சங்கீதம் 7
கர்தாவே, என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிற யாவருக்கும் என்னை நீங்கலாக்கி இரட்சியும்"* - சங் 7:1
தாவீதுமேல் பொய் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர் உடனேயே நீதிமன்றத்திற்கு ஓடவில்லை. நண்பர்களிடம் முறையிடவில்லை. முதலில் கர்த்தரிடம் ஓடினார்.
தியானம்: நமக்கு அவதூறு வரும்போது, நம்மை நியாயப்படுத்த முதலில் கர்த்தருடைய பாதத்தில் முழங்கால் படியிடவேண்டும். அவரே நம்மை விடுவிக்கிற கன்மலை.
2. இருதயத்தை சோதிக்கிற தேவன்
> "நீதியுள்ள தேவன் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதிக்கிறார்" - சங் 7:9
மனிதன் முகத்தை பார்கிறான். ஆனால் கர்த்தர் இருதயத்தை பார்க்கிறார். தாவீது சொல்கிறார்: "என் நீதிக்கும் என்னிலுள்ள உத்தமத்திற்கும் தக்கதாக என்னை நியாயந்தீரும்" - சங் 7:8
தியானம்: வெளியே நல்லவனாகக் காணப்பட நடிக்க முடியும். ஆனால் கர்த்தர் உள்ளே பார்கிறார். அதனால் ஒவ்வொரு நாளும் "ஆண்டவரே என் இருதயத்தை சுத்திகரியும்" என்று ஜெபிப்போம்.
*3. தீமை தனக்கே திரும்பி வரும்
"இதோ, அவன் அக்கிரமத்தைக் கர்ப்பந்தரித்து, அநியாயத்தைக் கருத்தரித்து, பொய்யைப் பிரசவிக்கிறான்" - சங் 7:14
"தான் வெட்டின குழியிலே விழுவான்" - சங் 7:15
தாவீது பழிவாங்கவில்லை. கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார். தீமை செய்கிறவன் தான் வெட்டின குழியிலேயே விழுவான் என்பது தேவனுடைய நியாயம்.
தியானம்: யாராவது நமக்கு கெடுதல் செய்தால் கோபப்படாமல், கர்த்தர் நியாயம் செய்வார் என்று விட்டுவிடுவோம். நம்முடைய கைகள் சுத்தமாக இருக்கட்டும்.
முடிவு: துதியோடு முடித்தல்
"கர்த்தருடைய நீதிக்குத்தக்கதாக அவரைத் துதித்து, உன்னதமான கர்தருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்" - சங் 7:17
பிரச்சனையோடு ஆரம்பித்த சங்கீதம், துதியோடு முடிகிறது. ஏனென்றால் தாவீதுக்கு தெரியும் - *நம்முடைய யுத்தத்தை நடத்துகிறவர் கர்த்தர் என்று....
இன்றைய ஜெபம்:
"பரலோக பிதாவே, என்னை துன்பப்படுத்துகிறவர்கள் மத்தியில் உம்மையே நம்ப கற்றுத்தாரும்.
என் இருதயத்தை சோதித்து, என்னை உத்தமமாக நடத்தும்.
உம்முடைய நீதிக்காக உம்மை துதிக்கிறேன். ஆமென்"