சபை உடன்படிக்கை உறுதிமொழி 

எமது விசுவாசத்தின் பகிரங்க அறிக்கையினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எமது இரட்சகராக ஏற்றுக் கொள்ள, தேவ ஆவியானவரினால் வழிநடத்தப்பட்டு, விசுவாசித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் பப்டிஸம் பெற்று; நாம் இப்பொழுது தேவனின், தூதர்களின், மற்றும் இச் சபையின் பிரசன்னத்தில் அதிக மகிழ்ச்சியுடன், கிறிஸ்துவின் ஒரே சரீரமாக, ஒருவரோடு ஒருவர் இவ் உறுதி மொழிக்குள் பிரவேசிக்கிறோம்.

ஆகையால் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால், கிறிஸ்தவ அன்பில் இணைந்து நடப்பதற்கு நாம் உடன்படிக்கை செய்கிறோம். இச்சபையின் முன்னேற்றத்திற்காக, அறிவிலும், பரிசுத்தத்திலும், தேற்றுவதிலும், உண்மையாக ஒத்துழைப்பதற்கு; ஆவிக்குரிய ரீதியிலும், அபிவிருத்தி ரீதியிலும், ஊக்கமளிப்பதற்கு; இதன் உபதேசங்கள், ஒழுங்குகள், பிரமாணங்கள், ஆராதனைகள் தொடர்ந்திருக்கச் செய்வதற்கு; மானிட கலாசாலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புனிதமான ஸ்தானத்தைக் கொடுப்பதற்கு சுவிசேஷமானது தேசம் முழுவதும் பரம்புவதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும், சபையின் செலவிற்கும், ஊழியத்திற்கு ஆதரவளிப்பதற்கும் முழு மனதுடனும் ஒழுங்காகவும் உதவி செய்ய நாம் உடன்படிக்கை செய்கிறோம்.

நாம் குடும்பத்தை பராமரித்து, இரகசியமான தியானங்களை நடத்துவதாகவும், எமது பிள்ளைகளை சமய ரீதியில் கற்பிப்பதாகவும்; எமக்கு அறிமுகமானவரினதும், உறவினரினதும் இரட்சிப்பைக் காணவும், உலகில் ஜாக்கிரதையுடன் நடக்கவும்; எமது நடக்கைகளில் நேர்மையாக இருக்கவும், எமது அலுவல்களில் விசுவாசத்துடனும், எமது ஒழுக்கத்தில் பின்பற்றத்தக்க வகையிலும்; எல்லா வீண் பேச்சையும், புறங்கூறுதலையும், மிதமிஞ்சிய கோபத்தை விலக்கவும்; போதையூட்டும் பொருட்களை ஒரு பானமாக அருந்துவதையும், அதனை விற்பதையும் விட்டொழித்து, எமது இரட்சகரின் இராச்சியத்தின் விருத்திக்கு பிரயாசப்பட ஆர்வமுள்ளவர்களாக இருக்கவும் உடன்படிக்கை செய்கிறோம்.

மேலும் நாம் ஒருவரையொருவர் சகோதர அன்புடன் காக்கவும்; ஜெபத்தில் ஒருவரை ஒருவர் நினைவு கூரவும், வியாதியிலும், துயரத்திலும், ஒருவருக்கு ஒருவர் உதவவும்; கிறிஸ்தவ அனுதாப உணர்வை விருத்தி செய்யவும், பேச்சில் மரியாதையும்; மனதிற்கு வருத்தத்தை உண்டுபண்ணும் கருத்துக்களை எடுப்பதற்கு தாமதமாக இருக்கவும், அதனால் சமாதானப்பட்டு உறவாக எப்பொழுதும் தயாராகவும், தாமதமின்றி எமது இரட்சகரின் பிரமாணத்தைக் காத்துக்கொள்ள கவனம் உள்ளவர்களாக இருக்கவும் உடன்படிக்கை செய்கிறோம்.

மேலும் நாம் இவ்விடத்தில் இருந்து விலத்தும்போது சாத்தியமான வரையில் அதிக சீக்கிரமாக, கடவுளின் வார்த்தையின்-கொள்கையையும், இந்த உறுதி மொழியையும், கடைப்பிடிக்கக் கூடிய ஒரு சபையில் இணைந்து கொள்வோம் எனவும் உடன்படிக்கை செய்கிறோம்.

© Copyright BIBLE BANK. All Rights Reserved.