Dr. John R. Rice
இந்தக் கேள்வி எம்மிடம் அநேக கிறிஸ்தவர்களினாலும் சபை அங்கத்தவர்களினாலும் அடிக்கடி கேட்கப்பட்டதாகும். அதற்கான பதிலை நாம் அவ்வப்போது எம்மிடம் கேட்பவர்களுக்கு கொடுத்து வந்துள்ளோம். எனினும் அவர்களிடம் எழுத்து வடிவில் வேதாகமத்தின் உண்மை இருக்க வேண்டும் என்பதிற்காகவும், அவர்களைப் போன்று மற்றவர்களும் உண்மையைப் புரிந்து கொள்வதிற்காகவும் இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டூள்ளது.
இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டூுள்ள வேதாகம ஆதாரங்கள், விளக்கங்கள் போன்றவற்றை வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் ஞயிற்றுக் கிழமையில் ஆராதிப்பதிற்கான அர்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளுங்கள். நாம் தேவனை ஆராதிக்கும் நாள், ஓய்வு நாள் அல்ல அது நம்முடைய கர்த்தர் உயிர்த்தெழுந்த வாரத்தின் முதலாம் நாளாகும். நாம் ஒரு ஓய்வு நாள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதையும் தேவனின் வார்த்தைக்காக மாத்திரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.
எமது இறுதி அதிகாரம் எழுதி முற்றுப் பெற்ற பரிசுத்த தேவனின் வேதாகம வார்த்தை மாத்திரமே! தேவனின் வார்த்தையைக் குறித்து நீங்கள் மேலும் கற்றுக் கொள்ளவும், உங்கள் வாழ்க்கையினால் தேவனுக்கு சேவை செய்யவும் வேண்டியது அவசியமாகும். அதற்காக உதவி செய்யக் கூடிய புத்தகங்களும் பாடங்களும் எம்மிடம் உள்ளன.
உண்மையான வேதாகமக் கொள்கைகளையும் பாடங்களையும் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கேட்டுப் பெற்றுக் கொள்ளவும். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எமது முகவரி இப்புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ளது.
நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வதிற்கும் அவரின் வார்த்தையின்படி வாழ்ந்து நிலைத்திருப்பதிற்கும் ஏற்றவாறு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
- நன்றி -
பைபிள் பப்டிஸ்ற் சபை வெளியீடுகள்
309
ஞாயிற்றுக் கீழமையா அல்லது ஓய்வு நாளா -
எதை கிறிஸ்தவர்கள் கைக்கொள்ள டவண்கும்?
நேர்மையான ஒரு ஏழாம் நாள் வருகைக்காரருக்கு வேதாகமத்தீன் பதில்
ஓய்வு நாள் குறித்த சந்தேகத்தினால் நேர்மையான மக்கள் அதிகமானோர் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர். மற்றைய உபதேசங்களைப் போன்றே, தேவனின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மானிடத் தலைமைத்துவத்தையும் பாரம்பரியத்தையும் அதிகமானோர் பின்பற்றுவதினாலேயே இங்கு பிரச்சனை காணப்படுகின்றது. ஏழாம் நாள் வருகைக்காரர், ஓய்வு நாள் என்பது ஏழாம் நாள் என்பதனால் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஏழாம் நாளை ஓய்ந்து ஆராதிக்கும் நாளாக கைக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார்கள். சிலர் அதையும் கடந்து சென்று இரட்சிப்பு பழைய ஏற்பாட்டு ஓய்வு நாளைக் கைக் கொள்வதில் தங்கியுள்ளது என்றும் சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையை ஓய்ந்து ஆராதிக்கும் நாளாக கைக் கொள்வது வெளிப்படூத்தலில் கூறப்பட்ட “மிருகத்தின் அடையாளம்” எனவும் கூறுகின்றார்கள்! மற்றொரு கூட்ட மனிதர்கள், கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் இருந்து, ஓய்வுநாள் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டுவிட்டது அதனால் எல்லாக் கிறிஸ்தவர்களும் இப்போது ஞாயிற்றுக் கிழமையை ஓய்ந்து ஆராதிக்கும் நாளாக கைக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனால் ஞாயிற்றுக் கிழமையை “கிறிஸ்தவர்களின் ஓய்வு நாள்” எனவும், ஞாயிறு பாடசாலையை “ஓய்வு நாள் பாடசாலை” எனவும் அழைக்கிறார்கள். அத்துடன் பழைய ஏற்பாட்டில் உள்ள ஓய்வு நாள், அல்லது சனிக்கிழமையான, வாரத்தின் ஏழாம் நாள் குறித்த கட்டளைகளை வாரத்தின் முதலாம் நாளான ஞாயிற்றுக் கிழமையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
இந்த இரண்டும் தவறாக எடூத்துக்கொள்ளப்பட்டூள்ளது என்பதை நீங்கள் தொடர்ந்து வாசித்தால் வேதவாக்கில் இருந்து சீக்கிரத்தில் புரிந்து கொள்ளுவீர்கள். இந்த விடயம் குறித்து வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கின்றது. நாம் தேவனின் வார்த்தையை ஆராய விரும்பி தேவனின் வார்த்தையில் தேவன் கூறுவதை ஏற்றுக் கொள்வோமானால், இதைக் குறித்தும் கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும்
வேதாகம உபதேசத்தின் அத்தியாவசியமான மற்றைய விடயங்கள் குறித்தும் சந்தேகமில்லாமல் தேவனின் சித்தத்தை அறிந்து கொள்ளலாம். இன்று கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளைக் கைக்கொள்ள வேண்டும் என வேதாகமம் கற்பிக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமையைக் கைக்கொள்வது “மிருகத்தின் அடையாளம்” என வேதாகமம் கூறவில்லை. மற்றொரு விதத்தில், வேதாகமம் நிச்சயமாக ஞாயிற்றுக் கிழமையை “கிறிஸ்தவர்களின் ஓய்வு நாள்” என அழைக்கவில்லை. அல்லது வேறொரு ஓய்வு நாளைப் பற்றிக் கூறவும் இல்லை.
பழைம ஏற்பாட்ரு ஓப்வு நாண் என்பது ஏழாம் நாளாகும்
யாத்திராகமம் 20:10 “ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்;” என தெளிவாகக் கூறுகின்றது. இதனைக் குறித்து வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியாது. சில பாஷைகளில் இந்த ஓய்வு நாள் என்பது ஏழாம் நாள் என்பதாகும். ஓய்வு நாளானது ஆறு நாள் வேலை செய்ததைத் தொடர்ந்து வாரத்தின் இறுதி நாளை குறிப்பிடுகின்றது. சனிக்கிழமையே பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாளாகும்.
ஓய்வ நாளானது பழைம ஏற்பாட்டின் கட்டளையாகும் அது புதமா ஏற்பாட்ருக் கட்டளை அல்ல
சராசரி மாணவர்களாக ஒ6ேவேதாகமத்தைக் கற்பவர்கள் இந்த உண்மையை தவறவிட்டூள்ளனர்: ஓய்வு நாளானது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்ட யூதர்களுக்கேயல்லாமல் 6ேவறுயாருக்கும் கொடுூக்கப்பட்டதில்லை. அநேக பிரசங்கிமார்கள் புறஜாதிகளான சபையோரை விருத்த சேதனம் செய்யும்படிக்கு உற்சாகப்படூத்தவோ அல்லது பன்றி இறைச்சி, கணவாய் போன்றவற்றை விலக்கும்படி கூறவோ நினைக்க மாட்டார்கள். இருப்பினும் “ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என நேர்மையாகப் போதிப்பார்கள்.
அவ்வாறான பிரசங்கியார்கள், “ஞாயிற்றுக் கிழமையை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என்பதைக் கருதுவதுடன் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாள் என அழைக்கின்றார்கள். எவ்வாறாயினும், விருத்தசேதனம் செய்வதிற்கும், அல்லது பன்றியிறைச்சி, கணவாய் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்
என்பதிற்கும் கொடுக்கப்பட்ட கட்டளையிலும் பார்க்க அதிகமாக ஓய்வு நாளைக் கைக் கொள்ளும்படிக்கு கூறப்படவில்லை. நான் இப்போது கொடுக்கும் வேத ஆதாரங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து வாசித்து, இந்த விடயத்திற்கு உங்கள் இருதயத்தில் தீர்வு கண்டூ கொள்ளுங்கள்.
முதலாவதாக, புதிய ஏற்பாடூ முழுவதிலும் ஒரு தடவையாகிலும் ஓய்வு நாளைக் கைக்கொள்ளும்படி கட்டளை கொடுக்கப்படவில்லை! பத்துக் கட்டளையின் மற்றைய ஒவ்வொரு கட்டளைகளும் புதிய ஏற்பாட்டில் மறுபடியும் (சில அதிக தடவைகள்) கூறப்பட்டுள்ளன, அவற்றில் ஓய்வு நாள் தவிர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பாவங்களில், ஓய்வு நாளை மீறுவது பாவமாக ஒருதடவையாகிலும் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை! இயேசு தனது சீஷர்களுக்கு ஓய்வு நாளைக் கைக் கொள்ளும்படி கட்டளை கொடுக்கவில்லை. இந்த விடயம் குறித்து மறுபடியும் மறுபடியும் அவருக்குப் பிரச்சனை வந்தது, இருப்பினும் அவர் ஒருபோதும் ஓய்வு நாளைக் கைக் கொள்ளும்படி மக்களிடம் கூறவில்லை. உண்மையில், ஓய்வு நாளைக் கைக் கொள்ளுபவர்கள் இயேசுவைக் கொலை செய்யத் தேடினார்கள் என யோவான் 5:18ல் எமக்குக் கூறப்பட்டுள்ளது -
“அவர் ஓய்வு நாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.”
அவர்களின் ஓய்வு நாளைக் கைக் கொள்ளாததினால் யூதர்கள் இயேசுவை வெறுத்தார்கள். ஓய்வு நாளில் சாப்பிடுவதிற்காக பயிரைக் கொய்தயபோது அவர்கள் குற்றம் பிடித்ததைக் கடிந்து கொள்வதிற்காக (மத்தேயு 12:1-8), இயேசு வேதவாக்கை அவர்களுக்கு குறிப்பிட்டு, “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்” (ஓசியா 6:69, எனக் கூறியதுடன், அவர்கள் வவேதவாக்கியத்தை விளங்கிக் கொண்டிருப்பார்களானால், குற்றமில்லாதவர்களைக் குற்றப்படுத்தியிருக்கமாட்டார்கள் என்றார். இயேசுவில் நிறைவேற்றப்பட்ட பலி செலுத்துதலைப் போன்று,
ஓய்வு நாளானது சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் ஒரு பகுதி என்பதை தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஓய்வு நாளைக் கைக் கொள்ளும்படி இயேசு யாருக்கும் கற்பிக்கவில்லை. இந்த உண்மை மறுக்க முடியாததாகும்! ஓய்வு நாளைக் கைக் கொள்ளும்படி அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டூச் சபைகளுக்குக் கற்பிக்கவில்லை. ஜெருசலேமில் ஒன்றுகூடிய கூட்டத்தினரும், மனந்திரும்பிய புறஜாதியார் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி அனுப்புகையில், அதில் ஓய்வு நாளைக் குறித்து குறிப்பிடவில்லை (அப்போஸ்தலர் 15:19). எபிரெயர் மற்றும் யாக்கோபு புத்தகங்கள், சிதறிச் சென்ற இஸ்ரவேலருக்காக எழுதப்பட்டது. அதில் கூட ஏழாம் நாள் கைக்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை; பவுல் சபைகளுக்கான தன்னுடைய நிருபங்களில் ஒன்றிலாகிலும் கிறிஸ்தவர்கள் ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டும் என ஒருதடவையாகிலும் குறிப்பிடவில்லை! ஏழாம் நாள் என்பது பழைய ஏற்பாட்டில் உள்ளது அது புதிய ஏற்பாட்டில் அல்ல. மேற்கொண்டு நீங்கள் செல்வதிற்கு முன்னர் இதனை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏழாம் நாளானது மோசேயின் பீரம௱ணமாக, ப்றமாணத்தற்குட்பட்ட இஸ்ரவேலருக்குக் கொருக்கப்பட்டது
குறிப்பிடத்தக்க வகையில் ஏழாம் நாள் கட்டளையானது புதிய ஏற்பாட்டில் இல்லாதது போல, பழைய ஏற்பாட்டிலும் சீனாய் மலைக்கு முற்பட்ட காலத்தில் இருக்கவில்லை. ஆதியாகமம் 2:1-3 தேவன் தன்னுடைய சிருஷ்டிப்பின் வேலையை முடித்தபோது, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். ஆகையால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆனால் ஏதேன் தோட்டத்தில் இருந்தவர்களுக்கோ அல்லது அதன் பின்னர் வந்தவர்களுக்கோ சீனாய் மலை வரையில் அந்த நாளைக் குறித்து கட்டளை எதையும் கொடுக்கவில்லை. ஆதாம் அல்லது ஏனோக்கு அல்லது நோவா அல்லது ஆபிரகாம் போன்றோருடன் தேவன் ஏழாம் நாள் குறித்து பேசியதாக எந்தவொரு பதிவும் இல்லை, அவர்களில் யாரும் இதனைக் குறித்து கேள்விப்பட்டதாகவும் அல்லது கைக் கொண்டதாகவும் இல்லை! மோசே முதல் ஐந்து புத்தகங்களையும் சீனாய் மலைக்குப் பிற்பட்ட காலப்பகுதியில், வனாந்தரத்தில், தெய்வீக வெளிப்பாட்டால் எழுதும் வரையிலும், ஆதியாகமம் 2:1-3
வரையுள்ள இந்த வேதப்பகுதியும் எழுதப்பட்டிருக்கவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழாம் நாள் என்ற சொல் வேதாகமத்தில் முதல் தடவையாக யாத்திராகமம் 16:23ல் பாவிக்கப்பட்டூள்ளது. இந்த நேரம் வரையில் மனிதர்கள் ஒருபோதும் இது குறித்துக் கேள்விப்பட்டதில்லை.
மக்கள் காலத்தின் ஒரு அளவீடாக வாரத்தை ஏற்கனவே வைத்திருந்தார்கள்ன' என்பதை (மேலதிக குறிப்பாக நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம் (ஆதியாகமம் 8:10-12; ஆதியாகமம் 29:27). நீங்கள் யாத்திராகமம் 16:23-36 உள்ள சம்பவத்தை வாசிப்பீர்களானால், இது இஸ்ரவேல் மக்களுக்கு விசித்திரமான ஒரு புதிய போதனையாகவும் அவர்கள் முன்பு ஒருபோதும் கைக்கொண்டிராததுமாக இருப்பதைத் தெளிவாகக் காணலாம்.
இப்போது நெகேமியா 9:13,14 கூறுவதைக் கவனியுங்கள்: “நா் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதி நியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர். உமது பரிசுத்த ஓய்வு நாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக் கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாப்பிரமாணங்களையும் கற்பித்தா.”
எகிப்திலே இஸ்ரவேலர்கள் கொடூமைப்படுத்தப்பட்டதையும் செங்கடலைக் கடந்து வந்ததையும் விபரித்துக் கூறியதன் பின்னர், தேவன் சீனாய் மலையில் இறங்கி, தமது பரிசுத்த ஓய்வு நாளை அவர்களுக்குத் “தெரியப்படுத்தினார்” என வேதவாக்கு எமக்குக் கூறுகின்றது. ஆகையால் ஏழாம் நாளானது, மோசேயின் பிரமாணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. திருமணம், தசமபாகம், விருத்தசேதனம் போன்ற ஏற்கனவே இருந்த மோசேயின் பிரமாணங்களுடன் இது சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஏழாம் நாளானது சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. இது சீனாய் மலையில் “தெரியப்படுத்தப்பட்ட” ஒன்றாகும்! பூமியில் இருந்த மனிதர்கள் ஒருவரும் அதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை.
முதல் தடவையாக சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட அல்லது தெரிவிக்கப்பட்ட, இந்தப் போதனையானது, மறுபடியும் எசேக்கியேல் 20:10-12ல் கற்பிக்கப்பட்டுள்ளது.
“ஆகையால் நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்து வந்து, என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான். நான் தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற காத்தா என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வு நாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.”
சீனாய் மலையில் இஸ்ரவேலரைக் குறித்து கர்த்தரே கூறுவதைக்
கவனமாகக் கணிப்பிடுங்கள்; “எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வு நாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.” யாத்திராகமம் 16:23-36ல்
குறிப்பிடப்பட்டதைப் போன்று இதற்கு முன்னர் மனிதர்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஏழாம் நாள் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
இஸ்நவேலருக்கு ஒரு வீசேஷீத்த அடையாளமாக ஏழாம் நாண் கொருக்கப்பட்ருண்ணதூ
இந்த விடயம் இஸ்ரவேலருக்கு மிகவும் தெளிவானதாகும். இஸ்ரவேலருக்கும் தேவனுக்குமிடையேயான ஒரு விசேஷித்த உடன்படிக்கையாக இந்தக் கட்டளை கொடுக்கப்படுவதை தேவன் சீனாய் மலையிலே மோசேக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
“மேலும், காத்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படூத்துகிற காத்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.... ஆகையால், இஸ்ரவேல் புத்திர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வு நாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி," அதைக் கைக்கொள்ளக் கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்
சென்றவர் வெள்ளிக் கிழமையையும் ஓய்வு நாளாக கைக் கொண்டிருப்பார்கள்! ஆகவே உலகம் முழுவதிலும், எப்பொழுதும் ஏழாம் நாளையே, ஒரே ஓய்வு நாளாகக் கடைப்பிடிப்பது மக்களுக்கு சாத்தியமற்றது என்பதைக் காண்பீர்கள்.
எமது வசதிக்காக, ஒரு சர்வதேச நாட்கோடூ ஒன்று பசுபிக் சமுத்திரத்தின் வரைபடத்தின் மீது அமைக்கப்பட்டூள்ளது. மேற்கே நோக்கிச் செல்லும் ஒரு கப்பலில், ஒரு வெள்ளிக்கிழமை நடூராத்திரியில் சர்வதேச நாள்கோட்டூக்கு வருகிறதென வைத்துக் கொள்ளுங்கள். அது ஓய்வு நாளைக் கைக்கொள்வதிற்கு ஆரம்பிக்கும் நேரம். அல்லது யூதர்கள் சூரிய அஸ்தமனத்தில் தமது ஓய்வு நாளை ஆரம்பிப்பது போன்று, நீங்களும் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்க விரும்பக்கூடும். எனினும் கப்பல் சர்வதேச நாட்கோட்டில் வந்து அதனை கடக்கையில், மேற்கே போகுமானால், நேரமாற்றம் உடனடியாக வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக் கிழமைக்குள் செல்லும்! சனிக்கிழமை முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும். அப்படியானால் எவ்வாறு நீங்கள் ஒரு ஓய்வு நாளைக் கைக்கொள்ளுஸஹ்கள்?
அதே கப்பல் அடுத்த வாரத்தில் திரும்பி வருகிறதென வைத்துக் கொள்ளுங்கள், வெள்ளிக் கிழமையின் முடிவில் சர்வதேச திகதிக் கோட்டை அண்மிக்கிறது, யூதர்களின் ஓய்வு நாளும் ஆரம்பிப்பதிற்கு ஆயத்தமாகவுள்ளது. அவர்கள் சர்வதேச திகதிக் கோட்டை கிழக்கு நோக்கிக் கடக்கும்போது, நேரம் உடனடியாக வெள்ளி இரவில் இருந்து வியாழன் இரவுக்கு மாறுகிறது. அது சனிக்கிழமை ஆரரம்பிப் பதிற்குப் பதிலாக மறுபடியும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கிறது! ஆகவே சர்வதேச திகதிக் கோட்டை கிழக்கு நோக்கிக் கடக்கும் மக்களுக்கு இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக இருக்கும். மேற்கு நோக்கிக் கடப்பவர்கள், முற்றிலும் ஒரு நாளை இழந்துவிடூவார்கள். இப்போது எமது ஏழாம் நாள் வருகைக்கார நண்பர், மேற்கே நோக்கிச் செல்கையில் ஒரு ஓய்வு நாளை கைக்கொள்ளத் தவறுவாரோ? கிழக்கு நோக்கி வருகையில், அடுத்தடுத்து இரண்டு நாட்களை ஓய்வு நாளாக ஆசரிப்பார்களோ? அப்படியானால் அவர்கள் ஏழாம் நாளைக் கைக் கொள்ளவில்லை, பூதர்களின் சடங்குகளுக்குரிய ஓய்வு நாளானது, “ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளை யெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்;....” (யாத்.20:9,10). திகதிக் கோட்டைப்
0.
அடையாளமாயிருக்கும்; ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.”
எசேக்கியேல் 20:12 மறுபடியும் ஏழாம் நாளின் அர்த்தத்தை
விளங்கப்படுத்துகின்றது. இது தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையேயான ஒரு அடையாளமாக இருந்தது.
எந்தவொரு காலத்திலும் வாழ்ந்த புறஜாதிகளுக்கு ஒருபோதும் கட்டளையாகக் கொடுக்கப்படாமல், தேவனுக்கும் இஸ்ரவேலருக்கு மிடையே ஒரு உடன்படிக்கையாக அல்லது ஒரு விசேஷித்த அடையாளமாக ஏழாம் நாளானது மோசேயின் பிரமாணத்தின் கீழ் இருந்த இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. இது அப்போதும், தெளிவாகவும் திரும்பத்திரும்பவும் கற்பிக்கப்பட்ட தேவனின் வார்த்தையினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
ஆகவே நாம் ஓய்வு நாள் குறித்துப் பேசும்போது, ஏழாம் நாள் குறித்து, சனிக்கிழமையைக் குறித்து, யூதர்களின் சடங்குகளுக்குரிய பிரமாணமாகிய பழைய ஏற்பாட்டுக் கட்டளை பற்றிப் பேசுகின்றோம்.
ஓய்வு நாளைக் குறித்து ஒருவனும் உங்களைக் குற்றப்படுத் தாதிருப்பானாக! அது நிழலாக இருந்தமையினால் கிறிஸ்துவின் வருகைவரைக்குமாக இருந்தது, ஆயினும் அவர் வந்தபோது நிழலாக இருந்தது நிறைவேற்றப்பட்டது! ஆகவே ஓய்வு நாளைக் குறித்து கிறிஸ்தவர்களை நியாயந்தீர்க்க அல்லது குற்றப்படுூத்த யூதர்களுக்காயினும் ஏழாம் நாள்க்காரருக்காயினும் உரிமையில்லை. குறிப்பிட்ட போஜனங் குறித்த கட்டளைகளுடனும் மற்றைய சடங்குகளுக்குரிய பிரமாணங்களுடனும் ஏழாம் நாள் குறித்த கட்டளை சிலுவையில் ஆணியடிக்கப்பட்டாயிற்று. யூதர்களின் ஏழாம் நாளை தேவன் விரும்பாததினால் அவ்வாறு தெளிவாகக் கூறியுள்ளார்.
கலாத்தியர் 4:8-11ல், இதே விடயத்தை பவுல் அத்தாட்சியாகக் கூறுகின்றார். கலாத்திய கிறிஸ்தவர்களை பயூதமதத்திற்கு திசை திருப்பினார்கள். பழைய ஏற்பாட்டின் சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் “அடிமைத்தனத்தையும்” அல்லது “பெலனற்றதும் வெறுமையுமான” வழிபாட்டு முறையான பூதர்களின் பழைய கட்டை உடைக்குமாறு பவுல் இந்த நிருபத்தில் இவர்களை உற்சாகப் படுத்துகிறார்.
கலாத்தியர் 4:10-11ல் அவர் கூறுவது: “நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிற்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக் குறித்துப் பயந்திருக்கிறேன்.”
இங்கே குறிப்பிடப்பட்ட “நாட்கள்” என்பது, யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் ஒரு பகுதியான, ஏழாம் நாளைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் ஏழாம் நாள், அல்லது மற்றைய நாட்கள், மாதங்கள், காலங்கள் மற்றும் வருஷங்களால் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் அடிமைப்படூவதை பவுல் விரும்பவில்லை.
ஞாுயிற்றூக் கீழிமை “கீறீஸ்தவறர்களீண் ஒப்வ நாண்” அல்ல
ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவர்களின் ஓய்வு நாள் (ஏழாம் நாள்) என்றும் அல்லது ஓய்வு நாள் இப்போது வாரத்தின் முதலாம் நாளுக்கு மாற்றப்பட்டு விட்டது என்றும் கூறும் பிரசங்கியார்கள் தவறாகக் கூறுகிறார்கள் என்பதை நீங்கள் இப்போது இலகுவாக விளங்கிக்
கொள்ளுஷ்கள். சபத் டம்மி) என்ற சொல், வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிப்பிடுகிறது, வழமையான ஓய்வு நாளானது, வேதாகமத்தில் பாவிக்கப்பட்டதைப் போன்று, எப்பொழுதும் சனிக்கிழமையே, வாரத்தின் ஏழாம் நாளைக் கருதுகின்றது. ஏழாம் நாளான ஓய்வு நாள் சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டதாக வேதாகமத்தில் எந்தவொரு பதிவும் கிடையாது. அவர்கள் ஏன் சனிக்கிழமையைக் கைக்கொள்வதில்லை என்பதை விளங்கப்படூத்துவதிற்காக இவ்வாறான விவாதத்தைப் பாவிக்கும் பிரசங்கியார்கள் வேதவாக்கினால் நிரூபிக்க முடியாமற் போகும்போது, வெட்கப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களின் மந்தைகள் மோசேயின் பிரமாணங்கள் குறித்த ஏழாம் நாள் வருகைக்காரரின் போதனைகளினால் அநேக தடவைகள் கலக்கத்திற்கு உள்ளாவார்கள். மூதலாம் நாஸ் ஆராதனையை கத்தோலக்கர்களண் ஆரம்ப்க்கவீல்லை
ஓய்வு நாளை ஏழாம் நாளில் இருந்து வாரத்தின் முதலாம் நாளுக்கு கத்தோலிக்கர்கள் மாற்றினார்கள் என ஏழாம் நாள் வருகைக்காரர் ௫௯ம் மிர ஏஸ்) கூறுகின்றார்கள். தாம் மாற்றிக் கொண்டதாக சில கத்தோலிக்க எழுத்தாளர்கள் ஒத்துக் கொள்வது வேடிக்கைக்குரியதாக இருக்கிறது! அதே நேரத்தில், எப்படியாயினும் பேதுருவே எமது முதலாவது போப்பாண்டவர் என்றும் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அப்போஸ்தலர்களினால் ஓய்வு நாள் மாற்றப்பட்டது என்றும் கத்தோலிக்கர்கள் கருதுவதை ஏழாம் நாள் வருகைக்காரர் அறிந்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமையை ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக சமுதாயச் சட்டத்தை மக்கள் மீது கத்தோலிக்கர்கள் வலியுறுத்தினார்கள் என்பது உண்மை. கத்தோலிக்க போப்பாண்டவர்களும் ஆளுநர்களும் சமுதாயச் சட்டங்களின் மூலமாக வலியுறுத்தி, ஞாயிற்றுக் கிழமையை பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாளைப் போன்று கைக்கொள்ளுவதிற்கு சடங்காகவோ அல்லது சட்டமாகவோ உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விடயமாக, வாரத்தின் முதலாம் நாளை ஆராதனையின் நாளாக ஆரம்பித்தது அமைகிறது. இது புதிய ஏற்பாட்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அப்போஸ்தலர் 20:7 தெளிவாகக் காண்பிக்கிறது. பின்வரும் இந்த வசனத்தைக் கவனியுங்கள்:
“வாரத்தின் முதல் நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்பட வேண்டூுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடூராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.”
வாரத்தின் முதலாம் நாளில் புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் ஒன்று கூடினார்கள் என்பது தெளிவாக உள்ளது. அவர்கள் வழக்கமாக அந்த நாளில் ஒன்று கூடினார்கள் என ஊகிக்கலாம்.
வாரத்தின் முதலாவது நாள் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்த அர்த்தத்தைக் கொடுத்துள்ளது, அது ஞாயிற்றுக் கிழமையாக, சமய நிகழ்வுகளுக்கான நாளாக வைக்கப்பட்டதை முதலாவது கொரிந்தியர் 16:2ம் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றது. இது கத்தோலிக்கர்களின் கண்டூபிடிப்புமல்ல, ஏழாம் நாள் வருகைக்காரர் கூறுவது போன்று “மிருகத்தின் அடையாளமும்” அல்ல. எப்படியாயினும், வாரத்தின் இந்த முதலாவது நாள் ஒருபோதும் “ஓய்வு நாள்” (ச௪பத் என வேதாகமத்தில் அழைக்கப்படவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், அத்துடன் நாம் ஒருபோதும் இதனை ஓய்வு நாள் என அழைக்கக் கூடாது.
புதீயீ ஏற்பாட்டு ஆராதனையின் நண், முதலாவது நாளாகும்
இயேசுவும் பின்னர் பவுலும், யூதர்களை ஜெப ஆலயங்களில் சந்தித்து, ஓய்வு நாளில் அல்லது ஏழாம் நாளில் அவர்களுக்குப் பிரசங்கித்துள்ள அதிகமான பதிவுகளை நாம் புதிய ஏற்பாட்டில் காணலாம். அது இன்றைக்குள்ள பிரசங்கியார்களும் தாம் மக்களை ஒன்று கூட்டக் கூடிய நேரத்திலும் இடத்திலும் அவர்களுக்குப் பிரசங்கிப்பதைப் போன்றதே. ஒரு பிரசங்கியார் மக்கள் ஒன்று கூடக் கூடிய இடத்திற்குச் சென்று பிரசங்கிக்க வேண்டும். எனினும் புதிய ஏற்பாட்டூச் சீஷர்களின் ஒன்றுகூடல் என வரும்போது, அந்த நாளுக்காக எந்தவொரு சபையும் ஓய்வு நாளைப் பாவித்ததாக நாம் காணவில்லை. இன்னொரு விதத்தில் பார்த்தால், அப்போஸ்தலர் 20:7ல் சீஷர்கள் வாரத்தின் முதலாம் நாளிலே ஒன்று கூடினார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது, அத்துடன் இது வழமையான ஆராதனையாகவும் அந்த குறிப்பிட்ட நாளில் அப்பம் பிட்கும்படி அவர்கள் கூடியிருந்ததையும் பாடப்பொருள் காண்பிக்கிறது.
முதலாவது கொரிந்தியர் 16:2ல் “வாரத்தின் முதலாவது நாள்” புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கான குறிப்பிடத்தக்க நாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாளில் கர்த்தரின் வேலைக்கான தமது அன்பளிப்புகளை அவர்கள் சேகரித்து வைக்க வேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டூள்ளது.
ஆராதிப்பதிற்கு ஒன்று கூடும் நாளாக வாரத்தின் முதலாவது நாளை சீஷர்கள் வழக்கப்படுத்திக் கொண்டதை வெளிப்படூத்தல் 1:10 “கர்த்தருடைய நாள்” எனக் கருதுவது சாத்தியமாக இருக்கிறது. யோவான் இந்த நாளில் கர்த்தரை ஆராதித்தார், அதனால் “கர்த்தரின் நாளில் ஆவிக்குள்ளானேன்” என்கிறார். கர்த்தருடைய நாள் என்பது ஓய்வு நாள் அல்லது ஏழாம் நாள் என வேதாகமத்தில் எங்கும் கற்பிக்கப்படவில்லை. முதலாவது நாளுக்குப் பதிலாக வேறொரு நாளை ஆராதிப்பதிற்காகப் பாவித்தார்கள் எனவும் வேதாகமம் கற்பிக்கவில்லை. கர்த்தருடைய நாள் என்பது எமது ஞாயிற்றுக் கிழமையாக இருக்க வேண்டும். ஓய்ந்திருக்கும் ஒரு நாள் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையாகக் கொடுக்கப் படவில்லை. ஆயினும் அவர்கள் ஆராதிக்கும் நாளாக வாரத்தின் முதலாவது நாளைப் பாவித்தார்கள், ஏழாம் நாளை அல்ல.
மநுதற்கனீண் ஒன்வு நாண் ஆறாத்க்கும் நாண் அல்ல பழைய ஏற்பாட்டிலுள்ள ஏழாம் நாள், சனிக்கிழமையானது, சரீரத்திற்கான ஓய்வுக்கு மாத்திரமானது, அது ஆராதிக்கும் ஒரு நாள் அல்ல. நீங்கள் மறுபடியும் ஓய்வு நாள் குறித்த கட்டளையை பழைய ஏற்பாட்டில் வாசிக்கையில், அது ஒரு ஆராதிக்கும் நாளாகக் கொடுூக்கப்படவில்லை என்பதைக் கவனிப்பீர்கள்.
“ஏழாம் நாளோ உன் தேவனாகிய காத்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியா னாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனா னாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்” - யாத்தி. 20:10.
“சபத்” (ூசம்ம்மாம்) என்ற சொல் எபிரெய பாஷையாகும் (இந்தப் பாஷையில் தான் கட்டளை கொடுக்கப்பட்டது) அதன் அர்த்தமானது, “இடை நிறுத்தம்” அல்லது “ஓய்வு” என்பதாகும்.
குறிப்பிட்ட சில தேசிய சமய விடுமுறைகள் தவிர்ந்து சமய நிகழ்வுகள் வித்தியாசப்பட்ட போதிலும், ஆசரிப்புக் கூடாரத்திலும் தேவாலயத்திலும் வாரத்தின் ஏழு நாட்களிலும் ஆராதனை நடைபெற்றது.
பழைய மற்றும் புதிய ஏற்பாடூகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் ஜெப ஆலயங்களில் ஓய்வு நாளுக்காக ஒன்று கூடூவது உருவாகியதைக் காண்கிறோம், ஆயினும் இது தெய்வ்க கட்டளையால் உண்டானதல்ல. மோசேயின் கட்டளையிலுள்ள ஏழாம் நாளானது முற்றிலும் ஓய்வு எடுப்பதாகும், அது ஆராதனையோ அல்லது சபைக்குச் சமுகமளிப்பதோ இல்லை.
ஜெப ஆலயத்தைக் குறித்தோ அல்லது ஜெப ஆலய ஆராதனைகள் குறித்தோ வேதாகமத்தில் எந்தவொரு கட்டளையும் இல்லை. ஏழு நாளில் ஒரு நாள் மனிதர்களும் மிருகங்களும் ஓய்வெடுப்பது என்ற கொள்கை நல்லதென நாம் அறிந்துள்ளோம். அதன் அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கும்படி அநேக தடவைகள் கிறிஸ்தவர்கள் சமுக சட்டத்தில் கேட்டுள்ளனர். கிறிஸ்தவ மக்கள் ஞாயிற்றுக் கிழமையை தமது ஆராதனைக்குரிய நாளாக பாவித்தமையால், வழமையாக அந்த விடூமுறை நாள் ஞாயிற்றுக் கிழமையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எப்படியாயினும், வேலையை விட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் ஓய்ந்திருக்க வேண்டும் என்றோ அல்லது வாரத்தின் குறிப்பிட்ட நாளில் ஆராதிக்க ஒன்றுகூட வேண்டும் என்றோ புதிய ஏற்பாட்டூக் கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்படவில்லை. இது ஒரு கிறிஸ்தவனுக்கு கிருபைக்குரிய விடயமாகவும் மன விருப்பத்தின் படியும் செய்யப்பட வேண்டும்.
அப்படியானால் கீறீஸ்தவற்கள் ஞாயீற்றூக் கீழமையைக் கைக்கொண்ண வேண்ரூமா?
ஓய்வு நாளைக் கைக் கொள்வதிற்கு கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டுக் கட்டளையினால் கட்டப்படாமல் இருக்கையில், ஞாயிற்றுக் கிழமையைக் கைக்கொள்ளுவது கிறிஸ்தவர்களுக்குச் சரியானதா? இதற்கான பதிலானது நாம் ஞாயிற்றுக் கிழமையை சடங்குகளின் ஒரு பகுதியான, ஒரு சட்டரீதியான ஓய்வு நாளாகக் கைக்கொள்வதில்லை என்பதாகும்; ஆயினும் நாம் கர்த்தருடைய
நாளை எமது சொந்த நலனுக்காக ஒரு ஆராதனையின் நாளாக மனதாரக் கைக்கொள்ளுகின்றோம். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டூவிடாமல்,” என எபிரெயர் 10:25 வேதவாக்கு தெளிவாகக் கூறுகின்றது. நாம் ஆராதிப்பதிற்கு ஒன்று கூடூம்படிக்கு கட்டளை கொடுக்கப்பட்டூள்ளது. புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலர் 20:7ல் ஞாயிற்றுக் கிழமை ஒன்று கூடியமையாலும்; யோவான் தனிமையில் நாடு கடத்தப்பட்ட நிலையில் பத்மு தீவிலும், “கர்த்தருடைய நாளில்” ஆராதித்தார்கள். அவ்வாறே, 1 கொரிந்தியர் 16:2ல் கிறிஸ்தவ கடமையை ஞாயிற்றுக் கிழமை நிறைவேற்றும்படி குறிப்பிடப்பட்டூள்ளது. நிச்சயமாக நாமும் அந்த நாளில் ஆராதிப்பதிற்கு எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
சிலர் இதனை மறுத்து, நீங்கள் ஞாயிற்றுக் கிழமையில் ஆராதித்தால் சூரியனுக்குரிய நாளைக் கைக்கொள்ளுகிறீர்கள் என்கிறார்கள். நல்லது, சனிக்கிழமை என்பது சனிக்கிரகத்தின் (பண்டைய ரோமர்களின் வேளாண்மைத் தெய்வத்தின்) பெயரைக் கொண்டதாகும்! எல்லா நாட்களும் கடவுளின் நாட்களாகும், அவை எவ்வாறு பெயரிடப்பட்டன என்பதல்லாது நாம் அவற்றை அவருக்காகப் பாவிக்க வேண்டும். இப்போதுள்ள வாரத்தின் நாட்களும் பெயர்களும், வேதாகமக் காலத்தில் இருந்த பெயர்களும் ஒன்றல்ல, ஆயினும் நாம் ஞாயிறு என்று அழைத்தாலும் வாரத்தின் முதலாவது நாள் என்பது அதுதான், அவ்வாறே சனிக்கிழமையாகிய வாரத்தின் ஏழாவது நாளும் அதுவாகவே இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை என அழைக்கப்படூவதற்கு முன்னரே புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதலாவது நாளில் ஒன்றுகூட ஆரம்பித்து விட்டார்கள். சனிக்கிழமை என அழைக்கப்படுவதிற்கு முன்னரே யூதர்கள் ஓய்ந்திருக்கும் நாளாக சனிக்கிழமையைப் பாவித்தார்கள். அது எமக்கு என்ன செய்யக்கூடும்? நாம் இதனை தேவனின் வார்த்தையினால் தீரவுகாண வேண்டும், சரித்திரத்தினாலும் பெயரினாலும் அல்ல.
கிறிஸ்தவர்கள் தம்முடன் சேர்ந்து தேவனை ஆதிக்கச் செல்வதிற்கு தங்களால் சாத்தியமானவரை அதிகமானவர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வேலை கொடூப்பவர்கள் தமது வேலையாட்கள் தேவனின் கட்டளையை நிறைவேற்றவும் தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதிற்காகவும் ஞாயிற்றுக்
கிழமையில் தமது வர்த்தகத்தை மூடிக்கொள்ள வேண்டும். நாம் இதனை யூதர்களின் சட்டத்தின் அடிப்படையில் செய்யமுடியாது, செய்யவும் கூடாது. நாம் இதனை மற்றவர்கள் எமக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறோமோ அவைகளை நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் எமது சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டும், அத்துடன் கிருபையின் அடிப்படையில் கர்த்தரைக் கனப்படூத்துவதிற்காகச் செய்ய வேண்டும்.
எமக்குள்ள இந்தச் சுதந்திரத்தை மாம்சத்திற்கு இடமாகப் பாவிக்கக்கூடாது (கலாத்தியர் 5:13). கர்த்தருடைய நாள் குறித்த தமது சுதந்திரத்தை கிறிஸ்தவர்கள் தவறு செய்வதிற்கு அனுமதியாகப் பாவிக்கக்கூடாது.
நிச்சயமாக கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த நாளை கர்த்தராகிய இயேசுவைப் பிரியப்படுத்தும் விதத்தில் பாவிக்க வேண்டும், ஏனெனில் அவர் நிமித்தமாகவே இந்த நாளை “கர்த்தருடைய நாள்” என்கிறோம். சில கிறிஸ்தவர்கள் ஏதோ யோசனையாக, இதனை ஓய்வு நாள் என அழைக்கிறார்கள். நாம் எமது சுதந்திரத்தினால், அவர்களுக்கு இடறலை ஏற்படூத்தக்கூடாது. எமது சுதந்திரத்தை விளங்கிக் கொள்ள முடியாத இரட்சிக்கப்படாத மக்கள் நிமித்தமும் அவர்களுடைய மனச்சாட்சியின் நிமித்தமும் நாம் அதிகமான விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அப்போஸ்தலராகிய பவுல், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைக் குறித்த விடயம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், தெய்வீக வெளிப்பாட்டால் பின்வரும் வாக்கியத்தை எழுதியுள்ளார்:
“உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச் சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்பட வேண்டூவதென்ன? மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புபடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக் குறித்து நான் தூஹஷிக்கப்படுவானேன்? ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
நீங்களும் பூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்” - 1கொரிந்தியர் 10:29-33.
ஆம், கிறிஸ்தவர்கள் தமது சொந்த நன்மைக்காகவும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதிற்காகவும் ஞாயிற்றுக் கிழமையைப் பாவித்து தேவனுக்கு சேவை செய்யவும் ஆராதிக்கவும் வேண்டும். ஒருவரையும் பாதிக்காமல், எல்லாரும் இரட்சிக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் கூடியதாக நடந்து கொள்ள வேண்டும்.
வாரத்தின் முதலாம் நானீன் ஆனக்குற்ய அர்த்தம்
வேதாகமத்தில் ஆறு என்பது மனிதனின் இலக்கமாகவும், ஏழு தெய்வீக அல்லது பூரணமான இலக்கமாகவும் இருக்கிறது. ஆறு நாளும் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பது, பிரமாணத்தின் கீழ் பரிபூரணமான வாழ்க்கை வாழ்வதையும் ஓய்வை சம்பாதித்துக் கொள்வதையும் சித்தரிக்கிறது, பரிபூரணமும் இரட்சிப்பும் ஏழாம் நாளினால் சித்தரிக்கப்படுகிறது. நிச்சயமாக மனிதன் பிரமாணத்தின் கீழ் தவறினான், அத்துடன் யாராலும் அதனை முற்றிலும் கைக்கொள்ள முடியவில்லை (அப்போஸ்தலர் 15:10, ரோமர் 3:20, கலாத்தியர் 3:11). எனினும் வாரத்தின் முதலாம் நாளில், புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பது, அவன் எந்த வேலையையும் செய்வதிற்கு முன்னர் இலவச அன்பளிப்பாக இரட்சிப்பு அவனுக்கு ஏற்கனவே உண்டு என்பதை அர்த்தப் படூத்துகின்றது. அத்துடன் இப்பொழுது இரட்சிக்கப்பட்டுள்ளதால், தான் நேசிக்கும் இரட்சகரை மகிமைப்படூத்துவதிற்கு மீதியான வாழ்நாளெல்லாம் கிறிஸ்தவன் வேலை செய்கின்றான். எபிரெயர் 4:9,10ஐ வாசிக்கவும்.
வாரத்தின் முதலாம் நாளில் இயேசு உயிரோடூ எழுந்தார் என்பது மாற்கு 16:2,9ல் இருந்து தெளிவாகிறது. வாரத்தின் முதலாம் நாளில் அதிக இருட்டோடே மரியாளும் மற்றவர்களும் கல்லறையினிடத்திற்கு வந்தார்கள் எனக் காண்கிறோம். இயேசு மரியாளுக்குத் தரிசனமாகி, “என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை;” என்றார். வாரத்தின் முதலாம் நாளின் ஒரு பகுதியாக இருந்த அதிகாலையின் இருட்டில், கல்லறையை விட்டூ இரட்சகர் வெளிவந்துவிட்டார் எனக் காணப்படுகின்றது. இங்கே
எமக்கான பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. இயேசு எம்மை நீதியாக்குவதிற்காக மரணத்தில் இருந்து உயிர்த்தார் (ரோமர் 4:25) என்பது நாம் இப்போது எந்த வேலையையும் செய்யாமலும் நியாயப்பிரமாணத்தின் கிரியையும் இல்லாமல் நீதிமான்களாக எண்ணப்பட்டதுடன், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் தேவனோடூ சமாதானமாக்கப்பட்டோம்” என்பதைக் கருதுகிறது. இதைக் குறித்து எபிரெயர் 4:10 கூறுவது:
“ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.”
தன் சொந்தக் கிரியையில் சார்ந்திருக்காமல் கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்ததில் சார்ந்திருக்கும் கிறிஸ்தவன் பாக்கியவான்! “இரண்டு ஓய்வு” அல்லது “சபத்” குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை எபிரெயர் 4:9-11ல் காணலாம். (எபிரெயர் 4:9ல் உள்ள ஓய்வு என்பது சபத் என்பதற்கான கிரேக்க பதமாகும்.) இந்த போதனை எல்லா பூதர்களுக்கும் பழக்கப்பட்டதாகும்.
இஸ்ரவேலர்களுக்கு அல்லது யூதர்களுக்கு தேவன் கொடுத்த பெரிய பண்டிகைகளில் ஒன்றாக, ஒரு கிறிஸ்தவனின் இந்த ஓய்வுகள் குறித்த யோசனையைக் காண்பிக்கின்றது, ஒன்று இரட்சிப்பிலும் மற்றது உயிர்த்தெழுதலிலும் இருக்கிறது. பஸ்கா இராப் போஜனத்தைத் தொடர்ந்து வரும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை, யாத்திராகமம் 12:15,16ல் கொடுக்கப்பட்டதைப் போன்று, ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த வாரம் மனந்திரும்புதலின் பின்பான ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையின் பூரண சுற்றுவட்டத்தை பிரதிநிதிப்படுத்துகிறது, இந்த மனந்திரும்புதல் பண்டிகையின் ஆரம்பத்தில் உள்ள பஸ்கா அஆட்டூக்குட்டியினால் சித்தரித்துக் காண்பிக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 5:6-8ஜப் பார்க்கவும். புளிப்பில்லாத அப்பம், நிச்சயமாக, நாம் கிறிஸ்துவில் போஷிக்கப்படுவதையும், அவருடனான எமது ஐக்கியத்தையும், பிரதிபலிக்கிறது. இஸ்ரவேலர்கள் பஸ்கா அஆட்டுக்குட்டியுடன் புளிப்பில்லாத அப்பத்தை புசிப்பதைப் போன்று, ஐக்கியம் அல்லது சமாதானம், மனந்திரும்பிய உடனேயே ஆரம்பிக்கிறது. ஒரு கிறிஸ்தவ வாழ்வின் சந்தோஷமும் சமாதானமும் ஒருவர்
சனிக்கிழமை, சடங்குகளின் பிரமாணமாக இருக்கிறது, இது கிருபையின் காலத்திற்குள் பொருந்தாதது. எமது கர்த்தருடைய நாள், வாரத்தின் முதலாம் நாள், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருத்தமானது.
கர்த்தருடைய நாளுக்கும் ஓண்வு நகளுக்கும்டையேோயான பெறிய வத்தியாசம்
1. ஓய்வு நாளானது, மோசேயின் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்ட, இஸ்ரவேலருக்கு மாத்திரமானது. கர்த்தருடைய நாளானது, கிருபைக்குக் கீழ்ப்பட்ட, புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கானது.
2. ஓய்வு நாளானது பிரமாணமாக, தேவனின் கட்டளையால், மரண தண்டனையை கட்டாயப்படுத்துகிறது (எண்ணாகமம் 15:32-36). கர்த்தருடைய நாளானது, அல்லது வாரத்தின் முதலாம் நாளானது, கிருபையாயிருந்து, கட்டளையோ அல்லது தண்டனையோ இல்லாமல், எல்லாக் கிறிஸ்தவர்களாலும் விருப்பத்தினால் கைக் கொள்ளப்படுகிறது.
3. ஓய்வு நாளானது ஒரு சரீர ஓய்வின் நாளாகும் (யாத். 20:10). கர்த்தருடைய நாளானது ஒரு ஆராதிக்கும் நாளாகும் (அப்போ. 20:7; வெளி 1:10).
4, ஓய்வு நாள் இரட்சிப்பு கிரியையினால் உண்டாவதைக் காட்டுகிறது; கர்த்தருடைய நாள் இரட்சிப்பு கிருபையினால் உண்டாவதைக் காட்டுகிறது.
கீற்ஸ்தவந்கண் பீறமாணத்தீன் கீழனவற்கண் அல்ல
எமது ஏழாம் நாள்கார நண்பர்கள், கலாத்தியர் சபைக் கிறிஸ்தவஷ்கள் போல, எம்மை மோசேயின் பிரமாணத்தின் நுகத்தின் கட்டில் பிணைக்க முயற்சிக்கிறார்கள். மோசேயின் பிரமாணத்தைக் கைக்கொள்வதில்தான் இரட்சிப்புத் தங்கியுள்ளது என இவர்களில் அதிகமானோர் கற்பிக்கின்றனர், பெரும்பாலோனோர் விசுவாசிக் கின்றனர். இவர்கள் பழைய ஏற்பாட்டு ஓய்வு நாளைப் பிரசங்கிப்பது மாத்திரமல்லாது, அடிக்கடி பழைய ஏற்பாட்டு கட்டளைகளை குறிப்பிட்ட இறைச்சி வகைகளைச் சாப்பிடுவதிற்கு எதிராகவும் கற்பிக்கின்றார்கள். இரட்சிக்கப்படுவதிற்கு்ண/ அல்லது இரட்சிப்பில் நிலைத்திருப்பதிற்கான வழிகளில் ஒன்றாக இவர்கள் தசமபாகம்
கொடுப்பதைக் கற்பிக்கிறார்கள். ஒருவர் இரட்சிக்கப்படுவதிற்கு, யூதர்களின் சடங்குகளுக்குரிய மற்றைய கட்டளைகளையும், கைக்கொள்ள வேண்டுமென இதன் அடிப்படையில் இவர்கள் கற்பிப்பார்கள். உண்மையில், வபூதர்களுக்கு வழங்கப்பட்ட சடங்குகளுக்குரிய பிரமாணங்கள் தெளிவாக நிறைவேற்றப்பட்டு விட்டன, அத்துடன் அவை எமக்கானவை அல்ல என்பதை கொலோசெயர் 2:14-17 மற்றும் ]தீமோத்தேயு 4:3-5ல் இருந்து விளங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட போஜனத்தை சாப்பிட வேண்டாம் என்ற கட்டளை கிறிஸ்தவர்களைக் கட்டூப்படுத்துவ தில்லை என்பதை தேவன் தெளிவாகக் கூறுகின்றார்.
“தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத் தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.” - 1 தீமோத்தேயு 4:4-5.
விருத்தசேதனம் செய்வதைக் குறித்து, புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
“ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகை தேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.” - 1கொரிந்தியர் 7:18
ஆகவே ஓய்வு நாளைக் குறித்தும், அதைக் குறித்த கட்டளையை சிலுவையில் ஆணியடித்து, மற்றைய சடங்குகளுக்குரிய கட்டளைகளுடன் குலைத்துப் போட்டார் என தேவன் தெளிவாக, கொலோசெயர் 2:16,17ல் கூறியுள்ளார்:
“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது.”
ஓய்வு நாளைக் குறித்து ஒரு கிறிஸ்தவன் பிரமாணத்தின் கீழ் இருப்பானானால், சனிக் கிழமையில் விறகு பொறுக்கியதிற்காக,
அப்படியானால் நாம்,
“மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.” கலாத்தியர் 5:1
“மரத்திலே தாக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” கலாத்தியர் 3:13
“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது.” கொலோசெயர் 2:17
ஓய்வ நறனானறு அடங்குகளுக்குநிய பிரமாணமக, முதற்களுக்கு மாத்தரம் கொடுக்கப்பட்டது, அது ஒருபோதும் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவற்களுக்கானது அல்ல என்பதீற்களன மேலதீக அத்தாட்சிகள்
1. இதைத்தான் வேதவாக்கு அர்த்தப்படுத்திக் கூறுகிறது. மறுபடியும் கொலோசெயர் 2:13-17ஐ வாசியுங்கள்.
“உங்கள் பாவங்களினாலேயும் , உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, அக்கிரமங்க ளெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுூவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித் து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள்
வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது.”
இந்த வேதப்பகுதி, இயேசு கிறிஸ்து மரித்தபோது நிறைவேற்றப் பட்ட, யூதர்களின் சடங்குகளுக்குரிய பிரமாணத்தைப் பற்றிப் பேசுகிறது. புறஜாதியார் “விருத்தசேதனம் அற்றவர்கள்” என வேதாகமம் கூறுகிறது; யூதர்களின் “நியமங்களின் கையெழுத்து” புறஜாதிகளுக்கு எதிராகவும் முரணாகவும் இருந்தது. எனினும் விருத்தசேதனமில்லாத மக்களுக்கு விரோதமாக இருந்த இந்த “நியமங்களின் கையெழுத்தை” “நடூவிலிராதபடிக்கு எடூத்து, சிலுவை யின் மீது ஆணியடித்தார்.” நிச்சயமாக இது சடங்குகளுக்குரிய பிரமாணத்தைக் கருதுகிறது. இயேசு மரித்தபோது, நடத்தை களுக்குரிய பிரமாணம் முற்றுப்பெற்றதா? “கொலை செய்யாதிருப் பாயாக” “விபசாரம் செய்யாதிருப்பாயாக” “களவு செய்யா திருப்பாயாக” எனும் கட்டளைகளை நிறைவேற்றுவதில் இருந்து மனிதர்கள் விடுதலை பெற்றுவிட்டார்களா? இந்த விடயங்களை நிறைவேற்றுவதில் இருந்து நாம் விடூவிக்கப்படவில்லை என்பதை நீங்கள். அறிஷ்கள். நடத்தைகளுக்குரிய பிரமாணம், இயேசு மரித்தபோது முற்றுப்பெறவில்லை. அது சிலுவையில் ஆணியடிக்கப் படவோ அல்லது கொல்லப்படவோ இல்லை. இயேசு மரித்தபோது முற்றுப்பெற்ற, சடங்குகளுக்குரிய பிரமாணமே அதன் வல்லமையை இழந்துள்ளது.
ஆகவே மேலுள்ள வேதப்பகுதியில் 16ம் வசனம், கிறிஸ்தவர்கள் சடங்குகளுக்குரிய பிரமாணத்தினால் நியாயந்தீர்க்கப்படக் கூடாது என தெளிவாகக் கூறுகிறது. “ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு. நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படூத்தாதிருப்பானாக.”
லேவியராகமம், 11ம் அதிகாரத்தில், சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் ஒரு பகுதியாக சில மிருகங்களின் பெயர்கள் யூதர்கள் சாப்பிடக் கூடாததாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் பன்றியிறைச்சி, இரண்டு சிறகுகளும் செதில்களும் இல்லாத மீன் வகைகள் போன்றவை அடங்குகின்றன. அதனுடன் தொடர்புடையதாக பல்லி, நத்தை, எலி போன்ற ஊர்வனவும் சடங்குகளின்படி அசுத்தமாக இருக்கவேண்டும், அவை மண்
பாத்திரங்களில் விழுந்தால், அந்தப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் அசுத்தமாக இருக்கும், பாத்திரம் உடைக்கப்பட வேண்டும் என்பது யூதர்களுக்குத் தெளிவாக கூறப்பட்டது. லேவியராகமம் 11:34 “புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப் பானமும் அப்படிப்பட்ட பாத்திரமும் தீட்டுப்படும்.” ஆயினும் சாப்பிடுவதும் குடிப்பதும் குறித்த, இந்த சடங்குகளுக்குரிய பிரமாணம் கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டுவிட்டதுடன், நாம் இந்த போஜனத்தையும் பானத்தையும் குறித்து குற்றப்படுத்தக் கூடாது என கொலோ. 2:16 தெளிவாகக் கூறுகிறது. அவ்வாறே, “பண்டிகை நாளையும் மாதப் பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது,” கிறிஸ்தவர்களைக் குற்றப்படுத்தக் கூடாது. இந்த நியமங்கள் சிலுவையில் அறையப்பட்டு விட்டன. அவை நடூவிலிராதபடிக்கு எடுக்கப்பட்டாயிற்று! கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது முற்றிலுமாக நிறைவேற்றப்பட்ட இந்த சடங்குகளுக்குரிய பிரமாணத்தினால் குற்றப்படுத்துவதிற்கு எந்தக் கிறிஸ்தவனும் தன்னை அனுமதிக்கக் கூடாது.
இப்படியாக இருக்கையில், இந்த எல்லா நியமங்களும், “வருங் காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது” என 17ம் வசனம் தெளிவாகக் கூறுகிறது. அவைதான் சடங்குகளின் பிரமாணம் - ஒரு நிழல் அல்லது அடையாளம், சித்திரம், பாடத்திற்கு காண்பிக்கும் பொருள். கிறிஸ்து மரித்தபோது, நிழலாயிருந்த மற்றவை கற்பித்த பொருளே வெளிப்பட்டது. எமக்கு இப்போது கிறிஸ்து இருக்கிறார், அவர் இந்த சடங்குகளுக்குரிய பிரமாணங்களை நிறைவேற்றிவிட்டார், அவற்றை சிலுவையில் ஆணியடித்துவிட்டார், யூதர்களின் சடங்குகளுக்குரிய பிரமாணமாகிய ஓய்வு நாளினால் கிறிஸ்தவர்கள் குற்றப்படுத்தப்படக் கூடாது. இதனை தெளிவாக வேதவாக்குக் கற்பிக்கிறது.
2. ஓய்வு நாளானது சடங்குகளுக்குரிய பிரமாணமாக, யூதர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டது, அது ஒருபோதும் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கானது அல்ல என்பதிற்கான இரண்டாவது அத்தாட்சி ஓய்வுநாளானது இஸ்ரவேல் புத்திரருக்கும் தேவனுக்குமிடையேயான ஒரு விசேஷித்த அடையாளம் என வேதவாக்கு தெளிவாகக் கற்பிப்பதாகும்.
யாத்திராகமம் 31:12,13ல் தெளிவான கூற்று கொடுக்கப் பட்டுள்ளது, “மேலும், கர்த்தா மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல்
புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படூத்துகிற காத்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.”
வசனம் 13ல் தேவன், நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” எனக் கூறியுள்ளார். பரிசுத்தப்படூத்துகிற என்ற சொல் வேவறுபிரித்து வைத்த என்று அர்த்தம் தருகிறது (72 974 $ய1101]7 181210 420 மறவா). ஆகவே இஸ்ரலேர்கள் மற்றைய ஜாதிகளிடத்தில் இருந்து முற்றிலும் வேேறுபிரிக்கப்பட்டவர்கள். புறஜாதிகளிடத்தில் இருந்து பூதர்கள் வேறுபிரிக்கப்பட்டதிற்கான அடையாளமானது ஓய்வு நாளாகும்.
வசனம் 16 மற்றும் 17ல் தேவன், “ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வு நாளை நித்திய உடன்படிக் கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக் கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமா யிருக்கும்;....” எனக் கூறியுள்ளார்.
எசேக்கியேல் 20:12ல் கர்த்தர், “நான் தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற காத்தா என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வு நாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” என்று கூறியுள்ளார்.
ஓய்வு நாளானது இஸ்ரவேலருக்கும் தேவனுக்குமிடையேயான ஒரு விசேஷித்த அடையாளமாக, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதிற்குண அடையாளமாக, மற்றைய ஜாதிகளிடத்தில் இருந்து வேறுபிரிக்கப்பட்ட மக்கள் என்பதிற்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது என்று மறுபடியும் எமக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இப்போது எல்லா சடங்குகளுக்குரிய பிரமாணங்களும் அவ்வாறுதான் இருக்கின்றன; அவை இஸ்ரவேலருக்கான விசேஷித்த கட்டளையாகும், அவை மற்றைய ஜாதிகளுக்கானவை அல்ல.
விருத்தசேதனமும் அவ்வாறே இஸ்ரவேலருக்கும் தேவனுக்கு மிடையேயான ஒரு அடையாளமாகும். அவ்வாறே உணவுகளுக்குரிய பிரமாணங்களும் இருந்தன. அவ்வாறே யூதர்களுடைய பலி செலுத்துதல்களும் இருந்தன. அவ்வாறே ேேவியருடைய ஆசாரியர்களும் இருந்தார்கள். சடங்குகளுக்குரிய பிரமாணமானது யூதர்களுக்கு மாத்திரமான பிரமாணமாகும்.
நடத்தைகளுக்குரிய பிரமாணத்தில் இருந்து எவ்வளவிற்கு வித்தியாசமானது! “கொலை செய்யாதிருப்பாயாக” - இது முழு உலகிற்குமானது. “விபசாரம் செய்யாதிருப்பாயாக” - இதுவும் முழு உலகிற்குமானது. “களவு செய்யாதிருப்பாயாக” இதுவும் முழு மானிடருக்குமானது. எந்தவொரு தேசமோ அல்லது ஜாதியோ, “பொய், களவு, கொலை செய்ய வேண்டாம் எனும் கட்டளைகள் கொடுக்கப்பட்ட மக்கள் நாம் மாத்திரமே. இது எமது தேசத்திற்கும் தேவனுக்குமிடையேயான விசேஷித்த அடையாளம்” என்று கூறமுடியாது. நடத்தைகளுக்குரிய பிரமாணம் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திற்கு கொடுக்கப்பட்டதில்லை. இது சர்வதேச ரீதியானது, எல்லாருக்கும் ஒரே மாதிரியானது. ஆனால் சடங்குகளுக்குரிய பிரமாணம் அவ்வாறில்லாமல், “நாம் தேவனால் வேறுபிரிக்கப்பட்ட மக்கள் என்பதைக் காண்பிக்க தேவனுக்கும் எமக்குமிடையேயான அடையாளமாகிய - விருத்தசேதனத்தைக் கைக்கொள்ளுகிறோம். நாம் பலிகளையும், பண்டிகைகளையும், யூதர்களின் உணவுக்குரிய பிரமாணங்களையும் கைக் கொள்ளுகிறோம். நாம் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதிற்கு, அவை எமக்கும் தேவனுக்குமிடையேயான அடையாளம்” என யூதர்கள் தாராளமாகக் கூறலாம். அதேமாதிரியான விதத்திலே, “ஓய்வு. நாளைக் கைக்கொள்ளும்படி எமக்குக் கட்டளை கொடுக்கப்பட்டூுள்ளது. இது எமக்கும் தேவனுக்குமிடையேயான ஒரு அடையாளம், தேவன் எம்மை வேறுபிரித்து வைத்துள்ளார், வரப்போகும் காரியங்களுக்கு நிழலாகவும் அடையாளமாகவும் கைக் கொள்ளும்படி தேவன் கூறியுள்ளார்” என பூதர்கள் கூறலாம்.
ஆகையால் யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கிழமை, ஏழாம் நாள், சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் பகுதி என்பது தெளிவானது. அது யூதர்களுக்கு மாத்திரமானது என்பதும் தெளிவானது. அக்கறையோடு கற்றுக் கொள்ளும் எந்த ஆத்துமாவினாலும் புரிந்து கொள்ள முடியும்.
3. யூதர்களின் ஏழாம் நாளான, சனிக்கிழமையைக் கைக் கொள்ளுவது, நடத்தைகளுக்குரிய பிரமாணமாக மனிதவர்க்கத்தின் இருதயங்களில் எழுதப்படாதபடியினால் இது சடங்குகளுக்குரிய பிரமாணமாக இருக்கிறது.
நடத்தைகளுக்குரிய பிரமாணமானது சர்வதேச ரீதியானது,
இதனை தேவன் பூதர்கள் புறஜாதியார் ஆகிய இருவருடைய இருதயங்களிலும் எழுதியுள்ளார். அதனை ரோமர் 2:14-16ல் வாசிக்கலாம்:
“அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப் பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப் பிரமாணமாயிருக்கிறார் கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தாக்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தாப்புக் கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.”
ஒருபோதும் பிரமாணத்தைக் கேள்விப்படாத, ஒருபோதும் வேத வாக்கைக் கேள்விப்படாத, ஒருபோதும் ஒரு சுவிசேஷ செய்தியையும் கேள்விப்படாத, புறஜாதிகளுக்கும் தங்களில் மனச்சாட்சி சாட்சி கொடுப்பதை நீங்கள் காணலாம். ஒருபோதுமே சுவிசேஷத்தைக் கேள்விப்படாத ஆபிரிக்காவில் உள்ள நீக்கிரோ இனத்தைச் சேர்ந்த ஒருவர், கொலை, பொய், களவு, விபசாரம் என்பன தவறானவை என்பதை அறிந்துள்ளார். அவருக்கு சரிக்கும் பிழைக்குமிடையேயான உணர்வு உள்ளது. எல்லா இடங்களிலும், தேவனை அறியாத மக்கள்கூட தாங்கள் பாவிகள் என்பதை அறிந்துள்ளதிற்கு இது ஒரு காரணமாக உள்ளது. அவர்களுடைய இருதயங்களில் நடத்தைகளுக்குரிய பிரமாணத்தை தேவன் எழுதியுள்ளார், அவர்கள் இந்தப் பிரமாணத்தில் அக்கறை செலுத்தாத போதிலும், நியாயத்தீர்ப்பு நாளில் அது அவர்களுக்கு விரோதமாக சாட்சி கொடுக்கிறது, என வேதவாக்கு கூறுகிறது.
ஆபிரிக்காவில் உள்ள நீக்கிரோவானாலும், அமெரிக்க இந்தியனானாலும், எந்த காட்டூமிராண்டியானாலும் ஒருபோதும்
சுவிசேஷத்தை அறியாத போதிலும், கொலை செய்வது, களவு எடூப்பது தவறானது என்பதை அறிவர்; ஆனால் தேவனை அறியாத அவர்கள், அகில ரீதியாக மனிதவர்க்கத்தின் இருதயத்தில் தேவன் எழுதியதிற்கூடாக இந்த ஆண் குழந்தைகள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்களா? இவ்வாறான விடயம் தேவனிடத்தில் இருந்து வந்ததாக ஒருபோதுமே சுவிஷேசத்தைக் கேள்விப்படாத, அல்லது வேதவாக்கை ஒருபோதுமே கேள்விப்படாத மனச்சாட்சியானது, ஆட்டிறைச்சியும் மாட்டிறைச்சியும் சாப்பிடுவது சரியானது, ஆனால் பன்றியிறைச்சி சாப்பிடுவது தவறானது எனக் கூறுமா? நிச்சயமாக இல்லை. சடங்குகளுக்குரிய பிரமாணமானது பூதர்களுக்கு மாத்திரமானது, அது நடத்தைகளுக்குரிய பிரமாணத்தைப் போன்று எல்லா மக்களுடைய இருதயங்களிலும் எழுதப்படவில்லை. இதே விதத்திலேயே ஓய்வு நாளும் சடங்குகளுக்குரிய பிரமாணமாக இருக்கிறது. ஏழு நாட்களில் ஒரு நாளை ஓய்வு நாளாகக் கொள்ள வேண்டும் அது சனிக்கிழமையாக இருக்க வேண்டும் என கூறுவதிற்கு அவர்களின் மனதில் எதுவும் இல்லை. யூதர்களின் ஓய்வு நாளைக் கைக்கொள்ள வேண்டும் என தேவனை அறியாத மக்களில் யாரும் ஒருபோதும் உந்தப்பட்டதில்லை. யாராகிலும் விளங்கப்படுத்தாத பட்சத்தில் அதனைக் கைக்கொள்ளாதது பாவம் என ஒருவரும் உணர்ந்ததில்லை. அவரின் மனது நிச்சயமாக அவருக்கு அதனை கற்பிப்பதில்லை.
ஆகையால் யூதர்களின் ஓய்வு நாளான, சனிக் கிழமையானது, மனிதவர்க்கத்தின் இருதயங்களில் எழுதப்பட்ட நடத்தைகளுக்குரிய பிரமாணம் அல்ல. அது சடங்குகளுக்குரிய பிரமாணம், சடங்குகளுக்குரிய பிரமாணத்தின் கீழான பூதர்களுக்குரியது, அது வேறுயாருக்குமானதல்ல.
4, யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கிழமை, பாலஸ்தீனாவில் உள்ள யூதர்களுக்கே பொருத்தமானது, குளிர் அதிகமாகவுள்ள மற்றைய நாடூகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமானதல்ல.
யாத்திராகமம் 35:3ல் இஸ்ரவேல் புத்திரருக்கு தெளிவாகக் கொடுக்கப்பட்ட கட்டளை, “ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீகளாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக் கொள்ளும்படி காத்தார் கட்டளையிட்டார்.”
“ஓய்வு நாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீகளாக” மூட்டாதிருப்பீகளாக என்ற சொல்லின் எபிரெய பதம் “பார்” என்பது, “எரிப்பதற்கு” என்ற அர்த்தமுடையது. ஓய்வு நாளைக் கைக்கொள்வதிற்கு மக்கள், தமது வீடுகளுக்குள் ஏழாம் நாளில் நெருப்பு எரிக்கக்கூடாது.
இது பாலஸ்தீனாவில் உள்ள யூதர்களுக்குக் கடினமானதல்ல. ஜக்கிய அமெரிக்காவின் வட பகுதியிலும், கனடாவிலும் உள்ளவர்களுக்கும், வெப்பநிலை பூச்சியத்திற்கும் அதற்கு கீழும் செல்லும் பனிக்கட்டிகள் விழும் நாடுகளில் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும். உண்மை என்னவெனில், யூதர்களின் ஓய்வு நாளைக் கைக் கொள்ள வேண்டும் என முக்கியத்துவப்படுத்தும் ஏழாம் நாள் வருகைக் காரர்களும், மற்றவர்களும் வாராந்தம் இந்த விடயத்தில் தவறுவிடூகிறார்கள். எண்ணாகமம் 15:32-36ல் சடங்குகளுக்குரிய பிரமாணத்தை மீறி, ஓய்வு நாளில் விறகு பொறுக்கியதிற்காக தேவனின் கட்டளைப்படி அந்த மனிதன் கல்லெறிந்து கொல்லப்பட்டதை வாசிக்கிறோம். ஆகையால், நாம் இதே ஓய்வு நாளைக் கைக்கொள்ளும்படிக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்குமானால், ஏழாம் நாள் வருகைக்காரர் வீட்டில் நெருப்பு எரிக்கையில் அவ்வாறான குற்றமுடையவராக இருக்கிறார். உண்மையில், யாராகிலும் எந்தவிதமான நெருப்பையாகிலும் சனிக்கிழமைகளில் மூட்டுவாராக இருந்தால், சடங்குகளுக்குரிய கட்டளையை மீறுகின்றார். அடுப்பில் உண்டாக்கும் நெருப்பிற்கும் குளிர்காய்வதிற்குப்போடும் நெருப்பிற்கும் வித்தியாசமுண்டு என வாதிடுவது மடமைத்தனமாக இருக்கும். அல்லது சமையல்வாயு அடுப்பின் திருகையைத் திருப்புவதினால் உண்டாகும் நெருப்பிற்கும் மற்றைய விதத்தில் உண்டாகும் நெருப்பிற்கும் தேவனின் பார்வையில் வித்தியாசம் உண்டு என கூறுவதும் மடமையாக இருக்கும். வேதாகமம் தெளிவாக ஓய்வு நாளைக் கைக்கொள்ளுபவர்கள் “ஓய்வு நாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீகளாக (அல்லது எரிக்காதிருங்கள், நெருப்பை தொடுக்காதிருங்கள்)” என கூறுகின்றது.
நிச்சயமாக எமது இரட்சகர் மரிப்பதிற்கு முன்னர், பாலஸ்தீனாவில்
இருந்த யூதர்களுக்காக கொடுக்கப்பட்ட சடங்குகளுக்குரிய கட்டளையாகும். பூதர்களுக்கல்லாமல், வேறுயாருக்கும் இது
கொடூக்கப்படவில்லை, அல்லது பாலஸ்தீனா நாட்டை அல்லாமல் வேறு நாட்டவருக்குக் கொடுக்கப்படவில்லை.
5. ஓய்வு நாளைக் கைக்கொள்ளுவது சடங்குகளுக்குரிய பிரமாணமாக இருந்தது, அது கிறிஸ்தவர்களுக்கானது அல்ல என்பதிற்கான ஐந்தாவது அத்தாட்சி, உருண்டு கொண்டிருக்கும் உலகத்தில் ஒரே நேரத்தில் ஓய்வு நாள் வருவதில்லை.
பூமி சுற்றுவதிற்கூடாக நாட்களைக் கணிப்பிடுகிறோம். ஒவ்வொரு தடவையும் பூமியின் ஒரு பகுதி சூரியனின் வெளிச்சத்தில் சுற்றுகிறது, இது ஒரு நாளை உருவாக்குகிறது. நாம் நடூ இராத்திரியிலோ அல்லது சூரிய உதயத்தில் ஆரம்பித்தாலோ, நாளானது பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான நேரத்தில் ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்காவிற்குள்ளே பார்க்கையில், நியுயோர்க்கில் நடூ இரவாக இருக்கும்போது சிக்காக்கோவில் இரவு 11:00 மணியாக இருக்கும், டென்வரில் இரவு 10:00 மணியாகவும், லொஸ் ஏன்ஜலில் இரவு 9:00 மணியாகவும் இருக்கும். அத்துடன் உலகத்தின் மற்றைய பகுதியில் பன்னிரண்டு மணித்தியாலம் முன் பின்னாக இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் ஒரு மனிதன் பூமியின் மேற்கு நோக்கிப் பயணிக்கையில், நாளானது நீண்டதாக இருக்கும், ஆயினும் அவர் தான் புறப்பட்ட இடத்தில் இருந்தவர்களைப் பார்க்கிலும் ஒரு நாள் குறைந்துவிடுவார். ஒவ்வொரு தடவையும் ஒருவர் கிழக்கு நோக்கி பயணிக்கையில், நாளானது குறுகியதாக இருக்கும் அத்துடன் அவர் சூரியனை ஒருதடவை கடந்து சென்றிருப்பார், அதனால் தான் புறப்பட்ட ஊரில் இருந்தவர்களிலும் அவருக்கு ஒரு நாள் அதிகமாகக் கிடைக்கும், மேற்கே நோக்கிச் சென்றவரிலும் பார்க்க இரண்டு நாட்கள் அதிகம் உடையவராகுவார்! இந்த ஊரில் மனிதன் வழமையான எண்ணிக்கையின் அடிப்படையில் சூரியனால் சுற்றப்பட்டிருப்பான். மேற்கு நோக்கிச் சென்றவன் தன்னை சூரியன் ஒரு தடைவ கடப்பதைத் தவிர்த்திருப்பான், கிழக்கே சூரியனை நோக்கிச் சென்றவன், சூரியனை மேலதிகமாக ஒருதடவை கடந்து சென்றிருப்பான். இந்த மூன்று மனிதர்களும் ஒவ்வொரு ஏழாம் நாளையும் ஓய்வு நாளாகக் கைக் கொள்வதிற்கு முயற்சித்திருப் பார்களானால், அதே ஊரில் இருந்தவர் சனிக்கிழமையையும், மேற்கே நோக்கிச் சென்றவர் ஞாயிற்றுக் கிழமையையும், கிழக்கே நோக்கிச்
ஏமம் நாளைக் கைக்கொணள்வதீற்கு எதீராக புதிய ஏற்பாட்ருக் கீிற்ஸ்தவர்கண் தெளனீவாக எச்சற்க்கப்பட்ருஸண்ணாறர்கள்
நாம் இப்போது மறுபடியும் புதிய ஏற்பாட்டிற்குத் திருப்பும்போது, ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டும் எனும் கட்டளைக்குப் பதிலாக, ஏழாம் நாளைக் கைக்கொள்வது அதைரியப்படுத்தப் பட்டுள்ளது. கொலோசெயர் 2:14ல் நமக்கு எதிராக இருந்தமையால் கையெழுத்தாக இருந்த நியமங்களை தேவன் குலைத்து, “அதை நடூவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்தார்” எனக் கூறுகிறது. அதன் பின்னர் 16ம் 17ம் வசனங்களில் எமக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டதைக் கவனியுங்கள்:
“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.”
பின்பற்றினால், அவர்கள் ஒரு ஓய்வு நாளைத் தவறவிடூவார்கள். அப்படி பின்பற்றாவிட்டால், அவர்களின் ஏழாம் நாள் அதன் பின்னர் எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும்.
உண்மையில், யூதர்களின் ஏழாம் நாள் ஓய்வை முழு உலகமும் கண்டிப்பாகக் கைக்கொள்ளும்படி ஒருபோதும் உருவாக்கவில்லை. அவர் முழு உலகிற்கும் இதனைக் கட்டளையிடவில்லை! அவர் இதனை பலஸ்தீனாவில் உள்ள யூதர்களுக்கே கட்டளையாகக் கொடுத்துள்ளார். ஒருதடவையாகிலும், ஒரு விக்கிரக ஆராதனையைச் செய்வதிற்கு, விபசாரம் செய்வதிற்கு, அல்லது கொலை செய்வதிற்கு, பிரயாணம் செய்வதின் சூழ்நிலை அவசியத்தை ஏற்படுத்துகிறது என இப்போது கற்பனை செய்ய முடிகிறதா? நிச்சயமாக இல்லை! நடத்தைகளுக்குரிய பிரமாணமானது அகிலரீதியானது, பூமியில் வசிக்கும் இடத்தைப் பொறுத்தோ அல்லது மக்களின் தேசியத்தைப் பொறுத்தோ ஒருபோதும் மாறுவதில்லை. ஆகவே ஓய்வு நாள் கட்டளையானது சடங்குகளுக்குரியது, அது வரையறைக்குட்பட்ட பாலஸ்தீனாவிலுள்ள, பூதசமயத்திற்குக் கீழான, பூதர்களுக்கு மாத்திரமானது. பாலஸ்தீனா குறுக்கே நூறு மைல் தூரத்திலும் குறைவானதாகவே இருக்கிறது. பாலஸ்தீனாவின் கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்குமிடையே நான்கு நிமிட சூரிய நேர வித்தியாசம் கூட இல்லை. பூமியின் சுழற்சி சடங்குகளுக்குரிய பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதிற்கு பூதர்கள் மத்தியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த மாட்டாது. எனினும் இதனை முழு உலகிலும் கைக்கொள்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. சகோதரரே, தேவன் தான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்தே செய்துள்ளார்.
யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கிழமை, சடங்குகளுக்குரிய பிரமாணமாக இருந்தது, அது நடத்தைகளுக்குரிய பிரமாணம் அல்ல. அது இஸ்ரவேலருக்கும் தேவனுக்குமிடையேயான ஒரு விசேஷித்த அடையாளமாக கொடுக்கப்பட்டது, சீனாய் மலையில் மோசேயின் பிரமாணம் கொடுக்கப்படுவதிற்கு முன்னர் ஒருபோதும் கட்டளையிடப்படவில்லை, புதிய ஏற்பாட்டில் ஒருபோதும் கட்டளையிடப்படவில்லை, கொலோசெயர் 2:14-17ல் கிறிஸ்துவின் சிலுவையில் ஆணியடிக்கப்பட்ட நியமத்தின் ஒரு பகுதியாகவுள்ள இந்த பிரமாணத்தினால் நாம் குற்றஞ் சாட்டப்படக் கூடாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இணங்காமை, பொதுவாக பூர்வமுதல் வேதாகமம் வெளிப்படுத்திய கொள்கைக்கு மாறான கருத்து, ஒரு தவறான குழுவாக, பிழையான அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படுகிறது. நரகத்தில் துன்மார்க்கர் சதாகாலமும் வாதிக்கப்படூவார்கள் என்பதை ஏழாம் நாள் வருகைக்காரர் போதிக்காதது ஆச்சரியமானதல்ல; மாம்சம் புசிப்பது தவறானதென இவர்கள் போதிப்பது ஆச்சரியமானதல்ல; யூதர்களுக்கு கட்டளையிடப்பட்டதைப் போன்று, சனிக் கிழமையை, ஏழாம் நாள் ஓய்வை கடைப்பிடிக்க வேண்டும் என இவர்கள் கற்பிப்பது ஆச்சரியமானதல்ல! மோர்மன்ஸ், கிறிஸ்தவ விஞ்ஞானிகள், மற்றும் முகமதேயன்ஸ் போன்று, வேதாகமத்திற்குப் புறம்பாக தெய்வீக வெளிப்பாடு என கூறும் யாராக இருப்பினும், அவர்கள் தவறான குழுக்களே. இது ஏழாம் நாள் வருகைக் காரருக்குள் கிறிஸ்தவர்கள் இல்லை என்பது அர்த்தமில்லை. இதன் அர்த்தமானது, அவர்களுடைய உபதேசத்தின் அஸ்திபாரம் வேதாகமத்தில் மாத்திரம் போடப்பட்டதில்லை, ஆகையால் வேதாகம உபதேசத்தின் கொள்கை, மனிதர்கள் உருவாக்கிய உபதேசத்தினால் குலைக்கப்பட்டு இழிவாக்கப்பட்டூுள்ளது, இது திருமதி ஈ.ஜி. வைற் என்பவர் எழுதியதையும் உள்ளடக்குகிறது.
2. வேதாகமத்தில் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு மேலதிகமாக எதையாகிலும் சேர்ப்பவர்களுக்கு எதிராக தேவனின் பயங்கரமான வாதை வாக்களிக்கப்பட்டூள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
தெய்வீக வேதவாக்கு விதிமுறை வெளிப்படுத்துவதின் காலம், வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்துடன் முற்றுப் பெறுகிறது என வெளிப்படுத்தல் 22:18,19 வசனம் கூறுகிறது. இந்த வேத வாக்குக் கூறுவது: “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டூவார். ஒருவன் இந்தத் தார்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடூத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட வைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடூத்துப்போடுூவார்.” எனவே வேதாகமத்துடன் எதையும் கூட்டவே குறைக்கவே முடியாது.
பயங்கரமான சாபமானது, “ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டூவார்.”
தேவனின் எழுதப்பட்ட வெளிப்பாட்டுடன் எதையும் சேர்ப்பதிற்கு யாருக்கும் உரிமையில்லை. பத்மு தீவில் அப்போஸ்தலனாகிய யோவான் தனது பேனாவை வைத்ததுடன் வேதவாக்கு எழுதுவதிற்கான காலம் முற்றுப் பெற்று விட்டது! வேத வார்த்தையில் இருந்து எதையும் எடுத்துப் போடவோ அல்லது இணைக்கவோ யாருக்கும் உரிமையில்லை. தனது அப்போஸ்தலனுக்கூடாக தேவன்தாமே இதனை முடித்துள்ளார். ஏழாம் நாள் வருகைக்காரர் திருமதி. வைற் எழுதியதில் தங்கியிருப்பதும், மோர்மன்ஸ் மோர்மனின் புத்தகத்தில் தங்கியிருப்பதும், கிறிஸ்ரியன் விஞ்ஞானிகள் என்பவர்கள் மேரி பேக்கர் எடி எழுதியதில் தங்கியிருப்பதும் - எல்லாரும் தேவனின் இந்தக் கட்டளையை உதாசினப்படுத்தி மீறியிருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் சுவிசேஷத்தை இழிவுபடுத்தியதுடன் தம்மீது பயங்கரமான சாபத்தையும் வாதையையும் வருவித்துள்ளார்கள்.
(திருமதி. வைற் எழுதியவை தேவனிடத்தில் இருந்து வந்த வெளிப்பாடு என ஏழாம் நாள் வருகைக்காரரின் உபதேசத்தின் அடிப்படையில் எண்ணப்படுவது குறித்து யாருக்காகிலும் சந்தேகம் இருக்குமாயின், அவர் எழுதிய புத்தகங்களில் சிலவாகிய, “7௪ சேசசர் மேரச” “7%௪ 04௪ 7.42,” “7௪ ரர் 171/4125 071470. 171072 “7௪ பிறர்7/ 2] 77மறர்சடு” போன்ற புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். இந்தப் புத்தகங்கள் ஏழாம் நாள் வருகைக்கார்களின் ஸ்தாபனத்தின் “பெண் தீர்க்கதரிசி” திருமதி. வைற் எழுதியவையாகும். ஏழாம் நாள் வருகைக்காரரின் சபையின் பொது மாநாட்டுக்கு எழுதி அவர்களின் அலுவலக அறிக்கையைக் கேட்டுப் பாருங்கள்.)
3. ஏழாம் நாள் வருகைக்காரர் தமது ஸ்தாபனத்தைக் குறித்து பயங்கரமான அவமானத்திற்குள்ளாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் தமக்கு ஆதரவாளர்களைச் சம்பாதிக்கும்வரை தம்மை அடையாளம் காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தேசிய-ரீதியான வாராந்த வானொலி நிகழ்ச்சி, “தீர்க்கதரிசன
த்தின் சத்தம்” (772 10/22 ஐ 71௦020) முற்றிலும் ஒரு ஏழாம் நாள் வருகைக்காரரின் ஸ்தாபனத்தின் நிகழ்ச்சியாக, தமக்கென மாத்திரம் சொந்தமாகவுள்ள உபதேசத்தை கற்பிக்கும் சிந்தனை கொண்டது - ஏன் இந்த நிகழ்ச்சி ஒருபோதும் வருகைக் காரரின் (4421//58]] நிகழ்ச்சியென அறிவிக்கப்படவில்லை? தமது அதிகமான உபதேசத்திற்கு அடித்தளம் அமைத்துள்ள திருமதி. வைற் எழுதிய, மற்றைய புத்தகங்களை ஏன் இவர்கள் ஒருபோதும் பெயர் குறிப்பிடாமல் “அருளப்பட்ட பாகங்கள்” (ர்சம் 16/88) என அழைக்கிறார்கள்? ஏன் ஏழாம் நாள் வருகைக்காரரின் ஊழியர்கள் ஒரு புதிய நகரத்திற்குள் செல்லும் போது தம்மை ஏழாம் நாள் வருகைக்காரரின் ஊழியர்கள் என அடையாளம் காண்பிப்பதில்லை? ஏன் இவர்கள் “தீர்க்கதரிசனக் கூடாரம்” அல்லது “சர்வதேச எழுப்புதல்” என்ற பெயர்களில் இருந்து கொண்டு தமது சொந்த உபதேசத்தையும் தாம் எதனைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தமக்கான ஆதரவாளர்கள் சிலரைச் சம்பாதித்து, இரகசியமாக விசுவாசத்திற்குள் நுழைந்து, விசுவாசிகளின் உபதேசத்தை தவறாகப் பொருள்படுத்தி அவர்கள் சபைகளை விட்டூ வரும்வரை தம்மை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்? ஏன் தமக்குச் செவிகொடூப்பவர்களின் மனங்களில் நஞ்சூட்டப்படும்வரை தமது உண்மையான அடையாளத்தைக் காண்பிக்காமல் தொடர்ச்சியாக அவர்களை மதம் மாறப்பண்ணுகிறார்கள்?
ஏன் ஏழாம் நாள் வருகைக்காரரின் பிரசுரங்கள் (பத்தாயிரக் கணக்கான பிரதிகள்) ஏழாம் நாள் வருகைக்காரரின் வெளியீடுகள் என பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கின்றன? பப்டிஸ்ற்கள், மெதடிஸ்ற்கள், கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள் போன்ற - இவர்கள் எல்லோரும் தமது வெளியீடுகளில், தமது உபதேசத்தை, தமது விசுவாச நிலைப்பாட்டை, தமது உபதேசத்திற்கு மனந்திருப்புவதிற்கு பிரசுரிக்கும்போது சந்தோஷமாக தமது பெயர் விபரங்களுடன் விநியோகிக்கிறார்கள். ஏன் இவ்வாறு ஏழாம் நாள் வருகைக்காரர் செய்வதில்லை?
இதற்கான பதிலானது, இவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காண்பித்தால், இவர்களுடைய தலைவர்களைக் கண்டு கொண்டால், இவர்கள் எமது வேதாகமத்தைத் தவிர்ந்து தேவனின் வெளிப்பாட்டை வேறுவிதத்தில் பெற்றுக் கொள்பவர்கள் என்பது
வெளியாகும்; அத்துடன் இந்தக் குழுவினர் 1844 மற்றும் 1846ல் மலை உச்சியில் ஏறி, வெள்ளை அங்கி தரித்து, நடைபெறாத எடூத்துக் கொள்ளப்படூதலுக்காகக் காத்திருந்த மில்லறைற்ஸ் என்பவர்களில் இருந்து வளர்ச்சியடைந்தவர்கள்; அவர்கள் இன்னமும் நாட்களைக் குறிப்பிட்டு, பரலோகத்தின் மகா பரிசுத்தத்திற்குள் 1844 வரை கிறிஸ்து பிரவேசிக்கவில்லை எனக் கூறினார்கள்; இந்த ஏழாம் நாள் வருகைக்காரர், தம்மை மாத்திரம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், தாம் மாத்திரமே பூமியில் தேவனின் பிரதிநிதிகள் எனக் கூறுவதை மக்கள் அறிந்து கொள்வார்களானால்; ஞாயிற்றுக். கிழமையைக் கைக்கொள்பவர்கள் “மிருகத்தின் அடையாளத்தைப்” பெற்றுக் கொண்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டுபவர்கள்; “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடூண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டூ விலகிப்போவார்கள். விவாகம் பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜன பதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடூவார்கள்” (1தீமோத்தேயு 4:1-3) என தேவன் குறிப்பிட்ட தீரக்கதரிசனத்தின்படி இந்த ஏழாம் நாள் வருகைக்காரர் செய்கிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டால், மக்கள் ஒருபோதும் இவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். இது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இவர்களால் ஏமாற்றப்படாதிருங்கள்!
இந்தப் புத்தகத்தை இரண்டாந்தரமுமாக முழுமையாக, ஜெப சிந்தையோடு, எல்லா வேதவாக்கையும் ஒப்பிட்டு வாசிக்கவும். மற்றவர்களும் வாசித்து இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளச் செய்யவும்.
எந்த நாளில் கிறிஸ்தவர்கள் ஆராதிக்க வேண்டும் என்ற பிரச்சனை இன்று அநேகருக்குக் காணப்படுகிறது. ஏழாம் நாளான ஓய்வு நாள் சனிக்கிழமையே “ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக எனும் கட்டளையாகவும் அந்தக் கட்டளையை மீறுபவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேரமாட்டார்கள் என ஒரு சாராரும், ஓய்வு நாள் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டு விட்டது என்று கூறி ஞயிற்றுக் கிழமையில் ஓய்வு நாள் ஆராதனைகளை நடத்தும் மற்றுமொரு சாராரும் காணப்படூகின்றார்கள். இவை இரண்டூமே தவறான போதனைகள் என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் வேதாகமத்தின் வெளிச்சத்தில் கண்டு கொள்ளலாம்!
எமது வாழ்க்கைக்கான அனைத்து விடயங்களுக்கும் நாம் தேவனின் வார்த்தையிலே சார்ந்திருக்க வேண்டூம். அது மாத்திரமே எமக்கான தேவனின் வெளிப்பாடாகும். வேதாகமத்திற்குப் புறம்பான எந்த மனித போதனைகளையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தேவனின் போதனைக்கு முரணான எந்தக் கற்பித்தலையும், கற்பிப்பவர்களையும் நாம் விட்டு அகன்று தேவனின் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். எம்மை நியாயந்தீர்ப்பதும், நித்திய ஜீவனுக்கு வழி காட்டுவதும் தேவனின் வார்த்தை மாத்திரமே!
நீங்கள் எவ்வாறான வழிகாட்டலில் இருக்கிறீர்கள் என்பது உங்களின் மரணத்தின் பின்பான வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே சரியான தேவனின் பாதையில் செல்வதிற்குத் தீர்மானம் எடூங்கள்!
மேலதிக புத்தகங்களுக்கும் விபரங்களுக்கும்
எமதூ மூகவர்: மைம்ண் பங்டிஸற் ௪மை ளெயறிருகஸ்
முற்றிலும் இலவசமானது
வடர மோ பவஙாடா₹5 0776469160
ஜான் ஆயர்.
ஏதனைக் கிரிசம்தவர்கள் கைக்கொள்ள (வேண்கும்?
ஏழாம் நாள் வருகைக்காரருக்கான (ேேதாகமத்தீன் பதீல், ஓய்வு நாளானது மோசேயின் பிரமாணத்தீன் ஒரு பகுதியாக சீனாய் மலையிடூலயே முதல் தடவையாகத் தெரியப்பருத்தப் பட்டது என்பதையும், அதற்கு முன்னர் அதூ ஒருபோகும் கட்டளையிடப்படவும் கைக்கொள்ளப்படவும் ஒல்லை என்பதை நிரூபிக்கிறது. இது. ஒருதடவையாகிலும் புதிய ஏற்பாட்டில் கட்டளையிடப்படவீல்லை; ஓய்வு நாளானது சடங்குகளுக்குரிய பிரமாணம், ஓது நடத்தைகளுக்குரிய பிரமாணம் அல்ல, இது இஸ்ரவேலருக்கான வீசேஷித்த ஒரு அடையாளம்; ஓய்வு நாளைக் கைக்கொள்வதிற்கு எதிராக புதிய ஏற்பாரு கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை கொருக்கிறது. யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கீழமை, மனிதனின் கீரியையைச் சித்தரிக்கிறது5 ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாள், இரட்சிப்பு கிருபையினால் வரூவதைச் சித்தரிக்கிறது.
ரைஸ் அவர்கள்