன்றே ஏற்றுக்கொள்ளும் !
அந்த வழி தெளிவானது. நீர் விரும்புவீரானால் இந்த நிமிடமே நீர் இரட்சிக்கப்படலாம்.
நிச்சயமாகவே தெளிவாக்கப்பட்டுள்ளது. அன்பான இழந்துபோன பாவியே , நீர் இழந்துபோன நிலையிலேயே இருப்பீரானால் இது உமது சொந்தத் தவறேயாகும். நீர் இயேசு கிறிஸ்துவை வெறுக்கிறீரா ? நீர் உமது பாவங்களைப் பிடித்துக்கொண்டு , உமது பிடிவாதத்தினால் நரகத்திற்குப் போவீரா ? இந்த விடயத்தைப் பின்தள்ளிப் போடுவதனால் இவ்வுலகில் வேறெதுவும் உமது துன்மார்க்கத்தைக் காண்பிக்காது. நீர் இப்போதே இந்த நிமிடமே இரட்சிக்கப்பட முடியும். நீர் இதனை இப்போதே செய்யும்படி நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். உமது முழு இதயத்தையும் பாவத்திலிருந்து கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குத் திரும்பும். நரகத்திற்கு மாறாக பரலோகத்தைத் தெரிந்துகொள்ளும். சாத்தானுக்கு எதிராக கிறிஸ்துவைத் தெரிந்துகொள்ளும். இனிமேலும் சாத்தான் உங்களை ஏமாற்ற இடமளிக்க வேண்டாம். நீர் தாமதிப்பீரானால் , அதன் பெறுபேறு ஒரு கடின இருதயமும் , ஒரு வீணான வாழ்க்கையும் உண்டாவதுடன் , உமது ஆத்துமா நரகத்தில் வேதனையை அனுபவிக்கும். தேவன் இந்த வழியைத் தெளிவாக்கியும் , உமது பாவத்திற்காக செலுத்தியும் இருக்கும்போது நீர் இரட்சிக்கப்பட இல்லையானால் , நீர் குற்றம் சாட்டுவதற்கு உம்மைத் தவிர வேறுயாரும் இருக்கமாட்டார்கள். இன்றைக்கே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுவீரா ?
" நாளைய தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே , ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே ” நீதிமொழிகள் 27:1.
" அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து , இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ , இப்பொழுதே அநுக்கிரககாலம் , இப்பொழுதே இரட்சணியநாள் ” - 2 கொரிந்தியர் 6:2.
" ஆகையால் , பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் , வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும் , சோதனை நாளி்லும் நடந்ததுபோல , உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் ” - எபிரேயர் 3:7 , 8.
கிறிஸ்துவை விசுவாசிப்பதற்காகவே தான் தேவன் எமக்கு இந்த இருதயத் துடிப்பையும் இந்த சுவாசத்தையும் , இந்த நிமிடத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் இன்னொன்று உமக்கு வாக்களிக்கப்படவில்லை. நீர் இப்போதே இதனைச் செய்து அவரை உமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.
நீர் ஒரு பாவி என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வீரானால் , கிறிஸ்து உமக்காக மரித்தார் என நீர் விசுவாசிப்பீரானால் நீர் கிறிஸ்துவை உமது இரட்சகராக நேர்மையாக விசுவாசித்து , உமது பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பதற்கு அவர்மீது சார்ந்திருப்பீரானால் , நானும் உம்முடன்கூட மகிழும்படிக்கு பின்வரும் தகவல்களை நிரப்பி எனக்கு அனுப்புவீரா ? நீர் மனிதர்கள் முன்பாக அவரை அறிக்கைபண்ணுவது போல , இயேசுவும் தமது பிதாவின் முன்பாக உம்மை அறிக்கை பண்ணுவார் எனும் நிச்சயம் உமக்கு உண்டாவதற்கு அவர் கூறியது:
" மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ , அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் ” - மத்தேயு 10:32.
நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது , இரட்சிக்கப்படுகிறீர்கள். ஆனால் அதிகமான மகிழ்ச்சியும் நி்ச்சயமும் நீர் அவரை ஏற்றுக்கொண்டும் , அவர் உம்மை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை அனுப்பும்போதே நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களேயானால் , அதனை பின்வரும் கூற்றுக்களின் மூலமாகக் கூறுங்கள்.