நாம் விசுவாசிப்பது என்ன
பப்டிஸ்ற் ஒரே புத்தகத்தையுடைய மக்கள் -
அது வேதாகமம் - சங்கீதம் 138:2

 

எமது சபையின் விசுவாசத்தையும் கொள்கைகளையும் குறித்து நாம் என்னத்தை விசுவாசிக்கிறோம் என்று அநேக தடவைகளில் கோட்கப்பட்டுள்ளது.  விசுவாசத்தைக் குறித்து நாம் வைக்கக் கூடிய சாதாரணமான கூற்று இதுதான்:  “நாம் வேதாகமம் முழுவதையும் ஆதியாகமம் 1:1 தொடக்கம் வெளிப்படுத்தல் 22:21 வரையும் விசுவாசிக்கிறோம்.” எப்படியாயினும், எம்மத்தியிலே மிகவும் நிச்சயமாக விசுவாசிக்கப்படும் சில காரியங்களை முன்வைப்பது நல்லதென நாம் விசுவாசிக்கிறோம். பின்வரும் கூற்றுகள் விசுவாசத்தின் உடன்படிக்கையின் புதிய தொகுதியை நிறுவுவதற்கான முயற்சியல்ல, ஆனால் நாம் விசுவாசிப்பதில் சில காரியங்களை தெளிவுபடுத்துவதாகும்.
 
நாம் விசுவாசிப்பதில் ஐந்து சொற்கள் நேர்மையாக முன் வைக்கப்படுகிறது. இந்த ஐந்து சொற்களும்: பப்டிஸ்ற், மூலாதாரமானது, ஆயிரம்-வருடத்திற்கு-முந்தியவர்கள், மிஷனரி, மற்றும் சுயாதீனமானது.


நாம் பப்டிஸ்ற்


இதனால் நாம் கருதுவது, இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்து சரித்திர ரீதியாக பப்டிஸ்ற் மத்தியில் வழக்கமாக இருந்ததைப் பற்றியிருக்கிறோம். பூமியில் தமது ஊழியத்தின் போது கிறிஸ்து தமது சபையை ஸதாபித்ததில் இருந்து, காலத்தின் ஒவ்வொரு பகுதியிலும், தமது விசுவாசத்திலும் நடைமுறையிலும் பப்டிஸ்ற்களாக இருந்த சபைகள் இருந்துள்ளன. அவர்கள் எப்பொழுதுமே பப்டிஸற் என்ற பெயருடன் இருந்திராவிட்டாலும், அவர்கள் பப்டிஸற் கொள்கைகளை விசுவாசித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். பப்டிஸற் கொள்கைகள் வேதாகமத்தின் கொள்கையே அன்றி வேறில்லை.
 
மாட்டின் லூதருக்கு கீழ்ப்பட்ட ரிபோமேஸனில் இருந்து பப்டிஸ்ற் வரவில்லை, பப்டிஸ்ற் ஒருபோதும் ரோமன் கத்தேலிக்கத்தின் பகுதியாக இருக்கவில்லை. உண்மையிலே, கத்தோலிக்க சபை தோன்றுவதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னரே பப்டிஸ்ற் களத்தில் இருக்கிறார்கள். இந்தப் பாடம் குறித்து மேலும் கற்க ஆர்வமுடையோருக்காக இரத்தத்தின் அடிச்சுவடு, ஜே. எம். கரோல் அவர்களால் எழுதப்பட்டதை நாம் சிபாரிசு செய்கிறோம்.
 
“அகில ரீதியான கண்ணால் காண முடியாத சபை” என்று அழைக்கப்படும் ஒன்றை நாம் விசுவாசிக்கவில்லை. இயேசு ஒரு உள்ளூர், கண்ணால் காணக்கூடிய சபையை ஸ்தாபித்தார் என்றும், இது மட்டும்தான் அந்த உண்மையான சபை இன்று தோற்றத்தில் இருக்கிறது என நாம் நிச்சயித்து விசுவாசிக்கிறோம்.


 
நாம் மூலாதாரமானவர்கள்


இதனால் நாம் கருதுவது, விசுவாசத்தின் மூலாதாரமானது என அழைக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தின் மூலாதாரமானதை (அடிப்படைத் தத்துவத்தை) மறுதலிக்கும் தற்காலத் தத்துவத்தை எதிர்க்கிறோம். நாம் வேத வாக்கியங்கள் சொல்லாக சுவாசிக்கப்பட்டது என விசுவாசிக்கிறோம், படைப்பின் ஆதியாகம விபரம், கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, அவரின் பாவமற்ற வாழ்க்கை,  அவரின் இரத்தம் பிராயசித்தம், அவரின் மகிமையின் சரீர உயிர்த்தெழுதல்,  அவரின் பரமேறுதல்,  அவரின் இரண்டாவது வருகை என்பவைகள்.
 
நாம் மூலாதாரமானவர்கள் என்று கூறும்போது, நாம் இவ்வளவற்றையும் தான் விசுவாசிக்கிறோம் என கூறவில்லை; ஏனென்றால் நாம் தேவனின் வார்த்தையிலுள்ள ஒவ்வொரு உபதேசத்தையும் சத்தியத்தையும் ஒன்றையும் ஒதுக்கி வைக்காமல் விசுவாசிக்கிறோம். தேவனின் வார்த்தையின் ஏதாவது உபதேசத்தை இது முக்கியமானது அல்ல என்று கூறி ஒதுக்க ஒரு கிறிஸ்தவனுக்கோ சபைக்கோ எந்த அதிகாரமும்கிடையாது. அதில் ஏதாவது முக்கியமற்றதாக இருக்குமானால், தேவன் அவற்றை வேதாகமத்தில் போடுவதனால் இடத்தை வீணாக்கியிருக்க மாட்டார்.


நாம் ஆயிரம் - வருடத்திற்கு - முந்தியவர்கள்


ஆயிரம் வருட அரசாட்சி ஸ்தாபிப்பதற்கு முன்னதாக இயேசு கிறிஸ்து மறுபடியும் திரும்பி வருவார் என நாம் விசுவாசிக்கிறோம். மனிதர்களின் அரசாட்சியின் கீழ், நன்னடத்தையில் கேவலத்திலும் கேவலமாக உலகம் வளர்ச்சியடைகிறது. இது வேத வார்த்தையின் நிறைவேறுதலாகும், அதில் பின்வருமாறு கூறுகிறது, “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:13)
 
அப்பொழுது கிறிஸ்து ஆகாயத்தில் வருவார், “அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ( வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசிகள் ) கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” ( 1 தெசலோனிக்கேயர் 4:16-17 ). பின்னர் அந்தி-கிறிஸ்து இந்தப் பூமியின் மீது வெளிப்பட்டு ஏழு வருட உபத்திரவ காலம் ஆரம்பமாகும். ஏழு வருட உபத்திரவ காலத்தின் முடிவிலே, கர்த்தர் தமது பரிசுத்தவான்களோடு திரும்பி அந்தி-கிறிஸ்துவின் இராணுவத்தை மொத்தத்தில் தோற்கடிப்பார். சாத்தான் கட்டப்பட்டு பாதாளத்திலே தள்ளப்படுவதுடன்,  கர்த்தர் தனது இராஜ்ஜியத்தை இங்கே பூமியின் மீது ஸ்தாபித்து அதனை ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார். ( வெளிப்படுத்தல் 19-21 பார்க்கவும் )
 


நாம் மிஷனரி


ஒவ்வொரு உண்மையான புதிய ஏற்பாட்டு பப்டிஸ்ற் சபையும் மிஷனரியாக இருக்க வேண்டும். இயேசு கட்டளையை தனது சபைக்கு மத்தேயு 28:19-20 கொடுத்தார், அவர்கள் “சகல ஜாதிகளையும் சீஷராக்க (கற்பிக்க)” வேண்டும் என்றார். “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” (மாற்கு 16:15) என்றும் கூறினார். “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” (அப்போஸ்தலர் 1:8) மக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் தேவனின் வார்த்தையைக் கேள்விப்பட வேண்டும். “ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுது கொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே!..... ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” (ரோமர் 10:13-15,17) கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதற்காக, நாம் மிஷனரிகளாக இருக்கையில், அறிவிக்கப்படாத இடங்களுக்கு நாம் மிஷனரிகளை (வேலையாட்களை) அனுப்ப வேண்டும்.

பெயரளவில் மிஷனரிகளாக இருந்தால் போதாது, நடைமுறையிலும் மிஷனரிகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் மிஷன்களுக்காக ஜெபிக்க வேண்டும், எமது கரத்தில் தேவன் கொடுத்துள்ள பணத்தால் மிஷன்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் ஒவ்வொரு வாரமும் மிஷன் காணிக்கையைப் பெறுகிறோம். நாம் விசுவாச மிஷன் காணிக்கையை நடைமுறைப்படுத்துகிறோம்.
 
தெளிவாக வேதாகமத்தை விசுவாசிக்கும் மிஷனரிகளுக்கு நாம் உதவி செய்கிறோம். சில ஸ்தாபனங்களின் (மதப்பிரிவுகளின்) தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி அங்கே அவர்கள் 80% அல்லது 90% நிர்வாகச் செலவிற்காக செலவிடுவதற்குப் பதிலாக, நாம் நேரடியாக மிஷனரிகளுக்கு அவர்களை அனுப்பிய சபைக்கூடாக அனுப்பி வைக்கிறோம். இதனால் அவர்கள் 10ம% அல்லது 20% அல்லாமல் 100% பொற்றுக் கொள்ளுவார். எமது மிஷனரிகளுக்கான உதவிப் பணத்தை அண்மையில் கூட்டியிருக்கிறோம்,  தேவனின் கிருபையால் தொடர்ந்து கூட்ட விரும்புகிறோம்.
 


நாம் சுயாதீனமானவர்கள்


நாம் விரும்புகிற வண்ணம் செயற்படுவதற்கு நாம் சுயாதீனமானவர்கள் அல்ல, ஆனால் நாம் தேவன் விரும்புகிற விதமாக செயற்பட சுயாதீனமானவர்களும் தனிப்பட்ட மனிதர்கள் சங்கங்களைச் சேராதவர்கள். தேவனில் இருந்து நாம் சுயாதீனமாக இருப்பதை தேவன் தடுக்கிறார். புதிய ஏற்பாட்டு உள்ளூர் சபையை இயேசு ஸ்தாபித்தார், சபையின் மீது பாரத்தை வைப்பதற்காக சங்கங்களையோ அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதையோ அவர் ஸ்தாபித்தார் என நாம் விசுவாசிக்கவில்லை. ஒரு உண்மையான சபை வேதாகம ரீதியில் புறம்பான எந்தவொரு சமய ஸ்தாபனங்களுடன் இணையவோ அல்லது சேரவோ முடியாது என்பது எமது வாதம்.
 
சபைகள் கிறிஸ்துவின் வேலையில் ஒன்றாக செயற்படலாம், ஆனால் ஸ்தாபன நிர்வாக அங்கத்தவர்களுக்கும், மதப்பிரிவுகளின் செயளாலர்களுக்குக் கீழும் கொண்டு வந்து கஸ்டத்தில் சிக்க வைக்கும் உடன்பாடுகளின் நிமித்தம் கவனமாக இருக்க வேண்டும். சங்கங்கள், கூட்டுறவுகள், மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மத ஸ்தாபனங்கள் வழமையாக நல்ல விசுவாச மனிதர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, அவைகள் ஒரு வசனமாகிலும் வேதவாக்கின் அதிகாரமில்லாமல் ஸ்தாபனங்களாகப் பிரவேசிக்கின்றன. படிப்படியாக இந்த மேலதிக-வேதவாக்கு ஸ்தாபனங்கள் விட்டுக்கொடுப்பதன் அரண்களாகி உபதேசத்தில் தளர்ச்சியடைகின்றன, அதிகாரம் செலுத்தும் நிலையில் பேராசையுள்ள விருப்புக்களுடன் அதனை சபைகள் மீது பாரப்படுத்துகின்றன.
 
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட காலப்பகுதிகளில் மகத்தான சுவிசேஷ ஊழியம் பிரயாசத்தை சரித்திரத்தில் கிறிஸ்தவம் கண்டது. அந்த நாட்களில் பிரயாண வேகம் மெதுவாக இருந்தது, வானொலி, தொலைக்கட்சி, ஏன் அச்சுப்பதிவுகள் கூட கேள்விப்படவில்லை, இருப்பினும் சுவிசேஷம் தீயைப் போல பரவியது. அந்த சிலரால் செய்யப்பட்டது போல சபை சரித்திரத்தில் வேறெந்தக் காலப்பகுதியிலும் செய்யப்படவில்லை. சரித்திரத்தில் வேறு காலத்தில் இல்லாதவாறு, சபைகள் நிறுவுவதிலும்,  மகா உத்தரவை எடுத்துச் செல்வதிலும் 30 குறிகிய காலப் பகுதியில் மகத்தான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் சபைக்குப் புறம்பான மத ஸ்தாபனங்களோ, சங்கங்களோ, கூட்டுறவுகளோ இருக்கவில்லை. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலுள்ள திட்டம் செயற்படுத்தப்பட்டது, அதனைப் பயன்படுத்த முயற்சிக்கும் சபைகளிடையே அது இன்றும் செயற்படுகிறது.
 
சச்சரவுகள் இல்லாமல் எமக்குள்ள விசுவாசத்தின் வாதத்தை முன்வைப்பது எமது விருப்பமாகும். இணக்கப்பாடு இல்லாமல் வெறுப்பு உண்டாக்காதிருக்கலாம். உதைக்காமல் எமது விசுவாசத்திற்காக நாம் நிற்கலாம். சுவிசேஷம் பிரசங்கிக்ப்பட்டு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும் போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். இன்னொருவரின் ஆத்தும ஆதாய முறையை குறை கூறுவது, உலகத்தின் முடிவு வரை சுவிசேஷத்தை அறிவியுங்கள் எனும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாக அமையாது. நாம் சரியான வழியை விசுவாசிப்பது மட்டுமல்லாது, நாம் சரியான வழியை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
 
ஜீவனுள்ள தேவனின் சபைக்கு தேவையற்ற முட்டாள் தனமான, கற்றுக் கொள்ளத கேள்விகள் மற்றும் அதைபோன்ற விவாதங்கள், செய்ய நேரமில்லை. கட்சி வேற்றுமைக்கும், எதிர்ப்புத் தன்மைக்கும், மற்றும் மடமையான பிளவுகளுக்கும் இது அல்ல நேரம். இது செயற்படுவதற்கான நேரமாகும். நாம் கிறிஸ்துவை சீக்கிரமாக முகமுகமாக தரிசிக்கும் தருவாயை நெருங்குகிறோம். நாம் எமது மனதின் அரையைக் கட்டிக் கொண்டு, தேவனின் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்தவர்களாய் கிறிஸ்துவுக்காக யுத்த களத்தில் முன்னோக்கிச் செல்லுவோம்.