அட்டவணையின் விளக்கம்
டாக்டர். ஜே. எம். கரோல் அவர்கள்
 

எமது ஸ்தாபகரான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்து,
20ம் நூற்றாண்டு வரை, பப்டிஸ்ற் சபைகளின் சரித்திரத்தை விளங்கப்படுத்துவதாகும்.


1.     இந்த அட்டவணையினதும் புத்தகத்தினதும் நோக்கமானது, சரித்திரத்தின்படி பப்டிஸ்ற் சபைகளின் இணைப்பு துண்டிக்கப்படாமல் கிறிஸ்துவில் இருந்து அவரின் தீர்க்கதரிசனமான "இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." என்பது நிறைவேற்றப்பட்டு வருவதைக் காண்பிப்பதாகும் -  ஒழுங்கற்ற சபைகளில் இருந்து கத்தோலிக்கம் மற்றும் புரட்டஸ்தாந்துகள் வளர்ச்சியடைந்ததைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. பப்டிஸ்ற்கள் கத்தோலிக்கத்தில் இருந்து வராததினால், அவர்கள் புரட்டஸ்தாந்துகள் அல்ல.

2.     மேலேயும் அடியிலும் உள்ள இலக்கங்கள் 20 நூற்றாண்டுகளுக்கு அடையாளமாகும். முதலாவது குறுக்குக்கோடு கி.பி. 1 ஐயும், இரண்டாவது கோடு, கி.பி. 100 ஐயும் காண்பிக்கிறது, அவை அவ்வாறே தொடர்ந்து செல்கின்றன.

3.     அடிப்பகுதியில் உள்ள கிடைக்கோடுகளுக்கிடையே கடந்த வருடங்களிலும் காலங்களிலும் பப்டிஸ்ற்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளன - நோவேசன்ஸ், மொன்ரானிஸ்ற்ஸ், போலிக்கன்ஸ், வால்டான்சிஸ் போன்ற பெயர்கள் உள்ளன.

4.     பப்டிஸ்ற் சபைகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற சிவப்பு வட்டங்கள் கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின்போது கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜெருசலேம் சபையில் ஆரம்பிக்கிறது, அந்த சபையில் இருந்தே யூதேயா, அந்தியோகியா சபையும், மற்றைய சபைகளும் வளர்ச்சியடைந்தன. அவர்கள் துன்புறுத்தப்பட்டதை சிவப்பு பிரதிநிதிப்படுத்துகிறது. கசப்பான எதிர்ப்புகளுக்கும் கடுந்துன்பங்களுக்கும் மத்தியில் ஒவ்வொரு காலத்திலும் பப்டிஸ்ற் சபைகளைக் காணலாம். அவர்களுக்கு முதலாவது பட்டப்பெயராக கிறிஸ்தவர்கள் என்றும், பின்னர் அனா-பப்டிஸ்ற் என்றும், தொடர்ந்து வழங்கப்பட்ட பெயர்களையும் காணலாம். இருண்ட காலத்தைக் குறிக்கும் பகுதியையும் நீங்கள் இங்கே காணலாம்.

இந்தக் காலப்பகுதியில்கூட சபைகளின் இணைப்பு தொடர்ச்சியாக அனா-பப்டிஸ்ற்கள் என அழைக்கப்பட்டுச் செல்வதை நீங்கள் காணலாம். இவர்கள் தொடர்ச்சியான கசப்பான துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 16ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அனா என்பது அகற்றப்பட்டு சாதாரணமாக பப்டிஸ்ற்கள் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.

5.    கறுப்பு வட்டங்கள் பிழைகள் ஊடுருவப்பட்ட சபைகளைக் காண்பிக்கின்றன - ஆகையால் அவை ஒழுங்கற்ற சபைகள் என அழைக்கப்பட்டுள்ளன. முதலாவது தவறு ஆளுகையில் ஏற்பட்டது - போதகர்கள் கிறிஸ்துவினால் வழங்கப்படாத அதிகாரங்களை தங்களுக்கு எடுத்துக் கொண்டார்கள். பெரிய சபைகளில் உள்ள போதகர்கள் மற்றைய சிறிய சபைகளின் மீது அதிகாரம் காட்டினார்கள். அதுவே 3ம் நூற்றாண்டில், ரோம குருவாட்சியாகியது. எல்லா சபைகளும் பிரதிநிதிகளை அனுப்பி ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என 313ல் கொன்ரான்ரின் சக்கரவர்த்தி, ஒரு அழைப்புவிடுத்தான். சிவப்பு சபைகள் - அதாவது பப்டிஸ்ற் சபைகள் - இந்த அழைப்பை நிராகரித்தன, ஆயினும் ஒழுங்கற்ற சபைகள் ஒன்றுகூடின.

சக்கரவர்த்தி அதற்கு தலைவராக்கப்பட்டான், ஒழுங்கற்ற சபைகள் என அடையாளங் காணப்பட்ட சபைகள் அரசாங்கத்தின் சபையாக்கப்பட்டது. பேதுருவின் வழித்தோன்றல் என லியோ II அதிகாரத்துடன் உரிமைபாராட்டும் வரையில் சக்கரவர்த்தி இந்த சபைகளுக்குத் தலையாக இருந்தான். சபையின் ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட தவறு எவ்வாறு போப் ஆட்சியைக் கொண்டு வந்தது என்பதைப் பாருங்கள். 16ம் நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து சபைகள் ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தன. கத்தோலிக்கத்தின் தவறை எதிர்த்தபடியினால் அவர்கள் புரட்டஸ்தாந்துகள் என அழைக்கப்பட்டார்கள்.

6. பப்டிஸ்ற் சபைகள் ஒழுங்கற்ற சபைகளுடன் ஐக்கியங்கொள்ளக் கூடாதென 251ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இவர்கள் சிசுக்களுக்கு பப்டிஸம் கொடுப்பதையும், இரட்சிப்புக்கு பப்டிஸம் அவசியம் எனும் தவறான கொள்கைகளை ஏற்க மறுத்தமையால் இவர்களுடைய பழைய பட்டப்பெயரான அனா-பப்டிஸ்ற் என்பது வழங்கப்பட்டது, அதன் அர்த்தமானது திரும்ப பப்டிஸம் கொடுப்பவர்கள் என்பதாகும்.


© பதிப்புரிமை பெறப்பட்டது: பிரதி செய்யக் கூடாது: பைபிள் பப்டிஸ்ற் சபை வெளியீடுகள்

©  Copyrighted 1931 by Ashland Avenue Baptist Church, Lexington, Kentucky 40502