வேதாகம சீஷத்துவம்

ஒருவரின் இரட்சிப்பு தொடக்கம் - கிறிஸ்துவின் நியாயாசனம் வரைக்குமான வேதாகம உபதேசத்தை இந்த பதினாறு பாடங்களும் தெளிவாகக் காண்பிக்கின்றன. இந்தப் பாடங்களை நீர் கற்றுக் கொள்வதினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.

 

நிலைத்து நிற்கும் கனி
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அடிப்படையில் அத்தியாவசியமான விடயங்களை பன்னிரண்டு பாடங்களாகத் தொகுத்து வழங்கியள்ளோம். இவற்றைக் கற்றுக் கொள்வதினால் கிறிஸ்து எதிர்பார்க்கும் விதத்தில் நிலைத்து நின்று கனி கொடுக்க முடியும்.

 

 

 

 

 

 

 

வேதப் பாடங்கள்

வேதப்பாடங்களைக் கற்றுக் கொள்வதிற்கு அன்புடன் வரவேற்கிறோம்

     நாம் தேவனிடத்தில் வருவதினால் மாத்திரம் அல்லாமல், அவருடைய உபதேசத்தை எம்மீது ஏற்றுக்கொண்டு கற்றுக் கொள்வதினாலேயே இளைப்பாறுதலை அனுபவிக்க முடியும் என்பதை பின்வரும் வாக்கியங்கள் காண்பிக்கின்றன:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” மத்தேயு 11:28 - 30

        நாம் தேவனை நோக்கி கர்த்தாவே என கூப்பிடுவதினால் மாத்திரம் அல்லாமல் அவரின் சித்தத்தை வேதவார்த்தைகளில் கற்றுக் கொண்டு அவைகளின்படி செய்ய வேண்டும் என்பதை பின்வரும் வாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன:

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.” மத்தேயு 7: 21-24

       நாம் தேவனின் வெளிச்சத்தில் இருப்பதிற்கு அவரின் வேதத்தைக் கவனித்து அவரின் வார்த்தையின்படியே சொல்லவேண்டும் என்பதை பின்வரும் வாக்கியம் கட்டளையிடுகிறது:

“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும் இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.” ஏசாயா 8:20

      வயதெல்லையில்லாமல் நாம் அனைவருமே தனது வேதாகமத்தின் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதை தேவன் எதிர்பார்க்கிறார் என நாம் நம்புகிறோம். நீங்கள் எதை விசுவாசிப்பவராயினும் தயவு செய்து திறந்த மனதுடனும் வேதாகமத்துடனும் இப்பகுதியில் உள்ள பாடங்களை அக்கறையோடு கற்றுக்கொண்டு தேவனின் மெய்யான வெளிச்சத்தை அனுபவியுங்கள். கற்றுக் கொள்வதிற்கிணங்க கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!

குறிப்பிடப்படாத பட்த்தில இந்  http://www.biblebaptistchurch.110mb.com எனும இணையத்தில உள்ள அனைத்த பாடங்களும படங்களும Copyright © 1997-2008 by biblepreach@gmail.com என பதிப்புரிமையுள்ளத. நீங்கள அவற்ற இலவசமாக பாவிக்கலாம் (வகுப்புகளில பாவிப்பதிற்காக னுமதியும் பெற்றுக் கொள்ளலாம) - அவற்ற இந்த இணைய முகவரியுடனும, தகுதியான அதிகாரத்துடனும, இந்த பதிப்புரிம அறிவித்தலுடனும செய்ய வேண்டும; ஆயினும எழுத்த மூலமாக தகுந்த ஆசிரியர(கள) அனுமதி பெற்றுக கொள்ளாமல, இலாப நோக்கிற்காக பிரதி செய்யவோ, சேமிக்கவோ, அல்லத வேற சேமிப்புகளில (மின்னியல வடிவில அல்லத அச்சுவடிவில) வெளியிடவோ வேண்டாம; எல்லாப பதிப்புரிமையும பெறப்பட்டத.. அடிப்படையில - தயவ செய்த கல்விபுகுட்டும நோக்கிற்காக மாத்திரம் பாவிக்கவும், ஆயினும தயவ செய்த எமத கடினமுயற்சிய துஸ்பிரயோகம செய்ய வேண்டாம.